Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்

இன பிரச்சினையாலும் ஆயுதப் போராட்டத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை நாம் வழங்கியே தீர்வதுடன், அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

sajith1__pre.jpg

சர்வாதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயக போராட்டமானது நீதித்துறையினூடாக இன்று வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் நன்றித் தெரிவிக்கின்றேன்.  

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும். 

அதிகார வெறி பிடித்தவர்களில் முக்கிய புள்ளியாக இருந்தவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையடுத்து பதவியைத் துறந்துள்ளார். இனிமேலாவது இவர்கள் திருந்தி நடக்க வேண்டும்.

அரச அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றியதும் எதிர்த்தரப்பு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டது போன்று நாங்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை. அரசமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பதே தீர்ப்புக்கள் மூலம் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் நாட்டின் தற்காலிகப் பொறுப்பாளர்கள். ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலின்போது எவரும் மாறலாம். நாம் சிறந்த முன்மாதிரியான அரசாகப் பயணிக்கத் தீர்மானித்துள்ளோம். இடம்பெற்ற தவறுகளைப் புரிந்து கொண்டு சரியான பாதையில் பயணிக்கவுள்ளோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/46452

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இன பிரச்சினையாலும் ஆயுதப் போராட்டத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை நாம் வழங்கியே தீர்வதுடன், அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும். 

இந்தத் தீர்வை யார் முன்வந்து நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் கடவுளுக்கு இணையாக உலக மக்களாலும் போற்றப்படுவார்கள் என்பது திண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

இந்தத் தீர்வை யார் முன்வந்து நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் கடவுளுக்கு இணையாக உலக மக்களாலும் போற்றப்படுவார்கள் என்பது திண்ணம்.

ரொம்ப அவசரம்.நம்புறீங்களா?ஏதாவது அவசரமாக கொடுக்க நினைத்தாலும் என்ன தான் கொடுக்கப் போகிறார்கள்.சேர் பொன் இராமநாதன் போன்றோர்களை தோழில் சுமந்து சிலை வைத்து அதே இடத்தில் தமிழ் தலைவர்களை அடித்து துரத்தியவர்கள்.எழுத்திலே வந்தால்க் கூட நடைமுறையில் வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காணி பொலிஸ் கல்வி அதிகாரமுள்ள எந்த தீர்வையும் தரவா போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்

தமிழர்களை நிரந்தரமாக.. முற்றாக தீர்த்துக்கட்டப் போகிறார் போல.  இறுதியில்.. இதுதான் நான் சொன்ன தீர்வு என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கேவலம்.. இன்னும் சிங்களத் தலைமைகளை நம்பும் எம் சட்டாம்பிக் கும்பல்கள் தான். 😯

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

ரொம்ப அவசரம்.நம்புறீங்களா?ஏதாவது அவசரமாக கொடுக்க நினைத்தாலும் என்ன தான் கொடுக்கப் போகிறார்கள்.சேர் பொன் இராமநாதன் போன்றோர்களை தோழில் சுமந்து சிலை வைத்து அதே இடத்தில் தமிழ் தலைவர்களை அடித்து துரத்தியவர்கள்.எழுத்திலே வந்தால்க் கூட நடைமுறையில் வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காணி பொலிஸ் கல்வி அதிகாரமுள்ள எந்த தீர்வையும் தரவா போகிறார்கள்?

ஆடு மாடுகளைவிடவும் கேவலமாகக் கறுப்பு இனத்தவரை அடிமைகளாக அடக்கி ஆண்ட வெள்ளையினத்தவருக்கும் தலைவனாகி அவர்களை ஒரு கறுப்பர் ஆண்ட வரலாற்றுக் காலத்தில் வாழ்பவர்கள் நாங்கள். நம்பிக்கை மட்டுமல்ல, யதார்த்தத்திலும் பெற்ற அனுபவம் ஈழப்பியன் அவர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.