Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க முயற்சியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சோதனை தேடுதல் என்ற பெயரில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க முயற்சியா?

வடபகுதிக்கு இருபது வாகனங்களில் வெடிபொருட்கள் ஆயுதங்கள் கொண்டுசொல்லப்பட்டதா? எழும் சந்தேகங்கள்
 
 
main photomain photo
  •  
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். இந்த நிலையில், இலங்கையின் தெற்கிலிருந்து வடபகுதிக்குள் 20 வாகனங்கள் வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் பிரவேசித்துள்ளதாக இலங்கைப் படையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனால் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க அல்லது குழப்பும் நோக்கில் படையினரால் இவ்வாறு ஆயுதங்கள் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன. 
 
பன்னிரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாகனங்கள், இரண்டு கெப் ரக வாகனங்கள், ஓட்டோ ஒன்று, டீமோ பட்டா லொறி ஒன்று மற்றும் இரண்டு கார்களில் வெடிபொருட்கள் ஆயுதங்கள் வடபகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இலங்கைப் படையினர் அறிவித்துள்ளனர்.

 

தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட ஓரிரு நாட்களில் கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தற்கொலைக் குண்டுதாரிகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் வெடிபொருட்களையும் கண்டுபிடித்து அழித்த இலங்கை முப்படையினருக்கு, வடபகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த இருபது வாகனங்களையும் ஏன் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழாமலில்லை.

சென்ற 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிற்கு செல்லும் வழியில் பல சோதனைச் சாவடிகள் இலங்கைப் படையினரால் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அந்தச் சோதனைச் சாவடிகளைக் கடந்து எவ்வாறு இருபது வாகனங்களில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்பட்டிருக்கும்? அல்லது 21 ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அந்த இருபது வாகனங்களில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டதா?

இது தொடர்பாக இலங்கைப் படையினர் சரியான விபரங்களை வெளியிடாமல் வெறுமனே இருபது வாகனங்களில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறி அந்த வாகனங்களின் இலக்கங்களையும் வெளியிட்டுள்ளனர்.

ஏதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்நதல் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கைப் படையினர் இவ்வாறு தகவல்கள் வெளியிடுகின்றனரா? அல்லது உண்மையிலேயே வெடிபொருட்கள், ஆயுதங்கள் வடபதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகச் சந்தேகங்கள் எழாமில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை முப்படையினர் வடபகுதியில் 24 மணி நேரமும் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த வாகனங்களைக் கடத்திச் சென்றவர்கள் அதனை அங்கு எவ்வாறு பாதுகாக்க முடியும் என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.

தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட ஓரிரு நாட்களில் கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தற்கொலைக் குண்டுதாரிகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருட்களையும் கண்டு பிடித்து அழித்த இலங்கை முப்படையினருக்கு, வடபகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த இருபது வாகனங்களையும் ஏன் கண்டு பிடிக்க முடியாமல் போனது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

கொழும்பு நகருக்குள் குண்டுகளுடன் கொண்டு வரப்பட்ட ஏழு வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

ஆனால், இன்று வெள்ளிகிழமை வரையும் யாழ்ப்பாணத்தில் கடுமையான சோதனை தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனினும் அந்த இருபது வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்களில் ஒன்றைத்தானும் இதுவரை படையினர் கண்டு பிடிக்கவில்லையே என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மாறாக பிரபாகரனின் படம் இருந்ததாகக் கூறப்பட்டு, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இருபது வாகனங்களில் வடபகுதிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு, நேற்று வியாழக்கிழமை முதல் வவுனியாவில் நிரந்தரமாக இராணுவ வீதித் தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலங்கையில் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்துக்கொண்டு வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க அல்லது குழப்ப இலங்கை அரசாங்கம் முற்படுகின்றதோ அல்லது உண்மையிலேயே மக்களின் பாதுகாப்புக் கருதி இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றதோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=937&fbclid=IwAR3ojJse8M_2z4p-y7C97ZKRKc2OAO1rtBVXWKglYHf_73-pRhfyLgnbY64

  • கருத்துக்கள உறவுகள்

main photo

 

இது, ஆபிரிக்காவில், எங்கோ...  எடுத்த படம் போலுள்ளது.
முள்ளிவாய்க்கால்... நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு, தொப்பி போட்டவர்கள்...
ஒருவருமே.... இதுவரை, கலந்து கொள்ளவில்லை. 

சம்பந்தன், சுமந்திரன் எல்லாரும்... சென்ற முறை....
ஸ்ரீலங்கா... பாதுகாப்பு படையினருடன் கலந்து கொண்டு..... 
கழண்டு  கொண்டதை , யாழ். களத்தில்.. வாசித்த நினைவு நன்றாக உள்ளது.
அத்துடன்... சுமந்திரன்...  சொறிலங்கா ஆமி காவலுடன்... வெளிக்கிட்ட காலம் அது.
இப்ப... முன்னாள், புலிகள்... ஆமிகளிடன் சேர்ந்து... இயங்குகின்றார்கள் என்று சொல்லும் காலம் இது.

"அருண்டவனுக்கு,  கண்டதெல்லாம்... பேய்....." 

சம்பந்தன், சுமந்திரன் எல்லாருக்கும்.....  இப்ப, முள்ளி வாய்க்கால் போவதில்....
பயம் இருக்கும் என்ற படியால், புது பீதியை.. கிளப்பி....  
முள்ளி வாய்க்கால் நிகழ்வை தடுக்க, புது பிளான் போட்டிருக்கினம்.
அதுதான்... அவர்களின், சாணக்கிய அரசியல். 

அடுத்த.... குண்டு வெடிப்புக்குள்... தமிழருக்கு தீர்வு கிடைக்கும். --.  "சர்பத்"
 

  • கருத்துக்கள உறவுகள்

மாவையும் சுமந்துவும் உடனே போனதிலே விளங்கியிருக்க வேணும்....இதின்ரை உள் குத்து..இதில் முசுலிமிகளின் கதயை திருப்புவதிற்கும் சானஸ் ஈறூௐௐஊ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.