Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதல் அச்சுறுத்தலால் களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டதா?

Featured Replies

களனி பல்கலைக்கழகம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று வெளியாகிய எச்சரிக்கை பிரசுரத்திற்கு பின்னர் பல்கலைகழக நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய தெரிவித்தார்.

மட்டக்களப்பு சட்டவிரோத 'சர்யா' பல்கலைகழகத்திற்கு எதிராக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து இன்று கூடி திட்டமிட எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்வாறு எச்சரிக்கை கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்த கடிதம் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்த எச்சரிக்கை குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://newsline.lk/news/6685-2019-05-30-06-06-05?fbclid=IwAR33CWMS6Ai_2wFioglSsJcZVQ3oicRgwtTTalWYST4ue6tZZJCYrfp8BSw

 

  • கருத்துக்கள உறவுகள்
 

closed.jpg?resize=700%2C470
ராகம மருத்துவ பீடம் தவிர்ந்த, களனி பல்கலைக்கழகத்தின் ஏனைய அனைத்துப் பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தாக்குதல்களின் பின்னர் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டதுடன், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி விஜயாநந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட அனைத்து மண்டபங்களையும் இரவு 9 மணிக்கு பின்னர் மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் வார இறுதி கற்பித்தல் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் பல்கலைக்கழகம் மேலும் அறிவித்துள்ளது. #ராகமமருத்துவபீடம் #களனிபல்கலைக்கழகம் #விஜயாநந்த ரூபசிங்க

http://globaltamilnews.net/2019/123114/

மாணவர்கள் தாம் இரவு 10, 12 மணிவரை ஊர் வலம் போய் வரும் சுதந்திரத்தை பறித்தமையை எதிர்த்ததாலும் பாதுகாப்புப்படையின் பிரசன்னம் சோதனைகளை எதிர்த்ததாலும் தான் பல்கலைக்கழகம் மூடப்பட்டதாக அங்கு படிக்கும் தமிழ் மாணவர் ஒருவர் சொன்னார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.