Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது… ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது… ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

March 29, 2019

suren.jpg?resize=700%2C400

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ஆளுனர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணிகள் எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும் எனத் தெரிவித்த அவர் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். என்பதுடன் குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம் எனவும் அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை உருவாக்குவோம் எனவும் துரித கதியில் அந்தப் பணிகள் நடக்க வேண்டுமென்று அதன் தலைவரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆளுனர் அலுவலகம் அமைப்பதற்கான இடம் தயாராக உள்ளதாகவும் அதனடிப்படையில் அந்தப் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டுமல்ல வேறு நாடுகளிலும் காணாமல் போனோர் பற்றி தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கின்ற நிலைமைகள் நிலவுகின்றன எனவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை பொறுத்தவரையில் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களிடம் எந்த ரீதியான ஆறுதலைக் தேடுகின்றீர்கள் என்று கேட்க வேண்டும் எனவும் அதிலொன்று மனிதாபிமான ஆறுதல், மற்றொன்று நியாயம் கிடைக்க வேண்டும். இதில் எது வேண்டுமென்று அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு என்ன தீர்வை விரும்புகின்றார்களோ அந்தத் தீர்வுகளுக்கான அனுசரணையை வழங்க வேண்டுமே ஒழிய அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நாங்கள் சொல்ல கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு முதல் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள போதிலும் இறுதிக் கட்டத்தில் சரியாக காணமல் ஆக்கப்பட்டோர் எவ்வளவு பேர் என்பது இன்னமும் கண்டுபிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிலர் சில எண்ணிக்கையை கொடுக்கின்றனர் என்பதனால் நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் எனவும் அதனை தன்னுடைய பதவிக்காக செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்வது தான் மனிதாபிமானம் எனவும் அதுதான் சரியானது என என்ணுகின்ற மனநிலையில்தான் தான் இருக்கிறேன் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/117152/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம் எனவும் அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடிக்க நேர்ந்தால் அவர்கள் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என நிரூபிக்கும் வலிமையும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு உள்ளது. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.