Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பிரபாகரன் உருவானதை போன்று முஸ்லீம் பிரபாகரன் ஒருவரையும் உருவாக்க வேண்டாம் -ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பிரபாகரன் உருவானதை போன்று முஸ்லீம் பிரபாகரன் ஒருவரையும் உருவாக்க வேண்டாம் -ஜனாதிபதி

 

வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கினார். அதைப்போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

20190608000921_IMG_7026.JPG

முல்லைத்தீவில் நடைபெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நூற்றுக்கு 80 வீதமான முல்லைத்தீவு மக்கள் எனக்கு வாக்களித்தனர்.நாட்டை ஆண்ட ஆறு ஜனாதிபதிமாரில் நான் தான் கூடுதலாக முல்லைத்தீவு வந்துள்ளேன்.

முல்லைத்தீவில் வறுமை நிலைமை உள்ளது.அதனை இல்லாமலாக்க நாம் செயற்படவேண்டும். இன மத குல பேதங்களால் பிரிந்துள்ள நாம் நாட்டை மேம்படுத்த ஒன்றுபட வேண்டும்.

போரில் பலரின் காணி உறுதிகள் அழிந்துள்ளதாக அறிந்தேன். இதனால் வங்கிக் கடன் கூட எடுக்க முடியாத நிலைமை உள்ளது.இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் பேசி நிவாரணம் கொடுப்பேன்.

நாடு ஒன்றாக இருக்கவேண்டுமானால் மகா சங்கத்தினர் ஒன்றாக இருக்க வேண்டும்.இதர மதத் தலைவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள்.

அது கவலைக்குரியது.

தேர்தலை இலக்கு வைத்து செயற்படுகின்றனர்.அடிப்படைவாதம் கூடாது.அண்மைய தாக்குதலின் பின்னர் நாட்டு பொருளாதாரம் வீழ்ந்தது. உயிரிழப்புக்கள் நடந்தன. ஆனால் பிரிவினை அதிகரித்தது. தீவிரவாதிகள் இலக்கை அடையும் வகையில் செயற்பட்டனர். தீவிரவாதிகளின் நோக்கம் மக்களை கொல்வது மட்டுமல்ல அவர்கள் நினைத்தது தற்போது அடையப்பட்டுள்ளது.

அந்த நோக்கத்தை ஈடேற இடமளிக்க வேண்டாம்.

வடக்கில் ஒரு பிரபாகரன் உருவானது போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவேண்டாம்.அண்மைய தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தில் தான்.அதை அடைய செய்ய இடமளிக்க வேண்டாம். இனவாதத்தை விதைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று நான் கேட்கிறேன்.

முல்லைத்தீவில் வனவளம் நன்றாக உள்ளது. மரம் வெட்டும் மெஷின்கள் பதியவேண்டுமென நான் கோரிய பின்னர் இரு வாரத்திற்குள் 82 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். ஆனால் இன்னும் 25 ஆயிரம் வரை பதியாமல் உள்ளதாக தெரிகிறது.

மரக்காலைகளை புதிதாக பதிய கூடாது என்று நான் கூறினேன். இன்று பத்திரிகை பார்த்தேன்.அப்படியானால் சவப்பெட்டிகளை எவ்வாறு செய்வர் என்று யாரோ கேட்கின்றனர்.மரக்காலைகளிலா சவப்பெட்டி செய்கின்றனர்?அது சவச்சாலைகளில் செய்யப்படுகின்றது.இப்போது நான் கூறியமைக்கு எதிராக பேசுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே மற்றும் கயந்த கருணாதிலக ,வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ma சுமந்திரன் ,சிவமோகன், காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

 

http://www.virakesari.lk/article/57795

மைத்திரி தடுமாற தொடங்கிவிட்டார், ஆசை உள்ளது மீண்டும் சனாதிபதியாக தொடர, ஆனால் இருந்த வழிகளை எல்லாம் தனது முட்டாள் தனத்தால் தொலைத்துவிட்டார். தமிழர்கள், முஸ்லீம்கள் மக்கள் உட்பட. 
 

மைத்திரி :: "  முல்லைத்தீவில் வனவளம் நன்றாக உள்ளது. மரம் வெட்டும் மெஷின்கள் பதியவேண்டுமென நான் கோரிய பின்னர் இரு வாரத்திற்குள் 82 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். ஆனால் இன்னும் 25 ஆயிரம் வரை பதியாமல் உள்ளதாக தெரிகிறது."

வெட்டும் மரங்களுக்கு பதிலாக அதே அளவு மரங்கள் நடப்படாவிட்டால்......

 

மைத்திரி ::  "மரக்காலைகளை புதிதாக பதிய கூடாது என்று நான் கூறினேன். இன்று பத்திரிகை பார்த்தேன்.அப்படியானால் சவப்பெட்டிகளை எவ்வாறு செய்வர் என்று யாரோ கேட்கின்றனர்.மரக்காலைகளிலா சவப்பெட்டி செய்கின்றனர்?அது சவச்சாலைகளில் செய்யப்படுகின்றது.இப்போது நான் கூறியமைக்கு எதிராக பேசுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்." 

சவச்சாலைகளில் சவப்பெட்டி செய்கின்றனர் என்ற புதிய கண்டுபிடிப்பை செய்துள்ளார் 🙂  இவரின் சவப்பெட்டி மக்கள் சாபத்தால் செய்யப்படுகின்றது !

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பிரபாகரன் உருவானதை போன்று முஸ்லீம் பிரபாகரன் ஒருவரையும் உருவாக்க வேண்டாம் -ஜனாதிபதி

 

பிரபாகரன்  உருவாகவில்லை

உருவாக்கினீர்கள்

உருவாகுவதற்கான  காரணங்கள்

அவரது காலத்தை  விட  இன்று  மிக  மிக  அதிகமாவே  உள்ளன.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடம் போரட்டத்தை நடத்திய ஒரு தலைவனை ,முப்பது நாள்களில் அழிந்த ஒரு பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட  முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.