Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலைமையை சாதகமாக பயன்படுத்தி வட,கிழக்கில் இராணுவத்தை குவிக்க முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
May 4, 2019

Mavai.jpg?resize=800%2C621

ஐ.எஸ். பயங்கரவாதத்தை சாதகமாக பயன்படுத்தி வடக்கு கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இராணுவத்தை குவிப்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்;.

 

உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள அச்சுறுத்தலான சூழலை பயன்படுத்தி மீண்டும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

http://globaltamilnews.net/2019/120615/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் செறிந்து வாழும்.. மத்திய.. வட மேற்கு.. மேற்கு.. தெற்கு மாகாணங்களில் நடக்காத சோதனைகள்.. வடக்குக் கிழக்கில் நடக்கும் போதே யோசித்திருக்க வேண்டும்.

இப்போ சிங்கள இராணுவத்தின் இருப்புக்கு கூக்குரல் இட்டுவிட்டு... மீண்டும் அடுத்த நாள் இப்படிப் பேசுவது.. கூத்தமைப்பினரின் வாடிக்கை தான்.

ஆனால்.. இந்தப் பைத்தியங்களின் கையில் தமிழ் மக்களின் அரசியலும் நலனும் என்பது மிகவும் வேதனையான விடயமாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுவெடிப்பின்பின் ஏற்பட்ட சர்வதேசத்தின், குறிப்பாக ஐநா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அனுதாப அலைகளை சாதகமாக்கி அவர்களின் ஆசீர்வாதத்துடன் இலங்கையின் சிறுபான்மையின மக்களை மேலும் இராணுவப்பிடிக்குள் கொண்டுவரும் உத்தியையே இப்போது சிங்கள அரசு செய்துவருகிறது.

அண்மையில் ஐநா பிரதிநிதி இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோளொன்றை விடுத்து ஐநாவின் விசேட படைப்பிரிவான பயங்கரவாத தடுப்புக்குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க முன்வந்தபோது எங்கள் இராணுவத்தின்மேல் எங்களுக்கு நல்ல நம்பிக்கை உள்ளது எனவே உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை என்று ஜனாதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்போதே இலங்கை அரசின் மறைமுக நிகழ்சி நிரலை ஐநா புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு நிகழ்ந்த  பயங்கரவாத தாக்குதலை மையமாக வைத்து இராணுவத்தின் ஒரு பிரிவு தனது நடவடிக்கைகளை செய்துகொண்டிருக்கும் அதேவேளை சோதனை, விசாரணை என்ற பெயரில் மக்கள் குடியிருப்பு, பல்கலைக்கழகம், வணக்கத்தலங்கள் என்பவற்றில் அத்துமீறி பிரவேசித்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையின் இயல்புநிலையை குலைப்பதையே இராணுவத்தின் இன்னொருபிரிவு செய்துகொண்டிருக்கிறது.

உண்மை என்னவென்றால் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடந்தால் நல்லது என்று இராணுவம் விரும்பி அதை எதிர்பார்த்திருந்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெறாமல் தடுக்க இருந்த வழிமுறைகள் அனைத்தையும் மூடி வெளிநாடுகளில் இருந்து கிடைத்த முன் எச்சரிக்கைகளையும் உதாசீனம் செய்துவிட்டது ஒரு திட்டமிட்ட செயல் என்றுதான் கொள்ளவேண்டும். இராணுவம் அல்லது ஜனாதிபதி தயவுடன் உயர்மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தமில்லாமல் இதுபோன்ற ஒரு தாக்குதல்  இலங்கையில் நிகழ வாய்ப்பே இல்லை.

 

ஒருத்தர் ICU வில் admit ஆகி இருக்கின்றார் எனில் அவரது உடல் நிலை எவ்வளவு சீரியசாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஆனால் அப்படி இருக்கும் ஒருவரே தன் மகனுக்கு தொலைபேசியில் அழைத்து 'மகனே நாளைக்கு தேவாலயங்களுக்கு போகாதே.." என எச்சரிக்கை கொடுக்கின்றார் எனில் தாக்குதல் விடயம் எந்தளவுக்கு 'பரகசியமாக' இருந்து இருக்கும்

இவ்வாறு சொன்னவர் ஹரீன் பெர்ணாந்துவின் அப்பா. அவர் ஒரு ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர். அவருக்கு அவரை பார்க்க வந்த பொலிஸ் நண்பர்கள் சொல்லியிருப்பார்களாம்.

இந்தளவுக்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிந்தும் ஏன் தடுக்கவில்லை என்பதற்கான காரணங்களை இன்று வடக்கு கிழக்கு எங்கும் காண்கின்றோம்.

இலங்கை தீவில் சிங்களம் மட்டுமே இருக்க முடியும் எனும் நீண்டகால செயல்திட்டத்தின் அம்சங்களில் ஒன்றாக இதை அணுக முடியும். இதில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளை பூதகாரமாக்கி தம் இருப்பை மேலும் பேண முயலும் நடவடிக்கைகளும் அடங்கி இருக்கு.

9/11 தாக்குதலின் பின் நிகழந்த பல விடயங்களும் இந்த தாக்குதலின் பின் நடக்கும் பல விடயங்களும் குணத்தளவில் ஒன்றுதான்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.