Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை செம்மலை விகாரை நிர்மாண வேலைகளுக்கு தடை -தொல்லியல் திணைக்களத்து அழைப்பாணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
January 24, 2019

01-M-1.jpg?zoom=1.3224999725818633&resiz

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை, விவகாரம் தொடர்பில் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதியில் எவரும் நிர்மாணப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்றைய தினம், காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பிரதேச மக்களை மாத்திரமின்றி ஒட்டமொத்த தமிழ் மக்களையும் பெரும் கவலைக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியிருந்த நிலையிலேயே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இவ் விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

கடந்த 14 ஆம் திகதி அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு காவல்துறையிளர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

22ஆம் திகதி இடம்பெற்ற வழக்கில், புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராம மக்களின் சார்பில் முன்னிலையானவர்களினால் வெளிப்படுத்தப்பட்டதனையடுத்து எதிர்வரும் 29 ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

எனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் மேற்கொண்ட நகர்த்தல் பத்திரம் ஒன்றின்மூலம் அது தொடர்பான வழக்கு இன்றைய தினம் நடைபெற்றது.

இன்றைய தினம், சடடவிரோதமாக விகாரை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பிக்கு தரப்பினரும், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தரப்பினரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இருதரப்பினர்மீதும் விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த பகுதி வர்த்தமானி மூலம் பௌத்த விகாரை அமைப்பதற்கான இடமாக அடையாளம் காணப்பட்டதாக பிக்கு தரப்பினர் தெரிவித்தனர். எனினும் விகாரை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட இடம் செட்டிமலை என்றும், செட்டிமலைக் கிராமம் என்றும் செட்டிமலை கிராமசேவகர் பிரிவு என்றும் குறித்த கடிதத்தில் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய தரப்பினர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். தொல்லியல் திணைக்களத்தின் கடித்தில் குறிப்பிடப்பட்ட இடம் அதுவல்ல என்றும் அவ்வாறான இடம் ஒன்று இல்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து தொல்லியல் திணைக்களப் பணிப்பாளரை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 02-M-1.jpg?zoom=1.3224999725818633&resiz04-M.jpg?zoom=1.3224999725818633&resize=Mullai-2.png?zoom=1.3224999725818633&res

http://globaltamilnews.net/2019/111037/

  • கருத்துக்கள உறவுகள்

செம்மலை விகாரைக்கு பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு; நிர்மாணப் பணிகளை நிறுத்தவும் உத்தரவு

Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 12:12 

image_beab64b97f.jpg

முல்லைத்தீவு - செம்மலை - நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு, பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கோவில் வளாகத்தில் அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட விகாரைக்கு அருகில், கடந்த புதன்கிழமையன்று (23), புத்தர் சிலையொன்று திறக்கப்பட்ட நிலையில், பிரதேச மக்களாலும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தரப்பிலிருந்தும், பலத்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு, பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு, தான் விடுத்த  கோரிக்கையை அடுத்தே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த விகாரையின் விகாராதிபதி கொழும்பு மேதாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த விகாரை, கி.பி 3ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளதென வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாகவும் தற்போது இந்தப் பிரதேசம், தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விகாரை தொடர்பில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (24) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நீதவான் அழைப்பாணை விடுத்தார்.

இதனால், நேற்று மன்றில் ஆஜராகியிருந்த தேரர், இந்தப் பிரச்சினையை, சுமூகமாகத் தீர்க்க விரும்புவதாகவும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், மன்றில் அறிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை, எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அதுவரையில், இரண்டு தரப்பினரும், குறித்த பகுதியில், எந்தவொரு நிர்மாணப் பணிகளையோ அல்லது அபிவிருத்திகளையோ முன்னெடுக்கக் கூடாதென உத்தரவிட்டார்.

நாயாறு - நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு, கடந்த 15ஆம் திகதியன்று சென்ற பிரதேச மக்கள், அங்கு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள முயன்ற போது,  அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் பொதுமக்களுக்கும் இடையில், முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த முறுகல் நிலை தொடர்பாக, முல்லைத்தீவு பொலிஸாரால், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் 29ஆம் திகதியன்று, வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகுமாறு, முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு, நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவசர நிலையொன்றை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர், நகர்த்தல் பத்திரம் ஒன்றின் மூலம், குறித்த வழக்கு விசாரணையை, நேற்று முன்தினத்துக்கு முற்போட்டுக்கொண்டனர்.

நேற்றைய வழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கிராம மக்களின் சார்பில் ஆஜரானவர்களால் வெளிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை, நேற்றைய தினம் (24) மன்றில் ஆஜராகுமாறு, நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், புத்தர் சிலை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/செம்மலை-விகாரைக்கு-பொலிஸ்-இராணுவப்-பாதுகாப்பு-நிர்மாணப்-பணிகளை-நிறுத்தவும்-உத்தரவு/175-228538

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.