Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்ட விரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்தவர்கள் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_1577-720x450.jpg

IMG_1576.jpg

சட்ட விரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்தவர்கள் கைது!

சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஐந்து ஆமைகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வைத்து அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து மூன்று கடல் ஆமைகள் மீட்கப்பட்டதுடன், நெடுந்தீவு பகுதியில் வைத்து இரண்டு ஆமைகளுடன் மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நால்வருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உயிருடன் காணப்பட்ட ஆமைகள் ஐந்தையும் மீண்டும் கடற்பரப்பில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://athavannews.com/சட்டவிரோதமாக-கடல்-ஆமைகளை/

நான் போன முறை ஊருக்கு போன நேரம் கேள்விப்பட்ட விசயம், கடலாமைகளை பிடித்து கடலிலியே கொன்று, இறைச்சியை வெட்டி எடுத்து மீன்களுடன் கலந்து கரைக்கு கொண்டு வந்து விற்கின்றார்கள் என. பொதுவாக பாசையூர், குருநகர், பண்ணை பகுதிகளில் ஆமை இறைச்சியை சொல்லி வைத்து வாங்க முடியும் என்று கேள்விபட்டனான்.
அருகிவரும் ஒரு உயிரினத்தை இன்னொரு அருகிவரும் இனமான தமிழினம் இறைச்சிக்காக கொல்வது கவலைக்குரிய விடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

உலகில் பல மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியதும், தற்போது உயிருடன் இருக்கும் ஒரு சில  அரிய உயிரினங்களில்... ஆமையும் ஒன்று.
இது இப்போது...  பறவைகள், மிருகங்கள், மனிதர்களால்...  வேட்டையாடப் படுவதால், அழிவின் விழிம்புக்கு  சென்றுள்ளது மிகவும் கவலையானது.
ஆறறிவு உள்ள  மனிதர்களாவது...  யாருக்கும் தீங்கு செய்யாத இந்த உயிரினத்தை, உலகில் வாழ விட்டு வைக்க வேண்டும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

நான் போன முறை ஊருக்கு போன நேரம் கேள்விப்பட்ட விசயம், கடலாமைகளை பிடித்து கடலிலியே கொன்று, இறைச்சியை வெட்டி எடுத்து மீன்களுடன் கலந்து கரைக்கு கொண்டு வந்து விற்கின்றார்கள் என. பொதுவாக பாசையூர், குருநகர், பண்ணை பகுதிகளில் ஆமை இறைச்சியை சொல்லி வைத்து வாங்க முடியும் என்று கேள்விபட்டனான்.
அருகிவரும் ஒரு உயிரினத்தை இன்னொரு அருகிவரும் இனமான தமிழினம் இறைச்சிக்காக கொல்வது கவலைக்குரிய விடயம்.

ஆமை கடல் ஆமை 1000 முட்டைகள் இடுமாம் ஆனால் தமிழினம் 1,2 குட்டி மட்டும் தான் ஆமை பெருகும் தமிழினம் பெருகாது கவலைப்பட வேண்டாம் மார்கழி மாதம் ஆமை முட்டை இட கரைக்கு வரும் கடல் கொந்தளிப்பு நேரம். 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன விநோதம் என்றால் சில வேளைகளில் முட்டையிட்ட அந்த தாய் ஆமையே குஞ்சு வெளியேறும் நாளில் வந்து அந்த குஞ்சுகளை விழுங்கும்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.