Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

social-media-block-300x200.jpgசிறிலங்காவில் மீண்டும் நேற்றிரவு தொடக்கம், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பில் நேற்றுமாலை வெடித்த கலவரங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் நேற்று மாலை முச்சக்கரவண்டி சாரதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், இரண்டு இனங்களைச் சேர்ந்த குழுக்களுக்கிடையிலான மோதல்களாக உருவெடுத்தது.

சில முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டதுடன், சில உந்துருளிகள் தீயிட்டு எரி்க்கப்பட்டன. பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த சிறிலங்கா காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

அத்துடன், நீர்கொழும்பு காவல்துறை பிரதேசத்தில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கமைய, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பலகத்துறை, கட்டுநாயக்க, திவுலபிட்டிய, கொட்டகதெனிய, பமுணுகம, ரத்தொலுகம, சீதுவை, துங்கல்பிட்டிய, கட்டான ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இன்று காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

ஊரடங்கு நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தமது விமானச்சீட்டை காண்பித்து நீர்கொழும்பு ஊடாக விமான நிலையத்திற்கு பயணிக்க முடியும் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், நேற்றிரவு சமூக ஊடகங்களின் மீது மீ்ண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முகநூல், இன்ராகிராம், வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இதனால் நேற்றிரவில் இருந்து முடங்கியுள்ளன.

தற்காலிகமாகவே இந்த தடை கொண்டு வரப்பட்டதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2019/05/06/news/37810

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பு பகுதியில் பதற்றம்: சமூக வலைத் தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கம்

சமூக ஊடகம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்றிரவு முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி சமூக வலைத்தளங்கள் தீடிரென முடக்கப்பட்டுள்ளன.

நீர்க்கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகியிருந்ததால் இந்த தடை விதிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அன்று முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 9 நாட்களுக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

ட்விட்டர் தவிர்த்த ஏனைய சமூக வலைத்தளங்களே நேற்றிரவு முதல் முடக்கப்பட்டன.

வாகனங்கள்

இதேவேளை, கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த அமைதியின்மையினால் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நீர்கொழும்பு போலீஸ் பிரிவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 7 மணி வரை போலீஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீர் கொழும்பில் என்ன நடந்தது?

நீர்கொழும்பு - போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மோதலால் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

நீர் கொழும்பு

மேலும் அப்பகுதியில் போலீஸ் விசேட அதிரடி பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போருதொட்டைக்கான அனைத்துப் பாதைகளும் வன்முறையாளர்களால் சூழப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நீர்கொழும்பில் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

https://www.bbc.com/tamil/sri-lanka-48170489

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.