Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க நடிகருடன் கட்டிப் பிடித்து முத்தம்: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ரசிகர்கள் போராட்டம்

Featured Replies

இப்ப 3 வருசமா போயும் வராதது எனி தான் வர போகுதா

:lol:

3000 வருஷம் போனாலும் வராது

  • Replies 53
  • Views 8k
  • Created
  • Last Reply

3000 வருஷம் போனாலும் வராது

:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுத்ததை இழிவுபடுத்துவதா? நடிகை ஷில்பாஷெட்டி கண்டனம்

"பிக்பிரதர்'' நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் சர்வ தேச புகழை அடைந்த ஷில்பா ஷெட்டி கடந்த வாரம் டெல்லியில் நடந்த ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர்கலந்து கொண்டார்.

விழாவிற்கு வந்திருந்தவர்கள் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் ரிச்சர்ட் கேர் விழா மேடையில் ஷில்பாஷெட்டியை இறுக கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இதற்கு ஷில்பாஷெட்டி எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் இந்தியா வெங்கும் ஷில்பாஷெட்டிக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிட்டது. இந்திய கலாச்சார நீதியை ஷில்பா ஷெட்டி இழிவுப்படுத்தி விட்டார். என்று கூறி சிவசேனா மும்பையில் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தி வருகிறது. அவரது படப்பிடிப்பை நடத்த விடாமல் சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இந் நிலையில் ரிச்சர்ட் கேர் முத்தம் கொடுத்ததை சாதாரணமாக எடுத்தக் கொள்ளாமல் இழிவுபடுத் துவதாப என்று ஆதாங்கத்துடன் கேட்கிறார் ஷில்பாஷெட்டி.

இந்த முத்த விவகாரத்தை தேவையில்லாமல் பெரிது படுத்தி இழிவுபடுத்துகிறார்கள். சிலர் இந்த விசயத்தில் தங்கள் பொறுப்பை உணராமல் நடந்து கொள்கிறார்கள். முத்த விவகாரத்தை தவறான கண்ணோட்டத்துடன் மக்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.

ஹாலிவுட் நடிகரிடம் இருந்து முத்தம் பெற்றதன் மூலம் நான் என் தாய் நாட்டிற்கு இழிவு எதையும் தேடிதரவில்லை. சகிப்புத்தன்மை நிறைந்த தேசத்தை சேர்ந்தவள் நான். என்று வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் தொடர்ச்சியாக சொல்லி வந்திருக்கிறேன்.

சகிப்புத்தன்மை நிறைந்த இந்தியாவில் இதையெல்லாம் பெரிதுபடுத்தவது அழகல்ல. என்று கொந்தளிப்புடன் நிருபர்களிடம் தெரிவித்தார் ஷில்பாஷெட்டி.

மாலைமலர்

நான் பார்த்த முத்தக்காட்சியில் சில்பா யாரையும் கட்டிப்பிடிக்கேல்லயே....அவா மைக்கைத்தான் பிடிச்சுக்கொண்டு நிண்டவா றிச்சர்;ட்தான் கிஸ் பண்ணினவர்...சரி அத விடுவம்.

உண்மையா அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்த ஒரு சில நூறு பேரோ அல்லது ஒரு ஆயிரம் பேரோதான் இந்த முத்தக்காட்சியைப் பார்த்திருப்பார்கள் ஆனால் அதை காலை மதியம் மாலை என்று அழகாகத் தெளிவாகப் படம் பிடித்து ஆறு கோடி மக்களையும் பார்க்கச் செய்த பெருமை இந்தியத் தொலைக்காட்சிகளையே சாரும்.

ஸோ வழக்கு இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் மேல்தான் போடவேண்டும் ஏனென்றால் அவர்களால்தான் கலாச்சாரம் கெட்டுப்போகுது :-)))

நான் பார்த்த முத்தக்காட்சியில் சில்பா யாரையும் கட்டிப்பிடிக்கேல்லயே....அவா மைக்கைத்தான் பிடிச்சுக்கொண்டு நிண்டவா றிச்சர்;ட்தான் கிஸ் பண்ணினவர்...சரி அத விடுவம்.

உண்மையா அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்த ஒரு சில நூறு பேரோ அல்லது ஒரு ஆயிரம் பேரோதான் இந்த முத்தக்காட்சியைப் பார்த்திருப்பார்கள் ஆனால் அதை காலை மதியம் மாலை என்று அழகாகத் தெளிவாகப் படம் பிடித்து ஆறு கோடி மக்களையும் பார்க்கச் செய்த பெருமை இந்தியத் தொலைக்காட்சிகளையே சாரும்.

ஸோ வழக்கு இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் மேல்தான் போடவேண்டும் ஏனென்றால் அவர்களால்தான் கலாச்சாரம் கெட்டுப்போகுது :-)))

6 கோடி பேரா...............? இப்போ 60 கோடியைத் தாண்டிவிட்டது

திரைப்படங்களில் முத்தக் காட்சி கட்டஙக்ளை மட்டும் காசு கொடுத்துப் போய் நாக்கத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்ப்பார்கள் இதற்க்கு மட்டும் போராட்டமா..........? இந்த இந்தியர்களை மட்டும் புரியவே முடியவில்லை, திரைப்படத்தில் நடந்தால் கை கட்டி ரசிக்கிரார்கள், மேடை போட்டு செய்தால் செருப்பால் அடிக்கிறார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!

சில காலத்துக்கு முன் ஓர் இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்த போது பல வி. ஐ. பிக்களுக்கு முன்னிலையில் ஒரு பெண் பாதுகாப்பையும் மீறிவந்து அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாரே, அப்போது பாரத கலாச்சாரமெல்லாம் பத்திரமாக இருந்ததா?. :P :P

என்னவோ எனக்கு இந்த கலாச்சாரத்தின் வரைவிலக்கணம் புரியவில்லை!!! :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் விவகாரம் முற்றுகிறது: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கைது `வாரண்டு'

ஜெய்ப்பூர், ஏப். 27-

பொது மேடையில் இருவரும் நடந்து கொண்ட விதம் மோசமான ஆபாச காட்சி என்று மாஜிஸ்திரேட்டு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, இங்கிலாந்து டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று, முதல் பரிசு பெற்ற பின் அவரது புகழ் உலகம் எங்கும் பரவி இருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன், டெல்லியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஷில்பா ஷெட்டியும், ஆலிவுட் நடிகர் ரிச்சர்டு கேரி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஷில்பா ஷெட்டியை கட்டித்தழுவி, வளைத்துப்பிடித்து, சரமாரியாக கன்னத்தில், முத்த மழை பொழிந்தார், ரிச்சர்டு கேரி. இந்த காட்சிகள் டெலிவிஷன்களில் உலகம் முழுவதும் ஒளிபரப்பாயின.

இந்திய கலாசாரத்துக்கு ஒவ்வாத இந்த செயலுக்கு, ஷில்பா ஷெட்டியிடம், ரிச்சர்டு கேரி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். என்றாலும், பல்வேறு ஊர்களில், கண்டன ஆர்ப்பாட்டங்களும், கொடும்பாவி எரிப்பும் நடந்தது.

இதற்கும் மேலாக, ஜெய்ப்பூர் அடிசனல் தலைமை ஜ×டீசியல் கோர்ட்டில் பூனம் சந்த் பண்டாரி என்பவர், வழக்கு தொடர்ந்தார். பொது இடத்தில் முத்தமிட்டு, ஆபாசமாக நடந்து கொண்டதாக, இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு கூடுதல் தலைமை ஜ×டீசியல் மாஜிஸ்திரேட்டு தினேஷ் குப்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, ஷில்பா ஷெட்டியின் செயல்பாட்டுக்கு மாஜிஸ்திரேட்டு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

ஷில்பா ஷெட்டி-ரிச்சர்டு கேரி முத்த காட்சியின் வீடியோவை பார்வையிட்டேன். அவர்கள் நடந்து கொண்ட விதம் மோசமான செக்ஸ் காட்சி போல இருந்தது. சமூகத்தை பாதிக்கும் வகையில் இருவரும் ஆபாசமாக நடந்து கொண்டனர்.

ரிச்சர்டு கேரி முத்தமிடும் போது அதை தடுக்க ஷில்பா ஷெட்டி எந்த முயற்சியும் செய்யவில்லை. அவருடைய நடவடிக்கையை கவனிக்கும் போது, ரிச்சர்டு கேரியை முத்தமிட அழைப்பது போலத்தான் இருக்கிறது. எனவே நடந்த சம்பவத்தில் ஷில்பாவுக்கும் சம பங்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது.

பொது மேடையில் இருவரும் பகிரங்கமாக முத்தமிட்ட செயல் இந்திய சட்ட விதிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய கலாசாரம், பாரம்பரியம், சமூக நன்மதிப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே ஷில்பா ஷெட்டி இந்திய தண்டனை சட்டம் 294 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர் ஆகிறார்.

ஷில்பா ஷெட்டி-ரிச்சர்டு கேரி ஆகியோரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்படுகிறது. மே 5-ந் தேதி அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

ரிச்சர்டு கேரி வெளி நாட்டவர் என்பதால் அவரை இந்தியாவை விட்டு வெளியேற விடாமல் தடுத்த ஜெய்ப்பூர் போலீஸ் சூப்பிரண்டை விரைவில் கைது செய்ய வேண்டும். ஷில்பா ஷெட்டியும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஆனாலும் நடிகர் ரிச்சர்டு ஏற்கனவே இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்ட்டின் இந்த உத்தரவின் மூலம் முத்த மழை பிரச்சினை, விஸ்வரூபம் எடுக்க தொடங்கி விட்டது.

மாலைமலர்

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரத்தைக் காட்ட எத்தனையோ வழிகள் இருக்க ஒரு முத்த சீன் வைத்துக் கொண்டு விளம்பரம் நடக்கிறது பாருங்கள். வட இந்தியப் பெண்கள் லண்டனுக்கும் அமெரிக்காவுக்கும் வந்து வெள்ளைக்காரரை அல்லது நிரந்தர வதிவிடம் கொண்ட இந்தியரை இன்டெர்நெற்றில் வலை போட்டுப் பிடிக்குதுகள். குறைந்த சாதிக்காரர் என வரையறுக்கப்பட்ட அப்பாவிகளைக் காவல் துறையே துப்பாக்கி முனையில் மிரட்டுவதை நஷனல் ஜியோகிறபியில் படமெடுத்துப் போடுகிறார்கள். மத ஒருமைப்பாடு பற்றிப் பேசும் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஒரு முஸ்லிம் பள்ளியை இடிக்கிறார்கள். அவர்களை இடிக்கத் தூண்டியவர் இன்னும் மூத்த அரசியல் வாதியாக அரசியலில் இருக்கிறார். ஓமோம்! முத்தம் ரொம்ப முக்கியமாக்கும்!!

'பேயை' வணங்கிய ஷில்பா!

பிக் பிரதர் நாயகி ஷில்பா ஷெட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பேயை வணங்கும் விழாவில் கலந்து கொண்டு 'பய' பக்தியுடன் பேயை வணங்கினார்.

லண்டன் பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு முன்பு ஷில்பாவைக் கண்டுகொள்ள ஒரு நாதியும் கிடையாது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அழுது, புலம்பி வெற்றி பெற்றாலும் பெற்றார், அவரைப் பற்றிய செய்திகளுக்குப் பஞ்சமே இல்லாமல் போய் விட்டது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த லாரி டிரைவர்களுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷில்பாவை ஹாலிவுட் நடிகர் ரிச்சர் கெரே இறுக்கி அணைத்து முகத்தில் மாறி மாறி உம்மா கொடுக்கப் போக அது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் ஷில்பா.

தனது தாய் பிறந்த ஊரான நிடோடி கிராமத்துக்கு சென்று அங்கு நடந்த பூத கொல்லா என்ற பழமையான பேயை வணங்கும் சடங்கில் கலந்து கொண்டார் ஷில்பா.

பூத கொல்லா என்பது துளு பேசும் சமூகத்தினரின் பழமையான சடங்கு, இதில் பேயை போல் வேடமிட்டு வருபவர் பக்தர்களின் குறையை கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவார். இந்த நிகழச்சியில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷில்பா,

பேய் வணங்கும் சடங்குக்கான ஏற்பாடுகள் பிக் பிரதர் நிகழச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார் ஷில்பா.

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஷில்பாவோ ஒரு அழகிய பிசாசு. பேய் அருள் தந்திருக்குமா ?

--thatstamil.com--

கெரேவுக்கு பிடிவாரண்ட்-ஷில்பாவுக்கு தடை

டெல்லியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முத்தம் கொடுக்கப்பட்டது தொடர்பாக ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு போகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

\டெல்லியில் நடந்த லாரி டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக ரிச்சர்ட் கெரேவும், ஷில்பா ஷெட்டியும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் யாரும் எதிர்பாராத வகையில், ஷில்பாவை இறுக்கி அணைத்து சரமாரியாக முத்தம் கொடுத்தார் கெரே.

இது பெரும் சர்ச்சையை எழுப்பி விட்டது. குறிப்பாக இந்து அமைப்புகள் ஷில்பாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், பொது இடத்தில் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பூணம் சந்த் பண்டாரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி திணேஷ் குப்தா, இது எல்லை மீறிய செயல். வீடியோ படத்தைப் பார்த்தபோது இது நமது கலாச்சாரத்திற்கு விரோதமானது என்பதை உணர முடிகிறது.

சமூகத்தைத் தவறான பாதைக்கு இது இட்டுச் செல்லக் கூடியதாக உள்ளது. கெரே செய்தது தவறு என்றால், அதை அனுமதித்ததால், கெரேவின் பிடியிலிருந்து விலகாமல் அப்படியே இருந்ததால் ஷில்பாவும் குற்றவாளியாகிறார்.

கெரேவை கைது செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த வேண்டும். ஷில்பா ஷெட்டி மே 5ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என்று உத்தரவிட்டார் நீதிபதி.

--thatstamil.com--

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டியை யாரும் எதிர்பாரத வணணம் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கேரி முத்தமழை பொழிய, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்.

இந்திய கலாச்சாரத்துக்கு ஒத்துவராத செயலை செய்துவிட்டதாக ஷில்பாவிடம் ரிச்சர்ட் மன்னிப்பு கேட்டுவிட்டாலும். கலாச்சார காதலர்கள் மன்னிக்க தயாராக இல்லை. ரிச்சர்ர்ட் கொடுத்த முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த விஷயம் நாடு முழுவதும் பற்றி எறிய தொடங்கியது.

இது குறித்து ஜெய்பூர் நீதிமன்றத்தில் பூனம் சந்த் பண்டாரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். 'பொது இடத்தில் முத்தமிட்டு ஆபாசமாக நடந்து கொண்டார்கள்' என்பதுதான் அவரது குற்றச்சாட்டு.

இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ஷில்பா - ரிச்சர்ர்ட் கேரியின் செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார். 'ரிச்சர்டு முத்திமிட்ட போது அவரை தடுக்க ஷில்பா எந்த முயற்சியையும் செய்யவில்லை. எனவே நடந்த சம்பவத்தில் ஷில்பாவுக்கும் பங்கு உள்ளது'. என நியாய தராசை தூக்கி பிடித்தவர், இந்திய தண்டனைசட்டம் 294-வது பிரிவின் கீழ் குற்றம்

சுமத்தியதுடன் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து வரும் 5-ந் தேதிக்குள் அவர்களை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

நிதிமன்றமும், போலிஸும் அதற்கான நடவடிக்கையில் இறங்கினாலும் ரிச்சர்ட் கேரி ஏற்கனவே அவர் ஊருக்கு ப்ளைட் ஏறி டிமிக்கி கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

:lol::lol::)

இந்த செய்தி இங்கை ஏற்கனவே உண்டு :angry:

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷில்பாவுக்கு முத்தம் விவகாரம் : மன்னிப்பு கேட்க இருப்பதாக ரிச்சர்ட் கெரே அறிவிப்பு

புதுடில்லி : பொது இடத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா வுக்கு முத்தம் கொடுத்ததின் மூலம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று ஜெய்ப்பூரில் உள்ள ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடரவே, அவர் மீதும் ஷில்பா மீதும் கைது வாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ரிச்சர்ட் கெரே விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் நிகழ்ச்சி ஒன்றில் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்தது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் செய்த இந்த தவறால் ஷில்பா பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதற்கு வருத்தமும் தெரிவித்தார்.

தினமலர்

முத்தம் கொடுப்பது அவரவர் விருப்பம் அதுக்கு இவளவு பிரச்சினைகளா?

சில்பாசெட்டிக்கு வழங்கப்பட்ட முத்தம் கொஞ்சம் அழுத்தித்தான் கொடுக்கப்படுகிறது.சரி பாவம் அந்தாஆளும் வயசான நேரத்தில் ஏதோ தடுமாறிவிட்டார் போல, அதுதான் அவவே இந்த விடயத்தை பெரிது பண்ணவேண்டாம் என்று கூறிய பின்பும் இவங்களின் பொறாமைக்குணம் தான் நாட்டுக்கே இழுக்குவந்தமாதிரி போட்டடிக்கிறார்கள்.இதுக்கு தானே இருக்கவேஇருக்கு டைனாமிக் திருமணம்.அப்பாடா அந்தகாட்சியில் சந்தர்பத்தை எல்லாரும் வடிவாக பயன்படுத்தியிருந்தார்கள்

முத்தம் கொடுப்பது அவரவர் விருப்பம் அதுக்கு இவளவு பிரச்சினைகளா?

அப்ப தலை நானும் யாருக்கும் முத்தம் கொடுக்கலாமா

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வைத்து. கமராவுக்கு ஆயத்தப்படுத்தனும்ங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்த நடிகர் மன்னிப்பு

புதுடில்லி: பொது நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டியை கட்டி அணைத்து பலவந்தமாக முத்தமிட்ட ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கியர், இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

டில்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கியர், மேடையில் இருந்த நடிகை ஷில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து அநாகரிகமாக முத்தமிட்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. கலாசார சீர்கேடு என்ற பெயரில் இப்பிரச்னை கோர்ட் வரை சென்றது. இந்திய பாரம்பரிய கலாசார மரபுகளை சீர்குலைத்த ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு கியர் இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறு ஜெய்ப்பூர் கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, நடிகர் ரிச்சர்டு, "என் அன்பு இந்திய நண்பர்களுக்கு' என்ற தலைப் பில் இந்திய பொதுமக்களிடம் மன்னிப்பு கோரி நேற்று அறிக்கை வெளியிட்டார்.

அதில் ரிச்சர்டு கூறியிருப்பதாவது: இந்தியர்களை புண்படுத்தவேண்டும் என்ற எண்ணமோ அல்லது அவமதிக்கும் வகையிலோ நான் எப்போதும் இருந் ததில்லை. ஒருவேளை இந்திய மக்கள் புண்படும்படி நடந்துகொண்டிருந்தால், நேர்மையாக மன்னிப்பு கேட்பதில் எனக்கு பிரச்னையில்லை.

டில்லி நிகழ்ச்சியில் ஷில்பாவை முத்தமிட்டது, என்னுடைய "ஷால் விடான்ஸ்' படத்தில் வரும் ஒரு பிரத்தியேக காட்சியை நினைத்து செய்தேன். அப்படத்தில் வரும் காட்சியை செய்து பார்க்க முயற்சிக்கப்போய், அது இந்திய கலாசாரத்தை மீறியதாகிவிட்டது. உண்மையில் மீடியாக்கள் கிளப்பிய இப்பிரச்னை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எய்ட்ஸ் விழிப்புணர்வுக் காக நடத்தப்பட்ட வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சி இவ்வாறு சோக திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டதே என வேதனைப்பட்டேன். ஷில்பா ஷெட்டி மிகவும் தைரியமான, அற்புதமான பெண். எய்ட்சுக்கு எதிரான அவரின் பங்களிப்பு போற்றுதற்குரியது. நான் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். அவருக்கும் இது தெரியும். அவர் செய்யாத தவறுக்கு பழி சுமக்கிறாரே என்றுதான் எனக்கு வருத்தம். தவறு என்னுடையதே தவிர வேறு யாரும் காரணமல்ல. இந்த அறிக் கைக்கு பின்னர் மீடியாக்கள் இப்பிரச் னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கு செலவிடும் நேரத்தை எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஒழிப்புக் காக மீடியாக்கள் செலவிடலாம். இவ்வாறு கியர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர்

எங்கே வைத்து. கமராவுக்கு ஆயத்தப்படுத்தனும்ங்க.

இதுக்கென்றே பல பேர் அலையிறாங்க போல இருக்கு ஜம்மு சொன்னது அவ அம்மாக்கு :lol:

எங்கே வைத்து. கமராவுக்கு ஆயத்தப்படுத்தனும்ங்க.

நான் சொன்னது என்னுடைய அம்மாவுக்கு

:angry: :angry:

இதுக்கென்றே பல பேர் அலையிறாங்க போல இருக்கு ஜம்மு சொன்னது அவ அம்மாக்கு :lol:

அது தானே தலை சின்னபிள்ளைகளை கெடுக்குறாங்க தலை

:P

  • கருத்துக்கள உறவுகள்

சில்பா செட்டி செய்தது சரியென்று சொல்லவில்லை. தண்டிக்கப்பட வேண்டியது தான்.

ஆனால் சினிமாப்படங்களில் அதை விட, ஆபாசமான காட்டிகளுக்கு "ஏ" சான்றிதழ் இல்லாமலே இப்போது விடுவிக்கப்படுகின்றனவே. அதை ஏன் தடுக்கவில்லை.

தவிரவும், இப்படி வழக்குப் போடுபவர்களுக்கு உள் நோக்கம் இருக்கின்றது. பிரபல்யம் தேட இது தான் வழி.

டைனமிக் திருமணத்தை இங்க உள்ள மிச்சாக்கள் பார்க்கலப் போல இருக்கு ப்ளுபேர்ட்.:-))

தூயவன் அண்ணா சொல்றதைப் போல அநேகமான ஹிந்திப்படங்களில் வாற முத்தக்காட்சிகள் எல்லாம் ஏன் தடை செய்யப்படவில்லை.அண்மையில் கூட டூம் 2 படத்தில் ஐஸ் றித்திக் முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.

சில்பா செட்டி செய்தது சரியென்று சொல்லவில்லை. தண்டிக்கப்பட வேண்டியது தான்.

ஆனால் சினிமாப்படங்களில் அதை விட, ஆபாசமான காட்டிகளுக்கு "ஏ" சான்றிதழ் இல்லாமலே இப்போது விடுவிக்கப்படுகின்றனவே. அதை ஏன் தடுக்கவில்லை.

தவிரவும், இப்படி வழக்குப் போடுபவர்களுக்கு உள் நோக்கம் இருக்கின்றது. பிரபல்யம் தேட இது தான் வழி.

இப்படி செய்தா பிரபல்யம் ஆகலாமா அப்ப நாளைக்கு நானும் செயிறன்

:lol:

நவீன நாகரீக உலகின் அடிவர்க்க முட்டாள்கள் இந்த ரசிகர்களும் + கட்சிகளும்

சில்பா செட்டி தண்டிக்கப்பட வேண்டியது தான்.

.

ஒவ்வொருவரும் தம்மை திருத்தினால் உலகம் தானாய் திருந்தும் :P

ஒவ்வொருவரும் தம்மை திருத்தினால் உலகம் தானாய் திருந்தும் :P

உலகம் திருந்தினா தான் நானும்,வானவில்லும் திருந்துவோம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.