Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீராவிப்பிள்ளையார் ஆலயத்திற்குள் புகுந்த புத்தரை பற்றி அறிக்கை கோரப்படுகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீராவிப்பிள்ளையார் ஆலயத்திற்குள் புகுந்த புத்தரை பற்றி அறிக்கை கோரப்படுகிறது!

December 21, 2018
%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவிப் பிள்ளையார் ஆலயத்தில் பலவந்தமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியால் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் கூட்டம் கடந்த 17ம் திகதி இடம்பெற்றது. இதன்போது, புத்தர்சிலை விவகாரம் எழுப்பப்பட்டிருந்தது.

நீராவிப்பிள்ளையார் ஆலயப்பகுதியை 2016ம் ஆண்டு வரை இராணுவத்தினர் தமது பாவனையில் வைத்திருந்தனர். அப்போது, ஆலயத்தில் புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். அந்த பகுதியை இராணுவத்தினர் விடுவித்தபோதும், புத்தர் சிலை அகற்றப்பட்டிருக்கவில்லை. பௌத்த பிக்கு ஒருவர் மாத்திரம் வழிபாடுகளை நடத்தி வந்தார். பின்னர் மிகப்பெரிய புத்தர் சிலையொன்றும் அங்கு நிறுவப்பட்டது.

பௌத்தர்களே வசிக்காத பிரதேசத்தில், இப்படி சிலைகள் வைப்பதும் ஒருவகை ஆக்கிரமிப்பே என ஜனாதிபதி செயலணியில் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பிலேயே விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி செயலணியால் கோரப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் மாவட்ட செயலாளர், வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

 

http://www.pagetamil.com/29033/

 

  • கருத்துக்கள உறவுகள்

500_500_productGfx_1b268bafa606560da6a11be90d286969.jpg

புத்தர் பெண்களின் சேலைக்குள் புகுந்தால்தான் பிரச்சனை. ஆலயத்திற்குள் புகுந்தால் பிரச்சனை இல்லை. 🤣

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலையை ஒரு இளம்பெண் அணிந்திருந்ததால் அவரைக் கைதுசெய்ய யாழ்ப்பாணப் பொலீசார் முயற்சி. :shocked:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, கிருபன் said:

நீராவிப்பிள்ளையார் ஆலயத்திற்குள் புகுந்த புத்தரை பற்றி அறிக்கை கோரப்படுகிறது!

எங்களுக்கு ஆர் எதுக்கை புகுந்தாலும் டோன் கெயர்......:cool:


இந்த எதிர்க்கட்சி தலீவர் எண்ட சொல்லு எங்களுட்டை இல்லாமல் போனது வெரி வெறி பாட்.....fallenangel_zpsc91c7a85.gif

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இந்த எதிர்க்கட்சி தலீவர் எண்ட சொல்லு எங்களுட்டை இல்லாமல் போனது வெரி வெறி பாட்.....fallenangel_zpsc91c7a85.gif

அதைப்பற்றித்தான் நானும் யோசிக்கிறேன் கு.சாமி அவர்களே! எதற்கும் தைப்பொங்கல் முடியட்டும்.!!

tamil-politician-opposition-leader-sri-lanka-sampanthan_befeb530-5242-11e5-a8da-005056b4648e.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Paanch said:

அதைப்பற்றித்தான் நானும் யோசிக்கிறேன் கு.சாமி அவர்களே! எதற்கும் தைப்பொங்கல் முடியட்டும்.!!

tamil-politician-opposition-leader-sri-lanka-sampanthan_befeb530-5242-11e5-a8da-005056b4648e.jpg

எந்த வருசத்து தைப்பொங்கல் எண்டதை நீங்களாவது சொன்னால் போறவழிக்கு  புண்ணியமாய் போகும்....:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.