Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதாள உலக குழுத் தலைவர் அதிரடியாக கைது! பிரபல பாடகரும் உள்ளடக்கம்!!

Featured Replies

இலங்கை பொலிஸாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என கூறப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துர மதுஷ் என்பவர் டுபாயில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் உட்பட 25 சந்தேகிகளை டுபாய் பொலிஸாரும் சிறிலங்காப் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளதாக டுபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

கைதுசெய்யப்பட்டவர்களுள் இலங்கையைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி நாட்டில் தலைமறைவான மாகந்துர மதுஷ் இலங்கையில் மிகவும் பயங்கரமான பாதாள உலகக் குழுவின் தலைவராக அறியப்படுகிறார்.

புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ஈ.எஸ் தர்மபிரியவை படுகொலை செய்தால் ஐம்பது லட்சம் ரூபா தருவதாக அவரின் சாரதியிடம் கப்பம் கோரியதுடன் அவ்வாறில்லையெனில் சாரதியின் சகோதரரைக் கொலைசெய்யப்போவதாகவும் மிரட்டியிருந்தார்.

மேலும் இலங்கையில் ஆட்கடத்தல்கள், கப்பம்கோரல்கள் மற்றும் படுகொலைகள் என்பவற்றுடன் மதுஷின் பாதாள உலகக் குழுவுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தகவல் கூறியிருந்தன.

இலங்கையிலிருந்து டுபாய்க்குத் தப்பிச் சென்றிருந்த மாகந்துர மதுஷ் இரு நாட்டுப் பொலிஸாராலும் தேடப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையிலேயே இலங்கை-டுபாய் கூட்டு நடவடிக்கையில் மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 25பேரும் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/113389?ref=home-imp-parsely

டுபாயில் பிடிபட்ட பயங்கர கும்பலின் புகைப்படங்கள் வெளியாகின!

டுபாயில் இன்று கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துர மதுஷ் உள்ளிட்ட அவரது சகாக்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

டுபாயில் அஞ்ஞாதவாசம் அனுபவித்துவந்த மாகந்துர மதுஷ் உள்ளிட்ட பயங்கர பாதாளக் கும்பல், டுபாய் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் பொலிஸாரினது கூட்டு நடவடிக்கைமூலம் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்கள்.

நீண்ட காலமாக இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த மதுஷ் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையைவிட்டு தப்பிச் சென்று டுபாயில் மறைந்திருந்தனர்.

இதன்போதும் இலங்கையில் மதுஷ் குழுவினர் பல்வேறு கடத்தல்கள் மற்றும் கப்பங்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இவர்கள் டுபாயில் விசேட நடவடிக்கைமூலம் ஹோட்டல் ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான தீவிர ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில் குறித்த கும்பலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கும்பலை உடனடியாக இலங்கைக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/113393?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பருப்பு இந்த காடை கூட்டத்திற்கு. பார் துபாயா அல்லது டெய்ரா நய்ஃப் ரோட் பொலிஸ் ஸ்டேசனா தெரியவில்லை.
இரண்டுக்கும் போயுள்ளேன். அந்த மாதிரி நரகத்தில் கூட இப்படி இருக்காது. ஒரு சிறிய ரூம்பில் 100 பேர்வரை ஒட்டி ஒட்டி படுத்திருப்பார்கள். அங்கு இங்கு திரும்ம முடியாது. கொடுமை. 

ரிகா ரோட்டில் உள்ள இரவு விடுதியில் பிடிபடும் ரஷ்ய இளம் பெண்களை நயிஃப் அல்லது முரகபாத் பொலிஸ் ஸ்டெசனில் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 Min Read
February 5, 2019

madush-4.jpg?zoom=1.2100000262260437&res

பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  டுபாய் மற்றும் இலங்கைக் காவற்துறையினர், ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மாகந்துர மதூஷ் டுபாயில் ஏற்பாடு செய்திருந்த விருந்தொன்றின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவர் மற்றும் நடிகர் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதாள உலக குழு உறுப்பினர்களான கெசல்வத்த தினுக மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பல்வேறு குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்சித எனும் மாகந்துர மதூஷ் பாதுகாப்பு பிரிவினர்களிடம் இருந்து தப்பித்து கடந்த காலங்களில் வெளிநாட்டில் இருந்துள்ளார். எனினும் இவர் பல முறை நாட்டிற்குள் வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

madush-1.jpg?zoom=1.2100000262260437&res

madush-3.jpg?zoom=1.2100000262260437&res

 

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
 

மைத்திரி - லதீப் பொறியில் சிக்கிய மதுஷ், ரணில் தடை போடுவாரா..? திகில் சம்பவங்கள் (Exclusive Report)

மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை கைது செய்யும் திட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.
 
ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான செய்திகளில் மதுஸூம் சம்பந்தப்பட்டதால் அப்போதே விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிடம் இந்த பணியை இரகசியமாக ஒப்படைத்தார் மைத்ரி...
 
அதன் தொடர்ச்சியாகவே , நீண்ட வலையமைப்பை கண்காணித்து அந்த கோஷ்டிக்குள்ளே தமது ஆளை அனுப்பி இந்த கோஷ்டியை கூண்டோடு கைது செய்துள்ளது எஸ் ரீ எப்...
 
ஜனாதிபதியின் நேரடி பணிப்புரை என்பதால் இந்த திட்டம் இரகசியமாகவே நடந்துள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு கூட தெரியவில்லை. சொல்லப்படவில்லை.விசேட பயிற்சி பெற்ற இரண்டு வீரர்கள் சில மாதங்களுக்கு முன்னரே டுபாய் சென்று மதுஷ் கோஷ்டியுடன் உறவாட ஆரம்பித்தனர். அவர்களே அங்கிருந்து கண்காணித்து தருணம் பார்த்திருந்தனர் .
 
தனது ஓய்வு பெறும் தினத்தன்று இதனை ஜனாதிபதியிடம் நேரடியாகவே லத்தீப் விளக்கி - மதுஷ் கோஷ்டி கைது செய்யப்பட்டால் அவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்கள் வரலாம் என்பதையும் சுட்டிக்காட்டியதாக தகவல்...
 
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் டுபாயுடன் செய்து கொள்ளாத காரணத்தினால் இவர்களை கொண்டுவருவதில் சிக்கல் என்று அவர் சுட்டிக்காட்டினாலும் - இராஜதந்திர ரீதியில் அவற்றை செய்யலாம் என்று கூறி முன்வைத்த காலை பின்வைக்கவேண்டாமென லத்தீப்பை உற்சாகப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி.
 
அதேபோல் லத்தீப்பின் பதவிக்காலத்தை நீடிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
 
பின்னரே திகில் சம்பவங்கள்.
 
இதன் பின்னர் டுபாய் மற்றும் அபுதாபி உயர்மட்ட பொலிஸாருக்கு அறிவித்து இந்த ஒப்பரேஷன் ஆரம்பமானது. போதைப்பொருள் தடுக்கும் இலங்கை நார்கோட்டிக் பொலிஸாரும் அறிவுறுத்தப்பட்டனர்.
 
ஐந்து நட்சத்திர ஹோட்டலை மிக இரகசியமாக சுற்றிவளைத்த பொலிஸ் குழு 5 ஆம் திகதி நேற்று அதிகாலை அவர்களை கைது செய்தது. சிலசமயம் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றால் மயக்க ஊசிகளை அவர்கள் மீது செலுத்துவது ( துப்பாக்கி சுடுவது போல் மயக்க ஊசிகளை தூர இருந்து ஒரு உபகரணத்தால் பாய்ச்சுவது ) என்றும் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்.
 
அதிரடியாக உள்ளே நுழைந்த அதிகாரிகள் அனைவரையும் வளைத்து ஒரு அறைக்குள் அடைத்தனர். அனைவரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எல்லோரும் தனித்தனியாக படமெடுக்கப்பட்டனர்.இலங்கைக்கும் இதுபற்றி அறிவிக்கப்பட்டது.
 
அங்கிருந்தவர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க முற்பட்ட போதும், பொலிஸ் அதை ஏற்கவில்லை. மதுஷ் உட்பட்ட பலர் போலி கடவுசீட்டுக்கள் போலி விசாக்கள் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டது. தனியாக நடத்தப்பட்ட சோதனையில் மதுஷ் மது அருந்தியிருந்தமை அறியப்பட்டது. ஏனைய சிலர் கொக்கெய்ன் போதை பாவித்திருந்தனர் என கண்டறியப்பட்டது.
 
அனைவரையும் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது..
 
இப்போது ?
 
இப்போது மதுஷ் கைது அரசியலில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும் போல தெரிகிறது.
 
போதைப்பொருள் விடயத்தில் கடும் நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி , மதுஷ் கோஷ்டியை இலங்கைக்கு கொண்டு வந்தால் அவருக்கு சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் பிரதமரோ இன்று பாராளுமன்றத்தில் செய்த அறிவிப்பில் , மதுஷ் மீது அந்நாட்டு சட்டம் பாயுமென தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு மதுஷ் கோஷ்டியை கொண்டுவருவதன் மூலம் அவர்களிடம் இருந்து மேலும் பல தகவல்களை பெற்று அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை கண்டறிய ஜனாதிபதி ஆவலாக இருப்பதாக சொல்லப்படுகிறது..
 
மறுபுறம் மதுஷ் மற்றும் சகபாடிகளை கொண்டுவர வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பமைச்சும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
 
அதேசமயம் -உள்ளூர் அரசியல் பிரமுகர் இருவர் இதில் சிக்கியுள்ளனரா ? சிக்கிய டிப்ளோமட்டிக் பாஸ்போர்ட் யாருடையது? இந்த பிறந்த நாள் நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து செல்லவிருந்த இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளி யார் ? என்பதை பற்றியும் சில விபரங்கள் ஜனாதிபதியின் கைகளுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
 
இந்த விடயத்தில் ஜனாதிபதி எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பிரதமருடன் அரசியல் ரீதியில் மீண்டும் மோதலை ஏற்படுத்தும் என்கின்றன உள்வீட்டு தகவல்கள்.
 
போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் எவருக்கும் அஞ்சாது, எவர் பேச்சும் கேளாது அதிரடியாக செயற்படுவதால் இந்த கைது இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 
தூர இடங்களுக்கான ஜனாதிபதியின் பயணங்கள் பிற்போடப்பட்டுள்ளன. இன்றைய யாழ்ப்பாண அவரது விஜயமும் பிற்போடப்பட்டுள்ளது.
 
எப்படியோ மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் நாடு கடத்தப்படுவார்களா அல்லது அங்கு தண்டிக்கப்படுவார்களா அல்லது குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுவார்களா என்பது இன்னும் ஓரிரு நாளுக்குள் தெரிந்து விடும்.
 
எல்லாவற்றுக்கும் அப்பால் இந்த விடயத்தில் பெயர் போட்டுக்கொள்ளவும், சில பாதுகாப்பு உயரதிகாரிகள் முயல்வதாக இன்னுமொரு தகவல் சொல்கிறது.
 
மலிந்தால் சந்தைக்கு வந்துவிடும் எல்லாம் !
 
 

- Siva Ramasamy -

http://www.jaffnamuslim.com/2019/02/exclusive-report.html

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.