Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை :

January 5, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_9537.jpg?resize=800%2C534

விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிஸன் இன்று (05-01-2019) கிளிநொச்சிக்கு சென்றுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடைகள், குளங்கள் உள்ளிட்ட தனது அமைச்சின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கே அமைச்சர்  ஹரிஸன் தனது அமைச்சின் செயலாளர், மற்றும் கமநல் சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம், கமநல நல காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகார்கள் சகிதம் கிளிநொச்சிக்கு அவர் சென்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற நிலைமைகளை ஆராயும் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இதன் போது வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம், கால்நடைகள், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்ட அழிவுகள், அதனால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்து அமைச்சர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக நெல் வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் நாற்பதாயிரம் ரூபா காப்புறுதி சபையால் வழங்கப்படும். அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். அத்தோடு கால்நடைகள் இறந்திருந்தாலும் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இத் தருணத்தில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அனைவரதும் கடமை. எனவும் தெரிவித்தார்

வெள்ளத்தினால் பாதிப்புக்களுக்கு அதிகம் பொறுப்பு சொல்ல வேண்டியது எங்களுடைய அமைச்சு. எனவே பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பது, குறித்த கவனம் செலுத்தப்படும் அத்தோடு இரண்டு வார காலத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை கிடைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்

மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தினை தொடர்ந்து அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் வெள்ளத்தினால் அழிவடைந்த நெல் வயல்களை பார்வையிடுவதற்கு கிளிநொச்சி பன்னங்கண்டி மற்றும் முரசுமோட்டை பிரதேசங்களுக்கும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

IMG_9524.jpg?resize=800%2C534IMG_9528.jpg?resize=800%2C534  IMG_9541.jpg?resize=800%2C534IMG_9553.jpg?resize=800%2C534

 

http://globaltamilnews.net/2019/108966/

 

கடந்த வருடம் தெற்கில் வெள்ளம் வந்த போது வடக்கிலிருக்கும் சிங்கள போலீஸ், சிங்கள ராணுவம்  வீடு வீடாக கடை கடையாக சென்று கஷ்டப்பட தமிழ் மக்களிடம் அவர்களை மிரட்டி முடிந்தளவு நிவாரணத்தை சேகரித்து / கொள்ளையடித்து தெற்கிற்கு அனுப்பினார்கள்.

இப்ப வடக்கில் வெள்ளம் வந்த போது தெற்கிலிருக்கும் சிங்கள போலீஸ், சிங்கள ராணுவம்  வீடு வீடாக கடை கடையாக சென்று எந்தவொரு நிவாரணத்தையும் சேகரித்து வடக்குக்கு அனுப்பவில்லை.

வடக்கில் சிங்கள போலீஸ், சிங்கள ராணுவம் இருக்கவே முடியாது என்பதற்கு இந்த ஆதாரமே போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை :

January 5, 2019

குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

IMG_9559.jpg?resize=800%2C534

வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் பி ஹரிஸன் தெரிவித்துள்ளார்.

இன்று(05) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வெள்ளம் அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறிப்பாக எனது அமைச்சின் கீழ் வருகின்ற விவசாயம், நீர்பாசனம், கமநல சேவைகள், மீன்பிடி போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்திற் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஆனால் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நாட்டில் இல்லாததன் காரணமாக தனது செயலாளரை அனுப்பியிருக்கின்றார். மற்றும் அமைச்சர் றிசாட் பதியூதீன் சுகயீனம் காரணமாக வரவில்லை தனது பிரதேச சபை தவிசாளர் ஒருவரை அனுப்பியிருக்கின்றார். ஏனைய எவரும் கலந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர் பி. ஹரிஸன் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2019/108993/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.