Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் –  இராணுவத்தின் தேடுதலின் விளைவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் –  இராணுவத்தின் தேடுதலின் விளைவா?

prof-vigneswaran-300x199.jpgயாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், இந்த இடைநிறுத்த உத்தரவுக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும், பதவி நீக்கும் அதிகாரங்கள் சிறிலங்கா அதிபருக்கு இருப்பதாக, மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் புதிய தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும், பேராசிரியர் மொகான் டி சில்வா கூறினார்.

பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியை நியமிக்க உயர்கல்வி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி இன்று நியமனம் அறிவிக்கப்படும்.

அதன் பின்னர், வழக்கமான நடைமுறைகளின்படி, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான செயல்முறைகள் ஆரம்பமாகும். அதற்கு சில மாதங்கள் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விக்னேஸ்வரன் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

ஏப்ரல் 30ஆம் நாளில் இருந்து பதவி இடைநிறுத்தம் செய்யப்படுவதாக பேராசிரியர் விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபரின் செயலரினால் கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றே அந்தக் கடிதம் தொலைநகல் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது,

எனினும், தமக்கு அவ்வாறான கடிதம் கிடைக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் தேடுதல்களை நடத்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம், இனப்படுகொலை தொடர்பான பதாதைகளை கைப்பற்றியதுடன், மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலரையும் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் துணைவேந்தர் பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது.

எனினும், தற்போதைய பாதுகாப்புச் சூழலுக்கும், துணைவேந்தர் விக்னேஸ்வரனின் பதவிநீக்கத்துக்கும் தொடர்புகள் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் பேராசிரியர் விக்னேஸ்வரனை விட அதிகம் வாக்குகளைப் பெற்றிருந்த பேராசிரியர் சற்குணராஜா அல்லது முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்,  பதில் துணைவேந்தராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2019/05/07/news/37842

சகல (தமிழ்,  சிங்கள, முஸ்லீம்) மாணவர்களும் சுதந்திரமாக நடமாட, தமது உணர்வுகளை வெளிப்படுத்த, தமது கலாச்சாரங்களை வெளிப்படுத்த அனுமதித்ததே இவர் செய்த தவறாக சிங்கள-பௌத்த அடக்குமுறை அரசு பார்க்கிறது!

அத்துடன் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களினால் ஆளப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தமிழ் மாணவர்கள் மீது அடாத்தாக பிரயோகித்த அடக்குமுறைகளுக்கு இவர் துணைபோகவில்லை என்றும் கூறப்படுகிறது!

மேலும் தமிழர்களின் இருப்பை வலுப்படுத்த இவரது நடவடிக்கைகள் உதவுவதாக சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது!

மேலாண் ஆற்றலுடை அதிகாரியாக ஒரு மதவெறியரை நியமிக்க முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது மகிந்த கும்பலுக்கு சாதகமாகிவிடும் என்பதால் இறுதியில் பேராசிரியர் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளாராம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.