Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

 

michelle-bachelet-300x200.jpgஇனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற ஆபத்து தொடர்கின்றமையானது, சமூக மற்றும் இனத்துவ வன்முறைகளையும், உறுதியற்ற நிலையையும் தூண்டுகிறது.

இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதும், கடந்தகால குற்றங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதும், பாதிக்கப்பட்ட எல்லா சமூகத்தினரதும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது.

குறிப்பிட்ட காலவரம்புக்குள்,  சிறிலங்கா அரசாங்கம், விரிவான நிலைமாறுகால நீதி செயல்முறைகளுக்கான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

சுதந்திரமான, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டம், முக்கியமான அடுத்த கட்டமாக இருக்கக் கூடும்.

சிறிலங்கா அரசின் உயர் மட்டத் தலைமையின், தூரநோக்கின்மையால், போர்க்கால அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறும்,  தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா தவறி விட்டது.

ஐ.நாவுடன் கொழும்பு ஒத்துழைத்த போதும்,2010 பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை மிக மெதுவாகத் தான் நடைமுறைப்படுத்துகிறது.

2015இல் ஆட்சிக்கு வந்த சிறிலங்காவின் புதிய அரசாங்கம், போர்க்குற்றவாளிகளை விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும், அனைத்துலக – ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிப் பொறிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால், இரண்டு தரப்பிலும் பத்தாயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டதற்கு நீதியை உறுதிப்படுத்தவதற்கான எந்த பொறிமுறையையும் கொழும்பு இன்னமும் உருவாக்கவில்லை.

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுதல் இன்னும் சீரான, விரிவான முறையில் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களை கடுமையாக மீறியவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டிருப்பது, கவலையளிக்கும் ஒரு நிலைமையாகும்.

மனித உரிமைகள் விடயத்தில் கேள்விக்குரிய படை அதிகாரிகளை நீக்குவதற்கு, ஆய்வுச் செயல்முறைகளை உள்ளடக்கிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். 43 ஆண்டுகளுக்குப் பின்னர், மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் சிறிலங்கா அதிபரின்  அறிவிப்பு கவலை அளிக்கிறது.

அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும்  தைரியமான முடிவு மற்றும்  தலைமைத்துவத்தின் மூலம், கடந்தகால வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு இப்போது உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2019/03/21/news/36988

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களே தூண்டி விடுவினம் போல!

  • கருத்துக்கள உறவுகள்

 

2 minutes ago, ஏராளன் said:

இவங்களே தூண்டி விடுவினம் போல!

அதெப்படி  சகோ

யார்  சொன்னாலும் தூண்டி  விடுவதாக  எடுத்துக்கொள்வது  சரியா???

அப்போ

முடிவு  அல்லது  தீர்வு  தான்   என்ன??

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

 

அதெப்படி  சகோ

யார்  சொன்னாலும் தூண்டி  விடுவதாக  எடுத்துக்கொள்வது  சரியா???

அப்போ

முடிவு  அல்லது  தீர்வு  தான்   என்ன??

 

இங்க ஆயுதப்போராட்டம் சாத்தியம் இல்லை, அதனை எமதினத்தாலும் தாங்க முடியாது.
வேறு மார்க்கங்கள் மூலம் அடைந்தால் மகிழ்வேன். (சர்வதேச படை இறக்கம் ஏதும்/ உலகத்தமிழரின் பொருளாதார, அரசியல், தொழினுட்ப வளங்கள் மூலமான அழுத்தங்களால் வடகிழக்கு இணைந்த சுயாட்சி)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இங்க ஆயுதப்போராட்டம் சாத்தியம் இல்லை, அதனை எமதினத்தாலும் தாங்க முடியாது.
வேறு மார்க்கங்கள் மூலம் அடைந்தால் மகிழ்வேன். (சர்வதேச படை இறக்கம் ஏதும்/ உலகத்தமிழரின் பொருளாதார, அரசியல், தொழினுட்ப வளங்கள் மூலமான அழுத்தங்களால் வடகிழக்கு இணைந்த சுயாட்சி)

 

மோதல்களுக்குள்   சிக்க  நேரடும்  என்பதும்

ஆயுத  மோதலாக  சொல்லப்படவில்லை

இனங்களுக்கிடையே  ஆன முறிவைத்தான்  சொல்கிறார் என்றுநினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 

மோதல்களுக்குள்   சிக்க  நேரடும்  என்பதும்

ஆயுத  மோதலாக  சொல்லப்படவில்லை

இனங்களுக்கிடையே  ஆன முறிவைத்தான்  சொல்கிறார் என்றுநினைக்கின்றேன்

இங்க முழுக்க கண்காணிக்கப்படுவதால் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.
சட்ட விரிவுரையாளர் குருபரன் சொன்னது தான், இலங்கை புலனாய்வு துறையின் தொழினுட்ப வளர்ச்சியை சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இங்க முழுக்க கண்காணிக்கப்படுவதால் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.
சட்ட விரிவுரையாளர் குருபரன் சொன்னது தான், இலங்கை புலனாய்வு துறையின் தொழினுட்ப வளர்ச்சியை சொன்னேன்.

ம்ம்ம்

கவனமாக  இருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆணையாளரின் இந்தக் கூற்றின் மூலம் தெளிவாவது என்னவெனில், போர்குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டால் அவர்கள் மேலும் மேலும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடக்கூடும் அல்லது இவர்களின் தப்பித்தல் என்பது எதிர்காலத்தில் அரச படைகளில் இருக்கும் ஏனையோருக்குப் பிழையான முன்மாதிரியாக இருக்கும் என்பதைத்தான். தண்டனைகள் ஏதுமற்ற பாரிய மனிதவுரிமை மீறல்களைச் செய்ய இது அவர்களுக்கு உதவியாகவிருக்கும்.

இதற்கு இன்னொரு யுத்தம் தேவையென்பதில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான ஜனநாயக எழுச்சிப் போராட்டங்கள் கூட அரச படைகளினால் கொடூரமான மனிதவுரிமை மீறல்கள் மூலம் முடிவிவிற்குக் கொண்டுவரப்படலாம் என்பது இங்கே கவனிக்கத் தக்கது. இது வடக்குக் கிழக்கில் வேற்றுமொழிபேசும் மக்களுக்கெதிராக மட்டும் அல்லாமல், தமது மொழிபேசும் சிங்களவருக்கெதிராகக் கூட நடத்தப்படலாம். சில வருடங்களுக்கு முன்னர் சிங்களப் பகுதியொன்றில் சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்களை வன்னி இனவழிப்புப் போரில் பங்குகொண்ட பிரிகேடியர் ஒருவனும் அவனுக்குக் கீழிருந்த ராணுவத்தினரும் சுட்டுக் கொன்றது நினைவிருக்கலாம்.  மக்களைக் கேள்விகளின்றிக் கொல்லலாம் என்று அவனுக்கு வன்னி இனவழிப்புப் போரில் வழங்கப்பட்ட ஆணையை அப்படியே ஏற்று சிங்களவர்கள் மீதும் காட்டியிருந்தான். முதலாவது அப்பாவித்தமிழனைக் கொல்லும்போதே அந்தச் சிங்களச் சிப்பாய்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று ஒன்றரை லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம். 

ஆகவேதான், மனிதகுலத்திற்கெதிரான பாரிய குற்றங்களைப் புரிந்த இந்த மிருகங்கள் தப்பிக்க விடக் கூடாது என்று அம்மையார் நினைக்கிறார். இதில் தூண்டிவிடுதல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

Edited by ragunathan
spelling

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.