Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்த யாழ் நீதிமன்றம் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

banned.jpg?zoom=1.1024999499320984&resiz

யாழ். கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது.

வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குற்றம் இடம்பெற்றதாக பொலிஸாரால் குறிப்பிடப்படவில்லை.

எனவே வீரசிங்கம் சிறிதரன் மற்றும் அவர் சார்ந்தவர்கள் அந்தக் காணியில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், சின்னங்கள் மற்றும் வரைபடங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையை வழங்கினார்.

கோப்பாய் பொலிஸார் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கடந்த புதன் கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். அதன் மீதான கட்டளையை இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வழங்கினார்

http://globaltamilnews.net/2018/104332/

 

11 hours ago, பிழம்பு said:

பயங்கரவாத தடைச் சட்டத்தில்

சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல் ரணிலைக் காப்பாற்ற நீதிமன்று நீதிமன்றாக ஆகோரசத்துடன் அலைகிறார்கள், சர்வதேச இராஜதந்திரிகளுடன் குமுறுகிறார்கள்.

ஆனால் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக பல வருடங்கள் முன்னர் ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி இவர்களுக்கு எள்ளளவும் கவலை இல்லை.

இந்த ஒட்டுண்ணிகளின் சுயரூபம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப்பகுதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையிடத் துடிக்கும் சிங்கள பௌத்த அமைப்பு!

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் இம்முறை மாவீரர் வாரம் பெரும் எடுப்பில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அதனை முடக்குமாறு சிங்கள பௌத்த அமைப்பொன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை இன்று பதிவு செய்திருக்கின்றது.

கொழும்பிலுள்ள பௌத்த தகவல் கேந்திர நிலையமே பொலிஸ் தலைமையகத்திற்கு நேரில் சென்று பொலிஸ் மா அதிபரிடம் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கின்றது.

பௌத்த கேந்திர நிலையத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலுகல்ல சிறிஜனாநந்த தேரர் நவம்பர் 23 ஆம் திகதியான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் தலைமையகத்திற்கு நேரில் சென்று வடக்கில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நிகழ்வுகளை உடனடியாக தடுத்து நிறுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கின்றார்.

மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களையும் துப்புரவு செய்து நவம்பர் 27 ஆம் திகதி பெரும் எடுப்பில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க தயாராகி வருகின்றனர்.

அதேவேளை மாவீரர் வாரமும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில் இம்முறை சிறப்பாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரை கௌரவிக்கும் நிகழ்வுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டு நடைபெறவுள்ளன.

இதனால் குழப்பமடைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் மாவீரர் தின நிகழ்வகளை முடக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கான ஒரு நடவடிக்கையாகவே இன்றைய தினம் பௌத்த தகவல் கேந்திர நிலையம் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றது.

இதேவேளை நவம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்திலிருந்த மாவீரர் துயிலும் இல்லம் அழிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 512 படைத் தளத்திற்கு எதிரில் மாவீரர் தினத்தை அனுட்டிப்பதை தடுக்க தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கோப்பாய் பொலிசார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/109684

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.