Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் முகிலன்’...பாதிக்கப்பட்ட பெண் வெளியிடும் பகீர் தகவல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

’மகள் மகள் என்று சொல்லியே மனைவியைப் போல் நடத்திக்கொண்டார் தோழர் முகிலன்’...பாதிக்கப்பட்ட பெண் வெளியிடும் பகீர் தகவல்கள்...

user.png
First Published 22, Mar 2019, 5:29 PM IST
top secrets revealed about mugilan
facebook_icon.svgtwitter_icon.svgredit_icon.svg
Highlights

 


சமூகச் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் அடிக்கப்படவில்லை. இன்னொரு பெண்ணுடன் தனக்கு இருக்கும் ரகசிய உறவு அம்பலத்துக்கு வந்துவிடாமல் இருக்க ஒளிந்துகொண்டிருக்கிறார் என்றொரு செய்தியும் நடமாடிக்கொண்டிருக்க, பிரச்சினையின் நாயகி இசை என்கிற ராஜேஸ்வரி தனது முகநூல் பக்கத்தில் முகிலன் குறித்த உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்.

சமூகச் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் அடிக்கப்படவில்லை. இன்னொரு பெண்ணுடன் தனக்கு இருக்கும் ரகசிய உறவு அம்பலத்துக்கு வந்துவிடாமல் இருக்க ஒளிந்துகொண்டிருக்கிறார் என்றொரு செய்தியும் நடமாடிக்கொண்டிருக்க, பிரச்சினையின் நாயகி இசை என்கிற ராஜேஸ்வரி தனது முகநூல் பக்கத்தில் முகிலன் குறித்த உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்.mugilan.jpg

இதோ அவரது பதிவு...
 
#Whereismugilan?
நீண்ட ஒரு பதிவு, என் மீதான அவதூறுகளுக்காக உண்மையை விளக்கி எழுதவேண்டிய தேவை இருந்தது ஆதலால் இந்த பதிவு.

முகிலன் காணாமல் போவதற்கு முன்பே நான் குறிப்பிட்ட சிலரிடம் முகிலனுக்கும் எனக்குமான ஒரு தனிப்பட்ட விசயம் குறித்து கூறியிருந்தேன், அதில் சிலர் முகிலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது இதுவரை இந்தம்மாவுக்கு தெரியாதா? அல்லது தெரிந்து கொண்டு தெரியாத மாதிரி என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி பேட்டியளிக்கிறாங்களான்னு எனக்கு தெரியல. எனக்கும் முகிலனுக்குமான தனிப்பட்ட பிரச்சனை குறித்து முகிலன் காணாமல் போன பிப்ரவரி 15 க்கு சில நாட்களுக்கு முன்னரே நான் சிலரிடம் தெரிவித்திருந்ததில் பத்திரிக்கை நண்பர்களும் அதில் இருக்காங்க, அவர்களுக்கு நட்பு ரீதியில் இந்த விசயம் தெரியும், ஏன் உங்க வீட்டிலிருக்கும் ஒருவருக்கே இந்த விசயம் தெரியுமே, இது குறித்த பேச்சுவார்த்தைக்கு பிப்ரவரி 17 ஞாயிறு வருகிறேன் என்று உங்க கூட தற்போது செயல்படும் ஒருவருக்குத் தான் முகிலன் மெசேஜ் அனுப்பியிருந்தாரே அதை அந்த பெரிய மனுஷன் உங்க கிட்ட சொல்லலையா? அது பற்றி உங்களுக்கு தெரியாதாம்மா பூங்கொடி அவர்களே?

முகிலன் திரும்ப வரவேண்டும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன், எப்போ வந்தாலும் பஞ்சாயத்து இருக்கு அவருடன்... பத்திரிக்கையாளர்கள் பலர் என்னிடம் பேட்டி கேட்டும் இதுவரை யாருக்கும் பேட்டி தராமல் தான் இருக்கேன், ஆனால் இது மாதிரியான செயல்பாடுகள் என்னை பேச வைக்கிறது. முகிலன் மீதான தவறை மறைக்க ஒருவரைப்பற்றி தெரியாமல் அவங்களை தவறாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபடாதீங்க. இந்த செய்தி வந்திருக்கும் TOI ரிப்போர்ட்டரிடம் கூட நான் இப்போது எந்த பேட்டியும் தரலை சார், நான் நிச்சயம் எனக்கான பிரச்சனைகளை பேசுவேன் அப்போது பேட்டியளிக்கறேன்னு தான் அவரிடம் சொல்லியிருந்தேன்.mugilan.jpg

முகிலன் காணாமல் போவதற்கு முன்பு ஸ்டெர்லைட் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பொன்னரசனை முகிலன் எதற்கு அழைத்தாரென்று உங்களுக்கு தெரியுமா? முகிலன் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்து அவரைப்பற்றி அனைத்தையும் சொல்வேன் என்று கூறியிருந்தேன். உங்களோடு தற்போது இணைந்து செயல்படுபவர்கள் சிலர் இதை முகிலனிடம் சொல்லியிருக்காங்க, ஆதலால் முகிலன் பொன்னரசன் அவரை வரவழைத்து நான் வந்தால் தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்திருந்தார், என்னை தடுக்க அடியாள் செட் பண்ணியிருக்காருன்னு தானே இதற்கு அர்த்தம்? இது உங்களுக்கு தெரியுமா? நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வருவேன் என்று சொல்லிய பிறகு தான் அவர் ஞாயிறு என்னை சந்திக்க வருவதாக ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினார் அது உங்களுக்கு தெரியுமா? அந்த நபர் அந்த மெசேஜை எனக்கு அனுப்பினார் அதனால் தான் நான் அன்று சென்னை செல்லவில்லை.

தமிழக அரசுடன் இணைந்து நான் முகிலன் பேருக்கு களங்கம் விளைவிக்கிறேன்னு சொல்றதோட ஏன் நிறுத்துனீங்க? ஸ்டெர்லைட் ஆலை, மணல் மாஃபியா, காவல்துறைன்னு இவர்களோடும் சேர்ந்து களங்கம் விளைவிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே? அதான் சில ஆர்வக் கோளாறுகள் சொல்லிட்டு திரியுதுங்களே அது போல, நீங்க என்மீது சுமத்துகின்ற இது போன்ற குற்றச்சாட்டுகளை முகிலனே நம்பமாட்டாரு, நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் என்மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருந்தால் கார்ப்பரேட்களையும், காவல்துறையும் தைரியமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதிர்த்து பேசிய முகிலன் பத்திரிகையாளர் சந்திப்பில் வந்து நான் அவரைப்பற்றி சொல்லுவேன்னு சொன்ன போதே இசை ஸ்டெர்லைட்காரனிடம் காசு வாங்கிட்டு என்மீது அவதூறு பரப்புறாங்கன்னு சொல்லிருக்க மாட்டாரா? அதை தவிர்த்து என்னை வெளியிலேயே தடுத்து நிறுத்த பொன்னரசனை வரவழைத்திருப்பாரா சொல்லுங்க? பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த அன்று வழக்கறிஞருக்கு அழைத்து நான் சென்னை வந்திருக்கேனா, குளித்தலையில் இருக்கேனானு ஏன் உறுதிபடுத்திக் கொண்டார்? உங்க மகன் கூட நம்பமாட்டான் நீங்க எல்லாம் சொல்கின்ற குற்றச்சாட்டை, அவனை கூப்பிட்டு கேளுங்க என்னைப்பற்றி... முகிலன் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் போது அவருக்கு வழக்கு பார்த்த வழக்கறிஞர் அவரிடம் கேளுங்க தெரியும் என்னைப்பற்றி, கையில் சாப்பிடுவதற்கு இருந்த காசை கூட முகிலனுக்கு கொடுத்துட்டு பசியோடு திரும்புவேன், அந்த வழக்கறிஞர் தான் சாப்பாடு வாங்கி தந்து என்னை ஊருக்கு அனுப்புவார்... இப்படிப்பட்ட என்னை குறை கூறும் மனிதர்கள் எல்லாம் என்ன மாதிரியான ஆட்கள்? முகிலன் திரும்ப வந்த பிறகு நீங்க எல்லாம் சொல்வதைப்போல் என் மீது ஒரு குற்றச்சாட்டை முகிலன் வைத்தாரென்றால் அவர் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து சொல்கிறார் என்று தான் அர்த்தமாகும்.mugilan.jpg

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இசை மீது இந்த குற்றச்சாட்டை வைக்கறீங்கன்னு கேட்டதற்கு, இசை மீது ஒரு யூகத்தின் அடிப்படையில் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பதாக சொல்லியிருக்கீங்க பத்திரிக்கையாளரிடம், இதே போல் ஏற்கனவே வேறு ஒரு பெண் வைத்த குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்வீங்க? மற்றும் வேறு ஒரு இடத்தில் முகிலன் பற்றி சில விசயங்கள் சொல்லிருக்காங்க அதற்கு உங்களின் பதில் என்ன? உங்களிடம் என்னுடைய பிரச்சனையை சொல்ல வேண்டாமென்று கேட்டுக்கொண்டது உங்களுடைய மகன் அது தெரியுமா உங்களுக்கு? அந்த பையன் நீங்க வருத்தப்படக்கூடாது என்ற பாசத்தில் உங்க கிட்ட இருந்து இதை மறைத்தான், உங்க வீட்டிற்கு நான் போறேன்னு சொன்ன போது முகிலனை வரச்சொல்லி பேசலாம்மா அப்புறம் எந்த முடிவும் எடுத்துக்கோன்னு சொன்னது அந்த பஞ்சாயத்து பேசறேன்னு சொன்னவங்க தான். அதன் பிறகு அதில் ஒருவர் இந்த பஞ்சாயத்தில் இருந்து முகிலனை காப்பாற்ற நலுவியது வேறு கதை. அவர் காணாமல் போன பிறகு உங்களை சந்திக்கிறேன்னு சொன்ன போது உங்க ஊரைச் சேர்ந்தவரும் உங்க சொந்தக்காரருமான ஒரு தோழர் தான் வேண்டாம் ரெண்டு பேரும் சந்தித்து பிரச்சனை எதற்குன்னு சொன்னாரு... முகிலன் எனது வாழ்க்கைக்கான வாக்குறுதியையும், நம்பிக்கையையும் அளித்துவிட்டு எஸ்கேப் ஆகப்பார்த்தது தான் இந்த பஞ்சாயத்திற்கே காரணம். தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு என் மகள் போன்றவள்ன்னு சொல்லி தப்பித்துக்கொள்ள அவர் சொன்ன பொய் தான் பிரச்சனையின் உட்சபட்சமே, மகள்ன்னு வாய் கூசாம சில இடங்களில் சொன்னதற்காக பல முறை திட்டியிருக்கேன். ஒரு வேளை அவருக்கு ஒரு மகள் இருந்தால் மனைவியிடம் நடந்து கொள்வது போல் தான் அந்த மகளிடம் நடந்து கொள்வாரா? மகளுக்கும் மனைவிக்குமான வித்யாசம் போராளிகளுக்கு இல்லையா?thozhar-mugilan.jpg

எனக்கான பிரச்சனையை நான் வெளியில் சொல்லாமல் முகிலன் காணாமல் போவதற்கு முன்பே தற்கொலைன்ற ஒரு எண்ணத்திற்கு வந்த போது ஒரு தோழர் என்னை அழைத்து என்னிடம் பேசியபிறகு என்னிடம் கூறியது, "நீங்க முகிலன் உங்களிடம் நடந்து கொண்ட சூழலை எல்லாம் சொல்லிருக்கீங்க, இதிலிருந்து பார்க்கும் போது இனி நீங்க முதலில் உங்க மீது தவறில்லை என்பதை உணருங்கள், நீங்க குற்றவுணர்வுடன் இருப்பதற்கு அவசியமில்லை மேலும் நீங்க புதிதாக பொது வேலைக்காக களத்திற்கு வரீங்க உங்களை 25 வருடமாக பொது வாழ்வில் இருக்கேன்னு சொல்கிற முகிலன் தவறான பார்வையில் பார்த்ததும் உங்களிடம் அப்படி நடந்து கொண்டதும் மன்னிக்க முடியாத தவறு, மேலும் உங்களை நெறிப்படுத்தி உருவாக்க வேண்டியவர் இப்படி நடந்து கொண்டு நடுத்தெருவில் விட்டு சென்றவர் பொதுவாழ்கையில் தன்னை நல்லவராக எப்படி காட்டிக் கொள்ள முடியும்? அவர் நடந்த விசயங்களுக்கு பொறுப்பேற்று உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கூறினார் மேலும் அந்தாள் வரட்டும் அப்போ நானே அந்தாளை நல்லா கேட்கறேன்னு சொன்னாரு. இந்த சிந்தனை தான் அமைப்பாய் செயல்படுபவர்களுக்கும் விளம்பரத்திற்காக தனிமனித சாகசம் செய்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பதை புரிந்து கொண்டு எனது பிரச்சனைகளை தைரியமாக பேச வேண்டுமென்று நினைத்து, இன்று பேசிக்கொண்டும் இருக்கிறேன்.

முகிலன் பற்றி பேச வேண்டுமென்றால் ஒரு அரங்கத்தை ஏற்பாடு செய்யுங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க நான் தயார், யாரெல்லாம் என் மீது குற்றச்சாட்டு வைக்கின்றீர்களோ அவர்கள் தயாரா?

உண்மையில் நீங்களும் பாதிக்கப்பட்டவர் என்பதால் தான் அமைதியா இருக்கேன் பூங்கொடி அவர்களே...நானும் பேச வேண்டுமென்றால், குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டுமென்றால் நிறைய வைக்க முடியுமல்லவா?

எனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்கு நான் போராடாமல் இருக்க மாட்டேன் நிச்சயம் முகிலன் எனக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். என் மீது தொடர்ந்து நீங்களும் உங்களுடன் இருப்பவர்களும் குற்றம் சுமத்தி அவதூறு பரப்பும் பட்சத்தில் எனக்கான நியாயத்திற்காக என் குரல் ஒலிக்க ஆரம்பிக்கும். முகிலன் வரும் வரை என்னை பொறுமையா இருக்க நீங்கள் எல்லோரும் விட மாட்டீங்க போலிருக்கு...mugilan.jpg

நியாயமா பார்த்தா நீங்க கோபப்பட வேண்டியது முகிலனிடம் தான் பூங்கொடி அவர்களே... எப்பவாவது வீட்டுக்கு வருகிற முகிலன் பெண்கள் விஷயத்தில் தப்பே பண்ணலைன்னு எத வச்சு சொல்றீங்கம்மா? ஆரம்பத்திலேயே அவரை தட்டிக் கேட்டிருந்தால் இன்னைக்கு என் வரை வந்திருக்காது இந்த பிரச்சனை, அவருக்கு சப்போர்ட் பண்ணி அவரை நல்லவரா காட்ட மற்ற பெண்களை தவறா பேசாதீங்க...

எனக்கு என்ன நடந்ததென்று நான் தான் சொல்ல முடியும், மத்தவங்களுக்கு என்ன தெரியும்?

அப்புறம் சிபிசிஐடி விசாரணையில் எனக்கும் முகிலனுக்குமான பிரச்சனையை மட்டும் அவர்கள் கேட்கவில்லை, நானும் அதுபத்தி மட்டும் ஸ்டேட்மென்ட் கொடுக்கலை, போராட்ட களங்கள் மற்ற நண்பர்கள் என அனைத்தை பற்றியும் கேட்டாங்க. 100 கோணங்களில் விசாரணை என்றால் அதில் எங்கள் பிரச்சனையையும் ஒன்றாகத்தான் எடுத்துக்கொண்டார்கள். சில நாளிதழ்களில் எழுதியபடி என் பிரச்சனை மட்டுமே காரணம்ன்ற ஸ்டேட்மென்ட் எல்லாம் கொடுக்கலை...

அப்புறம் பூங்கொடி அவர்களே முகிலன் காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன் கிட்டத்தட்ட ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே போகாமல் தன்னுடைய செருப்பை கூட எடுத்து மறைச்சு வச்சுகிட்டு யாருக்கும் தெரியாமல், யாரையும் பார்க்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்ததாக உங்க ஊர்க்காரரின் நண்பர் சொன்னாரே... ஒரு நாள் ரெண்டு நாள்ன்னா பரவாயில்லை அத்தனை நாட்கள் எதற்கு அப்படி இயல்பாய் இல்லாமல் இருந்தார் முகிலன்?

அப்புறம் வேறு ஒரு பிரச்சனையில் கைகால்களை கட்டிக்கொண்டு வேறு மாநில எல்லையில் போய் படுத்துக்கொண்டு, பழியை மற்றவர் மீது போடச்சொல்லி நடிக்க ஒரு நபருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐடியா கொடுத்தாராமே முகிலன், அதெல்லாம் யாருக்காவது தெரியுமா?

என் பதிவுகளையும் அதில் போடும் பின்னூட்டங்கள் முதற்கொண்டு பூங்கொடி பார்த்துக்கொண்டு இருக்காங்க, மேலும் முகிலன் ஒரு வேளை தலைமறைவாக இருந்தால் அவருக்கும் இந்த பதிவை முகிலனுக்கு உதவியவர்கள் நிச்சயம் கொண்டு சேர்ப்பார்கள். ஆதலால் அவங்களுக்கு இப்பதிவு போய் சேர்ந்து விடும்... மேலும் நான் சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கு அதை சொல்லி உங்களை கஷ்டப்படுத்த நான் விரும்பலைம்மா, என்ன நடந்ததென்று தெரிந்தும் தெரியாதது போல் என் மீது குற்றம் சுமத்தி அடுத்தவர் மனதை புண்படுத்தும் உங்களுக்கும் எனக்கும் வித்யாசம் இல்லாமல் போய்விடும்.

மேலே நான் கூறிய எந்த விசயம் பற்றியும் தெரியாதவர்கள், பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாதவர்கள், அவரை நியாயப்படுத்த, உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்றால் தயவுசெய்து உங்களுடைய டைம்லைனில் போய் நல்லவரு வல்லவரு தங்கமான தங்கமானவருன்னு பதிவு போட்டுட்டுக் கொள்ளவும், இங்க கமெண்ட்டில் வந்து குறுக்க மறுக்க ஓட வேண்டாம்... ஏனென்றால் முகிலனைப் பற்றி அவர் சிறையில் இருக்கும் போது அவருக்காக முகநூலில் நானும் அப்படித்தான் உயர்வாக தொடர்ந்து பதிவிட்டிருந்தேன், அவருக்காக ஒட்ட வேண்டிய சுவரொட்டி முதற்கொண்டு அவர் எழுதிக்கொடுத்ததன் பேரிலேயே அச்சடித்தோம்.

நான்கு போராட்டங்களில் ஈடுபட்டால் நான்கு பெண்களை தன் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்ன்ற மாதிரி நியாயப்படுத்தி பேசுபவர்களும் இங்கு தான் நல்லவர்களை போல் சுத்திக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அவர் செய்ததை நியாயப்படுத்தத்தான் பார்ப்பார்கள்.

ஒரு ஆண் தனது இச்சைக்கும் தனக்கான வேலைகளை செய்யவும் ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொண்டு அவளுக்கான பொறுப்பை ஏற்காமல் நழுவிச்செல்வது எல்லாம் என்ன மாதிரியான போராளி பட்டியலில் வரும்? இதன்பிறகும் ஒரு காழ்ப்புணர்ச்சி குரூப் அவதூறு பரப்பும் பட்சத்தில் அடுத்த பதிவு இன்னும் பல உண்மைகளுடன் தொடரும்...
#முகிலன்_எங்கே?

இசை (எ) ராஜேஸ்வரி
20-03-19
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்.

https://tamil.asianetnews.com/cinema/samantha-super-delux-character-shocking-for-nagachaithanya-popmmu

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன, சமூகப் போராளியான....  முகிலன் மீது, வேண்டுமென்றே...
குற்றங்களை  சுமத்த, அரசு தரப்பில்...  ராஜேஸ்வரி என்பவரை, இறக்கி விட்டிருக்கலாம் தானே...
இந்தியாவில்... ஏன்  தமிழ் நாட்டில் கூட... இப்படியான சோடனை  விடயங்கள்.... நடப்பது வழமை.

இப்போ... தேர்தல் நேரம் என்பதால், காணாமல் போன முகிலனால்...
ஆளும் அரசு... தனது வாக்கு வங்கி  பாதிக்கப் படும் என்பதாலும்,
தமது... கையாலாகாத்தனத்தை மறைக்கவும்,
பொள்ளாச்சி பாலியல் வன் கொடூரத்தை... திசை திருப்பவும்....

முகிலன் காணாமல் போய்... இரண்டு மாதத்திற்கு பின்னர்...
ராஜேஸ்வரி மூலம்... நாடகம் ஆடுகின்றார்கள்.

ஆசிய  அரசியலில்... ஒரு பிரச்சினையை திசை திருப்ப, இன்னுமொரு பிரச்சினையை...
முன் வைத்தால்... சனம் மறந்து விடும், என்ற ஆழமான நம்பிக்கையில்தான்....
அரசியல் வாதிகள்... தொடர்ந்தும், குற்றம் செய்தபடியே  இருக்கின்றார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.