Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கட்சி புதிய ஆட்சி அமைக்க முயற்சி: இலங்கை அரசு கவிழும் ஆபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சி புதிய ஆட்சி அமைக்க முயற்சி: இலங்கை அரசு கவிழும் ஆபத்து

கொழும்பு,ஏப். 16-

இலங்கையில் ராணுவத் துக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழர் பகுதி களில் பொதுமக்கள் மீது ராணுவம் குண்டு வீசியது. அப்பாவி பொதுமக்களையும் வியாபாரிகளையும் ராணு வத்தினர் கடத்தி பணம் பறிப்பது அவசிய பொருள்கள் விலை உயர்வு, போன்றவைகளால் அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கொழும்பு ராணுவ விமானதளம் மீது விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் நடத்தியது. அதிபர் ராஜபக்சே மீதும் பிரதமர் ரத்தினஸ்ரீரி விக்கிரநாயகே மீதும் மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் எதிர்கட் சியான ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஆளும் சுதந்திரா கட்சிக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.பி.க்கள் மீண்டும் தங்கள் தாய் கட்சிக்கே திரும்ப திட்ட மிட்டுள்ளனர்.

இலங்கை அரசு மீது நம்பிக்கை இல்லா தீரமானம் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை தொடங்க எதிர்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே திட்ட மிட்டுள்ளார்.

எனவே இலங்கை பிர தமர் ரத்தினஸ்ரீ விக்கிரம நாயகே தலைமையில் ஆன அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மே மாதம் அல்லது ஜ×ன் மாதத்தில் அந்த அரசு கவிழும் என அரசியல் வல்லுனர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

இலங்கை அரசு கவிழந்ததும் எதிர்கட்சி தலைவர் ரனில் புதிய அரசு அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். மே, ஜ×ன் மாதங்களில் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும் தனது கட்சி எம்.பி.க்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மூலம் - மாலைமலர்

அட தூ! திரும்பவும் கட்சி தாவப்போறாங்களா?

கிளித்தட்டு விளையாட்டில் பழம் கிடைக்கும் மட்டும் பெட்டி விட்டு பெட்டி தாவி ஓடுவது போல், இந்த மந்திக் கூட்டங்களும் யாராவது கோல் போடும்வரை கட்சி விட்டு கட்சி தாவிக்கொண்டு இருப்பான்களா? அவங்களுக்கு அது சேம் சைட் கோலாக இருந்தாலும் பிரச்சனை இல்லை போல இருக்கின்றதே? என்னாங்கடா விளையாட்டு இது! அரசியலில விளையாட்டு காட்டுறாங்கள்! விளையாட்டில அரசியல காட்டுறாங்கள்! ஒன்றுமாப் புரியவில்லை.

இலங்கை அரசு கவிழும் ஆபத்து

இலங்கையில அரசு என்டு ஒன்று இருக்குதோ?? :P

இது மிகவும் பழைய செய்தி என்று நினைக்கிறேன்.

கட்சி தாவிய உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது உண்மை. பின்னர் அவர்களைச் சமாளிப்பதற்காக மில்லியன் கணக்கில் பணம் செலவளிக்கப்பட்ட செய்தி களத்தில் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தது.

பணத்தைவாங்கிய அவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி ரணிலுக்க எதிராக அறிக்கை விட்டதும் உண்மை

எனவே இது காலங்கடந்து வந்த செய்தி

ரணில் ஆண்டாலும் ராஜபக்ஷ ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை. :lol:

ரணில் ஆண்டாலும் ராஜபக்ஷ ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை. :lol:

உங்களுக்கு பிரச்சினையில்லை ஆனால் இலங்கையில் இருக்கிற நம்ம உறவுகளுக்கு......?

உங்களுக்கு பிரச்சினையில்லை ஆனால் இலங்கையில் இருக்கிற நம்ம உறவுகளுக்கு......?

எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அவர்களின் துன்பம் மறையப் போவதில்லை.

ரணில் அத்திவாரம் போட்டுக் கொடுக்க ( கரிநாய் விடயம் உட்பட), ராஜபக்ஷ தொடர்கிறார். ரணில் மறுபடி வந்து சமாதான உடன்படிக்கையை தூசு தட்டுவார்.

துன்பங்கள் தொடரும். ஆகவே ஆட்சி மாற்றத்தில் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.

கதை ஒண்டு தான் நடிகர்கள் மாறுவார்கள். அரசியலில இதெல்லாம் சாதாரணம் பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.