Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவம்

Featured Replies

நன்றி நாவலர்!

எங்கட சாதியின் பெருமையை நிலை நாட்டி உள்ளீர்கள்

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

  • Replies 479
  • Views 68.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாவலரே உங்கள் சைவப் பணி சிறப்பாக உள்ளது உங்கள சைவத்தொண்டு மென்மேலும் பரவ என் வாழ்த்துக்கள்.

ஏன்ப்பா யாரும் இங்கே இல்லையா............... சைவத்தொண்டு செய்யும் நாவலரை ஊக்குவியுங்கள் உஙகள் வாழ்த்துக்களாள்

அறிவில் பதிக்கின்றோம் வானவில்!! ஆறுமுக நாவலர் சைவத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.

அந்தப் பெயரில் தாங்கள் ஆற்றும் பணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

தொடரட்டும் ஐயா.

திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

பலிபீடத்திற்கு இப்பால் நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

அட்டாங்க நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்

நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.

ஒரு தரம், இரு தரம் பண்ணுதல் ஏன் குற்றம்? ஒன்றும் இரண்டும் நல்ல நம்பர் இல்லையா?

பிரதக்ஷணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.

ஒரு தரமாயினும், இரு தரமாயினும், நான்கு தரமாயினும், ஆறு தரமாயினும், எட்டு தரமாயினும் ஏன் பண்ணக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஏளனமான கேள்விகளைக் கேட்கக்கூடாது. எதைச் செய்யும்போது ஒரு ஒழுங்குமுறை இருக்கவேண்டுமல்லவா!

பள்ளிக் கூடங்கள் 8:30 க்கு ஆரம்பிக்கவேண்டும் என்று ஒரு நியதி இருக்கும்போது ஏன் 7:00 மணிக்கு ஆரம்பிக்கக்கூடாது என்பதுமாதிரி இருக்கின்றன உங்கள் கேள்விகள்!

இப்படி ஏளனமான கேள்விகளைக் கேட்கக்கூடாது. எதைச் செய்யும்போது ஒரு ஒழுங்குமுறை இருக்கவேண்டுமல்லவா!

பள்ளிக் கூடங்கள் 8:30 க்கு ஆரம்பிக்கவேண்டும் என்று ஒரு நியதி இருக்கும்போது ஏன் 7:00 மணிக்கு ஆரம்பிக்கக்கூடாது என்பதுமாதிரி இருக்கின்றன உங்கள் கேள்விகள்!

6:00 மணிக்கு ஆரம்பிக்கலாம், ஆனால் 7:00 மணிக்கு ஆரம்பிக்கக் கூடாது.......

முதலில் ஆறுமுக நாவலரை முழுவதும் எழுத விடுங்கள், பின்னர் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள். தகுந்த பதில் சொல்வார்.

  • தொடங்கியவர்

கிருபன்ஸ், தமிழ் தங்கை, லிசான் அவர்களுக்கு நன்றிகள்.

தம்பி சபேசன் அவர்களே! சற்று பொறுங்கள். ஈசன் பெயர் கொண்ட தாங்கள் சைவத்தை அவமதித்தல் ஆகாது. இன்று இலங்கை தமிழ் மக்கள் உயர்ந்து இருப்பதற்கு காரணம் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் தான். தமிழுக்கும் சைவத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் அளவில் அடங்கா. அவர் ஒரு அவதார புருஷர். தயவு செய்து அவரை தூஷிக்க வேண்டாம். உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் அடியேனிடம் உண்டு. சற்று பொறுங்கள். கட்டுரைகளால் உங்கள் சந்தேகங்களுக்கு பதில் கூறுகிறேன்.

shivaDancesm.jpg

  • தொடங்கியவர்

6. தமிழ் வேத இயல்

1. சைவசமயிகள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் எவை?

தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.

2. தேவாரஞ் செய்தருளினவர் யாவர்?

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.

3. திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்?

மாணிக்கவாசக சுவாமிகள்.

nalvar3.jpg

  • தொடங்கியவர்

4. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

5. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே வேளாளர் குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்

6. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே சிவப்பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

7. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

8. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?

சைவ சமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

9. யாது காரணத்தினால் இவர்கள் சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?

பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியினாலே சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

180px-Nalvar.jpg

  • தொடங்கியவர்

sambandhar_palani.jpg

10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து பொற் கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.

(2) சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தளும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது.

(3) வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப் பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப்பாடினது.

(4) பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.

(5) பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தையும் போக்கினது.

(6) சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.

(7) வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.

(8) புத்த நந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.

(9) ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.

(10)ஆண் பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினது.

(11) விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.

(12) விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண் ஆக்கினது.

(13) தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.

  • தொடங்கியவர்

appar47.JPG

11. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சமணர்கள் ஏழு நாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது பிழைத்தது.

(2) சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாவாது பிழைத்தது.

(3) சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.

(4) சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்திலே இடவும் அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.

(5) சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது.

(6) வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினது.

(7) விஷத்தினாலே இறந்த பிராமணப் பிள்ளையை உயிர்ப்பித்தது.

(8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவின் மேலே தோன்றி கரை ஏறினது.

  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களின்

sathashivaarumuganavalar.jpg

திருத்தொண்டர் புராணம்

என்று வழங்குகின்ற

பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

கத்தியரூபமாக செய்தது

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

தில்லைவாழந்தணர் புராணம்

ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச்

சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப்

பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப்

போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி

கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி

யற்புதத் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்

சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று

பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி

போற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றே

னீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக் குரிய தொண்டாம்

பேற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணி வாழு

மாற்றினார் பெருகு மன்பா லடித்தவம் புரிந்து வாழ்வார்.

நல்லவா னவர்போற்றுந் தில்லை மன்று

ணாடகஞ்செய் பெருமானுக் கணியார் நற்பொற்

றொல்லைவான் பணியெடுத்தற் குரியார் வீடுந்

துறந்தநெறி யார்தொண்டத் தொகைமுன் பாடத்

தில்லைவா ழந்தணரென் றெடுத்து நாதன்

செப்புமரு ளுடையார்முத் தீயார்பத்திக்

கெல்லைகாண் பரியாரொப் புலகிற் றாமே

யேய்ந்துளா ரெமையாள வாய்ந்து ளாரே.

தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள பரதகண்டத்தில் இலங்கைக்கும் இமயமலைக்கும், நடுவிலுள்ள தில்லைவனமும் சமமாகும்.

சாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.

இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அந்தத் தில்லை வனத்தின்கண்ணே முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமான் சர்வான்மாக்களுக்கும் அருள் செய்யும் பொருட்டுத் திருமூலத்தனமாகிய சிவலிங்க வடிவமாய் எழுந்தருளியிருப்பார். அந்தத் திலமூலத்தானத்துக்குத் தெற்குத் திக்கிலே திருவருள் வடிவாகிய கனகசபை இருக்கின்றது. அந்தக் கனகசபையின் கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவபிரான் தமது அருட்சத்தியாகிய சிவகாமியம்மையார் காண அனவரதமும் ஆனந்தத் தாண்டவஞ் செய்தருளுவர்.

8 மணிக்கு பாடசாலை நேரத்தை தொடங்குவது வேறு

7:30 மணிக்கு பாடசாலையை ஆரம்பிக்கக் கூடாது என்று சொல்வது வேறு

8 மணிக்கு ஏன் பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு என்னாலும் உங்களாலும் சில காரணங்களை சொல்ல முடியும்

ஆனால் இந்த சைவ வினா விடையிலே உள்ள கேள்வி பதில்கள் அப்படியா இருக்கின்றன.

இன்னொரு புறம் "இன்னுமொருவன்" போன்றவர்கள் சைவத்திற்கு தத்துவ விளக்கம் சொல்லிக் கொண்டு போகிறார்கள். புராணங்கள் அறிவில்லாதவர்களுக்காக எழுதப்பட்டவைகள் என்று அவரைப் போன்றவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

மறுபுறம் இங்கே புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படுகின்றன.

இமய மலையில் சிவபெருமான் இருக்கிறார் என்றும், அவருக்கு நான்கு பிள்ளைகள் என்றும் பதில்கள் அளிக்கப்படுகின்றன

சைவர்களை முன்னேறவே விட மாட்டீர்களா?

ஆறுமுக நாவலர் ஒரு சாதி வெறியர் என்பதற்கு இங்கே உள்ள பதில்களே ஆதாரம். இது போன்ற ஒரு விடயத்தை பரப்புரை செய்வதற்கு வெட்கமாக இல்லையா?

சைவத்தை புராணங்கள், சாதியம் போன்றவற்றின் பிடியில் இருந்து சைவர்கள் காப்பாற்ற வேண்டும்.

*** தயவுசெய்து புதிய களவிதிமுறைகளை ஒருமுறை வாசிக்கவும். கள உறுப்பினர்களை மட்டுமல்ல, யாழ் கருத்துக்களத்தில் எழுதும் கருத்துக்களில் ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவும். ஒருமையில் விளிக்கப்பட்ட வசனம் திருத்தப்பட்டுள்ளது.

Edited by வலைஞன்
ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவும்!

8 மணிக்கு பாடசாலை நேரத்தை தொடங்குவது வேறு

7:30 மணிக்கு பாடசாலையை ஆரம்பிக்கக் கூடாது என்று சொல்வது வேறு

8 மணிக்கு ஏன் பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு என்னாலும் உங்களாலும் சில காரணங்களை சொல்ல முடியும்

ஆனால் இந்த சைவ வினா விடையிலே உள்ள கேள்வி பதில்கள் அப்படியா இருக்கின்றன.

இன்னொரு புறம் "இன்னுமொருவன்" போன்றவர்கள் சைவத்திற்கு தத்துவ விளக்கம் சொல்லிக் கொண்டு போகிறார்கள். புராணங்கள் அறிவில்லாதவர்களுக்காக எழுதப்பட்டவைகள் என்று அவரைப் போன்றவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

மறுபுறம் இங்கே புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படுகின்றன.

இமய மலையில் சிவபெருமான் இருக்கிறார் என்றும், அவருக்கு நான்கு பிள்ளைகள் என்றும் பதில்கள் அளிக்கப்படுகின்றன

சைவர்களை முன்னேறவே விட மாட்டீர்களா?

ஆறுமுக நாவலர் ஒரு சாதி வெறியர் என்பதற்கு இங்கே உள்ள பதில்களே ஆதாரம். இது போன்ற ஒரு விடயத்தை பரப்புரை செய்வதற்கு வெட்கமாக இல்லையா?

சைவத்தை புராணங்கள், சாதியம் போன்றவற்றின் பிடியில் இருந்து சைவர்கள் காப்பாற்ற வேண்டும்.

ஆமா இங்க என்ன பிரச்சினை போகுது :huh:

  • தொடங்கியவர்

தம்பி சபேசா! பொறுமை ஆத்திரம் அறிவை மறைத்து விடும். சற்று பொறுமையாக இருங்கள். உங்களுக்கு விளக்கம் சொல்கிறேன். உங்களுக்காக தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய பெரிய புராணம் போட்டுள்ளேன். ஆறுமுக நாவலரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 63 நாயன்மார்களில் அனைத்து சாதியும் உண்டு. அவர்கள் அனைவரையும் நாம் இன்றும் ஆலயத்தில் வைத்து வணங்குகிறோம். ஆறுமுக நாவலர் எழுதிய பெரியபுராணம் முழுதையும் படித்து விட்டு பின்பு உங்களது கேள்விகளை வையுங்கள். அது வரை சற்று நிதானமாக இருங்கள்.

  • தொடங்கியவர்

cb.jpg

திருமூலத்தானலிங்கத்துக்கும

  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றமபலம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களின்

sathashivaarumuganavalar.jpg

திருத்தொண்டர் புராணம் சூசனம்

1.உபோற்காதம்

அநாதி மல முத்த பதியாகிய பரசிவன் தமக்கு ஒரு பிரயோசனமுங் குறியாது அநாதிமல பெத்தராகிய ஆன்மாக்களுக்கு மலநீக்கமும் சிவத்துவ விளக்கமும் சித்திக்கும் பொருட்டு, பெருங்கருணையினாலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்தியம் பண்ணுவர். அவற்றுள், படைத்தலாவது சென்மமுடைய பிராணிகளின் சமுகமாயும், போகோப யோகிகளாகிய பரிகரங்களோடு இயைந்ததாயும் இருக்கின்ற சகத்தை அந்த வந்த நானாவித யோனிகளில் உற்பவிப்பித்தல். காத்தலாவது தனதிச்சையாற் றடுக்கப்பட்ட சர்வலோகத்தையும் தத்தம் விடயத்தில் நியோகிக்க நிறுத்துதல், அழித்தலாவது சகத்தைச் சகத்தியோனியில் ஒடுக்கல், மறைத்தலாவது தத்தம் வாசனைக்குத் தக்க போகத்தின் வழுவாதிருக்கச் செய்தல், அருளலாவது தீக்ஷாகிருத்தியமாகிய அனுக்கிரகம்.

  • தொடங்கியவர்

nathilla_i.jpg

nathilla.gif

Thillai Vazh Anthanar - தில்லைவாழ் அந்தணர் பற்றிய சைவ சரபம் மா.பட்டமுத்துவின் சொற்பொழிவு

Click this to download

http://www.megaupload.com/?d=QOUARDQ6

http://www.shaivam.org/nathilla.html - ஆங்கில மொழிபெயர்ப்பு

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

இப்பஞ்சகிருத்திய கருத்தாவாகிய பதிக்கு உரிய முக்கிய குணங்களாவன சருவஞ்ஞதை, திருத்தி, அநாதி போதம், சுவதந்திரதை, அலுப்தசத்தி, அநந்தசத்தி என்னும் ஆறுமாம். இவை தமிழின் முறையே முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கை யுணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல் எனப்படும். எல்லாப் பொருள்களையும் புலப்படக்காணும் அறிவு உள்வழியல்லது எல்லாத் தொழிலும் இயற்றுதல் கூடாமையாயின் முற்றறிவும், தமதனுபவத்தின் பொருட்டுப் பிறிதொன்றனை வேண்டிற் பரிபூரணத்தன்மை யெடுபட்டுக் கடவுட்டன்மை கெட்டுப் போதலின் வரம்பிலின்பமும், முற்றறிவுடையவழியும் அஃதநாதியன்றி அவாந்தரத்தில் வந்ததேற் காரண பூர்வகமாய் வந்ததெனின் வரம்பின்மைக் குற்றமும், காரணமின்றி வந்ததெனிற் காரண காரிய நியமமின்மைக் குற்றமும் அடுக்குமாதலின் இயற்கை யுணர்வும், பிறர் வயமுண்டேற் பாசத்தடையுமுளதாகி வேண்டிய தெய்தாமையும் வேண்டாத தெய்தலுமாகிய குற்றம் பற்றுதலின் தன்வயமும், ஆற்றல் குன்றுமாயின் எக்காலத்தும் எத்தேசத்தும் இளைப்பின்றித் தொழிலியற்றுதல் ஏலாமையிற் குறைவிலாற்றலும், அவ்வாற்றல் வரம்புப்பட்ட பரிமாணமுடையதாயின் வரம்புப்படாத தொழிலியற்றல் கூடாமையின் வரம்பிலாற்றலுமாகிய இவ்வறு குணங்களும் பதிக்கு இன்றியமையாமை காண்க. அப்பதியானவர், அநாதியே உள்ள முற்றறிவு முற்றுத்தொழிலாகிய சிவத்துவம் இயைதலாற்றான், சிவத்துவம் என்னும் அதிசுத்தம் இயைதலாற்றான் ஸி என்னுந்தாது கிடத்தலெனப் பொருள்படுதலின் இறுதிக்காலத்து உலகமெல்லாம் தம்மிடத்து ஒடுங்கிக் கிடத்தலாற்றான், சற்சனங்களுடைய மனங்கள் தம்பாற் கிடத்தலாற்றான், ஸி என்னுந் தாது மெலிவித்தலெனவும் கூருவித்தலெனவும் பொருள்படு மாதலான் ஆன்மாக்களின் பாச சத்தியை மெலிவித்துச் சிற்சத்தியைக் கூருவித்தலாற்றான், காந்திப்பொருடரும் வஸி என்னுஞ்சொல் வர்ண விபரியயமுறுதலாற்றான், சிவனெனப்படுவர்.

அச்சிவனது ஆஞ்ஞையினாலே அவ்வான்மாக்கள் கர்மானுசாரமாக நால்வகைத் தோற்றமும், எழுவகைப் பிறப்பும், எண்பத்துநான்கு நூறாயிர யோனிபேதமும் உடையராய்ப் பிறந்திறந்து உழலுங்காலத்திலே, முன்னர்ப் பெளத்தம் முதலிய புறச்சமயங்களிலே நின்று அவ்வச் சமய நூல்களில் விதிப்படி ஒழுகுவர்கள். அப்புறச்சமயிகளுக்கு, அவரவராலே சொல்லப்பட்ட கர்த்திருகாரணங்களை அதிஷ்டித்துக் கொண்டு அந்தக் கர்த்திருகாரண சொரூபியாய் இருந்து, சிவனே அருள் செய்வர். அது "அறிவினான் மிக்க வறுவகைச் சமயத் தவ்வவர்க் கங்கே யாரருள் புரிந்து - வெறியுமாகட விலங்கையர் கோனைத் துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக் - குறிகொள் பாடலினின்னிசை கேட்டுக் கோலவாளொடு நாளது கொடுத்த - செறிவு கண்டு நின்றிரு வடியடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே" என்னுஞ் சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்தாலும் "அறுவகைச் சமயத்தோர்க்கு மவ்வவர் பொருளாய் வேறாங் - குறியது வுடைத்தாய்வேதா கமங்களின் குறியி றந்தங் - கறிவினி லருளான் மன்னி பொருளாய் வேறாங் - குறியது வுடைத்தாய்வேதா கமங்களின் குறியி றந்தங் - கறிவினி லருளான் மன்னி யம்மையோ டப்பனாகிச் - செறிவொழியாது நின்ற சிவனடி சென்னிவைப்பாம்" எனவும் "யாதொரு தெய்வங் கொண்டீரத் தெய்வ மாகியாங்கே - மாதொரு பாக னார் தாம் வருவர்மற் றத்தெய்வங்கள் - வேதனைப் படுமிறக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யு மாதலா லிவையிலாதான றிருந்தருள் செய்வனன்றே" எனவும் வருஞ் சிவஞான சித்தித் திருவிருத்தங்களாலும் அறிக.

அண்ணா சபேசன்

அவர் தொண்டு தொடரட்டும் எமக்கு தேவையானதை நாங்கள் எடுத்து விட்டு மீதியை வில்லக்கி விடுவம்

  • தொடங்கியவர்

sundarar.jpg

12. சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.

(2) சிவபெருமான் கொடுத்தருளிய பன்னிராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ஆற்றில் போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது.

(3) காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.

(4) முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அம்முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.

(5) வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளியது.

sundarar.jpg

  • தொடங்கியவர்

புறச் சமயங்களிலே நின்று செய்த புண்ணியங்களினாலே, பின் வைதிக மார்க்கத்திலே புகுந்து, வேதத்திலும் அதன் வழிநூலாகிய மிருதி முதலியவற்றிலும் பிராமணர் முதலிய நான்கு வருணத்துக்கும் பிரமசரிய முதலிய நான்காச்சிரமத்துக்கும் விதித்த பசு புண்ணியங்களைச் செய்து, சுவர்க்கத்திற் சென்று போகந்துய்த்து, மீண்டு பூமியிலே பிறப்பார்கள். அவர்கள் முன்செய்த வைதிக புண்ணிய மிகுதியினாலே சைவாகத்தால் உணர்த்தப்படும் சைவத்திற் பிரவேசித்து, சரியை, கிரியை யோகங்களை முறையே அநுட்டித்து அவற்றின் பலங்களாகிய சாலோக்கிய சாமீப்பிய சாரூப்பிய பதங்களைப் பெறுவார்கள். அவர்களுள், போகத்திலே வைராக்கியம் உற்றவர்கள் திரும்பப் பூமியில் வாராது சிவானுக் கிரகத்தினாலே பரமுத்திமான்க ளாவார்கள். போகத்திலே வைராக்கியம் உறாதவர்கள் திரும்பப் பூமியிலே பிறந்து சிவஞானத்தைப் பொருந்தி, பரமுத்தியாகிய சிவ சாயுச்சியத்தைப் பெறுவார்கள். இதற்குப் பிரமாணம், சிவநெறிப் பிரகாசம். "இப்படி யவத்தை யோரைந் தெய்தியே பிறப்பிறப்பாம் - வெப்புறுங் காலந் தன்னில் வேதத்தின் வழிய தன்றிப் - பொய்ப் பொருட் சமயந் தன்னிற் புரிந்திடுந் தவத்தினாலே - தப்பிலா வேதஞ் சொன்ன சமயத்தைச் சார்ந்து நின்றே. வன்னமோர் நான்கினுக்கு மாசிலாச் சிரமங்கட்குஞ் - சொன்னவா றிடறிலாதே செய்துபின் சுவர்க்கந் துய்த்துப் - பின்னர்மா நிலத்தின் வந்து சிவதன்மை பெரிதென் றெண்ணி - முன்னையா கமங்கள் சொன்ன படிதவ முயல்வமென்றே. எண்ணியோர் குருவைச் சேர்ந்தே யெழில்பெறு சமய தீக்கை - நண்ணியே சரியை தன்னை நவையற வியற்றியத்தாற் - புண்ணிய சிவலோ கத்தைப் பொருந்தியங் குள்ள போக - மண்ணலா ரருளப் பெற்ற தருந்திமே லவனிமீதே, உதித்தருள்செய் குருவாலே விசேட தீக்கை யுற்றுணர்ந்து சிவபூசை யூனமறச் செய்தே - துதித்திடுநற் சாமீபஞ் சிவன்பாற் பெற்றுத் துய்த்திடுவர் பெரும்போகந் தொலைந்தகாலை - நதிச்சடையா னருளாலே புவியினண்ணி நாடரிய சிவயோக மியற்றி நன்றாய்த் - திதிக்கொழிவாங் காலமுறு மளவுமந்தச் சிவனுடைய சாரூபஞ் சேர்ந்துநின்றே. ஆகத்தி லாளசயிலராகிச் சற்று மளவிறந்து மேன்மேலு மடைவதான - போகத்திற் பற்றிலரே யாகிலுல கெல்லாம் பொன்றிடுங்கா விவர்தாமும் பொருந்திடுவர் முத்தி - மோகத்தைத் தவிராதோர் பினைச்சிருட்டி கால முளைத் துலகிற் குருவாலே முத்திபெற மலத்தின் - பாகத்தை யடைந்ததனாற் சத்தி பதிந்திடவே பரஞானத்தான் முத்தி பலிக்குமவர் பாலே" எ-ம். சிவஞான சித்தியார். "தானமியா கந்தீர்த்த மாச்சிரமந் தவங்கள் சாந்திவிர தங்கன்ம யோகங்கள் சரித்தோ - ரீனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப் பளவின் மீள்வ ரீசனியோ கக்கிரியா சரியையினி னின்றோ - ரூனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லா மொடுங்கும் போதரன் முனிலா தொழியினுற்பவித்து - ஞானநெறி யடைந்தடைவர் சிவனையங்கு நாதனே முன்னிற்கினணுகுவர் நற்றாளே" எ-ம் கோயிற் புராணம். "சுருதிவழி யொழுகினர்கள் சுவர்க்கத்தா ராகமநூற் - சரியை கியா யோகர் சாலோக சாமீப - வுருவுவமை யினராக வுதவுது மெம்முடனாகும் - பெருகியஞா னிகளெம்மைப் பெற்றார் போக்கற்றாரே" எ-ம் சிவதருமோத்தரம். "இருவினை யுணர்ந்த புத்த ரவர்முத லிகலும்வாத - தெரிசன மனைத்துஞ் சேர்ந்தார் சிவசமயத்தைச் சேர்வார் - பொருவிலி புகன்ற வாக்கிற் கருமநன் னெறியும் புக்கே - விரவுவர் ஞானயோகம் விடுவர்மெய் யடைவர் மெய்யே, எடுத்ததோ ராக்கைதன்னி லிருண்மல சத்தி தன்னைத் - தடுத்தருள் சைவ நூலின் சாதன மதனைத் தள்ளி - விடுத்துவீ றற்ற நூலின் சாதனம் விரும்பு வார்முன் - னடுத்தவா ரமுதம் விட்டுப் புற்கையா தரிப்பா ரன்றே" எ-ம் வருமாறு காண்க.

  • தொடங்கியவர்

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

திருநீலகண்டநாயனார் புராணம்

தில்லைநகர் லேட்கோவர் தூர்த்த ராகி

தீண்டிலெமைத் திருநீல கண்ட மென்று

சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்

துடியிடையா ரிடையின்பந் துறந்து மூத்தங

கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்க

ளெடுத்திலமென் றியம்புமென விழிந்து பொய்கை

மெல்லியலா ளுடன்மூழ்கி யிளமை யெய்தி

விளங்குபுலீச் சரத்தானை மேவினாரே.

சிதம்பரத்திலே, குயவர் குலத்திலே, பொய்சொல்லல் சிறிது மின்றித் தருமநெறியிலே வாழ்கின்றவரும், இல்லறத்திலே நிற்பவரும், சிவபத்தி அடியார்பத்திகளிலே சிறந்தவருமாகிய தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய குலத்துக்கு ஏற்ப மட்கலங்களை வனைந்து விற்றுச் சீவனஞ் செய்தும், திருவோடுகளைச் சிவனடியார்களுக்குக் கொடுத்தும் வந்தார். அவர் "ஆதிகாலத்திலே பரமசிவன் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உலகம் உய்யும்பொருட்டு உண்ட பொழுது, அவருடைய கண்டமானது. அவர் தம்மை அடைந்தவர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்கியருளுவார் என்பதை நாமெல்லாம் அறிந்துகொள்ளும்படி ஓரறிகுறியாய் விளங்கும் பொருட்டு, அதனை உள்ளே புகவொட்டாமல் தடுத்து தானே தரித்துக்கொண்டது" என்று நினைந்து, அக்கடவுளுடைய கண்டத்தைத் திருநீலகண்டம் என்று எப்பொழுதும் சிறப்பித்துச் சொல்லுவார். அதனால் அவருக்குத் திருநீலகண்டநாயனார் என்னும் பெயர் உண்டாயிற்று.

ஒருநாள் அவர் அவ்வூரிலே ஒருவேசியிடத்துச் சென்று வீட்டுக்குத் திரும்ப; கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து, அதைக்குறித்துத் தம்முடைய மனசிலே அதை அறிந்து, அதைக்குறித்துத் தம்முடைய மனசிலே தோன்றிய கோபத்தை அடக்கிக்கொண்டு, இல்வாழ்க்கைக்குரிய மற்றப்பணிகளெல்லாஞ் செய்தும், புணர்ச்சிக்குமாத்திரம் இசையாதவரானார். நாயகர் தம்முடைய மனைவியார் கொண்ட புலவியைத் தீர்க்கும்பொருட்டு அவர் சமீபத்திலே போய், வேண்டிய இரப்புரைகளைச் சொல்லி, அவரைத் தீண்டுபடி சென்றார். அப்பொழுது மனைவியார் "நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்" என்று ஆணையிட்டார். அதைக் கேட்ட நாயகர், பரமசிவனுடைய திருநீலகண்டத்திலே தாம் வைத்த பத்தி குன்றாவண்ணம், அம்மனைவியாரைத் தொடாமல் நீங்கி, இவர் 'எம்மை' என்று பன்மையாகச் சொன்னதனால் இவரைமாத்திரமன்றி மற்றப் பெண்களையும் நான் மனசினால் நினைத்தலுஞ்செய்யேன்" என்று உறுதிகொண்டார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டினின்றும் புறப்படாதொழிந்து, அவ்வீட்டிலே தானே இருந்து, இல்லறத்திற்குரிய பிறசெய்கைகளெல்லாம் செய்து கொண்டு, புணர்ச்சியின்மையை பிறரறியாதபடி வாழ்ந்தார்கள். இளமைப்பருவத்தையுடைய இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு, பலவருஷங்கள் செல்ல, யெளவனம் நீங்கி, வயோதிகர்களாகி, வருத்தமுற்றார்கள். உற்றும் சிவபத்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள்.

இப்படியிருக்கும் காலத்திலே, காருண்ணிய ஸ்வரூபியாகிய பரமசிவன் அவ்வடியாருடைய மகிமையை உலகத்தவர்கள் ஐயந்திரிபற அறிந்து அவருடைய தொண்டை அனுசரித்து உய்யும்பொருட்டு, ஒரு சிவயோகிவடிவங் கொண்டு, அவ்வடியார் வீட்டுக்குச் சென்றார். அவ்வடியார் அவரைக் கண்டு எதிர் கொண்டு வீட்டினுள்ளே அழைத்துக் கொண்டுபோய், ஆசனத்தில் இருத்தி, அவருக்கு விதிப்படி அன்பினோடு பூசைசெய்து, நமஸ்கரித்து எழுந்து அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! அடியேன் தேவரீருக்குச் செய்ய வேண்டிய குற்றேவல் யாது" என்று வினாவ; சிவயோகியார் "இந்த திருவோட்டை வைத்திருந்து, நாம் கேட்கும்போது தா. இந்த் ஓடு தனக்கு வேறொப்பில்லாதது; தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றையும் சுத்தி செய்வது; பொன்னிலும் இரத்தினத்திலும் பார்க்கக் காப்பாற்றப்படத்தக்கது. இப்படிப்பட்ட மேன்மையுள்ளதாகிய இந்த ஓட்டை நீ வாங்கி வைத்திரு" என்று அருளிச் செய்தார். அதைக் கேட்ட அடியவர் அவரை வந்தனஞ் செய்து, அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டிலே ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு, திரும்பி வந்து, போம்படி எழுந்த சிவயோகியாருக்குப் பின் சிறிது தூரஞ்சென்று, அவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.

  • தொடங்கியவர்

இதுகாறுங் கூறியவாற்றால், சைவசித்தாந்தத்தன்றிப் பரமுத்தி சித்தியாது என்பதும், அப்பரமுத்திக்குச் சாதனம் சிவஞானமே என்பதும், அச்சிவஞானத்தைப் பயப்பன சரியை முதலிய மூன்றுமே என்பதும், வேதத்துள் விதித்த வேள்வி முதலியன வெல்லாம் அநித்தியமாகிய காமியங்களைப் பயப்பன என்பதும் பெறப்பட்டன. வேள்வி முதலியன ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றி, தீவினை போல அது நிகழவொட்டாது தடை செய்து நிற்றலும் உடையனவேயாம். ஆதலால், தீவினைகள் இருப்பு விலங்கும், வேதத்துள் விதித்த வேள்வி முதலிய தருமங்களின் பயனாகிய இன்பம் முன் பசித்து உண்டு. பின்னும் பசிப்பானுக்கு அவ்வுண்டியால் வரும் இன்பத்தைப் போலும். அவ்வேள்வி முதலியன போல அனுபவ மாத்திரையாற் கெடுதலின்றி மேன்மேல் முறுகி வளர்வனவாகிய சரியை கிரியை யோகங்களால் எய்தப்படும் சிவஞானம் பசித்து உண்டு பின்னும் பசித்தலில்லாத தேவர்களுக்கு அவ்வமுத வுண்டியாலாய பயனைப் போலும் அவ்வமுத வுண்டி நரைதிரை மூப்பின்றி நிலைபெறுதலாகிய பெரும்பயனைத் தருதன்மாத்திரையே யன்றிப் பசிதீர்த்தலாகிய அவாந்தரப் பயனையுந் தருதல் போல, சரியை முதலியனவும் சிவஞானத்தைப் பயத்தல் மாத்திரையே யன்றித் தத்தம் பதமுத்தியாகிய அவாந்தரப் பயனையும் பயப்பனவாம்.

மேற்கூறிப்போந்த சரியை முதலிய நான்கு பாதங்களுள்ளும், சரியை கிரியை என்னும் இரண்டும் கூடி, சிவத்தருமமென ஒருபெயரான் வழங்கவும் பெறும், அந்தச் சிவதர்மம் மெல்வினை வல்வினை என இருவகைப்படும். அவற்றுள் மெல்வினையாவது சைவாகமத்தின் சரியை கிரியைகளுக்கு விதித்தவழி ஒழுகும் விதி மார்க்கம். வல்வினையாவது அவ்விதிமார்க்கத்தில் வழுவாது நின்று அந்நிலையின் முதிர்ச்சியினாலே பின்னுண்டாகிய பிறப்பின்கண்ணே சிவனிடத்தில் எல்லையன்றி எழுந்து அதிதீவிரமாய் முறுகி வளரும் அன்பின் பெருக்கத்தினாலே உலகநெறி கடந்து ஒழுகும்பத்தி மார்க்கம் இதற்குப்பிரமாணம், திருக்களிற்றுப்படியார். "நல்லசிவ தன்மத்தானல்லசிவ யோகத்தா - னல்லசிவ ஞானத்தா னானழிய - வல்லதனா - லாரேனு மன்புசெயினங்கே தலைப்படுங்கா - ணாரேனுங் காணா வரன்" எ-ம். "மெல்வினையேயென்ன வியனுலகி னார்க்கரிய - வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் - சொல்லிற் - சிவதன்ம மாமதனிற் சென்றதிலே செல்வாய் - பவகன்ம நீங்கும் படி" எ-ம். "ஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே தீதிலறம்பலவுஞ் செய்வனவும் - வேதியனே - நல்வினையாமென்று நமக்குமெளி தானவற்றை - மெல்வினையே யென்றது நாம் வேறு" எ-ம். "வரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள் - கரங்களினா லன்றுகறி யாக - விரங்காதே - கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை - வல்வினையே யென்றதுநா மற்று." எ-ம். "பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே - தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் சேதிப்பக் - கண்டீசர் தாமாம் பரிசளத்தார் கண்டாயே - சண்டீசர் தஞ்செயலாற்றான்" எ-ம், "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டியறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதேநாம்" வரும்.

  • தொடங்கியவர்

நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் பரமசிவன் தாம் வைக்கக் கொடுத்த திருவோட்டை வைக்கப்பட்ட இடத்தில் இல்லா தொழியும்படி செய்து, அவ்வடியாருடைய உண்மைநிலையைப் பிறர்க்குப் புலப்படுத்தும்பொருட்டு முன் போலச் சிவயோகி வடிவங்கொண்டு, அவர் வீட்டுக்கு எழுந்தருளினார். அவர் சிவயோகியாரை முன்போல வழிபட்டு, "சுவாமி! தேவரீர் இவ்வீட்டிற்கு எழுந்தருளிவந்தது அடியேங்கள் பூர்வசன்மத்திற் செய்த தவத்தினாற் போலும்" என்று விண்ணப்பஞ்செய்து நிற்க; சிவயோகியார் "நாம் முன்னாளிலே உன்னிடத்திலே தந்த திருவோட்டை இப்பொழுது தா" என்றார். அடியவர் அதைக் கொண்டுவந்து கொடுக்கும்பொருட்டு உள்ளே போய்ப் பார்த்துக் காணாமையாலே திகைத்து, அங்கு நின்றவர்களிடத்திலே கேட்டும் பிறவிடங்களிலே தேடியும் காணாதவராகி, சிவயோகியாருக்கு உத்தரம் சொல்வதற்கு ஒன்றுமின்றி அங்கே நின்றார். சிவயோகியார் உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, "நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் தாழ்ந்து நிற்கின்றாய்" என்று கேட்க; அடியவர் வந்து சிவயோகியாரை வணங்கி, "சுவாமி! தேவரீர் தந்த் திருவோட்டை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் காணேன். பழையதாகிய அந்தத் திருவோட்டைப் பார்க்கினும் புதிதாகிய வேறொரு திருவோடு தருவேன். அதை ஏற்றுக்கொண்டு அடியேன் செய்த் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்" என்று சொல்லிப் பிரார்த்தித்து நின்றார். உடனே சிவயோகியார் அவரைக் கோபித்துப் பார்த்து "நீ யாது சொன்னாய்! நான் வைத்த மண்ணோட்டையேயன்றிப் பொன்னோட்டைத் தந்தாயாயினும் நான் வாங்கேன்; நான் முன்னே உன்னிடத்தில் தந்த ஓட்டையே கொண்டுவா" என்று திருவாய்மலர்ந்தருள, அடியவர் "சுவாமீ! தேவரீர் தந்த ஓட்டைத் தேடியுங் காணேன். வேறே நல்ல ஓடு தருகின்றேன் என்று சொல்ல; அதற்கு உடன்படாமல் என்னோட்டையே கொண்டுவா என்று சொல்லுகிறீர். இந்தச்சொல் என்னறிவுமுழுதையும் ஒழித்துவிட்டது" என்றார். அதற்குச் சிவயோகியார் "நான் உன்னிடத்திலே வைத்த அடைக்கலப் பொருளை நீ கவர்ந்துகொண்டு, பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல், பல பாவங்கள் செய்கின்றாய். சகலரும் அறியும்படி உன்னைத் தப்பவொட்டாமல் மறித்து என்னோட்டை வாங்கிக் கொண்டேயன்றி நான் போகேன்" என்று சொல்ல; அடியவர் "சுவாமீ! தேவரீர் தந்த ஓட்டை நான் கவர்ந்தவனல்லன். அடியேனிடத்தே களவில்லாமையை எப்படித் தெரிவிப்பேன்? சொல்லும்" என்றார். சிவயோகியார் "உன் புத்திரனைக் கையிலே பிடித்துக்கொண்டு குளத்திலே முழுகி, நான் கவரவில்லை என்று சத்தியம்பண்ணித்தா" என்று சொல்ல; அடியவர் "அப்படிச் செய்தற்கு எனக்குப் புத்திரன் இல்லையே! யாது செய்வேன் சொல்லும்" என்றார். சிவயோகியார் உன்மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித்தா" என்று சொல்ல; அடியவர் "நானும் என்மனைவியும் எங்களிடத்துண்டாயிருக்கும் ஓர் சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது. நான் மாத்திரம் குளத்திலே முழுகிச் சத்தியம்பண்ணித் தருகிறேன். வாரும்" என்றார். அதற்குச் சிவயோகியார் "நான்முன்னே தந்த ஓட்டைத் தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் உன் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியஞ்செய்து தராமலும், மனம் வலித்திருக்கின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பெரிய சபையிலே இவ்விஷயத்தைக் குறித்துப் பேசப் போகின்றேன்" என்று சொல்லி, அந்தச் சபைக்குப்போக; திருநீலகண்டநாயனாரும் அவருக்குப் பின்னே போனார், சிவயோகியார் அந்தப் பிராமணர்களைப் பார்த்து, "இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படி கொடுத்த ஓட்டைத் தருகின்றானில்லை. அதனை இழந்ததனாயின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித் தருகின்றானுமில்லை" என்றார். உடனே பிராமணர்கள் அடியவரை நோக்கி, "திருநீலகண்டரே! நடந்த சமாசாரத்தை நீர் சொல்லும்" என்று கேட்க; அவர், "சுவாமிகாள்! இவர் தந்த திருவோடு நான் வைத்த இடத்தினின்றும் மறைந்து போய்விட்டது. நான் தேடிப் பார்த்துங் காணேன். இதுவே நடந்த சமாசாரம்" என்றார். அதற்குப் பிராமணர்கள் "இவர் தந்த ஓட்டை நீர் இழந்தீராகில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியஞ்செய்து கொடுத்தலே நீதி" என்றார்கள். அடியவர் அதைக் கேட்டு, தாம் அம்மனைவியாரைத் தீண்டாதிருத்தலைக்குறித்துப

  • தொடங்கியவர்

இங்ஙனங் கூறிய சரியை முதலிய நான்கு பாதங்களிலே நின்று முத்திபெற்ற மெய்யடியார்களுட் சிறந்த தனியடியார் அறுபத்துமூவரும் தொகையடியார் ஒன்பதின்மருமாகிய திருத்தொண்டர் எழுபத்திருவருடைய சரித்திரத்தை கனகசபையின் கண்ணே ஆனந்த நிருத்தஞ் செய்தருளும் கருணாநிதியாகிய சிவனது திருவருளினாலே பசுகரண மெல்லாஞ் சிவகரணமாய் நிகழப் பெற்ற சிவாநுபூதிமானாகிய குனறத்தூர்ச் சேக்கிழார் நாயனார், தமிழுலகம் உய்தற் பொருட்டு, திருத்தொண்டர் புராணம் எனப் பெயர் தந்து விரித்தருளிச்செய்தார். இப்புராணம் தன்னை ஓதல் கேட்டல் செய்வார்க்குச் சிவனடியார்களது அத்தியற்புத பத்தித்திறத்தையும் அவர்கட்கு எளிவந்த சிவனது அத்தியற் புதப் பிரசாதத்தையும் உணர்த்தி, அவர் நெஞ்சை அழலிடைப்பட்ட மெழுகுபோலக் கசிந்துருகச் செய்தலிற் றனக்கு உயர்வொப்பின்றி விளங்கும் பெருமையுடைமை பற்றிப் பெரியபுராணம் எனவும் பெயர் பெற்றது. இப்பெரியபுராணம் எனவும் பெயர் பெற்றது. இப்பெரியபுராணம் சைவ சித்தாந்த நூற்கருத்தோடு மாறுபடாத வேதமுடி வாகிய உப நிஷத்துக்களின் தாற்பரியங்களை உள்ளடக்கிய தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் நான்கனோடு கூட்டி, கல்வியறிவொழுக்கங்களான் ஆன்ற மகத்துக்களாலே தொன்று தொட்டு அருட்பா என வழங்கப்படும்.

பிரஞ்ஞையில்லாத சில பிராமணர் இப்பெரியபுராணத்துக்கு அப்பிராமாணியம் பேசுவர், இப்புராணத்துக்கு தில்லைவாழந்தணர் மடபதிகள் முதலிய எண்ணிறந்த அடியார்கள் கேட்கச் சிதம்பர சபாநாதர் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுத்தருளினார் எனவும் இது முற்றிய அநபாயசோழ மகாராஜாவுக்கு, சோழனே சேக்கிழார் நாம் "உலமெலாம்" என்று அடி எடுத்துக் கொடுக்க, நம்முடைய தொண்டர்களது அடிமைத்திறத்தை விரித்துப் புராணம் பாடி முடித்தான். நீ அதைக் கேள், என் யாவரும் கேட்ப அருளிச் செய்தார் எனவும் தில்லை வாழந்தணர்களுள் ஒருவராகிச் சிவானுபூதிமான் எனப் பிரசித்தி பெற்ற உமாபதிசிவாசாரியார் சேக்கிழார் புராணத்துட் கூறுதலானும், பரமசிவன் உமாதேவிக்குச் சதுர்யுக தருமங்களுங் கூறிய பின்னர், இனிக் கலியுகத்திலே அறுபத்துமூன்று தொண்டர்கள் பிறந்து தம்மேற் பத்தி செய்வர்கள் எனவும், அவர்கள் சரித்திரத்தை உபமன்னியு முனிவர் பத்தர் குழாங்கட்குக் கூறுவர் எனவும் கூறி, அச்சரித்திரத்தை முன்னுரைத்தமை பரமேதிகாசமாகிய சிவரகசியத்திலே நவமாம்மிசத்திற் பெறப்படுதலானும், சங்கராச்சாரியர் இப்பெரிய புராணத்துட் கூறப்படும் அறுபத்து மூவருள் சிலரது அடிமைத்திறத்தை "வழியிலும் இடப்பட்ட செருப்பானது பசுபதியின் அங்கத்துக்குக் கூர்ச்சமாகின்றது; வாய்நிறைந்த நீரால் நனைத்தல் புரப்பவருக்குத் திவ்வியாபிஷேகமாகின்றது; சற்றே புசிக்கப்பட்ட மாமிச சேஷத்தின் கவளமானது திவ்வியோபகார மாகின்றது; வனசரன் பத்தச் சேஷ்டனாகின்றான். பத்தி எதைச் செய்கின்றிலது!" எனச் சிவானந்தலகரியினும், "கீரீசரே, மனைவிக்கும் புதல்வனுக்கும் தந்தைக்கும் துரோகஞ் செய்தவர்களுக்குப் பிரசன்னராயினீர். நானோ பிறருக்குத் துரோகஞ் சிறிதும் செய்யவல்லனல்லன். என்னிடத்து நீர் எவ்வாறு பிரீதி செய்வீர்! அறியேன்" எனச் சிவபுசங்கத்திலும் சிறப்பித்துரைத்தலானும், அப்பிராமணர் கூற்றுத் தூரம்போய்த் துச்சமாய் விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.