Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்  எவ்வித போர்  குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து முப்படையினரின் சேவையினாலேயே நாடு  பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு இராணுவத்தை  நாம் முதலில் எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இனியாவது பெருமைப்படுத்த அரசாங்கம்  பழகிக் கொள்ள வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார்.

Mahindha.jpg

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ  வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

பல உயிரிழப்புக்களுடன்  வெற்றிக் கொண்ட  பயங்கரவாதம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில்  நாம் பிறிதொரு   அடிப்படைவாத  தீவிரவாதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.   சர்வதேசத்துடன் தொடர்புடைய தேசிய  தீவிரவாதத்தின்  தாக்குதலே  அண்மையில் இடம்பெற்றது. 2008ஆம் ஆண்டு  மும்பை  நகரில்   குண்டு தாக்குதல்  நடத்தியது  இந்நிய  பிரஜை  அல்ல   ஆனால்  கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தில்  தற்கொலை குண்டுதாக்குதலை    நடத்தியவர்கள்  இலங்கை   பிரஜைகள்    என்பது  ஒரு கட்டத்தில் வருந்தத்தக்கது.

விடுதலை புலிகளினால்  நடத்தப்பட்ட ஒரு  தாக்குதலினால்  கொல்லப்பட்ட உயிர்களை விட அதிகமான  உயிரிழப்புக்கள் ஒரு  தற்கொலை குண்டுதாரியினால் சம்பவிக்கப்பட்டது.   தொடர்ந்து அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் பழி சொல்லுக்கும் உள்ளாகிய இராணுவமே  இன்று  இந்த  நாட்டை பாதுகாத்துள்ளது.     அனைத்து  மக்களும் இராணுவத்தினரை போற்றி  மதிக்க வேண்டும் நிலையில்  நாம் அனைவரும் இன்று  உள்ளோம்.

இலங்கையில்  எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை என்று  10 வருட கால     வெற்றியினை  கொண்டாடும் இத்தருணத்தில் தைரியமாக குறிப்பிட  முடியும்.  யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச  போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட  போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே   யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. 

 நாட்டுக்காக  போராடிய  இராணுவத்தினர்  தொடர்ந்தும்  மதிக்கப்பட வேண்டும்.  அரசியல் கொள்கைகள் மாற்றமடையும் போது   இராணுவத்தினரை ஒருபோதும்  வேறுப்படுத்தி அரசியல் தேவைகளுக்காக  பயன்படுத்திக் கொள்ள கூடாது.   இராணுவத்தினரது   தேவையினை    தற்போதே  அரசாங்கம் முழுமையாக  புரிந்துள்ளது  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/56290

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றங்களின் நாயகனே போர்க்குற்றங்கள் நடந்ததாக ஒத்துக்கொண்டால்,  முப்படைகளின் தளபதி என்கிற வகையில் அவரல்லவா முதலில் சிறைக்குச் செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கள்வன் களவெடுத்தேன் என்று சொல்வதும் இல்லை.. கொலைஞன் கொலைசெய்தேன் என்றும் சொல்வதில்லை. 

இவர் தானும் இந்தச் சந்தில ஒரு சிந்து பாடிடுவம்.. சுத்தவான் ஆகிடுவம் என்று பார்க்கிறார்.

அப்பு நீவீரும் உம் குலாத்தினரும் செய்த மானுடப் படுகொலைப் பாவம்.. உங்களை சும்மா விடாது.

இன்னும் நிறைய துன்பங்களை சந்தித்தே ஆக வேண்டி இருக்கும்... உங்களின் சாவு வரை. 

Edited by nedukkalapoovan

5 hours ago, கிருபன் said:

இலங்கையில்  எவ்வித போர்  குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

சிங்கள-பௌத்தர்கள் மகா பொய்யர்கள் மகா பொய்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெசாக் காலத்தில் நிரூபிக்கின்றனர்!

5 hours ago, கிருபன் said:

யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச  போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட  போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே   யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. 

இதே சட்டங்களைப் பயன்படுத்தி இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தலைவிரித்தாடும் சிங்கள-பௌத்த பயங்கரவாதம் zero-casualities  உடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.