Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மோதல் 10 படையினர் பலி

Featured Replies

வட தமிழீழத்தில் நேற்றிரவு நடைபெற்ற மோதல் ஒன்றில் 10 ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிற்கு எதிராக தாக்குதல் நடத்திய படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே 10ற்கும் அதிகமான படயினர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதி முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலின்போது ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்து படையினர் நடத்திய பதில் எறிகணைத் தாக்குதலில் 20 புலிகள் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் ரொய்ட்டசின் செய்தி தெரிவிக்கிறது.

ஆனால் தமது தரப்பில் எவரும் கொல்லப்படவில்லையென விடுதலைப் புலிகள் மறுத்துள்ளதாகவும் ரொய்ட்டசின் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

(யாழ்.களத்திற்காக கணினித்திரைக்கு முன்பாகவிருந்து மின்னல்)

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka military, rebels say clashes kill 30

Wed Apr 11, 2007 6:42AM BST

(Reuters) - Sri Lanka's military said on Wednesday it had killed "at least" 20 Tamil Tiger rebels in retaliation for mortar attacks, while the Tigers said they killed up to 10 government troops in overnight fighting elsewhere.

"There was mortar fire to the forward defence line in (the north), which killed one soldier and wounded four. We have retaliated and their communications prove at least 20 killed," said Lieutenant Colonel Upali Rajapakse, a spokesman for the media centre for national security.

A Tamil Tiger military spokesman denied the rebels were killed in that attack, and said in separate fighting overnight the Tigers had killed "not more than 10" soldiers who had launched an attack against them in the north.

http://uk.reuters.com/article/worldNews/id...L22718020070411

சிறீ லங்கா குண்டர் படைக்கு நல்ல டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது போல இருக்கின்றது, இங்கு 'Colonel Upali Rajapakse' என்று கூறப்படுவது யார்? மகிந்துவின் உறவா?

வவுனியா இராணுவ நடவடிக்கை முறியடிப்பு: விடுதலைப் புலிகள்.

வவுனியாவில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் இராணுவத்தினரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவின் வடமேற்கில் நோக்கி மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் தரைநகர்வு முயற்சி இன்று புதன்கிழமை காலை முறியடிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள், உந்துகணை செலுத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைவிட்டு பின் நகர்ந்தனர்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

பாலமோட்டை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு - 8 படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன

வவுனியாவிற்கு வட மேற்கிலுள்ள பாலமோட்டைப் பகுதியில் இன்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறியடிப்புச் சமரின்போது படையினரின் 8 சடலங்களும் 12 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி - 1, ஏ.கே எல்.எம்.ஜி - 1 , பி.கே எல்.எம்.ஜி - 1 ரி 56 - 2 ரக துப்பாக்கிகள் - 11 , ரி 81 ரக துப்பாக்கிகள் - 1, 40 மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி (40mm பிஸ்டல்) - 1 உள்ளடங்குகின்றன.

இன்றைய சமரில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோதல் இடம்பெற்ற இடங்களில் விடுதலைப் புலிகள் தற்பொழுது சிறீலங்காப் படையினரின் 8 சடலங்களை விடுதலைப் புலிகளால் மீட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு செவ்வாய்கிழமை இருளைப் பயன்படுத்தி சிறீலங்காப் படையினரின் இப்பகுதியில் உடுருவியிருந்தாகவும் இதனையடுத்து விடுதலைப் புலிகளின் அணிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றதாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் பலத்த இழப்புக்களைச் சந்தித்த படையினர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் இளந்திரையன் மேலும் தெரிவித்தார்.

இன்றைய மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இதில் 8 பேரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஊடாக கையளிக்கப்படவுள்ளது.

pathivu

(மேலதிக இணைப்பு) மன்னார் முள்ளிக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு.

மன்னார் முள்ளிக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.

இம் முறியடிப்புச் சமரில் சிறிலங்கா இராணுவத்தினரின் 8 சடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா மேற்குப் பகுதியில் உள்ள மன்னார் இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இருந்து முள்ளிக்குளம் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முன்நகர்வு நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதல் இன்று புதன்கிழமை காலை முடிவுக்கு வந்தது.

முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர்.

இத்தாக்குதலில்

ஏகே எல்எம்ஜி ரக துப்பாக்கி - 01

ரி-56 - 2 ரக துப்பாக்கிகள் - 11

ரி - 81 ரக துப்பாக்கி - 1

ஆர்பிஜி - 1

பிகே எல்எம்ஜி ரக துப்பாக்கி - 1

40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி - 1

மற்றும் வெடிபொருட்களும் கொல்லப்பட்ட 8 சிறிலங்கா இராணுவத்தினரது சடலங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

-Puthinam-

மன்னார் முள்ளிக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு

போராளிகள் மூவர் இச்சமரில் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=31412

பாலமோட்டை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு - 8 படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன

வவுனியாவிற்கு வட மேற்கிலுள்ள பாலமோட்டைப் பகுதியில் இன்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறியடிப்புச் சமரின்போது படையினரின் 8 சடலங்களும் 12 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி - 1, ஏ.கே எல்.எம்.ஜி - 1 , பி.கே எல்.எம்.ஜி - 1 ரி 56 - 2 ரக துப்பாக்கிகள் - 11 , ரி 81 ரக துப்பாக்கிகள் - 1, 40 மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி (40mm பிஸ்டல்) - 1 உள்ளடங்குகின்றன.

இன்றைய சமரில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோதல் இடம்பெற்ற இடங்களில் விடுதலைப் புலிகள் தற்பொழுது சிறீலங்காப் படையினரின் 8 சடலங்களை விடுதலைப் புலிகளால் மீட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு செவ்வாய்கிழமை இருளைப் பயன்படுத்தி சிறீலங்காப் படையினரின் இப்பகுதியில் உடுருவியிருந்தாகவும் இதனையடுத்து விடுதலைப் புலிகளின் அணிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றதாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் பலத்த இழப்புக்களைச் சந்தித்த படையினர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் இளந்திரையன் மேலும் தெரிவித்தார்.

இன்றைய மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இதில் 8 பேரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஊடாக கையளிக்கப்படவுள்ளது.

http://www.pathivu.com/

இலங்கையின் வடக்கே நடந்த மோதல்கள் குறித்து முரணான தகவல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

அங்கு இடம்பெற்ற மோதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டு 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும், தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறப்பகுதிகளில் உள்ள இராணுவத்தின் நிலைகளில் இருந்து தமது பிரதேசத்தில் உள்ள பாலம்பிட்டியை நோக்கி இராணுவத்தினர் முன்னேறுவதற்கு எடுத்த முயற்சியை முறியடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது இடம்பெற்ற கடும் மோதல்களில் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இறந்த சிப்பாய்களின் உடல்களை எடுத்துக்கொண்டு இராணுவத்தினர் பின்வாங்கியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளார்கள்.

இதன்போது கொல்லப்பட்ட இராணுவத்தின் 8 உடல்களையும், ஆயுத தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்த மோதல்களில் தங்கள் தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் வடக்கே வவுனியா கூமாங்குளம் பகுதியில் புதன் கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில், இடையில் அகப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சிவிலியனாகிய வயோதிப பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர் 60 வயதுடைய சுப்பிரமணியம் சிந்தாமணி என அடையாளம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த மோதல் சம்பவத்தில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் கையளித்துள்ளனர்.

இதற்கிடையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மேலும் ஒரு தொகுதி பொதுமக்கள் வந்துள்ளதாகவும்,

இவர்கள் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். 14 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரே இவ்வாறு வந்துள்ளதாகவும் அரசு தரப்பு தெரிவிக்கிறது.

--------------------------------------------------------------------------------

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Edited by Iraivan

இராணுவத்தின் சடலங்கள் இன்று காலை கையளிக்கப்படும்

வவுனியா பாலமோட்டை மோதலில் கைப்பற்றப்பட்ட சிறீலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இன்று காலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கையளிக்கப்படவுள்ளன.

வவுனியாவிற்கு வட மேற்கிலுள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முற்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருந்தது.

இந்த முறியடிப்புச் சமரின்போது பல ஆயுதங்களும், சிறீலங்கா இராணுவத்தின் சடலங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/

இராணுவத்தின் சடலங்கள் இன்று காலை கையளிக்கப்படும்.

வவுனியா பாலமோட்டை மோதலில் கைப்பற்றப்பட்ட சிறீலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இன்று காலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கையளிக்கப்படவுள்ளன.

வவுனியாவிற்கு வட மேற்கிலுள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முற்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருந்தது.

இந்த முறியடிப்புச் சமரின்போது பல ஆயுதங்களும், சிறீலங்கா இராணுவத்தின் சடலங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Pathivu-

மன்னார் முறியடிப்புச் சமர்: கைப்பற்றப்பட்ட 8 சிறிலங்கா இராணுவச் சடலங்களும் கையளிப்பு.

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட எட்டு சிறிலங்கா இராணுவத்தினரது சடலங்களும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தரப்பிடம் கையளிக்கப்படுவதற்காக இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளன.

மன்னார் முள்ளிக்குளம் பகுதி நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னகர்வு நடவடிக்கை விடுதலைப் புலிகளால் நேற்று காலை முறியடிக்கப்பட்டது.

இம்முறியடிப்புத் தாக்குதலில் 8 இராணுவத்தினரின் உடல்கள் மற்றும் ஆயுதங்களைக் கைவிட்டு சிறிலங்கா இராணுவத்தினர் பின்வாங்கியிருந்தனர்.

armyex0.jpg

army2ux1.jpg

-Puthinam-

படையினரின் 8சடலங்களை புலிகள் செஞ்சிலுவைக் குழுவிடம் கையளித்தனர்

கொழும்பு, ஏப். 13

வவுனியா மன்னார் எல்லைப் பிரதே சத்தில் முள்ளிக்குளம், பாலமோட்டைப் பகுதிகளில் நேற்றுமுன்தினம் நடந்த மோத லில் தங்களால் மீட்கப்பட்டவை எனக் கூறப்படும் எட்டு இராணுவத்தினரின் சட லங்களை கிளிநொச்சியில் வைத்து செஞ் சிலுவைச் சர்வதேசக் குழுவினரிடம் புலி கள் கையளித்திருக்கின்றனர்.

இந்த மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 20 பேர்வரை கொல்லப்பட்டனர் என்றும் தங்கள் தரப்பில் ஒரு சிப்பாய் மாத் திரமே உயிரிழந்தார் எனவும் இராணுவத்தரப்பு தெரிவித்திருந்தது.

இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி ஒன்றை வெற்றிகரமாகத் தாங்கள் முறிய டித்துவிட்டனர் எனக் கூறிய புலிகள், படை யினரின் எட்டு சடலங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் மீட்டனர் என்றும் கூறி யிருந்தனர். (சி)

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.