Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றம் புண்ணிய பூமியானதன் பின்னரே ஓய்வு பெறுவேன் : காமினி ஜயவிக்கிரம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றம் புண்ணிய பூமியானதன் பின்னரே ஓய்வு பெறுவேன் : காமினி ஜயவிக்கிரம

 

“எனது அரசியல் வாழ்விலிருந்து நான் ஓய்வு பெறுவது பாராளுமன்றத்தை சுத்தமான பூமியாக்கியதன் பின்னர்” என சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்தார்.

பாராளுமன்றில் கடந்த அமர்வில் மிளகாய்த்தூள் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிராக நீதி கோரி பொலிஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் முறைப்பாடு  செய்து திரும்பிய காமினி ஜயவிக்கிரம ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த காமினி ஜயவிக்கிரம,

gaamini_jayawickrama.jpg

“1972 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க தான் என்னை அரசியலிற்குள் பிரவேசிக்க வைத்தார். அன்றிலிருந்து எனது அரசியல் வரலாற்றில் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்வதற்காக வந்தது இதுவே முதல் தடவையாகும்.

அப்பாவி பொதுமக்கள் அவர்களது வாக்குகளால் எம்மை பாராளுமன்றிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் அவர்களிற்கு சேவை செய்யும் இடம் சுத்தமான பூமியாக இருக்க வேண்டும்.

ஆனால் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்றினுள் நடந்த விடயங்கள் பாராளுமன்றிற்குள் நடக்கத் தகுதியான விடயங்கள் அல்ல.

மிளாகாய்த் தூள் தாக்குதல் என் மீது நடாத்தினார்கள். அதற்காக நான் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறேன்.

எனது வாக்குறுதியின் படி பாராளுமன்றை சுத்தமான புண்ணிய பூமியாக மாற்ற வேண்டும். எனக்கு நடந்த விடயம் இனிமேல் எவருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே  இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.” என தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/44897

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலகம் எரிப்புக்கும் மிளகாய்த்தூள் பிரபலம் காமினிக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

பிரதான செய்திகள்:1981 இல் தனது தொகுதியிலிருந்து சிங்கள இளைஞரகளை புகையிரதம் மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்நூலகத்தை கொழுத்தவும் அதன் பின்னரான யாழ் நகர சூறையாடலிற்கும் என ஐதேக கட்சிக்கு ஓடாக உழைத்த காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று பலராலும் உன்னதமான அகிம்சாவாதி என புகழப்படுபவர் அவர் மீது மிளகாய் பொடி தண்ணீரை தெளித்து அவர் கண்ணில் இருந்து கண்ணீரை வரவழைத்த ஜனநாயக விரோதிகளை பலரும் கண்டிக்கின்றனர் அது நல்லது ஆனால் கடவுள் ஒருவன் இருக்கிறான் அதை எந்ந ஜனநாயக வாதியும் மறந்து விட முடியாது.

ஐ.தே.க பற்றிய இந்த பதிவை பார்த்தவுடன் , கூட்டமைப்பாருக்கு கோபம் வந்தால் நாம் பொறுப்பல்ல!

அதற்கு சிறந்த நிவாரனியான தண்ணியை குடிக்கவும் இது உடலிற்கும் மனதிற்கும் நல்லது. மிளகாய் தூள் காரமும் உங்களிற்கு தாங்க முடியாமல் போகலாம்

ஆசியாவின் பெரிய நுாலகமாக விளங்கிய யாழ் நுாலக எரிப்பை முன்னின்று நடத்தியவர், காமினி திசநாயக்க (மலையகம்).

அதுக்கு ஆள் பிடிச்சு அனுப்பிய அள்ளக்கையே காமினி ஜயவிக்கிரம பெரேரா( குருநாகல் தொகுதி)

இன்று காமினி ஜயவிக்கிரம பெரேரா அமைதியான நல்லவராக தெரிந்தாலும் இவரைப்பற்றிய பழைய வரலாற்றை பல தமிழ் தலைவர்கள் மறந்திருக்கலாம் காரணம் இன்று யார் துரோகி யார் நல்லவர் என தெரியாது பழகும் காலம்.

https://www.todayjaffna.com/132339

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த ஜென்மத்தில இவருக்கு ஓய்வு கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன சொல்ல வாறார் எண்டால் எல்லோரும் தண்ணி தெளிச்சுவிடும்மட்டும் தான் இதை விட்டுப்போகபோறதில்லை என

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.