Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் - மோடிக்கு சி.வி. கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர்  - மோடிக்கு சி.வி. கடிதம்

இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்யும் வகையில் சமஷ்டி கட்­ட­மைப்­புக்குள் தீர்வு ஒன்­றினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தலைமை ஏற்று முன்­னெ­டுக்­க­வேண்டும்  "இலங்கை தமிழ் மக்கள் உங்­க­ளி­டத்தில் மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் என்று இந்­திய மக்­களை தேர்­தலில் வெற்­றி­பெற்ற  அந்­நாட்டு  பிர­தமர் நரேந்­திர மோடிக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில்  வடக்கு மாகா­ணத்தின்  முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின்  செய­லாளர் நாய­க­மு­மான  சி.வி. விக்­கி­னேஸ்­வரன்  தெரி­வித்­துள்ளார். 

modi.jpg

அந்தக் கடி­தத்தில்  மேலும்  தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்யும் வகையில் சமஷ்டி கட்­ட­மைப்­புக்குள் தீர்வு ஒன்­றினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தலைமை ஏற்று முன்­னெ­டுக்­க­வேண்டும் 

"இலங்கை தமிழ் மக்கள் உங்­க­ளி­டத்தில் மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர். உங்­க­ளிடம் பல விட­யங்­களை அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்"  தமிழ் மக்கள் தமது பூர்­வீக வாழி­டங்­களில் தொடர்ந்து அர­சாங்க அடக்­கு­முறை, இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு மற்றும் சிங்­கள குடி­யேற்றம் ஆகி­ய­வற்றின் பாதிப்­புக்­க­ளினால் பெரும் துன்­பத்தை அனு­ப­வித்து வரு­கின்­றனர்  

 இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது ஐக்­கிய இலங்­கைக்குள் சமத்­துவம், நீதி, இறைமை மற்றும் சுய மரி­யா­தையை ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­று­வ­லி­யு­றுத்­தி­யி­ருந்­தீர்கள்.  இந்­தியா தனது அய­ல­வர்கள் சந்­தோ­ச­மா­கவும் திருப்­தி­யா­கவும் இருப்­பதை உறு­தி­செய்யும் நேரம் வந்­தி­ருக்­கின்­றது.  

மோடி ஆட்சிக்கு முதன் முதலில் வந்தபோது நவீன இந்தியாவின் சிற்பியாக அவர் திகழ்வார் என்று சுவாமி வியானந்தஜி குறிப்பிட்டமை  சரியாகி விட்டது இந்த தேர்தல் வெற்றி ஒரு பெரு வெற்றியாகும். 

 

 

http://www.virakesari.lk/article/56817

8 hours ago, கிருபன் said:

 இந்­தியா தனது அய­ல­வர்கள் சந்­தோ­ச­மா­கவும் திருப்­தி­யா­கவும் இருப்­பதை உறு­தி­செய்யும் நேரம் வந்­தி­ருக்­கின்­றது.  

இந்தியா இதுவரை அயலவர்களை துன்பத்தில் ஆழ்த்திவந்துள்ளது என்டு சொல்றார் விக்கி!

பொதுவாக உலகின் மிகப்பலம் பொருந்திய அமெரிக்க தேர்தலில் கூறப்படுவது 'Economy Stupid', ( பொருளாதாரம், லூசுப்பையல்)

சீனாவின் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் இராணுவம் குறிப்பாக இந்தியாவை அச்சம் அடைய வைத்துள்ளது. இந்தியாவை சுற்றி ஒருவலைப்பின்னலை (பொருளாதார மற்றும் இராணுவ உதவிகள்)   உருவாக்கி வருகின்றது. 

மோடி அரசின் அடுத்த ஐந்தாண்டுகள் இந்த உரசல் எங்கு செல்லக்கூடும் என கூறலாம். அதில் சில சந்தர்ப்பங்களும் எமக்கு தரப்படலாம், அதை அறுவடை செய்யக்கூடிய அரசியல் தலைமை தமிழர்களிடம் இருக்க வேண்டு(மே?)ம்!

தமிழீழ மக்களுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவிடம் பேசத் தயார் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் 

http://www.naathamnews.com/tgte-naredra-modi/ 
 
 
இலங்கைத்தீவு தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையில், தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஏற்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமரமாக மீண்டும் பதவியேற்க்கவுள்ள நநேரந்திர மோடிக்கு எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியடைந்து தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமக்கெனத் தனியரசொன்றினை அமைக்கும் முயற்சியினை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருவதனைத் தாங்கள் அறி;;ந்திருக்கக் கூடும். 

தமிழீழ மக்கள் இந்திய மக்களுடன் வரலாற்றுபூர்வமாக நட்புறவைக் கொண்டவர்கள். எமது மக்கள் இந்த நட்புறவு தொடர வேண்டும் என்பதில் பெருவிருப்பு கொண்டுள்ளார்கள் என்பதனையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத் தருணத்தில், இலங்கைத்தீவில் இரு அரசுகள் என்ற தீர்வுத்திட்டம் தமிழீழ மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் ஒரு சேரப் பயன்தரக்கூடியது என்பதனை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். தமிழீழ தேசம் என்றும் இந்தியாவின் நட்புசக்தியாகவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் இருக்கும் என்பதனையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தீவு தொடர்பாக இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். தாங்கள் அமைக்கவிருக்கும் ஆட்சியானது இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை
 

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு ! 

June 4, 2019

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இக்கடித்தில், இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும், இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத்தீவு தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அரசையே மையமாக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், சிறிலங்கா ஆடசியாளர்களுடன் உறவாடித் தமது நலன்களை  அடைந்து கொள்ளமுடியும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கின்றார்கள். இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிங்கள அரசுக்கு சார்பாக அமைந்து விடுவதற்கு இது வாய்பளிக்கின்றது.

தங்களது தலைமையில் இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் மூலம் இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் செயற்படுவதற்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும் என தங்களிடம் தோழமையிடன் வேண்டிக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

http://tgte.org/?p=9882&fbclid=IwAR0K9XA22tOXeURChrE92d20p90_x7QWtn2IPofMmY6gdmg1n-xW6mUWinc

TGTE-TamilNaadu-300x200.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.