Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு!

Featured Replies

IMG_9292-720x450.jpg

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்துள்ளது.

தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை குறித்த பேச்சுவார்த்தை கொழும்பு நாராஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் முதற் கட்டமாக தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் 22 தோட்டக் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்திற்கு முன்வந்து முதல் வருட சம்பள அதிகரிப்பு 625 ரூபாயும், இரண்டாம் வருட சம்பள அதிகரிப்பு 650 ரூபாயும், மூன்றாம் வருட சம்பள அதிகரிப்பு 675 ரூபாயும், ஊக்குவிப்பு தொகை 140 ரூபாயும், 80 ரூபாய் வரவு கொடுப்பனவும், 30 ரூபாய் விலை கொடுப்பனவும், மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலோ ஒன்றுக்கு 45 ரூபாயும் வழங்க முன்வந்தன.

அதன்படி பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டமாக கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும், தொழில் உறவுகள் மற்றும்; சமூக வலுவூட்டல் அமைச்சருக்கும், கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி தீர்மானிக்கப்பட்ட விடயங்களை முன்வைத்தனர். இதனை பரீசிலித்து பார்த்த தொழிற்சங்கங்கள், இவ்விடயம் குறித்து தொழிலாளர்களிடம் கலந்துரையாடி தீர்மானிப்பதாக தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த சந்திப்பில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ்;, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப்pனருமான ஆறுமுகன் தொண்டமான்;, கூட்டு தொழிற்சங்கங்களின் தலைவர் எஸ்.ராமநாதன், முன்னால் அமைச்சரும் இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அனுஷா சிவராஜா, இ.தொ.கா உப தலைவர்களான சட்டதரணி கா.மாரிமுத்து, எம்.ராமேஸ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன், இ.தொ.கா வின் உதவி பொது செயலாளர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் உட்பட கூட்டு தொழிற்சங்கங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

IMG_9263-428x285.jpg

http://athavannews.com/தொழிலாளர்களின்-சம்பள-உய-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.