Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத்தில் அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
May 29, 2019
varma.jpg?resize=598%2C336

வடமாகாணத்தில் உள்ள அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை முறையை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் தெரிவித்தது.

நரம்பு , எலும்பு சார்ந்த செயற்படாத உடற்பாகங்களை தூண்டல் மூலம் குணப்படுத்தும் ஒரு சித்த வைத்திய முறைமையே வர்ம சிகிச்சை எனப்படுகின்றது. வடமாகாணத்தில் உள்ள 13 சித்த வைத்திய நிலையங்களில் 8 வகையான சித்த வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. யோக , அக்கு பஞ்சர் உள்ளிட்ட இந்த எட்டு வகையான சிகிச்சை முறைகள் மூலம் அகம் மற்றும் புற ரீதியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

 

இதுவரையான கால பகுதியில் வர்ம சிகிச்சை யாழ்.மாவட்டத்தில் ஒரு வைத்திய சாலையில் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றன. அந்நிலையில் இந்த சிகிச்சை முறையை வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள சித்த வைத்திய சாலையில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அதற்கு சிறப்பு பயிற்சிகள் தேவைப்பட்டமையால் இந்தியாவில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து வடமாகாணத்தில் சுமார் 40 சித்த வைத்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வடமாகாணத்தில் உள்ள அணைத்து சித்த வைத்திய சாலைகளிலும் வர்ம சிகிச்சைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன

 #சித்த வைத்திய #வடமாகாணத்தில்  #வர்ம சிகிச்சை

http://globaltamilnews.net/2019/123008/

Edited by பிழம்பு

37 minutes ago, பிழம்பு said:

இந்தியாவில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து வடமாகாணத்தில் சுமார் 40 சித்த வைத்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு சைனாவிலும் பயிற்சி குடுத்தால் தான் வண்டி ஒரு பலன்சா ஓடும்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

அதற்கு சிறப்பு பயிற்சிகள் தேவைப்பட்டமையால் இந்தியாவில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து வடமாகாணத்தில் சுமார் 40 சித்த வைத்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வடமாகாணத்தில் உள்ள அணைத்து சித்த வைத்திய சாலைகளிலும் வர்ம சிகிச்சைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன

இப்படிப் பயிர்ச்சி பெற்றுவிட்டால் சித்த வைத்தியர்களாக முடியுமா????????????

சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்  வர்ம சிகிச்சை முறையில் பெரும் பணம் ஈட்டுவதற்கு ஒரு முதல் போட்டிருப்பதுபோல் தெரிகிறது.

சித்த வைத்தியர்கள்பற்றி நான் கூகிள் ஆண்டவரிடம் தேடியபோது அவர்தந்த சில செய்திகள்.......

 

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா?

சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.