Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால்.. ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் , இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை !

whatifjjayalallithaisalivetodayintamilna

டிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்.ஜி.ஆர் உருவாக்கி சென்ற  கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் "அம்மா" என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள்.

அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. ?

75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போது எப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் ? அவரது கால்கள் எங்கே... ? சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ?  ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன ?  என்று விசாரணை கமிஷன் ஒருபுறமும், நியூஸ் சேனல்கள் மறுபுறமும் இன்றளவும் அலசிக் கொண்டே தான் இருக்கின்றன.

நடந்தது என்ன ?

உண்மையில் ஜெ ஜெயலலிதா உடல்நலம் குன்றி தான் மரணம் அடைந்தாரா என்பது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...ஒருவேளை, இன்று... ஜெ ஜெயலலிதா எனும் இரும்பு மனுஷி உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தின் சூழல் எப்படி இருந்திருக்கும், சிலர் என்னென்ன செய்திருப்பார்கள், செய்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு சிறிய கற்பனை தொகுப்பு.

( குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல...)

ரஜினி !

"சிஸ்டம் "சரியில்லை என்று சொல்லி இருக்க மாட்டார். சென்ற ஆண்டு இறுதியில் அரசியிலில் குதிப்பது உறுதி என்பதற்கு பதிலாக, ரசிகர்களுடன் போட்டோக்கள் எல்லாம் எடுத்து முடித்தவுடன், மீண்டும் எப்போதும் போல " எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு..! , நீங்க எல்லாம் வீட்டுக்கு போயிட்டு வாங்க..!"  என்று கூறி இருக்கலாம்.

எம்.ஜி.ஆர் ஆட்சி...

முக்கியமாக, எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் அந்த வீர ஆவேச உரை, "எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுப்பேன்"  போன்றவை எல்லாம் தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருக்காது. ஏன், அந்த விழாவிற்கு ரஜினியை  அழைத்தால் கூட சென்றிருக்க வாய்ப்பில்லை. "ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு", "யாரந்த ஏழு பேர் ? எனக்கு தெரியலையே... !" போன்ற சமாச்சாரங்கள் நடந்திருக்காது. காலா இன்னும் நல்ல வசூல் பெற்று இருக்காலம். ரஜினியின் மாஸ் இன்னும் சற்றும் குறையாமல் அதே அளவிற்கு இருந்திருக்க கூடும்.

கமல் ! 

மய்யம் உருவாகி இருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. மக்கள் கொஞ்சம், அவரது இலக்கிய ட்வீட்களில் இருந்து தப்பித்திருந்திருக்க கூடும். சார்ந்தோருக்கு அனுதாபங்கள் என்ற ட்ரெண்ட் ட்வீட், ஆல் டைம் ட்ரால் மெட்டீரியல் நெட்டிசன்களுக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். இந்தியன் 2 தான் எனது கடைசி படம் என்று கமல் கூறி இருக்க மாட்டார். தேவர் மகன் 2, ஏன் மருதநாயகம் கூட அவர் மீண்டும் கையில் எடுக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

விஜய் !

மெர்சல் படம் தமிழகத்தில் ரிலீஸுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஏன், என்றால்... அதில் பெரும்பாலும் "மத்தியத்தை" தான் தாக்கி இருந்தனர். ஆனால், தாமரை கட்சியின் அந்த பிரமோஷன் தடைப்பட்டு போயிருக்கலாம். எனவே, 250 கோடிகள் என்பது 200 கோடிகளில் முடிந்திருக்கலாம்.

சர்கார் ! 

சர்கார் படத்தில் கோமளவல்லி, ஆளும்கட்சி இலவச பொருட்கள் விமர்சன காட்சிகள் இருந்திருக்காது என்பதை எல்லாம் தாண்டி,  சர்கார் என்ற படம் இன்னமும் ஒரு "பவுண்டட் ஸ்க்ரிப்ட்டாக" எழுத்தாளர் சங்கத்தில் உறங்கிக் கொண்டிருந்திருக்கும்.

அடுத்தத்தடுத்த 200 கோடி படங்கள் என்ற சாதனை நிகழாது இருந்திருக்கும். மெர்சலுக்கு பிறகு மீண்டும் ஒரு பைரவா, ஜில்லா வெளியாகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலை இருந்திருக்கும்.

சசிகலா & கோ !

சசிகலா ஜெ ஜெயலலிதா போன்று உருவ மாற்றம் ஏற்றிருக்க மாட்டார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர் என்று எல்.கே.ஜி குழந்தை இன்டர்வெல் ரைமில் பேசிக் கொண்டிருந்த மாணவர்களை கிளாஸ் டீச்சரிடம் போட்டுக் கொடுப்பது போல புகார் செய்திருக்க மாட்டார். அந்த வீர சமாதி ஆவேச சபதம் நடந்திருக்காது. அப்பறம் அந்த ஜெயில்... அத நாம கடைசியில பார்ப்போம்.. அங்க தான் ட்விஸ்ட்...

தர்மயுத்தம் !

ஒருக்கட்டதில் ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கு யாராவது சென்றாலே அங்கே மீடியாக்கள் மைக்கும், மேகராவுமாக ஓட வேண்டிய சூழல் இருந்தது. ஏன் என்றால் அங்கே தான் கட்சிகள் உடைந்தன, பிறந்தன, யுத்தங்கள் துவங்கின. பன்னீர் செல்வம் அவர்களின் தியானமும், தர்மயுத்த போராட்டமும், ஓ.பி.எஸ் தீபா அவர்களின் கூட்டு பிரார்த்தனையும் என அப்பப்பா.... இன்னும் எத்தனை...

நான் தான் ஜெ மகள் .

அதே போல, நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று யாரும் நீதிமன்ற படி ஏறி இருக்க மாட்டார்கள். பல ஆண்டுகளாக ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார், அவர் வெளிநாட்டில் படித்து வருகிறார், அங்கேயே செட்டிலாகி விட்டார் என்ற வதந்திகள் வந்துக் கொண்டே தான் இருந்தன.

ஆனால், அவரது மறைவிற்கு பிறகு தான், நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று கூறி வெளிய வந்து நீதிமன்றபடி ஏறிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

எச்.ராஜா !

எச். ராஜா மற்றும் அவரது அட்மின் பயல்கள் இன்டர்நெட்டிலும், தமிழக அரசியலிலும் மற்றும் மீம்களிலும் இத்தனை பேச்சுக்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். நாங்களும் ஹரிஹர ராஜா ஷர்மா என்கிற எச்.ராஜா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் என்ற கட்டுரையை எழுதி இருக்கவே மாட்டோம்.

தமிழிசை சௌந்தரராஜன் !

"தாமரை மலர்ந்தே தீரும் "என்ற வாசகத்தை தமிழக மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள், ஏன் ஒருமுறை கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அப்படி ஒரு வாசகத்தை தமிழசை சௌந்தரராஜன் அவர்களே கூட பேசாமல் இருந்திருப்பார். (பேப்பரில் எழுதியிருக்க கூட வாய்ப்பில்லை).

அமைச்சர்கள் !

இன்று வரையிலும் மூவ் மற்றும் வோலோனி போன்ற இடுப்பு வலி நிவாரண க்ரீம், ஸ்ப்ரேக்களை டஜன் கணக்கில் வாங்கி வைத்துக் கொண்டு கும்புடு குருசாமி போல இருந்திருப்பார்கள். எடப்பாடி என்ற ஊர் இருப்பது சேலம் மக்களை தாண்டி தமிழகத்தில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள்.

சயிண்டிஸ்ட்கள் !

நீரை ஆவியாகாமல் தடுக்க தர்மாக்கோல், மலேரியா பரவுவதற்கு டெல்லி கொசுக்கள் தான் காரணம் என்ற தமிழகத்தின் சயிண்டிஸ்ட் ரேஞ்சுக்கு  அமைச்சர்கள் இருப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாமலேயே போயிருக்கும். அவர்களுடைய பெயரும் இந்த அளவிற்கு டேமேஜ் ஆகி இருக்காது.

போராட்ட பூமி !

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் அதிக அளவிலான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதேவேளையில் தான் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கருணாநிதி உடல் நலம் குன்றி இருந்து மரணம் அடைந்தார். ஒருவேளை, இவர்கள் இருவரும் ஆக்டிவாக இருந்திருந்தால் இத்தனை போராட்டங்கள் நடைப்பெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை.

காளான்கள் கட்சிகள் !

எம்ஜிஆர் அம்மா தீபா, எம்ஜிஆர் ஜெஜெ, அம்மா மக்கள் முன்னேற்ற கட்சிகள் உருவாகி இருக்காது. அதே போல, நியூஸ் ஜெ நியூஸ் தொலைக்காட்சி துவங்கப்பட்டிருக்காது., நமது எம்.ஜி.ஆர் நாளேடு மட்டுமே அதிமுகவின் பிரதான நாளேடாக இருந்திருக்கும். முக்கியமாக, இது அம்மாவா என்று சந்தேகிக்க வைத்த அந்த அபூர்வ சிலையை நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.

சிறைவாசம் !

இன்று ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நான்காவது முறையாக முதலமைச்சராக இருந்திருக்கலாம். காரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா & கோ எல்லாரும் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார். இல்லையேல்... இன்னும் சொத்துக் குவிப்பு வழக்கு கிடப்பிலேயே கிடந்திருக்கும்... எல்லாவற்றுக்கும் மேல், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்திருப்பார்கள், தமிழகத்தில் !

https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-if-j-jayalallitha-is-alive-today-in-tamilnadu-023711.html

டிஸ்கி :

எல்லாவற்றுக்கும் மேலாக செம்பு தட்ஸ்தமிழ்  திமுக - காங்கிரஸ் யால்ரா கட்டுக்குள் இருந்திருக்கும் .?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2018 at 6:34 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால்.....

இரண்டு  இட்லி சாப்பிட்டதற்கு ... ஒரு கோடி 17 லட்சம்  ரூபாய்  கொடுக்க வேண்டி வந்திருக்காது. :grin:

 

 

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/5/2018 at 6:34 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

எல்லாவற்றுக்கும் மேலாக செம்பு தட்ஸ்தமிழ்  திமுக - காங்கிரஸ் யால்ரா கட்டுக்குள் இருந்திருக்கும் .?

நூற்றுக்கு நூறு வீதம் சரி....:91_thumbsup:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.