Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவம்

Featured Replies

  • தொடங்கியவர்

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

மெய்ப்பொருணாயனார் புராணம்

சேதிபர்நற் கோவலூர் மலாட மன்னர்

திருவேட மெய்ப்பொருளாத் தெளிந்த சிந்தை

நீதியனா ரூடன்பொருது தோற்ற மாற்றா

னெடுஞ்சினமுங் கொடும்பகையு நிகழா வண்ண

மாதவர்போ லொருமுறைகொண்ட டணுகி வாளால்

வன்னமபுரிந் திடமருண்டு வந்த தத்தன்

காதலுற நமர்தத்தா வென்று நோக்கிக்

கடிதகல்வித் திறைவனடி கைகொண் டாரே.

சேதிநாட்டிலே திருக்கோவலூரிலே, மலையமானாட்டாருக்கு அரசரும், வேதாகமங்களின் உண்மையை அறிந்த வரும், சிவனடியார்களுடைய திருவேடத்தையே மெய்ப்பொருளெனச் சிந்தைசெய்பவருமாகிய மெய்ப்பொருணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய இராச்சியத்தைத் தருமநெறி தவறாமல் நடத்தியும், தம்மை எதிர்த்த பகைவர்களை ஜயங்கொண்டு, சிவாலயங்களெங்கும் நித்திய நைமித்திகங்களைச் சிறப்பாக நடத்தியும், சிவபத்தர்கள் வந்தபொழுது மனமகிழ்ச்சியோடும் வேண்டிய திரவியங்களைப் பூர்த்தியாகக் கொடுத்தும் வந்தார்.

இப்படி நடக்கும் காலத்திலே, முத்திநாதன் என்கின்ற ஓரரசனானவன் அவரை வெல்லுதற்கு விரும்பி, யுத்தசந்நத்தனாகி, அவரோடு பொருது, யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சேனைகளைப் பலமுறை இழந்து, தோற்று அவமானப் பட்டுப்போனான், பின்பு அவன்யுத்தத்தினாலே அவரை ஜயிக்கமாட்டாதவனாகி, அவரிடத்திலே இருக்கின்ற அடியார் பக்தியை அறிந்து, விபூதி தரிக்கின்ற அவ்வடியார்வேடங் கொண்டு அவரைக் கபடத்தினால் வெல்ல நினைந்து, சரீர முழுவதிலும் விபூதி தரித்து, சடைகளைச் சேர்த்துக் கட்டி புத்தகக்கவளிபோலத் தோன்றுகின்ற ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கின்ற ஓர் கவளியை எடுத்துக்கொண்டு, திருக்கோவலூரிற் சென்று. மெய்ப்பொருணாயனாருடைய திருமாளிகைவாயிலை அடைந்தான். அப்பொழுது வாயிற்காவலாளர் அவனை அஞ்சலிசெய்து, "சுவாமீ! உள்ளே எழுந்தருளும்" என்று சொல்ல; அம்முத்திநாதன் உள்ளே போய், மற்றவாயில்களையும் அப்படியே கடந்து சென்று இறுதி வாயிலை அடைந்தபொழுது, அவ்வாயிற் காவலாளனாகிய தத்தனென்பவன் "இப்பொழுது இராசா நித்திரை செய்கின்றார். நீர் சமயமறிந்து, போகவேண்டும்" என்றான். அதைக்கேட்ட முத்திநாதன் "நான் அவருக்குச் சாஸ்திரோபதேசஞ் செய்யப்போன்கின்றபடியால், நீ என்னைத் தடுக்கலாகாது" என்று சொல்லி, உள்ளே புகுந்து, மெய்ப்பொருணாயனார் கட்டிலிலே நித்திரைசெய்ய அவர்மனைவியார் பக்கத்திலிருக்கக் கண்டும், சமீபத்திலே சென்றான்.

அப்பொழுது, மனைவியார் சீக்கிரம் எழுந்து, மெய்ப்பொருணாயனாரை எழுப்ப; அவர் விழித்தெழுந்து, அவனை எதிர்கொண்டு வணங்கி நின்று; "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளுதற்குக் காரணம் யாது" என்று வினாவினார். அதற்கு முத்திநாதன் "உங்கள் கடவுளாகிய பரமசிவன் ஆதிகாலத்திலே அருளிச்செய்த சைவாகமங்களுள் எவ்விடத்துங் காணப்படாத ஓராகமத்தை உமக்கு போதிக்கும்படி கொண்டு வந்தேன்" என்றான், மெய்பொருணாயனார் அதைக் கேட்டு, "இதைப்பார்க்கிலும் உயர்ந்தபேறு அடியேனுக்கு உண்டோ? அந்தச் சைவாகமகத்தை வாசித்து அடியேனுக்கு அதன்பொருளை அருளிச்செய்யவேண்டும்" என்று பிரார்த்திக்க முத்திநாதன் "பட்டத்தரசி இல்லாமல் நீரும் நானும் வேறிடத்திருக்கவேண்டும்" என்றான். உடனே மெய்ப்பொருணாயனார் தம்முடைய மனைவியாரை அந்தப்புரத்துக்குப் போம்படி செய்து, பொய்வேடங் கொண்ட முத்திநாதனை ஆசனத்தின் மேல் இருத்தி, தாம் கீழே இருந்துகொண்டு, "இனி அருளிச் செய்யும்" என்றார். முத்திநாதன் தன்கையில் இருந்த வஞ்சகக் கவளிகையை மடியின்மேல் வைத்து, புத்தகம் அவழிப்பவன் போல அவிழ்த்து, மெய்ப்பொருணாயனார் வணங்கும்போது, அக்கவளிகையில் மறைத்து வைத்த உடைவாளை எடுத்து, அவரைக்குத்த; அவர் சிவவேடமே மெய்ப்பொருலென்று அவனை வணங்கினார். அம்முத்திநாதன் உள்ளே புகுந்த பொழுதே "இராசாவுக்கு என்ன அபாயம் சம்பவிக்குமோ" என்று மனசை அங்கேயே செலுத்திக்கொண்டிருந்த தத்தனென்பவன் நொடியளவிலே உள்ளே புகுந்து, தன்கை வாளினால் அப்பகைவனை வெட்டப்போனான். அதற்குமுன் உடைவாளினாலே குத்தப்பட்டு இரத்தஞ்சொரிய விழப்போகின்ற மெய்ப்பொருணாயனார், விழும்பொழுது தத்தனே, இவர் சிவனடியாராதலால் இவருக்கு ஓரிடையூறும் செய்யாதே" என்று கையினாலே தடுத்து விழுந்தார். அப்பொழுது தத்தன் மெய்பொருணாயனாரைத் தலையினால் வணங்கி, அவரைத் தாங்கி, "அடியேன் செய்யவேண்டிய குற்றேவல் யாது" என்று கேட்க: மெய்ப்பொருணாயனார் "வழியிலே இவருக்கு யாவரொருவரும் இடையூறு செய்யாதபடி இவரை அழைத்துக் கொண்டு போய் விடு" என்று சொன்னார். அப்படியே தத்தன் முத்திநாதனை அழைத்துக் கொண்டு போம்பொழுது அம்முத்திநாதன் இராசாவைக் குத்தின சங்கதியை அறிந்தவர்களெல்லாரும் அவனைக் கொல்லும்படி வந்து சூழச்சூழ, அவர்களெல்லாரையும், 'இந்தச் சிவபத்தருக்கு ஒருவரும் இடையூறுசெய்யாதபடி இவரை அழைத்துக்கொண்டுபோய் விடும்பொருட்டு இராசாவே எனக்கு ஆஞ்ஞாபித்தார்" என்று சொல்லி, தடுத்தான். அவர்களெல்லாரும் அதைக் கேட்டவுடனே பயந்து நீங்கிவிட: தத்தன் அவனை அழைத்துக்கொண்டு நகரத்தைக் கடந்து சென்று, அவனுக்குரிய நாட்டுவழியிலே அவனை விட்டு, நகரத்துக்குத் திரும்பி, சிவவேடங்கொண்ட முத்திநாதனை யாதொரு இடையூறும் வராமல் அழைத்துக் கொண்டு போய்விட்ட சமாசாரத்தைக் கேட்பதற்கு விரும்பி முன்னேயே நீங்கிவிடக்கூடிய உயிரைத்தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருணாயனாருக்குமுன் சென்று, வணங்கி நின்று, "சிவபத்தரை இடையூறு ஒன்றும் வராதபடி கொண்டுபோய்விட்டேன்" என்று சொன்னான். அதைக் கேட்ட மெய்பொருணாயனார் 'இன்றைக்குநீ எனக்குச் செய்த உபகாரத்தை வேறார்செய்ய வல்லார்" என்று சொல்லி, பின்பு தமக்குப் பின் அரசாளுதற்குறிய குமாரர்களையும் மந்திரிமுதலானவர்களையும் நோக்கி, சைவாகமவிதிப்படி விபூதிமேல் வைத்த அன்பைப் பாதுகாக்கும்படி போதித்து, கனகசபையிலே ஆனந்ததாண்டவம் செய்தருளுகின்ற சபாநாதரைத் தியானம்பண்ணினார். அப்பொழுது சபாநாதர் மெய்ப்பொருணாயனாருக்குத் தோன்றி, அவரைத் தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார்.

திருச்சிற்றம்பலம்

natarajar2.jpg

  • Replies 479
  • Views 68.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

nameyppo_i.jpg

nameyppo.gif

http://www.shaivam.org/nameyppo.html - ஆங்கிலத்தில் இவ்வரலாற்றைப் படிக்க

  • தொடங்கியவர்

பிற உயிர்களுக்கு வருந்துன்பத்தைத் தமக்கு வரும் துன்பத்தைப்போலக் கொண்டு பேணும் இரக்கமுடைமையே அறிவினாலாகும் பெரும் பிரயோசனமாம். எவ்வளவு நூல்களைக் கற்றார்களாயினும், எவ்வளவு தருமங்களைச் செய்தார்களாயினும், இவ்விரக்கமில்லாதவர்கள் நரகத் துன்பம் அடைதல் சத்தியம். இதற்குப் பிரமாணம், சைவ சமயநெறி; "அன்பு மருளு மறிவுக் கடையாள - மென் பருணர்ந்தோர் சிவன்வாக் கீண்டு." எ-ம். திருவள்ளுவர் குறள்: "அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் - தந்நோய்போற் போற்றாக் கடை." எ-ம். பதிபசுபாச விளக்கம்: "கலையெலா முணர்ந்தா னேனுங் கரிசறத் தெளிந்தானேனு - மலையென வுயர்ந்தா னேனு மனமயலகன்றா னேனு - முலகெலாம் புகழப் பல்லோர்க் குதவிய கையனேனு - மிலகிய விரக்க மின்றே லெழுநர கடைவ னன்றே" எ-ம் அருட்பிரகாசம்: "உயிர்நித்தமென்றறிந் தாலுநல் லோர்பல் லுயிரதுற்ற - துயருக் கிரங்கல் புதுமை கொல்லோவருட் டோன்றலந்நாட் - செயிருற்ற தேவர் முறைகேட் டிரங்கித் திருவுளத்தூ - டயர்வுற் றுகுத்தகண் ணீரக்க மாமணி யாயிடினே." எ-ம். வரும். இம்மனுசக்கிரவர்த்தியிடத்து இவ்விரக்கம் உண்மை "அவ்வுரைகேட்ட வேந்த னாவுறு துயர மெய்தி - வெவ்விடத் தலைக்கொண் டாற்போல் வேதனை யகத்து மிக்கிங் - கிவ்வினை விளைந்தவாறென் றிடருறு மிரங்கு மேங்குஞ் - செவ்விதென் செங்கோ லென்னுந் தெருமருந் தெளியுந்தேறான்.", "மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந் தறத்தினீடு - மென்னெறி நன்றா லென்னு மென் செய்தாற் றீருமென்னுந் - தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரு - மந்நிலை யரச னுற்ற துயரமோ ரளவிற்றன்றால்" என்னுந் திருவிருத்தங்களால் அறிக.

இவர் தம்முடைய மகனைத் தேர்க்காலில் வைத்து ஊர்ந்தமையால், அவனிடத்து இரக்கமில்லாதவரென்பது பெறப்படுமன்றோவெனின்; அற்றன்று; பூமியிலே வெளிப்படப் பாவஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அரசனுக்கும் வெளிப்படாமற் பாவஞ் செய்தவர்களையும் வெளிப்படப் பாவஞ் செய்தவர்களுள் அரசனாலே தண்டிக்கப்படாதவர்களையும் மறுமையில் நரகத்திலே தண்டித்தல் இயமனுக்கும், கடனாம் ஆதலாலும்; தாம் செய்த பாவத்தின் பொருட்டு இம்மையில் அரசனாலே தண்டிக்கப்பட்டவர்கள் அப்பாவத்தின் பொருட்டு மறுமையில் நரகத்திலே தண்டிக்கப்படார்கள் ஆதலாலும்; தம்முடைய மகன் பசுக்கொலைக் குற்றத்தின் பொருட்டு மறுமையில் நரகத்துன்பம் அடையா வண்ணம் தாமே இம்மையில் அவனைத் தண்டித்து அப்பாவத்தை ஒழித்தார்; ஆதலால் அவ்வுயிர்த் தண்டத்துக்குக் காரணம் அவனிடத்தில் வைத்த இரக்கமென்றே துணியப்படும். இதற்குப் பிரமாணம், கோயிற் புராணம்; "மண்ணுலகின் முறை புரியா மடவரைநால் வகைத்தண்டம் - பண்ணிநெறி நடத்திடவும் பலரறியா வகைபுரிந்த - வெண்ணில்வினை விதி வழியே நுகர்விக்கு மியல்பிற்கும் - திண்ணியரா மிருதருமருளராகச் செய்துமென." "வானவர்கோ னுரைத்திரவி மைந்தர்களி லொருவனுக்கு - ஞானவிழி நல்கிநம னற்பதியுங் கொடுத்தகற்றி - யீனமிலா வொருவனுக்கங் கிலகுமணி முடியளித்துத் - தேனகுதா ரணிவித்துத் தேவர்கடங் கைக் கொடுத்தான்." எ-ம். சிவதருமோத்தரம்: "பிணக்கந் தன்னையும் பெற்றவர் தம்மிடைக் - கணக்கி லாரையுங் கள்வர் கடம்மையும் - வணக்கு வான்மன்னன் மற்றையர் தங்களை - யிணக்கு வானர கத்து ளியமனே." எ-ம். திருமந்திரம்: "தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை - யத்தன் சிவன் சொன்னவாகம நூனெறி - யெத்தண்டமுஞ்செயு மறுமையிலிம்மைக்கே - மெய்த்தண்டஞ் செய்வதவ் 'வேந்தன் கடனே" எ-ம். சிவஞானசித்தியார்: "அரசனுஞ் செய்வ தீச னருள்வழி யரும்பாவங்க - டரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத் - துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர் - நிரயமுஞ் சேரா ரந்த நிரயமுன் னீர்மை யீதாம்." எ-ம். போற்றிப்பஃறொடை; "மண்டெரியிற் - காய்ச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய - மீத்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்தநெறி - யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே - நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன் - மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக - நஞ்சனனய சிந்தை நமன்றூதர் - வெஞ் சினத்தத - லல்ல லுறுத்து மருநகரங் கண்டுநிற்க - வல்ல கருணை மறம்போற்றி." எ-ம். வரும். இன்னும், இவர் தம் மகனுக்குச் செய்த இவ்வுயிர்த்தண்டம், இவர் கீழ்வாழும் பிறரெல்லாம் உயிர்களுக்கு இடுக்கண் செய்தற்கு அஞ்சி அஃதொழிந்து உய்தற்கும், அவ்வாறாகவே, உயிர்களெல்லாம் பிறராலிடுக்கணடையாது இனிது வாழ்தற்கும், ஏதுவாமன்றோ! அதனாலும், இவரது சீவகாருண்ணியந் துணியப்படும்.

  • தொடங்கியவர்

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

விறன்மீண்டநாயனார் புராணம்

விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை

விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்

வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்

வன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட

துளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற்

சொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட

வுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண

லுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.

லைநாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாளர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மனசில் இருத்தி உட்பற்றுப் புறப்பற்றுக்களை அறுத்தவரும், அடியார் பத்தியிலே உயர்வொப்பில்லாதவருமாகிய விறன்மிண்டநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், சிவஸ்தலங்களுக்குப் போனபொழுதெல்லாம், முன் அடியார் திருக்கூட்டங்களுக்கு எதிரே போய், அவர்களை வணங்கிக்கொண்டே, பின் சிவபெருமானை வணங்குகின்றவர். அவர் தாம் வசிக்கின்ற மலைநாட்டை நீங்கி, பல தலங்களினும் சஞ்சரித்து, சிவனடியார்கள் ஒழுகும் ஒழுக்கத்தை அனுசரித்து, திருவாரூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் தேவாசிரயமண்டபத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவனடியார்களை அடைந்து வணங்காமல் ஒரு பிரகாரம் ஒதுங்கிச்சென்றதை அவ்விறன் மிண்டநாயனார் கண்டு, "அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அவ்விறன்மிண்டநாயனாரிடத்துள

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு உமது 'கேள்விகளுக்கு' வருகிறேன். முதலில் ஒழுங்கா தமிழில எழுதிப் பழகுங்கள்.எமக்கு வடமொழி கலந்த தமிழ் தெரியாது.முடிந்தால் தூய தமிழில் முதலில் உங்கள் 'கேள்விகளை 'மொழி பெயருங்கள்.கிருத்துவர்களும் இசுலாமியர்களும் எப்படி தூய தமிழில் எழுதுகிறார்கள்.முதலில் அதனைச் செய்யுங்கள், கேள்விகளை பின்னர் நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.

இசுலாமியரும், கிறிஸ்தவர்களும் தமிழில் எழுதுவதில் என்ன புதுமை? இங்கே குறித்த கருத்தாளர் இந்துக்கள் மட்டுமே, தமிழர்கள் என்றும், மற்றய மதத்தைச் சேர்ந்தவர்களைப் பிற இனமாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது அப்பட்டமான இனவாதமாகும். மதமாற்றத்தை மட்டுமே அவர்கள் கொண்டிருக்கின்றார்களே தவிர, அவர்களும் தமிழர்களே!

ஆனால் அவர்களை இந்துக்களோடு ஒப்பீடு செய்து தமிழ் உணர்வினைக் காட்ட வேண்டுமானால், அவர்களின் பெயர்களை முதலில் தமிழாக்கி தங்களை அடையாளம் கொடுக்க வேண்டும். அது தயாரா? மற்றும்படி இசுலாமியர் தொழுகையின் போது, அராபிய வார்த்தைகளே பயன்படுத்துகின்றனர்.( அல்லாகு அக்பர். அல்லாஹித்த....... ரப்பிஜ்அல்னீ முகீமஸ் ஸலாத்தி வமின் துர்ரிய்யத்தீ ரப்பனா வதகப்பல் துஆ. ரப்பனஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்...........)

அவ்வாறே பெளத்தர்களும் பாளிமொழியில் தான் தொழுகை செய்கின்றனர்.

அவர்களைத் தமிழர்கள் என்று கருதவில்லை என்று நீங்கள் வெளிப்படையாக ஒத்துக் கொண்டால் அது பற்றிக் கதைக்காமல், விடலாம்!

-----------------------------

சமஸ்கிருதம் தமிழில் ஆரியர் புகுத்தினர் என்று திட்டிக் கொண்டிருப்பது அப்பட்டமான பொய்யாகும். தாங்கள் தமிழ் விரும்பிகள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆரியப் பெயர்களை எப்படி சூட்டிக் கொள்கின்றார்களோ, அது போன்று தான் ஆதிசங்கரர் என்ற தமிழர்( சேரநாடு) சமண, பெளத்த மதங்களை தடுக்க, வடஇந்தியர்களோடு கூட்டுச் சேர்ந்த பின்னர் தான், கோவில்களுக்குள் அது நுழைந்ததே தவிர, அவர்கள் திணிக்கவில்லை. தங்களின் பிழைகளை மறுக்க மற்றவர்களைத் திட்டுவது ஒரு பிழைப்பு.

தமிழ் உயர்ச்சி பற்றிய எதிர்காலச் சிந்தனையில்லாமல், குற்றம் பிடிக்கின்றவர்களால் நிச்சயம் தமிழ் வளராது.

  • கருத்துக்கள உறவுகள்

வட மொழி கலந்த தமிழைத் தெரின்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.ஏனெனில் அதில் எழுதப்பட்டவை எல்லாம் குப்பைகள். நீங்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் சமயத்தை நீங்கள் பரப்ப வேண்டும் என்றால் முதலில் மக்கள் பேசும் மொழியில் எழுதுங்கள்.அது தான் உங்கள் பிரச்சாரத்திற்கு உதவும்.இந்த அடிப்படை அறிவு கூட உங்களிடம் இல்லை.வட மொழித் தமிழில் இங்கு எழுதி அதனை ஒருவருமே படிக்கப் போவதில்லை.

இந்து மதத்தை யாரும் பரப்பிக் கொண்டு திரியவில்லை. மதம் மாறுங்கள் காசு தருகின்றோம் என்று கூவி வித்துக் கொண்டும் திரியவில்லை. பின்பற்றுபவர்களால் அது பின்பற்றப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே மிங்காந்தங்களினால் மனிதருக்குப் பாதிப்பே அன்றி எதுவித நலன்ங்கள் இல்லை என்பதுவும், அதுவும் கூடிய விசைப்புலத்தை உடைய மின்காந்தப் புலமே தாக்கம் செலுத்தக் கூடியது என்பதுவும் மேற் கூறிய கட்டுரையில் கூறப்படுள்ளது.

இங்கே கோவிலில் வணங்குவதோ இயற்கையாக இருக்கும் மின்காந்தப் புலமோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.அதுவும் எந்த வித நன்மையையும் எற்படுத்தப் போவதில்லை.

பூச் சுற்றுவதற்கும் ஒரு வரையறை இருக்கிறது.யாழ்க் களத்தில் உள்ளவர்கள் கேணயங்கள் என்பது நெடுக்கிஸின் நினைப்பாக இருக்கிறது.

புவிக்காந்தப்புலம் சீரானது என்ற தங்கள் முன்னைய கூற்றே தவறு. நீங்களே நம்ம தரவுகளை தமிழாக்கம் செய்து மின் காந்தப்புலங்களால் மனிதருக்கு ஆபத்து என்றுவிட்டு.. இப்போ..!

புவிக்காந்தப் புலச் செறிவு கொஸ்மிக் சூழலைப் பொறுத்து மாறுபடும்.. என்பதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அதன் பாதிப்புக்கள் மனிதரில் அவதானிக்கப்பட்டும் உள்ளன..! ஏலவே இணைப்பைத் தந்துள்ளோம்..!

பூமியில் மனித உடலின் நிலைகள் புவிக்காந்தப் புலம் மனிதரில் செல்வாக்குச் செய்ய ஏதுவாக அமையும் என்பதும் அது மனிதரில் மூளையில் சில தாக்கங்களைச் செய்யும் என்பதுவும் காந்தப்புலம் பற்றிய அறிவியல் உள்ளவர்கள் எளிதாக விளங்கக் கூடியது.

மனித உடலில் மின்னியக்கம் உள்ளதால்.. அது காந்தப்புலத்தில் உள்ள போது நிச்சயம் தாக்கம் இருக்கவே செய்யும்..! மின்னிய மற்றும் காந்தப் புலத்தின் திசைகள் அதன் தாக்கத்தில் செல்வாக்குச் செய்யும்..! இந்த அடிப்படையில் பல விளக்கங்கள் உண்டு..! விதிகளும் உண்டு..! நாம் பெளதீகக் கணக்குகளில் கூட புவிக்காந்தப் புல வலிமையைக் கருத்தில் கொண்டு கணக்குகளை மற்றும் தீர்வுகளை எட்டியதையும்.. புவிக்காந்தப்புலம் புறக்கணிக்க கூடியது என்பது தவறென்பதைக் காட்டுகிறது. சில விளைவுகளுக்கு சரியான விஞ்ஞான விளக்கங்கள் இன்னும் கிடைக்கவே இல்லாத போது உங்களால் எப்படி.. உள்ள உண்மைகளளயே புரட்டி எழுத முடிகிறது. இதைத்தான் சொல்வது விதண்டாவாதம் என்று. அறிவியல் பற்றி பேசுவதானால் நாம் பேச தயாராகவே உள்ளோம். கூகிள்.. சில தரவுகளை தரப் பாவிக்கப்படுகிறதே தவிர.. கூகிள் எமக்கு படிப்பிக்கவில்லை..! :lol: :P

விஞ்ஞானம் விளங்க முடியாத பேர்முடா முக்கோணமே.. இவற்றிற்கு சாட்சி...! இப்படி பல விளங்க முடியாத ஆனால் உணரக்கூடிய விளைவுகள் மனிதரில் இன்னும் உண்டு..!

300px-Bertriangle.jpg

http://en.wikipedia.org/wiki/Bermuda_Triangle

THE DEFINITION OF MAGNETIC POLARITY USED IN

HUMAN PHYSIOLOGY.

The body is an electromagnetic organism with a direct current (DC) central nervous system in

which the brain with its neuronal bodies is a positive magnetic field and, also produces a positive electric field. The extensions from the neuronal bodies are a negative magnetic field and also produce a negative electric field. The human body does not have a storage battery from which electricity flows or an electric dynamo from which electricity flows. Rather, by a mechanism comparable to a magnita, the human body turns its magnetic fields into DC electric current. It is also true that each cell of the body has a positive and negative magnetic field in its DNA. Since the human body functions on a DC electromagnetic circuit, it is especially appropriate to use the positive (+) and negative (-) identification of magnetic polarity when relating magnetism to the human body. The human body does not have a north and south poled field, but rather has positive and negative magnetic fields from which electricity is produced. A geographic definition of magnetic polarity is not applicable to human physiology whereas, an electromagnetic definition of magnetic polarity is essential. If and when the geographic definition of polarity is used, it still requires a translation into usable terminology for application to human physiology.

http://www.azunimags.com/generic93.html

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

cow%20and%20calf%20on%20grass_1_1_1.jpg

தம்முடைய மகன் இறந்துவிடில் தமக்குப்பின் உயிர்களைக்காத்தற்கு ஒருவருமில்லாதிருத்தல்கண்டு

ஆண்கள் சட்டையை களற்றி விட்டுப் போவதற்கும் ஒரு விஞ்ஞான விளக்கமா?

நல்ல வேளை பெண்களை சட்டையைக் களற்றச் சொல்லவில்லை என்பது குறித்து சிறிது நிம்மதி!

ஆறுமுகநாவலர் தமிழை எங்கே வளர்த்தார். நாரதர் சொன்னது போன்று வடமொழிதான் முழுவதும். ஆறுமுகநாவலர் போன்றவர்கள் "மணிப்பிரளவ நடை" என்ற பெயரில் தமிழை வடமொழிக்கு காவு கொடுக்கத்தான் முனைந்தார்கள்.

பாரதியின் கவிதைகள் விளங்குகின்ற அளவிற்கு கூட, நாவலரின் உரை நடை விளங்கவில்லை.

ஆறுமுக நாவலர் தமிழ் எழுத்துக்களை அச்சுப் பதிப்பில் கொண்டு வருவதற்கு செய்த பணிகள் மட்டும்தான், அவர் தமிழுக்கு செய்த தொண்டு.

மறுபுறத்தில் தமிழுக்கு, தமிழருக்கும் அதை விட அதிகமான தீங்கை செய்து விட்டு போயிருக்கிறார்.

  • தொடங்கியவர்

பழந்தமிழ் தங்களுக்கு தெரியவில்லை என்றால் அது ஆறுமுக நாவலர் செய்த குற்றமன்று.

பெண்கள் சட்டையை கழற்ற வேண்டும் என்ற குதற்க எண்ணம் உள்ள உங்களை என்ன செய்வது?

வடமொழியை பழந்தமிழ் என்று காதில் பூச்சுற்ற வேண்டாம்.

இப்பொழுது நாம் பேசுகின்று எழுதுகின்ற தமிழிலேயே 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக வடசொற்கள் இருக்கின்றன. இதைக் குறைப்பது பற்றி சிந்தனைகள் வளர்கின்ற நேரத்தில், 99 விழுக்காடு வடசொற்களை பயன்படுத்தி நாவலர் எழுதியதை "பழந்தமிழ்" என்று சொல்வது தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான சதி

இந்த சதியை எமது தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.

"மெய்யெனப்படுவது" என்கின்ற பகுதியில் பொய்யெனப்படுகின்ற அனைத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

;அருவருப்பான புராணங்களை விடுத்து, சித்தாந்தம் மூலம் சைவத்தை வளர்க்க விரும்புகின்ற நல்ல சைவர்களும் இந்தத் தளத்தில் இருக்கிறார்கள்.

நீங்கள் அந்தப் புராணங்களையும், அவைகள் சார்ந்த ஓவியங்களையும் இங்கே இணைத்து ஒரு பிற்போக்குப் பரப்புரையை மேற்கொண்டிருக்கிறீர்கள்.

நல்லது

நாம் செய்கின்ற பகுத்தறிவுப் பரப்புரைகளுக்கு உங்களுடைய பதிப்புக்கள் துணை புரியும்.

  • தொடங்கியவர்

சபேசன் சைவ சித்தாந்தம் என்றால் என்ன?

வேதம், ஆகமம் பற்றி கூறுவது தானே!

தொல்காப்பியத்தில் வடசொல் உண்டு என்று தெரியுமா?

தாங்கள் பகுத்தறிவு பகுத்தறிவு என்று கூறுகிறீர்களே அதைப் பற்றி சுயமரியாதையியக்க சூறாவளியில் காணலாம்.

சபேசா மேலும் தங்களுக்கும் நாரதருக்கும் மிக்க நன்றி!

தாங்கள் இருவரும் செய்த பிரசாரத்தால் சைவ வினா விடை 700 பார்வையாளர்களை எட்டி விட்டது.

வாழ்க தங்களது சைவ பணி!!!!

  • தொடங்கியவர்

தங்களுக்கு வடமொழி மீது வெறுப்பா? சைவத்தின் மீது வெறுப்பா? சைவ புராணங்கள் மீது வெறுப்பா?

தெளிவாக குழம்பியுள்ளீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் சட்டையை களற்றி விட்டுப் போவதற்கும் ஒரு விஞ்ஞான விளக்கமா?

நல்ல வேளை பெண்களை சட்டையைக் களற்றச் சொல்லவில்லை என்பது குறித்து சிறிது நிம்மதி!

ஆறுமுகநாவலர் தமிழை எங்கே வளர்த்தார். நாரதர் சொன்னது போன்று வடமொழிதான் முழுவதும். ஆறுமுகநாவலர் போன்றவர்கள் "மணிப்பிரளவ நடை" என்ற பெயரில் தமிழை வடமொழிக்கு காவு கொடுக்கத்தான் முனைந்தார்கள்.

பாரதியின் கவிதைகள் விளங்குகின்ற அளவிற்கு கூட, நாவலரின் உரை நடை விளங்கவில்லை.

ஆறுமுக நாவலர் தமிழ் எழுத்துக்களை அச்சுப் பதிப்பில் கொண்டு வருவதற்கு செய்த பணிகள் மட்டும்தான், அவர் தமிழுக்கு செய்த தொண்டு.

மறுபுறத்தில் தமிழுக்கு, தமிழருக்கும் அதை விட அதிகமான தீங்கை செய்து விட்டு போயிருக்கிறார்.

ஆறுமுகநாவலர் தமிழே வளர்க்கவில்லை. சமஸ்கிருதம் தான் வளர்த்தார். இருக்கட்டும்.

நீங்கள் தமிழ் பற்றாளர்கள், தமிழ் உணர்வு என்று காட்டிக் கொள்பவர்கள் என்ன செய்தீர்கள் சொல்லுங்கள். அறிய ஆசைப்படுகின்றேன்.பெயரைக் கூட தமிழில் மாற்றத் தயங்குகின்ற நீங்கள் வடமொழிப் பித்தன் நாவலர் செய்த அளவுக்கு என்ன செய்ய முடிந்தது? கடந்த ஒரு நூறறாண்டில் ஆங்கிலமோகத்தைத் திணித்து, சமுதாயத்தைச் சீரழித்தது நீங்கள் தான்.

அக்காலத்தில் கவிஞர்களும், மன்னர்களும் கடவுளின் பெயரால், மொழியை வளர்த்தார்கள். தமிழுக்கு ஆய்வுகள் செய்து புதிய கலைச்சொற்களைப் படைத்தார்கள். ஆனால் நீங்கள் அதைக் குழப்பி இன்று ஆங்கில அடிவருடியாகி விட்டீர்கள்.

அக்காலத்தில் தமிழ்ப் புலவர்களுக்கு பொற்கிழியும், பொன்னாடையும் வழங்கிக் கெளரவித்தார்கள். ஆனால் இக்காலத்தில் ஒரு தமிழ் பற்றாளனை எவ்வளவு தூரம் நீங்கள் மதிப்புக் கொடுத்தீர்கள்??இன்று வாறவன் போறவன் எல்லோருக்கும் பொன்னாடை போர்த்தி கேவலம் செய்கின்றீர்கள். சொல்லுங்கள். இன்றைக்கு சரியோ, பிழையோ கம்பன் கழகம் மட்டும் தான், நான் அறிந்தவரை ஓரளவாவது, தமிழ் உணர்வாளர்களுக்கு மதிப்புக் கொடுத்து கெளரவிக்கின்றது. அதில் திருப்தி இல்லாவிட்டாலும் அதை விட வேறு ஒன்றையும் என்னால் காட்டமுடியவில்லை. ஆனால் நீங்கள் தமிழை வியாபாரமாக்கி, அரசியலாக்கி ஒன்றுக்கு உதவாத பிண்டமாக்கி விட்டீர்கள்.

அச்சுப் பதிப்பிற்கு மட்டும் தான் நாவலர் பொருத்தமானவர் என்று சொல்லி அவரின் செயற்பாட்டை கேவலப்படுத்துகின்றீர்கள். நன்றி கெட்ட. நா* என்று சொல்வது இதைத் தான். இன்று அவர், சுவாமிநாத ஜயர், சி.வி.தாமோதரம் போன்றவர்கள் இல்லாவிட்டால் பழந்தமிழ் இலக்கியங்களைக் காணாது, தமிழன் வரலாறு, சென்ற நூற்றாண்டு என்று தான் கற்பனை ஆய்வாளர்கள் முடித்திருப்பார்கள். அது தான் உங்களின் ஆங்கில மோகத்துக்கு இலகுவாக இருந்திருக்கும்.

நாவலர் செய்த தமிழ்பணிக்குள் உங்களால் ஏணி வைத்தால் கூட எட்டமுடியாது. அவரைத் திட்டுவதற்கு உங்களுக்கு ஏதாவது தகுதியிருக்கின்றதா என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் தமிழ்பற்றாளர்கள் என்று காட்டுவதற்கு, இம்மிளவு யோக்கியம் இல்லாதவர்கள், அதற்கும் உங்களுக்கும் வெகுதூரம்.

ஆண்கள் சட்டையை களற்றி விட்டுப் போவதற்கும் ஒரு விஞ்ஞான விளக்கமா?

நல்ல வேளை பெண்களை சட்டையைக் களற்றச் சொல்லவில்லை என்பது குறித்து சிறிது நிம்மதி!

விபச்சாரத்தை அங்கிரிக்கச் சொன்னால் சிலவேளை அதுவும் நடக்கலாம். இங்கே விஞ்ஞான விளக்கம் கொடுப்பதோ, அல்லது ஏனைய கருத்துக்களோ அவரவரின் சொந்தக் கருத்தே தவிர, மதக் கொள்கையல்ல. இவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களுக்கு மதங்கள் பொறுப்பல்ல. இது இவர்களது ஊகம் மட்டுமே ஆகும்.

கட்டுப்பாடுகள் என்பன தான் மதத்தின் மீது ஊக்கத்தை ஏற்படுத்தும். இன்றைக்கு உலகத்தில் இசுலாமிய மதமோ, கிறிஸ்தவ மதமோ நிலைத்து நிற்க அதன் இறுக்குமான கோட்பாடுகள் தான் காரணமாக இருக்கின்றன. எனவே சைவத்திலும் நாவலர் அவ்வளவு சிந்தித்து இருக்கலாம்(என் ஊகம் மட்டுமே)

பள்ளிக்கு ஒரு விருந்தினரை அழைக்கின்றபோது, பாண்ட் வாத்தியம் தேவையா, அது இல்லாவிட்டால் விருந்தினர் உள்ளே வரமுடியாதா என்று கேட்பது போன்றே, உங்களது கேள்விகள் இருக்கின்றன. அல்லது அணிவகுப்பில் ஏன் இடது, வலது என்று சொல்ல வேண்டும். வலது இடது என்று மாறிச் சொன்னால் தப்பா என்று கேட்கின்ற விதண்டாவதங்களுக்கு நிச்சயம் பதிலளிக்கவே முடியாது. அதைக் கணக்கில் எடுத்து முக்கியத்துவம் கொடுக்காமல் விடுதலே சிறந்ததாகும்.

  • தொடங்கியவர்

ThiruNeelakanda Naayanar - திருநீலகண்ட நாயனார்.

Click this to download

http://www.megaupload.com/?d=MIEVBTSL

Eyarpakai Naayanar - இயற்பகை நாயனார்

Click this to download

http://www.megaupload.com/?d=WFT8MNCL

  • தொடங்கியவர்

2. தன்னுயிர் விடுத்தல் இவ்விடத்துப் பாவமும் இவ்விடத்துப் புண்ணியமுமாமெனல்

கோபம், நோய் முதலிய ஏதுக்களாலே தன்னுயிரை விடுத்தவன் அறுபதினாயிரம் வருஷம் நரகத்தில் வருந்துவன்; குருலிங்க சங்கமங்களுக்கு எய்தும் இடையூறு நீங்குதற் பொருட்டு உயிர் விடுத்தவன் சிவபதம் அடைவன். இதற்கு பிரமாணம், சிவதருமோத்தரம்: "கோவத்தானாகத்திற் கொடுநோயான் மற்றுங் குற்றத்தாற் றான் றன்னைக் கொலைபுரிகை குணமோ - பாவத்தான் மிக்காரே தமைத் தாமே வதைக்கும் பதர்மனித ரந்தணர்க்கும் பாங்கல்ல கும்பி - பாகத்திற்பட்ட ழுங்கிச் சீக்குழிக்கும்படிவர் பகர் வருட மறுபதினா யிரமுறவே பாங்கே - சாகத்தாந் துணிந்தழிகை சங்கரனா லயத்திற் றுவறுறினே யவரமலன் புரியதனைச் சார்வார்." எ-ம். சங்கற்ப நிராகரணம்: "விதிதெருளா னோய்க்குமழிந் தாக்கையைத் தான் வீத்தாற் - புதையிருளி னாழ்வன் புகுந்து." எ-ம். "ஆக்கையினை நோய்க்கு மழிந் தந்தணன்றா னீக்கினாற் - சீக்குழிக்கு மாழ்வன் சிறந்து." எ-ம். "அரும்பெரும் பன்னோ யடர்த்தாலு மாற்றிப் - பிரிந்திடச்செய் யாதுடலைப் பேணு." எ-ம். சிவபுண்ணியத் தெளிவு: "குருவிலிங்கசங் கமத்தினைக் குறித்தவற்றிடையூ - றொருவு தற்பொருட் டாற்றம துயிர்விடு முரவோர் - மருவி டும்பல மெமக்குமே வளம்பட வகுப்பா - னருமையென்றன னனைத்தையு முணர்த்துபே ரறிவோன்." எ-ம். வரும். இங்கே மந்திரி, தனக்குச் சோழர் ஆஞ்ஞாபித்தபடியே தான் அவருடைய மகனைக் கொல்வானாயில், அவருக்குப் பின் அரசியற்றுதற்கு ஒருவரும் இல்லாமையால், குரு லிங்க சங்கமங்களுக்கு இடையூறு நிகழுமெனவும், உயிர்களெல்லாம் இடுக்கணின்றி இன்புற்று வாழ்தல் கூடாதெனவும், நினைந்து, சிவபத்தியானுஞ் சீவகாருண்ணியத் தானுந் தன்னுயிரை விடுத்தானாதலின்; அது பாவமாகாது புண்ணியமாயிற்று. ஒருவனிமித்தம் ஒருவன் தன்னுயிரை விடுக்கப்புகில் அவனைத் தடுக்காதவன் அவனனத் தன்கையாற் கொன்றவனாவன். அது "என்றனை நீ புன்மை மொழியிசைப்பாயே யென்று மெனது தனந்தாராதே யேகுவையோ வென்று - நின்றனக்கோ வுரித்திந்த நிலமெனக்குமென்று நின்முன்னே யென்னுயிரை நீக்குவனே யென்றுந் - தன்றனையே தான்வதைக்கிற் றடுத்துமுறை புரியாச் சலத்தெதிரி யவன்றன்னைத் தன்னதுகை யாலே - கொன்றவனே யாதலினாற் றடுத்திடுக கொலையைக் கொடுத்திடுக கணக்குளது கொலைக்கஞ்சுங் குணத்தார்" என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுளால் அறிக.

இங்கே என்ன நடக்கிறது?

நான் கேட்கின்ற கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் எல்லோரும் பதில் சொல்கிறார்கள்.

" சுயமரியாதையியக்க சூறாவளி" என்பது யாரோ ஒருவரின் கருத்துக்கு யாரோ ஒருவர் சொன்ன பதில்கள். அதை எனக்கு பதிலாக தருவது பொருத்தமாக இல்லை. அதில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலும் இல்லை.

என்னுடைய அறிவு கொண்டு நான் கேட்கின்ற கேள்விகளுக்கு நேரடியாக உங்களுடைய அறிவு கொண்டு பதில் சொல்லுங்கள்

தூயவன்! எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேசவோ, எழுதவோ வராது. ஆங்கிலத்தில் அடிப்படை அறிவுதான் உள்ளது. ஜேர்மன் நன்றாகப் பேசுவேன். பலருக்கு ஜேர்மன் பாடமும் கற்பித்துள்ளேன். அப்படிப் பார்த்தால் நான் ஜேர்மன் மொழியைத்தான் வளர்த்துள்ளேன். :lol::unsure::lol:

தூயவன் சொன்ன பதிலும் யாருக்கோ சொல்லப்பட்ட பதில்தான். அதில் உள்ளதும் எனக்கு எந்த விதத்திலும் பொருந்தவில்லை.

ஆறுமுக நாவலரின் படைப்புக்கள் தமிழுக்கு எந்த விதத்திலும் பயன்பாடாக இல்லை. அவருடைய எழுத்துக்கள் தமிழுக்காக போற்றப்படுவதில்லை. உயர் குல வேளாள சைவர்கள் மட்டும்தான் மத அடிப்படையில் அவரை தூக்கிப் பிடிப்பார்கள்.

தமிழ் இலக்கிய உலகில் நாவலரின் படைப்புக்களுக்கு எந்த இடமும் இல்லை.

ஈழத்தில் அச்சுப் பதிப்பில் நாவலர் ஒரு முன்னோடியாக இருந்து, பின்பு வந்த தமிழ் படைப்புக்களுக்கு அறிந்தோ அறியாமலோ துணை புரிந்திருக்கிறார். அந்த வகையில் அவர் மீது நன்றி பாராட்டுவதில் எந்த ஒரு தவறும் இல்லை.

ஆனால் அவர் செய்யாதவைகளை எல்லாம், அவர் செய்தார் என்றும், செய்தவைகளை அவர் செய்யவில்லை என்றும் சொல்வது அழகல்ல.

எனக்கு எதன் மீது வெறுப்பு என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது?

தமிழர்களின் உரிமையை பறிக்கின்ற அனைத்தின் மீதும் வெறுப்பு

எனக்கு சிங்கள மொழி மீதும் வெறுப்பு இல்லை, வடமொழி மீதும் வெறுப்பு இல்லை. ஆனால் அவைகளை தமிழ் மீது திணிக்கப்படுவதை வெறுக்கிறேன். அப்படி திணிப்பவர்களையும் வெறுக்கிறேன்.

மதங்கள் மனிதர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதால், அனைத்து மதங்களையும் வெறுக்கிறேன். தமிழையும், தமிழரையும் கொச்சைப்படுத்துகின்ற இந்து மதத்தை அதிகமாக வெறுக்கிறேன்.

சைவத்தை வெறுக்கின்றேனா, சைவ புராணங்களை வெறுக்கின்றேனா என்று நீங்கள் கேள்வி கேட்பது பெரும் முரண்பாடு

"சைவா" வினா விடையில் புராணங்களை முன்னிறுத்தி கேள்வி பதில் கொடுக்கப்படுகிறது. சைவத்தையும் அதன் புராணக் கதைகளையும் பிரிக்க முடியாது என்பதே இதன் பொருள். இதை நான் சொல்லவில்லை. நாவலரின் சைவ வினா விடை அப்படித்தான் இருக்கிறது.

ஆகவே இரண்டையும் பிரித்து நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது.

Edited by சபேசன்

இப்பகுதிக்கு 800 பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்பது தவறு. 800 தடவைகள் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். நீங்கள் ஒவ்வொரு பகுதியை இணைக்கும் போது அதன் எண்ணிக்கை அதிகரிக்கும். பொழுது போகாமல் நீங்கள் மீண்டும் வாசித்தாலும் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தம்பி நாரதா! நாரதர் என்பது தமிழ் பெயரா? அது வடமொழி பெயரன்றோ. அதை முதலில் மாற்றுங்கள். வேண்டாம் மொழி துவேசம். தமிழன் உயர்ந்ததற்கு காரணம் தான் சகல மொழிகளையும் சகலவற்றையும் கற்றதினால் தான். இன்றும் தாங்கள் கூறும் விஞ்ஞானம் (விமானம் ஓட்டுதல், கட்டுவித்தல்) எல்லாம் ஆங்கிலத்திலும் பிறமொழியிலும் தான் உள்ளது. தமிழை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரைப் போல் வளர்த்தவர் யாரும் உண்டோ? அவருடைய புத்தகங்களையும் அவருடைய சரித்திரத்தையும் படித்ததில்லையோ? கிணற்று தவளைப் போல எதையும் படிக்காமல் எல்லாம் தெரிந்தவர் போல பேசுவது எந்தவிதத்தில் நியாயம்.

படிக்கவில்லை என்பது ஒரு குறையே அல்ல. முயற்சி செய்தால் படிக்கலாம். ஆனால் படிக்கமாட்டேன் நான் சொல்வது தான் சரி என்று நினைப்பது தவறு. நாவலர் பெருமானின் சிறந்த கட்டுரைகள் விரைவில் தருகிறேன், "நான்" என்பதை நீக்கிவிட்டு புதிதாக என்ன தான் சொல்கிறார்கள் என்ற ஆர்வத்தோடு பயின்று நம்முடைய தாய் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவை புரியுங்கள்.

வணக்கம் தம்பி ஆறுமுகா,

வேலைகள் கனக்க உங்களுக்குப் பதில் எழுத இருக்கும் கொன்ச்ச நேரத்தில், சில விடயங்களைச் சொல்லலாம்.

நீங்களாகவே பல சொந்தக் கற்பனைகளைச் ,சேர்த்து எழுதி உள்ளீர்கள். நான் சொல்ல வந்த விடயம் மிக எளிதானது.எனக்கு எந்த மொழி படிக்க வேண்டும் என்று நான் தான் தீர்மானிக்கமுடியும்.எது எது எனக்குத் தேவையோ, பிரயோசனமோ அதைத் தான் நான் படிப்பேன்.உங்களுக்கு விருப்பமானது எனக்கு விருப்பமானதாக இருக்காது அல்லவா? நீங்கள் ஒரு விடயத்தை இங்கு எழுதினால் அது பற்றி எழும் கேள்விகளுக்கு நீங்கள் தான் விளக்கம் அழிக்க வேண்டும்.

எனக்கு தமிழன் என்னும் அடையாளம் தேவையாக இருப்பதால் தமிழ் படித்தேன் பேசுகிறேன் அதனை நான் எனது தாய் மொழியாக கருதுகிறேன்.எனக்கான அடையாளத்திற்கு அது அவசியம்.அடுத்ததாக அறிவியல் விடயங்கள் எனது வேலை படிப்பு இவற்றிற்காக ஆங்கிலம் படித்தேன். சிங்களமும் படித்தேன்.இவை எனக்குத் தேவையானவையாகவும் பிரியோசனம் உள்ளவையாகவும் இருப்பதால்.செத்த மொழியான வட மொழியைப் படிப்பதால் எனக்கு எந்த விதப் பிரியோசனமும் இல்லை. அதில் எந்த நல்ல விடயமும் இருப்பதாக நான் எங்கும் அறிந்திருக்கவில்லை.உலகிலும் அவ்வாறு எவரும் கூறுவதில்லை.நீங்கள் என்னுடன் உரையாட அல்ல தர்கிக்க வேண்டும் என்றால் நீங்கள் எனக்குத் தெரிந்த மொழியில் தான் அதனைச் செய்ய முடியும்.இது தமிழருக்கான களம் இங்கு நீங்களும் நானும் தமிழில் தான் உரையாடலாம்.ஆங்கிலம் என்றால் அதற்கு என தனியாக ஒரு களம் இருக்கிறது.எனக்கு பிரன்ச்சு தெரியாது ஆனால் நான் பிரான்ஸ் போனால் அங்குள்ளவர்களுடன் உரையாட நான் தான் பிரன்ச்சு படிக்க வேணும். நான் அவர்களைப்பார்த்துச் சொல்ல ஏலாது, இது என்ன என்னுடன் உரையாட நீங்கள் ஆங்கிலம் படிக்க வேணும் என்று.ஆகவே நீங்கள் எனக்கு விளங்கிய மொழியில் எழுதினால் உங்களுக்கு என்னால் பதில் அழிக்க முடியும்.எனக்கு விளங்காத மொழியில் எழுதினால் பதில் அழிக்க முடியாது, அவ்வளவே.புரிந்ததா?

மேலும் எனக்கு என்ன பெயரை வைப்பது என்று நீங்கள் சொல்ல முடியாது,எனக்கு என்ன விருப்பமோ அதனை நான் வைக்கிறேன். எனக்கு எந்தத் துவேசமும் எவர் மீதும் கிடையாது.எனக்கு எனது மொழியில் அன்பிருக்கிறது, ஆகவே எனக்குப் பிடித்தமான தூய தமிழ்ப் பெயரை எனது இயற்பெயராகக் கொண்டிருக்கிறேன் ,தமிழ்ப்பெயர்களையே வைத்தும் இருக்கிறேன். யாழ்க்களத்தில் நாரதர் என்பது சும்மா ஒரு முகமூடி உங்களைப் போலவே, அவ்வளவே.

நான் கிணற்றுத் தவளையா நீங்கள் தவளையா என்று வாசிப்பவர்கள் முடிவு கட்டட்டும்.எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை இங்கிருப்பவர்கள் அறிவர்கள் என் எழுத்தின் மூலம், ஏனேனில் நான் இங்கு வருடக் கணக்காக எழுதுபவன்.அது போலவே நீங்களும் இப்போது தான் வெட்டி ஒட்டி வருகிறீர்கள், சுயமாக எழுதுங்கள் விவாதியுங்கள் கேள்விகளுக்கு பதில் அழியுங்கள்.அப்போது தான் உங்களுக்கு என்ன தெரியும் தெரியாது என்று ஒரு முடிவுக்கு வரலாம்,அதுவரை இப்படிக் கற்பனைகளால் இன்னொருவரை இழிவு படுத்துவதை விட்டொழியுங்கள்.

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்ல வில்லையே? ஈசுவர விரோதிகள் யார், வாம மதத்தவர் யார்?

இசுலாமியரும், கிறிஸ்தவர்களும் தமிழில் எழுதுவதில் என்ன புதுமை? இங்கே குறித்த கருத்தாளர் இந்துக்கள் மட்டுமே, தமிழர்கள் என்றும், மற்றய மதத்தைச் சேர்ந்தவர்களைப் பிற இனமாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது அப்பட்டமான இனவாதமாகும். மதமாற்றத்தை மட்டுமே அவர்கள் கொண்டிருக்கின்றார்களே தவிர, அவர்களும் தமிழர்களே!

ஆனால் அவர்களை இந்துக்களோடு ஒப்பீடு செய்து தமிழ் உணர்வினைக் காட்ட வேண்டுமானால், அவர்களின் பெயர்களை முதலில் தமிழாக்கி தங்களை அடையாளம் கொடுக்க வேண்டும். அது தயாரா? மற்றும்படி இசுலாமியர் தொழுகையின் போது, அராபிய வார்த்தைகளே பயன்படுத்துகின்றனர்.( அல்லாகு அக்பர். அல்லாஹித்த....... ரப்பிஜ்அல்னீ முகீமஸ் ஸலாத்தி வமின் துர்ரிய்யத்தீ ரப்பனா வதகப்பல் துஆ. ரப்பனஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்...........)

அவ்வாறே பெளத்தர்களும் பாளிமொழியில் தான் தொழுகை செய்கின்றனர்.

அவர்களைத் தமிழர்கள் என்று கருதவில்லை என்று நீங்கள் வெளிப்படையாக ஒத்துக் கொண்டால் அது பற்றிக் கதைக்காமல், விடலாம்!

-----------------------------

சமஸ்கிருதம் தமிழில் ஆரியர் புகுத்தினர் என்று திட்டிக் கொண்டிருப்பது அப்பட்டமான பொய்யாகும். தாங்கள் தமிழ் விரும்பிகள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆரியப் பெயர்களை எப்படி சூட்டிக் கொள்கின்றார்களோ, அது போன்று தான் ஆதிசங்கரர் என்ற தமிழர்( சேரநாடு) சமண, பெளத்த மதங்களை தடுக்க, வடஇந்தியர்களோடு கூட்டுச் சேர்ந்த பின்னர் தான், கோவில்களுக்குள் அது நுழைந்ததே தவிர, அவர்கள் திணிக்கவில்லை. தங்களின் பிழைகளை மறுக்க மற்றவர்களைத் திட்டுவது ஒரு பிழைப்பு.

தமிழ் உயர்ச்சி பற்றிய எதிர்காலச் சிந்தனையில்லாமல், குற்றம் பிடிக்கின்றவர்களால் நிச்சயம் தமிழ் வளராது.

தூயவன் தலைப்புடன் சம்பந்தமாக எதாவது இருந்தால் எழுதவும் அதை விடுத்து நான் எழுதாதை எழுதியதாக் கூறுவது நேர்மை அற்ற செயல். கருத்து நிலை வறட்சி ,அது உமது கருத்தாடல்களில் ஒரு புதிய விடயமும் அன்று.அதனாலையே உம்முடன் நான் விவாதிப்பது கிடையாது.ஆனால் இங்கே ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

இங்கே நான் எங்கே கிருத்துவர்களும் இசுலாமியர்கலும் தமிழர்கள் அல்ல என்று எழுதி உள்ளேன்.

நான் எழுதியது,

//கிருத்துவர்களும் இசுலாமியர்களும் எப்படி தூய தமிழில் எழுதுகிறார்கள்//

இதன் அர்த்தம் என்ன? கிரித்துவ மத்தவரும் இசுலாமிய மத்தவரும் எப்படி தூய தமிழில் தமது மதம் சம்பந்தமான் விடயங்களை எழுதி உள்ளனர் என்று, இதில் எங்கு இருக்கிறது இனவாதம்.இருக்கும் ஒரு விடயத்தைத் தானே கூறி உள்ளேன்.இல்லாத ஒரு வியாக்கியானத்தை நான் கூறியதாக் கூறி என் மீது அவப்பெயரை ஏற்படுத்தி அதன் மூலம் கருத்தாடலைத் திசை திருப்பவது எதனால்? இது ஒழுங்காக நியாயமாக கருத்தாடல் செய்ய வக்கிலாததன் வெளிப்பாடு அன்றி வேறென்ன.இப்படியானவர்களுடன் கருத்தாடி எனது நேரத்தை வீணக்க விரும்பவில்லை ஆகவே உமது எந்தக் கருத்தாடல்களுக்கும் நான் பதில் எழுதப்போவதில்லை.

தல ,

முதலில அறிவியல் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ள வேணும்.எதனையும் தீரா ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறுவதே அறிவியல் அல்லது விஞ்ஞானம்.இப்படி அறுதியிட்டுக் கூறியதனால் தான் விஞ்ஞானத்தின் மதிப்பும் பயனும் உயர்ந்துள்ளது.எல்லோரும் அதனில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இங்கே தீர ஆராய்வது என்பது வெறும் கற்பனை இல்லை.பரிசோதனைகள், தரவுகள், மீள் பரிசீலனை என அது மிகவும் கடினமான ஒரு நடை முறை.ஒரு விடயத்தை விளக்க அதன் பொறிமுறை , அதனை விளக்கும் அடிப்படை அறிவியல் என அது மிகவும் நுணுக்கமானது, விளக்கமானது.

நீங்கள் கடவுளே இல்லை என்கிறீர்களா இல்லை மதம் என்பதும் அது சொல்லும் விளக்கம் என்பதும்தான் பிழை என்கிறீர்களா.? என்பதிலை எனக்கு குழப்பம் உள்ளது..! எனக்காக அதை ஒரு முறை தீர்க்கமாக சொல்லிவிடுங்கள்...!

கீழே இருக்கும் வாழ்த்து நல்ல தமிழில் சைவத்தின் குறியை நன்கு சுட்டி நிக்கிறது....

வான் முகில் வளாது பெய்க

[நெல்]மணிவளம் சிறக்க மன்னர்

கோன் முறை அரசு செய்க

குறைவிலாது யிர்கள் வாழ்க

நான் மறை அறங்களோங்க

மேன்மை கொள் "சைவநீதி"

விளங்குக உலகமெல்லாம்...!

சுருக்கமாக சைவம் என்ன சொல்ல வருகிறது என்பதுக்கு எடுத்து கொள்ள கூடிய ஒரு வாழ்த்து பாடல் அது.. இங்கை ஆறுமுகநாவலர் சொல்வதன் அர்த்தமும் அதுதான் நெறியோடு வாழ எல்லாருக்குமான ஒரு ஒழுக்க நெறியாக கூட அதை எடுத்து கொள்ளலாம்... அதாவது ஒழுக்கத்தோடு ஒரு நெறி முறைக்குள் வாழும் ஒருவனால் அல்லது ஒருத்தியால் மற்றையோருக்கு தீங்கு செய்ய விளைய மாட்டார்கள் என்கிறது சைவ நீதி...!

அதையும் தாண்டி ஒவ்வொரு விடயத்துக்கும் விஞ்ஞான விளக்கம் இருக்கிறது... நீங்கள் சின்ன வயசிலை புளிய மரத்துக்கு கீழ படுக்காதை பேய் அடிச்சிடும் எண்டு பாட்டாவோ பாட்டியோ சொல்லி இருப்பினம் ( இதுக்கும் சைவத்துக்கும் சம்பந்தம் இல்லை) அப்ப விளங்காதை விடையம் காலப்போக்கில விஞ்ஞான பாடம் படிக்கேக்கை உங்களுக்கு விளங்கி இருக்கும்... அது போலத்தான் சைவ நீதிகளும் எல்லா விடயங்களும் கற்பனை செய்யப்பட கூடியதுதான் , கற்பனை செய்யப்படும் விடயங்கள் மட்டும்தான் செயலாக்க பட முடியும்... அதுதானே அறிவியலில் ஆரம்பமே....!

  • தொடங்கியவர்

அருமையான விளக்கங்கள் தல.

  • தொடங்கியவர்

ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின்

navalar4.jpg

சைவ வினா விடை

இரண்டாம் புத்தகம்

1. பதியியல்

1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.

3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன?

நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர்.

4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.

5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ?

தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.]

6. படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

7. காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல்.

8. அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்

9. மறைத்தலாவது யாது?

ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதல்.

10. அருளலாவது யாது?

ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.

11. தனு கரண புவன் போகம் என்றது என்னை?

தனு = உடம்பு; கரணம் = மன முதலிய கருவி; புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம். போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.

12. ஒரு காரியத்திற்கு காரணம் எத்தனை?

முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்றாம். குடமாகிய காரியத்துக்கு முதற் காரணம் மண், துணைக் காரணம் திரிகை, நிமித்த காரணம் குயவன். திரிகை - சக்கரம்.

13. தனு கரண புவன் போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்திற்கு முதற்காரணம் துணைக்காரணம் நிமித்த காரணம் எவை?

முதற் காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று. துணைக்காரணம் சிவசக்தி; நிமித்த காரணம் சிவபெருமான்.

14. சிவசத்தியாவது யாது?

அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.

15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?

அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.

16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?

அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.

17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா?

ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.

18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?

சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார். [அதிட்டித்தல்=நிலைக்களமாகக் கொண்டு செலுத்துதல்]

19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?

சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து சமயதீ?க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.

20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?

பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி; உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய சத்தி மனோன்மணி.

21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?

பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி, இலிங்கஞ் சிவம்.

22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?

படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது [லிங்க=சித்திரித்தல்]

23. மகேசுர வடிவம் எத்தனை?

சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ?ணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்துமாம்.

திருசிற்றம்பலம்

  • தொடங்கியவர்

Thillai Vazh Anthanar - தில்லைவாழ் அந்தணர்

Click this to download

http://www.megaupload.com/?d=QOUARDQ6

Perumillai Kurumba Naayanaar - பெருமிழலை குறும்ப நாயனார்

Click this to download

http://www.megaupload.com/?d=FDVTLTF8

  • தொடங்கியவர்

2. பசுவியல்

24. ஆன்மாக்களாவார் யாவர்?

நித்தியமாய், வியாபகமாய்ச், சேதனமாய்ப், பாசத்தடையுடையோராய்ச், சார்ந்ததன் வண்ணமாய்ச் சரீரந்தோறும் வெவ்வேறாய், வினைகளைச் செய்து வினைப் பயன்களை அநுபவிப்பேராய்ச், சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையோராய்த், தமக்கு ஒரு தலைவனை உடையவராய் இருப்பவர். (சேதனம் - அறிவுடைப் பொருள்)

25. ஆன்மாக்கள் எடுக்கும் சரீரம் எத்தனை வகைப்படும்?

தூல சரீரம், சூக்கும சரீரம் என இரண்டு வகைப்படும்.

26. தூல சரீரமாவது யாது?

சாதி, குலம், பிறப்பு முதலியவைகளால் அபிமானஞ் செய்தற்கு இடமாய்ப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து பூதமும் கூடிப் பரிணமித்த உருவுடம்பு. (பரிணமித்தல் - உருத்தரிதல்)

27. சூக்கும சரீரமாவது யாது?

சத்த ஸ்பரிச ரூப ரச கந்தம் என்னும் காரண தன்மாத்திரையைந்தும், மனம் புத்தி அகங்காரம் என்னும் அந்தக்கரண மூன்றுமாகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு, ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அநுபவித்தற்குக் கருவியாய், ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு.

28. ஆன்மாக்கள் எப்படிப் பிறந்திறந்து உழலும்?

நல்விணை, தீவிணை என்னும் இருவினைக்கும் ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், ஏழுவகைப் பிறப்பையும் எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப், பிறந்திறந்து உழலும்.

29. நால்வகைத் தோற்றங்களாவன யாவை?

அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அண்டசம் = முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் = வேர்வையிற் தோன்றுவன. உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன. சராயுசம் = கருப்பையிற் தோன்றுவன.

30. எழுவகைப் பிறப்புக்களாவன யாவை?

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பவைகளாகும். இவ்வெழுவகையினுள்ளும், முன் நின்ற ஆறும் இயங்கியற் பொருள்கள்; இறுதியில் நின்ற தாவரங்கள் நிலையியற் பொருள்கள். இயங்கியற் பொருளின் பெயர் சங்கமம், சரம்; நிலையியற் பொருளின் பெயர் தாவரம், அசரம்.

31. கருப்பையிலே பிறப்பன யாவை?

தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளுமாம்.

32. முட்டையிலே பிறப்பன யாவை?

பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவுமாம்.

33. வேர்வையிலே பிறப்பன யாவை?

கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளுமாம். (கீடம் - புழு)

34. வித்தினும் வேர், கொம்பு, கொடி, கிழங்குகளிலும் பிறப்பன யாவை?

தாவரங்கள்.

Edited by ArumugaNavalar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.