Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி அலுவலகமும், இல்லமும் மஹிந்தவுக்கு இல்லை…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி அலுவலகமும், இல்லமும் மஹிந்தவுக்கு இல்லை…

January 4, 2019

Mahintha.jpg?resize=720%2C480

சேர் மார்க்ஸ் பெர்ணான்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் என்பவற்றை, எவரிடமும் ஒப்படைக்கப் போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், குறித்த அலுவலகமும் இல்லமும், எதிர்க் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவுக்கு கிடைக்காத நிலைமை தோன்றியுள்ளதாக, மஹிந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில், தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைமை, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடமே காணப்படுகின்றதெனும் நிலைப்பாட்டுக்கு அமைய, கூட்டமைப்பு, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

http://globaltamilnews.net/2019/108871/

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் கூட்டமைப்பின் குடும்ப சொத்தல்ல -செஹான் சேமசிங்க  

(இராஜதுரை  ஹஷான்)

எதிர்கட்சி  தலைவர்  அலுவலகம், மற்றும் உத்தியோகப்பூர் வாசஸ்தலம்  ஆகியவற்றை பலவந்தமாக வைத்துக் கொள்ளுவதற்கு அவை ஒன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  குடும்ப  சொத்து  அல்ல எதிர்கட்சி தலைவர்  பதவியை மஹிந்த ராஜபக்ஷ வகிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின்  எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

கூட்டமைப்பின் தலைவர்  எதிர்கட்சி  தலைவர் பதவியில் இருந்து முறையாக விலகிக்கொள்ள வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க  தெரிவித்தார்.

மக்கள் இளைஞர் முன்னணி அலுவலகத்தில்இன்று வெள்ளிக்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில்   கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்   மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்தின் பிரதான எதிர்கட்சி  தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ  வகிக்க முடியும் என  சபாநாயகர் குறிப்பிட்டதற்கு முரனாகவே கூட்டமைப்பினர்  செயற்பட்டு வருகின்றனர்.

இவ்விடயத்தில்  ஐக்கிய தேசிய கட்சியே இவர்களுக்கு ஆதரவு  வழங்குகின்றனர்.ரணில் விக்ரமசிங்க   பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர்  எவ்வாறு அலரிமாளிகையினை  விட்டு  வெளியேறாமல்,  அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தினார்.  அதன்  தொடர்ச்சியினையே தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவர்  இரா.  சம்பந்தன் இன்று பின்பற்றுகின்றார்.

http://www.virakesari.lk/article/47509

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.