Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவத்துக்குப் புணர்வாழ்வளிக்கத் தேவையில்லை - போர்க்குற்றவாளிகளுக்கு வெள்ளையடிக்கும் இந்து !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்துக்குப் புணர்வாழ்வளிக்கத் தேவையில்லை - போர்க்குற்றவாளிகளுக்கு வெள்ளையடிக்கும் இந்து !

சிறிலங்காவின் ராணுவத்தளபதி, மஹேஸ் சேனநாயக்காவுடன் தமிழ்விரோதப் பார்ப்பனப் பத்திரிக்கை "ஹிந்து" செவ்வியொன்றை மேற்கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வினாக்கள், வேண்டுமென்றே விடப்பட்ட கேள்விகள் என்று, ராணுவத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் இச்செவ்வி அமைக்கப்பட்டிருந்தது.

இச்செவ்வியிலுருந்து சில சுவாரசியமான பகுதிகளைப் பார்க்கலாம்,

கேள்வி : பாதுகாப்புத்துறையினரை சீரமைப்பது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : " ராணுவத்தைச் சீரமைக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கு இல்லை. சமுதாயத்தைச் சீரமைப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்று நாம் முழுமையாக நம்புகிறோம். உலகின் எல்லா இடங்களிலும் இவ்வாறுதான் சமூகங்கள் சீரமைக்கப்படுகின்றன. ஆனால், நாங்கள் செய்யும்போது மட்டும் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. நீங்கள் கேள்விக கேட்பதும் அந்த அடிப்படையில்த்தான்".

கேள்வி : வடக்குக் கிழக்கில் தொடர்ச்சியான ராணுவப் பிரசன்னத்தின் தேவையென்ன?

பதில் : "நாங்கள் வடக்குக் கிழக்கில் ராணுவத்தை வைத்திருப்பது அவசியமானது, ராணுவத்தினர் மக்களின் அன்றாட வாழ்வியலில் அங்கமாகியுள்ளனர். தமிழர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் சில கடமைகளைச் செய்வதற்கு லாயக்கற்று இருக்கின்றனர். அதனால் ராணுவத்தின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. போதைவஸ்த்துபாவனையைக் கட்டுப்படுத்துதல், ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய தேவைகளுக்காக ராணுவம் அங்கேயிருப்பது அவசியமானது"

"நாம், வடக்கில் ராணுவத்தின் இருப்பைக் குறைத்துக்கொண்டுதான் வருகிறோம். தேவைக்கேற்றவாறு ராணுவத்தின் எண்ணிக்கையைச் சரிப்படுத்தி வருகிறோம். இது ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதாகாது. எண்ணிக்கையை மாற்றாது வைத்துக்கொண்டு, இடங்களை மாற்றிவருகிறோம். ஓரிடத்தில் குறைத்துக்கொண்டு, இன்னொரு இடத்தில் அதிகரிக்கிறோம்."

இந்தச் செவ்வியெங்கிலும், ராணுவத்தால் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்புணர்வுகள் பற்றியோ, ஆட்கடத்தல்கள் பற்றியோ, தமிழர் மீதான சித்திரவதைகள் பற்றியோ எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை.

இச்செவ்வி எடுக்கப்பட்ட நேரமும் மிகவும் விசித்திரமானது. சுமார் 9 வருடங்களுக்கு முன்னர், 2009 மே மாதம் 19 ஆம் திகதி இலங்கையில் சிவில் யுத்தம் மிகவும் கோரமான முறையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. விடுதலைப் புலிகளின் போராட்டம் முற்றாக நசுக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களும் போர்க்களத்தில் வேட்டையாடப்பட்டனர். இருதரப்பினராலும் மனிதவுரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறியக்கிடக்கிறது. இறுதிக் காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைகள் முற்றாக அழிக்கப்பட்டதோடு, பெருமளவு போராளிகளும் தளபதிகளும் சரணடைந்ததன் பிறகு சட்டத்திற்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டனர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் மிகவும் ஆணித்தரமான சாட்சியங்களூடாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

இலங்கை ராணுவம் என்பது மிகவும் கொடூரமான மனிதவுரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதென்பது கடந்த 9 வருடங்களில் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களைப் பரவலாகப் புரிந்து, முற்றாகக் கறைபட்டிருக்கும் ராணுவத்தைச் சீரமைத்துப் புணரமைக்கவேண்டிய ஆர்வம் சிறிலங்கா அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. ராணுவத்தில் ஊரிப்போயிருக்கும் மனிதவுரிமை மீறல்களுக்கான ஆர்வம் மற்றும் மிலேச்சத்தனம் வடக்குக் கிழக்கு மக்கள் மீது கட்டுப்பாடற்றுக் கட்டவிழ்த்துவிடப்பட்டுக்கொண்டேயிருக்கப்போகிறது.

இப்படியான தறுவாயில், ஒரு மிலேச்சத்தனமான ராணுவத்திற்கு வெள்ளையடிக்கவேண்டிய தேவை இந்துவுக்கு ஏன் வந்தது ?

சிறிலங்காவுக்கான ஜனநாயகப் பத்திரிக்கையாளர் இணையத்துக்காக டெயிலர் டிப்பேர்ட் எழுதியது.

தமிழில் ரகுனாதன்.


 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் சில கடமைகளைச் செய்வதற்கு லாயக்கற்று இருக்கின்றனர். அதனால் ராணுவத்தின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. போதைவஸ்த்துபாவனையைக் கட்டுப்படுத்துதல், ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய தேவைகளுக்காக ராணுவம் அங்கேயிருப்பது அவசியமானது"

போதைவஸ்து கடத்தலை செய்வதும் ஆட் களை கடத்துவதும் இராணுவம் தான் செய்கின்றனர் என மக்களே சொல்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் , எல்லாம் அவர்களின் ரைனிங் தானே .. போர்க்குற்ற விசாரணையில் அவையும் மாட்டுப்படுவினம் தானே ?

1 hour ago, ragunathan said:

ராணுவத்தினர் மக்களின் அன்றாட வாழ்வியலில் அங்கமாகியுள்ளனர். தமிழர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் சில கடமைகளைச் செய்வதற்கு லாயக்கற்று இருக்கின்றனர். அதனால் ராணுவத்தின்தவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

எல்லாரையும் குளிப்பாட்டி பவுடர் எதாவது போட்டு விடுகீனமா ? ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்து

இந்த இந்து என்ற பதம் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்குள்ளே ஒரு புற்றுநோயாகப் புகுத்தப்பட்டுவிட்டது. இதிலிருந்து மீண்டுவருவது கடினம்.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.