Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம்

 

north-hartal-1-300x199.jpgகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

முக்கியமான அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, அனைத்து செயற்பாடுகளும் இன்று முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டிருக்கும் என்றும், போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இன்று காலை 8.30 மணியளவில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில், வடக்கு, கிழக்கில் இருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒன்று கூடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2019/02/25/news/36573

  • கருத்துக்கள உறவுகள்

kili-p3-720x450.jpg

ஐ.நா.வே இலங்கைக்கு காலக்கெடு கொடுத்தது போதும் – கிளி.யில் மாபெரும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக, ஏ9 வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியுள்ளமையினால், குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் ஐ.நா.வே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் OMP அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், ஐ.நா.வே இலங்கைக்கு காலக்கெடு கொடுத்தது போதும் குற்றவியல் நீதிமன்றிற்கு பாரப்படுத்து போன்ற பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரின் கவனத்தை ஈர்க்கும நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

kilip2.jpg

http://athavannews.com/ஐ-நா-வே-இலங்கைக்கு-காலக்க/

  • கருத்துக்கள உறவுகள்

harthal-720x450.jpg

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வடக்கு முழுமையாக ஸ்தம்பிதம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வடக்கு மாகாணம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என்பன முடக்கப்பட்டுள்ளன.

அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், சேவை சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநாச்சி அரச பேருந்து சாலையில் அனைத்து பேருந்துகளும் தரிக்க விடப்பட்டுள்ளதுடன், சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.

kili5.png

kilip-720x418.jpg

இதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்திலும் பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாட்டமின்றி நகர் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

jaffna2-1.jpg

jaffna3-2.jpg

அவ்வாறே வவுனியா மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா நகர் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு உள்ளுர் பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

எனினும் வெளியூருக்கான சேவைகள் மாத்திரம் இடம்பெற்று வருவதோடு, அரச திணைக்களங்கள் வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

vavuniya-6.jpg

vavuniya3.jpg

அதேபோல், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள மாபெரும் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

அதன்படி மன்னார் மாட்டத்திலும் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பஸார் பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி தமிழ், முஸ்ஸிம் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

மன்னாரிலிருந்து செல்லும் அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு குறிப்பிட்டளவு மாணவர்களே சமூகமளித்துள்ளதோடு, போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளமையினால், அதிகளவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை.

mannar2-1.jpg

mannarp.jpg

அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

http://athavannews.com/தமிழர்-பிரச்சினைக்கு-தீர/

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்து பூரண ஆதரவு

February 25, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

 

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் உள்ள அணைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன்தமிழ்,முஸ்ஸீம் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடுஎவ்வித சேவைகளும் இடம் பெறவில்லை.

பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் சென்றுள்ள போதும்,போக்கு வரத்து சேவைகள் இல்லாமையினால் அதிகலவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை.

மேலும் மன்னாரில் உள்ள அரச தனியார் அலுவலங்களுக்கும் பணியாளர்கள் சமூகமளிக்கவில்லை.இதனால் மன்னார் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

மேலும் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையம் உணவங்கள் மூடப்பட்டுள்ள போதும் ஒரு சில உணவகங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

DSC_0055-1.jpg?resize=800%2C533DSC_0061.jpg?resize=800%2C533DSC_0072.jpg?resize=800%2C533DSC_0080.jpg?resize=800%2C533DSC_0106.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2019/114397/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.