Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ரணிலை வன்மையாக கண்டித்த அஸ்கிரிய பீடம்!

Featured Replies

சிறிலங்காவிற்கு தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியல் சாசனமொன்று தேவையில்லை என்று சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான சியம் பௌத்த பிரிவின் அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது.

கண்டி அஸ்கிரி மகா விகாரையில் ஜனவரி 9 ஆம் திகதியான நேற்றைய தினம் அவரசமாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அஸ்கிரிய பீடத்தின் பதிவாளரான துணை மகாநாயக்கர் மெதகம தம்மாநந்த தேரர் அஸ்கிரி பீடத்தின் இந்த நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மோதல்களை ஏற்படுத்தக்கூடிய சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனமொன்று முன்வைக்கப்படுமானால் அது நாட்டின் இருப்பிற்கு ஏற்புடையதல்ல என்று மெதகம தம்மாநந்த தேரர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பாக 25 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அரசியல் சாசனத்தை தயாரித்து அதனை முன்வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒரு விடையம் மாத்திரமன்றி, அதனை தங்களால் எந்தவித்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை அவசர அவசரமாக கொண்டுவரப்படும் உத்தேச அரசியல் சாசன வரைபின் ஊடாக நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தம்மாநந்த தேரர் தெரித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூடட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முழு மூச்சாக செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர், சமஷ்டி அடிப்படயிலான அரசியல் சாசனமொன்று தேவை என்பதை வலியுறுத்தி பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறிய அவர், நாட்டில் குழப்பங்ளை விளைவிக்கும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது என்று பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தையும் எச்சரித்துள்ளார்.

நாட்டில் சமாதானமான சூழலொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மெதகம தம்மாநந்த தேரர், மீண்டும் நாட்டை குழப்பத்திற்குள் தள்ளிவிடும் பிரிவினைவாத மற்றும் கடும்போக்குவாத இனக் குழுமங்களின் செயற்பாடுகளுக்கு துணைபோகும் வகையிலேயே உத்தேச அரசியல் சாசன வரைபு முன்வைக்கப்படுவதாக பௌத்த பிக்குகள் என்ற வகையில் தாம் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால் உத்தேச அரசியல் சாசனம் தற்போதைய நிலையில் நாட்டிற்கு தேவையில்லை என்பதே மகாநாயக்கர்கள் உட்பட பௌத்த தலைமை பீடங்களின் நிலைப்பாடு என்பதையும் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/112157

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.