Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழக் கனவு ஒருபோதும் பலிக்காது - சம்பிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

இலங்கையில் தமிழீழம் ஒருபோதும் மலரப்போவதில்லை. தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க,  நனவாகாத கனவை எண்ணிக்கொண்டு சந்தர்ப்பங்களை தவறவிடாது நாம் அனைவரும் ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தெரிவித்தார்.

champika_ranawaka.jpg

அத்துடன் வடக்கு மக்களுக்கு அபிவிருத்திக்கான பாதையை உருவாக்கிக்கொடுத்து அவர்களின் கஷ்டங்களில் பங்கெடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஜாதிகஹெல உறுமைய கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 

யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெற்றமை மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, ஆனால் அவை எதுவுமே யுத்த திட்டமிட்ட அழிப்பு அல்ல. போர்க்குற்றச்சாட்டில் இராணுவத்தை தண்டிக்க வேண்டுமென்றால் அதே குற்றங்களில் விடுதலைப்புலிகளையும், இந்திய அமைதிப்படையையும் ஏனைய தரப்புகளையும் தண்டிக்க வேண்டும். 

ஆகவே உண்மைகளை கண்டறிவது விடுத்து தீர்வுகளை நோக்கி பயணிப்போம் என்றார்.

http://www.virakesari.lk/article/50897

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பிழம்பு said:

இலங்கையில் தமிழீழம் ஒருபோதும் மலரப்போவதில்லை. தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க,  நனவாகாத கனவை எண்ணிக்கொண்டு சந்தர்ப்பங்களை தவறவிடாது நாம் அனைவரும் ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஓமோம் எங்கட கையில இல்லை ஐயா.

16 minutes ago, பிழம்பு said:

யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெற்றமை மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, ஆனால் அவை எதுவுமே யுத்த திட்டமிட்ட அழிப்பு அல்ல. போர்க்குற்றச்சாட்டில் இராணுவத்தை தண்டிக்க வேண்டுமென்றால் அதே குற்றங்களில் விடுதலைப்புலிகளையும், இந்திய அமைதிப்படையையும் ஏனைய தரப்புகளையும் தண்டிக்க வேண்டும். 

ஆகவே உண்மைகளை கண்டறிவது விடுத்து தீர்வுகளை நோக்கி பயணிப்போம் என்றார்.

ஆஹா இந்தியாவையும் இதுக்க கோர்த்துவிடுவது அற்புதம்.
மறைமுகமா ஒத்துக்கொள்கிறார், உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்துவிட்டு பின்பு மன்னிப்பு வழங்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இலங்கையில் தமிழீழம் ஒருபோதும் மலரப்போவதில்லை. தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை 

இந்திய அமைதிப்படையையும் ஏனைய தரப்புகளையும் தண்டிக்க வேண்டும். 

அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களே! தமிழீழம் கனவல்ல, அது என்றோ நனவாகி மலர்ந்துவிட்டது.!! அது மலர்ந்து 30 வருடங்கள் தமிழர்களின் ஆட்சியும் அங்கு நடைபெற்றதே மறந்துவிட்டதா? மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நினைவில்வைத்து, தமிழீழம் மலரப்போவதில்லை என்று நீங்கள் கனவுகாணுங்கள் 

இந்திய அமைதிப்படையையும் தண்டிக்க வேண்டும் என்று உலகிற்கு உரத்துக் கூறுங்கள்: மாற்றத்தை உங்கள் காலத்திலும் விரைந்து காண்பதற்கு சந்தர்ப்பம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.