Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்

Editorial / 2018 நவம்பர் 19 திங்கட்கிழமை, மு.ப. 05:30 Comments - 0

-எஸ்.நிதர்ஷன் 

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. 

இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதற்கமைய புளொட் அமைப்பின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் சதானந்தம் மற்றும் பொருளாளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சிவனேசன் ஆகியோர் சென்றிருந்தனர். 

இந்நிலையில், கூட்டம் ஆரம்பமாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக அங்கு சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன், அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.  

  இவ்விடயம் தொடர்பில் புளொட் அமைப்பின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான சிவனேசனிடம் கேட்ட போது, அவர் தெரிவித்துள்ளதாவது, 

“நாங்கள் கூட்டத்துக்கு சரியான நேரத்துக்கே வந்திருந்தோம். அப்போது இக்கூட்டத்தில் நாங்கள் பங்கு பற்ற முடியாது என்றும் அங்கிருந்து வெளியேறுமாறும் இணைத் தலைவர்களில் ஒருவரான லக்‌ஷ்மன் தெரிவித்தார்” என்றார். 

“இதனையடுத்து நாங்கள் அங்கிருந்து வெளியேறி இந்த விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம். இதேவேளை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பேரவையால் எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கமையவே நாங்கள் வந்திருந்தோம்” என்றார்.  

“ஆகவே, பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன், திடீரென ஏன் இன்று இவ்வாறு நடந்து கொண்டார் என்று தெரியவில்லை” என்றும் சிவனேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர் கலாநிதிநி சரவணபவன் தெரிவிக்கையில்,

புளொட் அமைப்பு வௌியேற்றப்பட்டதாக வௌியான செய்தியில் எவ்வித உண்மையுமில்லை.

 தொடர்பாடல் பிரச்சினை காரணமாகவே, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அதாவது, வழமையாக தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள், அந்தக் கட்சி சார்ந்த பொறுப்பு கூறுபவர்கள் அல்லது கட்சித் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளத் தவறியதன் காரணமாக, தனக்கு பதிலாக, வேறொருவர் கலந்துகொள்பவர்கள் குறித்து, பேரவைக்குத் தெரியப்படுத்தி, அனுமதிபெற்று, அவர்கள் அனுப்பப்பட்டனர்.

ஆனால், புளொட் சார்பில், பொறுப்பு கூறுபவர்களோ அல்லது கட்சித் தலைவரோ கலந்துகொள்ளாது, அவர்களுக்குப் பதிலாக வெறோருவரை அனுப்பியுள்ளனர். அவ்வாறு கலந்துகொண்டவர்கள் தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தி அனுமதிபெறாததையடுத்தே, அவர்களை இன்றைய கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளவில்லையென, அவர் மேலும் கூறினார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/புளொட்-பிரதிநிதிகளை-பேரவையினர்-வெளியேற்றியுள்ளனர்/175-225433

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டிடம் மன்னிப்பு… சுரேஷ் பிரேமச்சந்திரனிற்கு ஒருவார காலஅவகாசம்: தமிழ் மக்கள் பேரவை சுவாரஸ்யங்கள்!

November 18, 2018
SAM-696x464.jpg

இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரையும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான பூ.லக்ஸ்மன் வெளியேற்றியிருந்தார்.

எனினும், கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதாக தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் சமாதானம் கூறி, நிலைமையை சமாளித்தார்கள். எனினும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை, அவர்கள் கூறியது பொய்யானதென புளொட் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இன்றைய தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கூட்டம் கந்தர்மடத்திலுள்ள அதன் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்திற்கு புளொட் தரப்பிலிருந்து அதன் செயலாளர் பவானந்தன், பொருளாளர் சிவநேசன் ஆகியோர் சென்றிருந்தனர். கூட்டம் நடக்கும் இடத்தில் அமர்ந்திருந்தபோது, வைத்தியர் லக்ஸ்மன் அவர்களை சந்திக்க காத்திருப்பதாக கூறப்பட்டது. அவர்கள் இருவரும் வெளியில் செல்ல, “கட்சி தலைவர்கள் மாத்திரமே வரலாம். கட்சியின் பிரதிநிதிகள் வர முடியாது“ என லக்ஸ்மனால் கூறப்பட்டது.

“தமிழ் மக்கள் பேரவையின் முதல் கூட்டத்திற்கும் நானே வந்தேன். தலைவர் தவிர்ந்தவர்கள் வர முடியாதென்றால் அதை முதலிலேயே அறிவித்திருக்க வேண்டுமே. புளொட் சார்பில் சித்தார்த்தன் அல்லது நான்தான் வருவோமென ஏற்கனவே எழுத்து மூலமும் அறிவித்திருக்கிறோம் அல்லவா?“ என சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் தரப்பபு அழுத்தம் தருகிறது என்பதை போல ஏதோ காரணங்களை ஏற்பாட்டாளர்கள் கூ, புளொட் பிரதிநிதிகள் இருவரும் கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டனர்.

 

பின்னர் சற்று நேரம் கழித்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வேஸ்வரன் கூட்டத்திற்கு வந்தார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு சர்வேஸ்வரன் முதலாவது தடவையாக வந்தார். (புளொட் சார்பில் சிவநேசன், பவானந்தன் முதலாவது கூட்டத்திலிருந்து கலந்து கொள்கிறார்கள்). சர்வேஸ்வரனையும் பேரவை ஏற்பாட்டாளர்கள் இடைமறித்து, கலந்து கொள்ள முடியாதென அறிவித்தனர்.

அந்த இடத்திலிருந்தபடியே தொலைபேசியில் தனது சகோதரனான சுரேஷ் பிரேமச்சந்திரனை தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தொலைபேசியில் க.வி.விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு, விடயத்தை சொன்னார். இதையடுத்து, விக்னேஸ்வரன் விடயத்தில் தலையிட்டு, சர்வேஸ்வரனை உள்ளே அனுமதிக்க சொன்னார்.

இதன்போது, ஏற்கனவே புளொட் பிரதிநிதிகள் திருப்பியனுப்பப்பட்ட விடயத்தை ஏற்பட்டாளர்கள் கூறினார்கள். இதற்கு அங்கிருந்த பிரதிநிதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வலம்புரி பத்திரிகை ஆசிரியர் தவிர்ந்த ஏனையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விடயம் தனக்கு தெரியாமல் நடந்து விட்டதென க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு, அப்படி திருப்பியனுப்பியது பிழையானதென்றார்.

இதையடுத்து, ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடும்போது- “ஒரு தவறு நடந்து விட்டது. எமது தரப்பில் பழை நடந்ததை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களிப்பு நடந்தால், தலைவர்கள் தேவையென்பதால் அப்படி நடந்து விட்டோம். உடனடியாக புளொட் பிரதிநிதிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டோம். திரும்பி வரும்படி கேட்டோம். அவர்கள் கூட்டம் நடக்குமிடத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாக கூறினார்கள்“ என்றார்கள்.

 

எனினும், பேரவை தரப்பிலிருந்து தம்முடன் யாருமே பேசவுமில்லை, மன்னிப்பு கேட்கவுமில்லையென புளொட் பொருளாளர் க.சிவநேசன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இப்படியான சர்ச்சைகள் ஏற்பட காரணம், யாப்பில்லாததே என சிலர் குறிப்பிட்டனர். உடனடியாக தமிழ் மக்கள் பேரவைக்கு யாப்பு உருவாக்க வேண்டுமென பலர் வலியுறுத்தினர்.

இந்த சர்ச்சையின் பின்னர், பேரவை கூட்டம் ஆரம்பித்தது. இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடயம்தான் முக்கியமாக ஆராயப்பட்டது. வவுனியாவில் தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தது தவறு என கஜேந்திரகுமார் கூறினார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இருக்கும் கூட்டணிக்கு வரவேமாட்டோம் என்றும் அடித்து சொன்னார்.

வவுனியாவில் தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு வைத்தது தவறு என பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டார்கள். இதையடுத்து, சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு வைத்த விவகாரத்திற்கு தன்னிலை விளக்கமளிக்க வேண்டும், அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும், இல்லாத பட்சத்தில் அந்த அமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மன்னிப்பு கோரினாலும், மீண்டும் இணைவது சாத்தியமில்லை, இந்த விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவே இறுதியானது என கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

 

Page 2 of 2
46486327_1192622314218168_52300963347861

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பெரும்பான்மை பலமில்லாத பிரதமரான மஹிந்த ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பை நிலையியல் கட்டளைகளிற்கு அமைவான நடத்த, இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உறுப்பினரின் பெயர் குறிப்பிட்ட குரல்வழி வாக்கெடுப்பிற்கோ, அல்லது இலத்திரனியல் முறைப்படியான வாக்கெடுப்பிற்கோ செல்லலாம், அது நிலையியற் கட்டளைக்குட்பட்டதாக அமைய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச எம்.பி, ரணில் விக்கிரமசிங்க எம்.பி, இரா.சம்பந்தன் எம்.பி, டக்ளஸ் தேவானந்தா எம்.பி, ரவூப் ஹக்கீம் எம்.பி, மனோ கணேசன் எம்.பி  உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி- “ஐதேக பொருத்தமான ஒரு பிரதமரை நியமித்தால் நிலையியல் கட்டளைகளின்படி செயற்பட்டு, அரசியல் குழப்பத்திற்கு முடிவை காணலாம். எந்தக்காரணத்தை கொண்டும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க மாட்டேன். நான் ஐதேகவிற்கு பல யோசனைகளை தெரிவித்து வருகிறேன். அவர்கள் தரப்பிலிருந்துதான் ஒத்துழைப்பு வரவில்லை. புதிய பிரதமரை தெரிவுசெய்து, நாடாளுமன்ற ஒழுங்குகளை கடைப்பிடியுங்கள்“ என்றார்.

நாளையதினம் மீண்டும் பெரும்பான்மையை ஐதேக நிரூபிக்கும் என்பதை ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பது மாத்திரமல்ல, 113 எம்.பிக்களுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு வர முடியுமென ஐதேக குறிப்பிட்டது. எனினும், ஜனாதிபதி இதை ஏற்கவில்லை.

ஜனாதிபதி நடந்து கொள்வது அரசியல் நீதிக்கு பொருத்தமானதில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். 26ம் திகதிக்கு முற்பட்ட நிலைமையை ஏற்படுத்துவதே தற்போதையை நிலைமைழய சரிசெய்ய உள்ள பொருத்தமான வழியென்றார்.

இடையில், வழக்கம் போல விமல் வீரவன்ச எம்.பி வாய்ச்சவடால்கள் விட்டபடியிருந்தனர். உங்களால் முடிந்தால் 113 எம்.பிக்களின் கையெழுத்தை காண்பிக்க முடியுமா என்றார்.

வழக்கமாக இப்படியான சந்தர்ப்பங்களில் நகைச்சுவையாக பேசாத இரா.சம்பந்தன், “நாடாளுமன்றத்தில் இரண்டுமுறை நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டபோது இவர் எங்கிருந்தார்?“ என நகைச்சுவையாக கேட்டார்.

இன்றைய கூட்டத்தின் முடிவில், ஐதேக புதிய பிரதமரை தெரிவு செய்து, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளிற்கு அமைவாக நடந்தால், அரசியல் நெருக்கடியை தீர்க்கலாமென ஜனாதிபதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.pagetamil.com/24306/

பேரவையினர் கஜேந்திரகுமார் சொற்படி ஆட நினைத்தால் பெயரை "சிற்றவை" என்று மாத்திவிடுவது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.