Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை பலியெடுத்த சிங்­கள பேரி­ன­வா­தம் முஸ்லிம் மக்­கள் மீது திரும்­பியுள்ளது -விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை பலியெடுத்த சிங்­கள பேரி­ன­வா­தம் முஸ்லிம் மக்­கள் மீது திரும்­பியுள்ளது -விக்னேஸ்வரன்

சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் பசிக்கு சகோ­தர முஸ்லிம் மக்கள் இரை­யா­கி­வரும் இந்த தரு­ணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆத­ர­வு­டனும் பாசத்­து­டனும் ஆரத்­த­ழு­வு­வ­தா­கவும் அவர்­களின் துய­ரத்தில் பங்­கு­கொள்­வ­தா­கவும்  வட மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

viki.jpg

தமிழ் மக்­களைப் பல தசாப்­தங்­க­ளாக பலி­கொண்­டு­வரும் சிங்­கள பேரி­ன­வா­தத்தின் பார்வை தற்­போது முஸ்லிம் மக்­களின் மீது திரும்­பி­யி­ருக்கும் இந்த வேளையில் தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மை தாமே ஆளும் அதி­காரக் கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­காகப் பாடு­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை நடை­பெற்­று­வரும் நிகழ்­வுகள் காட்­டு­வ­தா­கவும் அத்­த­கைய ஒரு கட்­ட­மைப்பு மட்­டுமே இரண்டு சமூ­கங்­க­ளி­னதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் என்றும்  அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

முஸ்லிம் மக்­களின் அர­சியல், பொரு­ளா­ தார பலத்தை இலக்­கு­வைத்து பௌத்த பேரி­ன­வாதம் மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கை­களின் பேரா­பத்தை உணர்ந்­து­கொண்டு வெவ்­வேறு கட்­சி­க­ளையும் சேர்ந்த முஸ்லிம் தலை­வர்கள் ஒன்­று­சேர்ந்து ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்தி இருப்­பது மகிழ்ச்­சியை அளிக்­கின்­றது.

குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் விசா­ரித்து தேவை­யெனில் தண்­டிக்­கப்­பட வேண்டும். ஆனால் குற்றம் செய்­யா­த­வர்­க­ளையும் பெரும்­பான்­மை­யினம் தண்­டிக்க விழை­வது எந்த விதத்­திலும் மன்­னிக்க முடி­யா­தது.

ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் பௌத்த பிக்­குகள் வற்­பு­றுத்தி குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள முஸ்லிம் அமைச்சர் மற்றும் ஆளு­நர்­களை நீக்கும் அளவுக்கு அர­சி­யலில் பௌத்த சங்­கத்தின் செல்­வாக்கு வளர்ந்­து­விட்­டது. பாதிக்­கப்­பட்ட எமது உற­வு­களின் உண்ணா விர­தங்கள், கோரிக்­கைகள் எவையும் இது­வ­ரையில் தொடர்ந்து வந்த அர­சாங்­கங்­க­ளினால் கணக்கில் எடுக்­கப்­ப­ட­வில்லை.

புத்த பிக்­கு­மாரின் செல்­வாக்கு சட்டம்,  ஒழுங்கு மற்றும் ஜன­நா­யகம் ஆகி­ய­வற்றைக் குழி­தோண்டி புதைக்கும் பேரா­பத்­தான ஒரு நிலை­மை­யினை தோற்­று­வித்­துள்­ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமது நிரபராதி தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டு பதிலாக மதவாதம் ஊக்குவிக்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அழிவுகளை பறைசாற்றி நிற்கின்றது.

 

http://www.virakesari.lk/article/57516

விக்கி சான்ஸ் கிடைச்சா அறிக்கை அறிக்கையா விட்டு தள்ளுறார்!
வேற வேலைவெட்டி இல்லையோ?
இரவிரவா மனுஷனுக்கு இதுதான் வேலையா இருக்கும்.

இவர்றை அறிக்கையை கேள்விப்பட்ட சம்பந்தனும் திடுக்கிட்டுப் போய் விக்கியைப் போல தானும் முஸ்லிம்களை அரவணைக்கிறதா அறிக்கை விட்டிருக்கார்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்.. தமிழர்களைச் சிங்களவர்கள் கடந்த 65  ஆண்டுகளாக இன அழிப்புச் செய்து வருவதை முஸ்லீம்கள் எதிர்க்கவோ.. இல்லை வெளிப்படையாக தமிழர்களை அரவணைக்கவோ இல்லை.

இந்த நிலையில்... தமிழர்களுக்கு இது தேவையா..??! 

இவர்களின் நினைப்பு.. முஸ்லிம்களின் பிரச்சனையை தமிழர்களின் பிரச்சனையோடு ஒரே கோட்டில் நிறுத்தி.. தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சேர்த்து உலகத்திடம் நியாயம் கேட்கலாம் என்று.

ஆனால்.. தமிழர்களின் பிரச்சனை என்பது அடிப்படையில் முற்றாக வேறானது. அது முஸ்லீம்.. மதவாத அடிப்படைவாதம் போன்ற ஒன்றல்ல. அதனால் எம் அரசியல்வாதிகள் சிலரின்..   இந்த முயற்சி தமிழர்களின் இத்தனை கால.. அரசியல்.. ஆயுதப் போராடத்தை இன்னும் இன்னும் மலினப்படுத்தவே வகை செய்யும். தவறான புரிதலை நோக்கி உலகை தள்ளலாம். 

Edited by nedukkalapoovan

2 hours ago, nedukkalapoovan said:

இந்த நிலையில்... தமிழர்களுக்கு இது தேவையா..??! 

விக்கியும், சம்பந்தனும், கஜேந்திரகுமாரும் போட்டி போட்டுகொண்டு முஸ்லிம்களின் அரவணைப்புக்கும் ஆலிங்கணத்துக்கும் அலைகிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.