Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்டனையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்!

பதிவேற்றிய காலம்: Feb 9, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடூழியச் சிறைத்தண்டனை யிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். அருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஹோமாகம நீதிவான் மன்று ஞானசார தேரருக்குக் கடந்த வருடம் விதித்த தண்டனையை நீக்குமாறுகோரி ஹோமாகம மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அது மீதான விசாரணையின் பின்னர் மேற்குறித்த உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் மன்றில் வைத்து ஞானசார தேரர் அச்சுறுத்தியிருந்தார். அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த விசாரணையின் பின்னர் தேரரைக் குற்றவாளியாகக் கண்ட நீதிவான் மன்று 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்திருந்தது. அவர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

அவரை விடுவிக்குமாறு அவர் சார்பில் சட்டத்தரணிகள் ஹோமாகம மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர். அதனை மன்று பரிசீலித்தது.

அது தொடர்பான கட்டளைக்காக மேல்நீதிமன்றில் நேற்று எடுக்கப்பட்டது. சிறைச்சாலை அலுவலர்கள் ஞானசாரதேரரை மேல்நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

மனுமீதான தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன, ஞானசார தேரருக்கு விதித்த சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.

அவரை விடுவிக்குமாறு தெற்கில் சில அமைப்புகளும் சில அரசியல்வாதிகளும் போராட்டம் செய்திருந்தன. அரசதலைவரிடமும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்து அமைப்பு ஒன்றும் ஞானசாரரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

 

https://newuthayan.com/story/11/தண்டனையிலிருந்து-விடுதலையானார்-ஞானசார-தேரர்.html

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் எமக்கு புரியும் செய்தி, புதியஉதயனுக்கு புரியவில்லையோ என தோன்றுகிறது.

ஹோமகம நீதிமன்ற வளாகத்தில், எகலியகொட காணாமல் போன வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றினுள், மகிந்தவின் மறைமுக தூண்டலில் வந்த இந்த வீணாகிப் போன பிக்கர் தலைமையில் வந்த, பிக்கர்கள் கோஸ்டி, வடிவேலு ஸ்ரைலில , அந்தாள் புலிகளோட சேர்ந்து இயங்கின தேசத்துரோகி... வழக்கா, விசாரிக்கிறீங்க, வழக்கு, கெளம்பு, கெளம்பு என அட்டகாசமாக நடக்க.... இலங்கை நீதித்துறையே ஆடிவிட்டது.

உறுதியாக நடவடிக்கை எடுத்த நீதிமன்றம் அவர் மேல் இரண்டு வழக்குகள் பதிந்து கைது செய்யவும் உத்தரவு இட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதி மன்றில் வைத்து, எகலியகொட மணைவி சந்தியாவை பயமுறுத்திய வழக்கு. 

முதல் வழக்கில் ஆறு வருடம் தீட்டி விட்டார்கள். நீதித்துறையையே அவமதித்ததால், உச்ச நீதிமன்றம் வரை போயும் தண்டணை உறுதி செய்யப்பட பிக்கர் கம்பி எண்ணுகிறார்.

இப்போது இரண்டாவது வழக்கு தீர்ப்பு வந்துள்ளது. 

பார்ப்பதற்கு இவர் விடுதலை செய்யப்பட்டார் போல தெரிந்தாலும் அதில் வைக்கப்பட்டுள்ள ஆப்பு சட்டவாளர்களுக்கு புரியும்.

இவருக்கு மன்னிப்பை, மைத்திரி வழங்கவேண்டும் என, அவரது புது கூட்டாளி மகிந்த தரப்பு கேட்கிறது. அடுத்த மாதம் வரும் ஜெனீவா கூட்டம், அங்கே நேரே சென்று சந்தியா முறையிட்டமை ஆகிய காரணங்களால் மைத்திரி அதை உடனடியாக செய்யவில்லை.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு, அவர் இப்போது அனுபவிக்கும் தண்டணையுடன் சேர்த்து அனுபவிக்காமல், ஜந்து வருடத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள ஆப்பு என்னவென்றால் இவர் பொதுமன்னிப்பில் வெளியே வந்தாலும், ஜந்து வருட காலத்தில் வாலாட்டினால், இந்த தீர்ப்பின் நிறுத்திவைப்பினை, தானே , தனது செயல் மூலம், ரத்து செய்ய வைத்து, மீண்டும் சிறை போவார்.

இது தான் பிக்கர் நிலை. வடிவேலு ஸ்ரைலில கொஞ்சம் ஓவரா தான் பண்ணீட்டம்... போல என்று கம்பி எண்ணிக்கொண்டிருப்பார்.

 

Edited by Nathamuni

13 hours ago, Nathamuni said:

இதிலுள்ள ஆப்பு என்னவென்றால் இவர் பொதுமன்னிப்பில் வெளியே வந்தாலும், ஜந்து வருட காலத்தில் வாலாட்டினால், இந்த தீர்ப்பின் நிறுத்திவைப்பினை, தானே , தனது செயல் மூலம், ரத்து செய்ய வைத்து, மீண்டும் சிறை போவார்.

நீதிக்கு மரியாதை உள்ள நாட்டில் மட்டுமே இதை ஆப்பாக கருதமுடியும்.

இவர் இன்னொருமுறை சந்தியாவை பயமுறுத்தினாலும் அவரை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை சிறையில் அடைப்பது சாத்தியமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.