Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது – மருத்துவ கலாநிதி தேவநேசன்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது – மருத்துவ கலாநிதி தேவநேசன்…

December 24, 2018

dengu.jpg?resize=670%2C390

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் அண்மைக்காலமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து உள்ளது, எனவே நோய் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு டெங்கு நுளம்பு பரவ கூடிய இடங்களை அழித்து தமது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கோரியுள்ளார்.

அதேவேளை இந்த ஆண்டு ஆயிரத்து 448 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உட்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று உள்ளனர் என யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக காய்ச்சல் காரணமாக அதிகளவானோர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நோயாளர் விடுதியில் 40 படுக்கை வசதிகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஆனால் தற்போது 50 தொடக்கம் 60 நோயாளிகள் ஒரு விடுதியில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நோயாளர்களுக்கு கட்டில் வசதிகள் வழங்கப்பட்டு , ஏனையவர்களை தரையில் அமர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மழை தொடருமானால் நிலைமை மேலும் மோசமடைய கூடிய நிலை ஏற்படும் என்பதனை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து உள்ளோம். ஆனாலும் நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் .

http://globaltamilnews.net/2018/107676/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் அறிமுகம்…

December 25, 2018

vethanayagam.jpg?resize=720%2C480

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் மேலும் நோய்த்தாக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் டெங்கு காச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய்த்தாக்கம் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கா ன வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. காவற்துறையினர், முப்படையினர், மற்றும் சகல திணைக்கள அதிகாரிகளும் இந்தக் கூட் டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டம் தொடர்பாக கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , இம்மாதம் யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது.  இதனால் மாவட்டத்தில் டெங்கு காச்சலின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அடங்கும் பகுதிகளில் எதிர்வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் பொது இடங்கள் மற்றும் மக்களுடைய வீடுகளுக்கு சென்று நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதெனவும், அதனடிப்படையில் எதிர்வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் சகலரும் இணைந்து சகல இடங்களுக்கும் சென்று
மக்களுடைய ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதெனவும், அதனை தொடர்ந்து யாழ்.மாநகரசபைக்கு வெளியே உள்ள பிரதேச சபைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து யாழ்.மாநகரசபை ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாநகரச பை எல்லைக்குள் டெங்கு நுளம்புகள் பெருகும் 10 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த இடங்களில் இந்த விசேட செயற்றிட்டம் ஊடாக டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதில் சகலருடைய ஒத்துழைப்பும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் வீட்டு சூழல் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கவில்லை. என்ற குற்றச்சாட்டு பொதுவாக சுமத்தப்படுகின்றது.  ஆனால் அதற்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இன்றியமையாததாக உள்ளது. எனவே பொது மக்களும், டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

 

http://globaltamilnews.net/2018/107771/

 

  • கருத்துக்கள உறவுகள்

நில வேம்பு கசாயம் குடிக்குக .. அதுவே அருமருந்து ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நில வேம்பு கசாயம் குடிக்குக .. அதுவே அருமருந்து ..

தொண்டரே! வேறு எதற்கெல்லாம் நிலவேம்பு சாராயம் பயன்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.