Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்தான்!

Featured Replies

சாத்தான்!

அவன் அந்த நடைபாதையில் இருந்த இருக்கை ஒன்றில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுடைய மனதிற்குள் ஆயிரம் கேள்விகளும் அச்சங்களும் கலகம் செய்து கொண்டிருந்தன.

அவனிடம் நிரந்தர வதிவிட அனுமதி இல்லை. நிரந்தர வதிவிட அனுமதி இல்லை என்பதால் நிரந்தர வேலை இல்லை. நிரந்தர வேலை இல்லை என்பதால் வருவாய் போதுமானதாக இல்லை. வீட்டில் மனைவியுடன் அடிக்கடி சண்டைகளும் வர ஆரம்பித்து இருந்தன. ஊரில் இருந்து வருகின்ற கடிதங்களும் அவனுடைய மனச்சுமையை கூட்டுவதாகவே இருந்தன.

இந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு அவனுக்கு எந்த வழியும் தென்படவில்லை. எதிர்காலத்தை நினைக்க அச்சமாக இருந்தது. யாரவாது வந்து தன்னை இந்தப் பிரச்சனைகளில் இருந்து கைதூக்கி விட மாட்டார்களா என்று அவன் ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டான்.

அப்பொழுதுதான் அவர்கள் அவனிடம் வந்தார்கள். அவர்கள் மிகவும் அழகாகவும் நாகரீகமாகவும் உடை அணிந்திருந்தார்கள். கையில் கருப்பு அட்டையைக் கொண்ட ஒரு தடித்த புத்தகத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் அவனிடம் மெதுவாகவும் அன்பாகவும் பேச ஆரம்பித்தார்கள். அனைத்து துன்பங்களிடம் இருந்து விடுவிக்க தங்களிடம் வழி உண்டு என்று சொன்னார்கள். தேவனை சரணடையுங்கள், உங்களை துன்பங்களில் இருந்து அவர் விடுவிப்பார் என்றார்கள்.

அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்தார்கள். ஒரு முறை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வாருங்கள் என்று வற்புறுத்தினார்கள். அவனும் அரை மனத்தோடு போனான். எல்லோரும் அவனை அன்பாக வரவேற்றார்கள். "சகோதரன்" என்று அழைத்தார்கள்.

என்ன ஆச்சரியம்?! அடுத்த நாள் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் நிரந்தர வதிவிட அனுமதி தருவதாக கடிதம் வந்திருந்தது. அவன் மெய்சிலிர்த்துப் போனான். தேவனின் செயலை எண்ணிப் பூரித்துப் போய் நின்றான். சில வாரங்களில் அவன் ஒரு நல்ல வேலையையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து அவனுடைய பல பிரச்சனைகள் குறைந்து போயிருந்தன.

இப்பொழுது அவன் தேவனின் பெயரை மட்டும் உச்சரிக்கின்ற ஒருவனாக மாறிப் போயிருந்தான். அவனுடைய நண்பர்கள் வட்டமும் மாறிப் போயிருந்தது. கையில் எப்பொழுதும் கருப்பு அட்டையைக் கொண்ட அந்த தடித்த புத்தகத்தை வைத்திருந்தான். அதை மட்டும்தான் அவன் வாசித்துக் கொண்டிருந்தான்

தமிழ் பத்திரிகைகளை படிப்பதை நிறுத்தினான். திரைப் படங்களும், திரை இசைப் பாடல்களும் குப்பைக்குள் போயின. சுருதி கொஞ்சமும் இல்லாமல் "தேவனே" என்று அலறுகின்ற சத்தங்கள் அவனுக்கு இசையாகிப் போனது. அவைகளை கேட்கின்ற பொழுது மன அமைதி பிறப்பதாக நம்பினான். செய்து கொண்டிருந்த பங்களிப்புக்களையும் நிறுத்தினான். தேவனால் மட்டுமே விடுதலை கொடுக்க முடியும் என்றான். வீடு முழுவதும் தேவனின் வசனங்கள் நிறைந்திருந்தது.

பத்திரிகைகள், திரைப்படங்கள், யுத்தங்கள் அனைத்தும் சாத்தானின் படைப்புக்கள் என்றான். தேவனை ஏற்காத அனைவரும் சாத்தான்கள் என்றான். தேவனைப் பற்றிப் பேசுகின்ற போது பிரகாசமாகத் தெரிகின்ற அவனுடைய முகம், சாத்தானையும், சாத்தானின் படைப்புக்களையும் பற்றிப் பேசுகின்ற போது விகாரமாக தெரியத் தொடங்கியது.

அவன் தேவனை நோக்கி ஜெபிக்கின்ற போதும், தேவனின் வசனங்களை வாசிக்கின்ற போதும் தொலைபேசி எடுத்தும், நேரில் வந்தும் தொல்லை கொடுத்தவர்கள் அவனுக்கு சாத்தான்களாக தெரிந்தார்கள். மனைவியும் பிள்ளைகளும் கூட சாத்தான்களாக மாறியிருந்தார்கள்.

ஒரு நேரத்தில் அவன் தனித்துப் போனான். ஆனால் தேவன் தன்னுடன் இருப்பதாக சொன்னான். தேவனைக் கண்டதாகவும் பேசியதாகவும் சொன்னான். பிரார்த்தனைக் கூட்டத்தில் மனிதர்களை சந்திப்பதாக சொன்னான். இப்பொழுது அவன் தனக்கத்தானே பேசவும் தொடங்கியிருந்தான்.

ஒரு நாள் அவன் தனக்குதானே பேசியபடி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது வேகமாக வந்த ஒரு கார் அவன் மீது பயங்கரமாக மோதியது. தூக்கி வீசப்பட்ட அவன் சிறிது நேரம் துடிதுடித்து விட்டு இறந்து போனான். அதுவரை அவனைப் பீடித்திருந்த சாத்தான் ஒரு வெற்றிப்புன்னகையோடு வெளிக்கிளம்பி கருப்புப் புத்தகத்தை தூக்கியபடி அடுத்த இலக்கை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமானான் :rolleyes: .

- வி.சபேசன்

(http://webeelam.com)

தலைப்பைப் பார்த்ததும் ஆவலுடன் வந்தேன். ஏமாறவில்லை.

இது கற்பனை அல்ல, சிவன் சரியில்லை என்று தேவனை நாடியவர்கள் ஏராளம்.

இவர்கள் இலங்கை இனப்பிரச்சனையத் தீர்ப்பதற்குக் கூட வழிசொல்லுவார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான லூசுக்கூட்டங்கள் பல வீதிகள், வீடுகளில் வந்து தொல்லை குடுக்குதுகள். இதுகளின்ட இம்சைகள் தாங்கமுடியாது. யாழில் முன்பு வந்த இந்த இம்சைகள் பற்றிய இணைப்பினை வாசிக்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=9224

உண்மையில் இன்றைய சாபகேடு எம் இனத்தின் புரியாமல் தவிப்பவர்களை

தடுமாறவைக்கின்றது எம் நாமே சரிசெய்வது எப்போது என்றுதான் புரியவில்லை

இந்துசமயத்தை பின்பற்றியதால் கிடைத்த இம்சைகளும் இவ்வாறு தேவனை நோக்கி ஓடுவதற்கு காரணமாக இருகின்றது என்பதை மறுக்க உங்களால் முடியுமா?

எனது உறவினர் ஒருவரின் குடும்பம் தேவனின் சமயத்திற்கு மாறியது, ஏனென்றால் அவர்களிற்கு ஒரு குழந்தை நோயுடன் பிறந்தது. தேவனின் சமயத்தால் மாத்திரமே அவர்களிற்கு நிம்மதியான, சந்தோசமான வாழ்வை கொடுக்க முடிந்தது.

எனவே, நல்ல விடயங்கள் எங்கு சொல்லப்பட்டாலும் அவற்றை ஏற்றுக் கொள்வதிலோ அல்லது பிழையான விடயங்கள் எங்கு சொல்லப்பட்டாலும் அவற்றை மறுப்பதிலோ தவறு ஏதும் இல்லை..

சிவனையோ, யேசுவையோ, அல்லாவையோ கடவுளாக நம்புவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எதற்கும் அடிமையாவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டை மறந்து இது போன்ற மதக் குழுக்களுக்கு அடிமையானவர்கள் அதிகம். இந்த மதக் குழுக்கள் துரோகிகளை விட ஆபத்தானவர்கள்.

அவர்களாவது எதிரான முறையில் என்றாலும், நாட்டில் நடப்பவைகளை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மதக் குழுக்களை சார்ந்தவர்களுக்கு எமது மக்கள் குறித்தும், நாடு குறித்தும் எந்த ஒரு சிந்தனையுமே இல்லை.

இந்தக் கதையின் முடிவு சிலருக்கு விளங்கவில்லை என்றார்கள். முடிவு விளங்குவதற்கு கடினமாக உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

எனது உறவினர் ஒருவரின் குடும்பம் தேவனின் சமயத்திற்கு மாறியது, ஏனென்றால் அவர்களிற்கு ஒரு குழந்தை நோயுடன் பிறந்தது. தேவனின் சமயத்தால் மாத்திரமே அவர்களிற்கு நிம்மதியான, சந்தோசமான வாழ்வை கொடுக்க முடிந்தது.

சுனாமி அடிக்கேக்க இந்த தேவன் எங்கே போயிட்டார்?.

சுனாமி அடிக்கேக்கயும் அவர் இருந்திருக்கலாம். ஆனால், அப்போது அவரை பலருக்கு தெரியாமல் இருந்ததால் அவர் மூலம் மக்கள் பயன்பெறாது போய் இருக்கலாம்...

மன்னிக்கவும், நான் யாருக்காவது வக்காளத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். எம்மதமும் எனக்கு சம்மந்தம். எங்கு நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். எனவேதான் இவ்வாறு எழுதியுள்ளேன், எழுதுகின்றேன், எழுதுவேன்...

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எம் மதங்களுக்கு எதிரானவர் அல்ல. ஆனால் மதங்களின் பெயரால் உள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர். சிவனையோ, முருகனையோ, ஜேசுவையோ, அல்லாவையோ, குரு நானக்கரையோ(சீக்கியர்களின் கடவுள்) யாரை வெணுமென்றாலும் கும்பிடலாம். சபேசன் சொல்வது போல மதத்தின் மேல் உள்ள அடிமையாவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

சுனாமி அடிக்கேக்கயும் அவர் இருந்திருக்கலாம். ஆனால், அப்போது அவரை பலருக்கு தெரியாமல் இருந்ததால் அவர் மூலம் மக்கள் பயன்பெறாது போய் இருக்கலாம்...

கடவுளைத் தெரிவதினால் தான் பலன் கிடைக்குமா?. கிட்டத்தட்ட லஞ்சம் கொடுப்பதினால் தான் பலன் கிடைப்பது போல அல்லவா இருக்கிறது. ஜோசப் பராராஜ சிங்கம் அய்யா, நத்தார் இரவுக்கு தேவாலயத்துக்கு செல்லாமல் இருந்தால் அன்று தப்பி இருப்பார். அப்பொழுது தேவன் ஏன் அவரைக் காப்பாற்றவில்லை?.

ஜோசப் அய்யா இறைவனைத் தெரிந்து தானே வழிபடச்சென்றார்

ஐயோ என்ர கடவுளே, நான் இத்தோட நிப்பாடிக்கொள்ளுறன்... :D தேவனிடம்தான் உங்கள் கேள்விக்கான பதிலை கேட்கவேண்டும்.. :D

  • தொடங்கியவர்

இந்த சாத்தான்களின் தொல்லை தாங்க முடியவல்லை. பொதுவிடங்கள், வீடு என்று எங்கும் வந்து விடுவார்கள். மதத்தை திணிக்க முயலக்கூடாது.

இவர்களை பார்க்கும் போது வடிவேலுவின் நகைச்சுவை தான் ஞாபகம் வருகிறது.

"இலகுவாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று வடிவேலு நோட்டீஸ் அடித்து வெளியிடுவார். எல்லோரும் பணம் கட்டிவிட்டு வடிவேலுவின் உரையைக்கேட்க உட்கார்ந்திருப்பார்கள். வடிவேல் கூறுவார் நீங்களும் என்னை மாதிரி செய்தால் விரைவில் பணக்காரராகலாம் என்பார். இறுதியில் அவருக்கு அடி விழுவதுதான் உண்மை."

ஆனால் இங்கு கடவுளை பார்க்க என்று அழைத்துச் செல்லப்பட்டவர்களும், சில நாட்களில் ஆட்கள் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.

ஓயா..ஓயயென ஒலியெழுப்புதய்யா

ஓல வாழ்வாய் தினமாக்குதய்யா

வாய வாயயென வம்புக்கு இழுக்குதய்யா

சாத்தானாக்கியே தினம் சாகடிக்குதய்யா...

சரியான பார்வை நேர்த்தியான நெறியாள்கை

கரு நன்று கதை சிறப்பு...

நெஞ்சத்தில் நின்றது..

நினைவுகள் மிளிர்ந்தது...

தோழரே பாராட்டுக்கள்....

தொடரட்டும் பணிகள்...

இன்று தான் படித்தேன்..தாமதத்திற்கு வருந்துகிறேன்...

Edited by vanni mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.