Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக அரசால் தான் விடுதலைப்புலிகள் வளர்கிறார்கள் : ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அரசால் தான் விடுதலைப்புலிகள் வளர்கிறார்கள் : ஜெயலலிதா

சென்னை : தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடப்பதால்தான், இலங்கையில் விமான தாக்குதல் நடத்தும் அளவிற்கு விடுதலைப்புலிகள் வளர்ந்துள்ளார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு தேவையான ராணுவ தளவாட பொருட்களை இங்கிருந்து கடத்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது தான் இதற்கு காரணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் தவிர மருந்துகள், உணவு மற்றும் பொருட்களும் இங்கிருந்து கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தினமலர்

  • Replies 63
  • Views 7.5k
  • Created
  • Last Reply

விட்டால் இந்தியர்கள்தான் புலிகள் அமைப்பிப்ல் இணைந்து போராடுகின்ரனர் என்று சொல்வா போல இருக்கே இந்த புலோடசர்

தண்ணியூத்தி வளர்கீனம் நிர்வாகத்தினரே தயவு செய்து இதனை நகைச்சுவை பகுதிக்கு நகர்த்துங்கள்

தண்ணியூத்தி, பாத்தி கட்டி பசளை போட்டு வளக்கீனம், புல்டோசருக்கு நடிக்கும் போது விட்ட நகைச்சுவை என்னும் மறக்கல போல இருக்கு ஈழவா

திமுக அரசால் தான் விடுதலைப்புலிகள் வளர்கிறார்கள் : ஜெயலலிதா

சென்னை : தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடப்பதால்தான், இலங்கையில் விமான தாக்குதல் நடத்தும் அளவிற்கு விடுதலைப்புலிகள் வளர்ந்துள்ளார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு தேவையான ராணுவ தளவாட பொருட்களை இங்கிருந்து கடத்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது தான் இதற்கு காரணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் தவிர மருந்துகள், உணவு மற்றும் பொருட்களும் இங்கிருந்து கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தினமலர்

ஜெயலலிதா பதவிக்கு வர எப்படியாவது வழி பார்க்கிறா.. அப்பதான் தோழியுடன் சேர்ந்து தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கலாம்.. வாயிலை வருகுது..

:angry: :angry:

ஜெயலலிதா பதவிக்கு வர எப்படியாவது வழி பார்க்கிறா.. அப்பதான் தோழியுடன் சேர்ந்து தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கலாம்.. வாயிலை வருகுது..

:angry: :angry:

அதுக்கு முதல் கலைஞர் குடும்பம் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிட்டு போய்டுவாங்க இவக்கு எங்க மிச்சம் மீதி இருக்கப் போகுது :P

சென்னை: தமிழக காவல்துறை செயல் இழுந்து, உருகுலைந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக காவல்துறை மானிக் கோரிக்கை குறித்து சட்டசபையில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் என திமுக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான அவசியம் இல்லை. ஏனென்றால் ஒரு உருக்குலைந்து போன, செயல்திறன் இழந்து விட்ட ஒர் அமைப்பை பற்றி விவாதித்து இனி ஆகப்போறதென்ன.

ஒரு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது என்பது ஒரு துறை சார்ந்த நடவடிக்கை அல்ல. இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவு 355ன் கீழ் ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசால் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதை கண்காணிக்க வேண்டும். மாநில அரசு அதை செய்ய தவறினால் சட்டம் ஒழுங்கு சீர் கேடான மாநிலம் என்று கருதி அங்கு அரசியல் சட்டம் 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படும்.

இன்றைக்கு தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக தான். இக்கட்சியின் பொறுப்பாளர்கள் திமுக குண்டர்களால் தாக்கப்பட்டும், வெட்டப்பட்டும், கொலை செய்யப்பட்டும், பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

ஆனால் திமுக உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் திடீர், திடீர் என முடிவுக்கு வந்துள்ளது. உதாரணத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அவர் நீதிமன்றத்திற்கு போகமாலே முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் வெடிமருந்து கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பயங்கார வெடிவிபத்து. பொது விநியோகத்திற்காக அளிக்கப்படும் அரிசி, லாரி, லாரியாக தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுகின்றன.

கள்ளச்சாராயம் குடிசைச் தொழிலாய் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டம் பகிரங்கமாக காணப்படுகிறது. வீரப்பனை ஒழித்துக்கட்டிய காட்டில் புதிய வீரப்பனை உருவாக்கி வருகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் நடத்த வன்முறை மூலம் சங்க காலத்து போர்களத்தை தத்ரூபமாக திமுகவினர் நடத்தி காட்டியுள்ளனர். இதற்கொல்லமாம் வெண்சாமரம் வீசிக் கொண்டு இருந்தது தமிழக காவல் துறை.

செயல் இழந்த ஒரு அமைச்சரவை மத்தியிலும் இருக்கின்றது. பயந்து நடுக்கி செயல்படும் நபர் தமிழகத்தின் ஆளுநராக இருக்கிறார். இதனால் எதைபற்றியும் கவலைப்படாமல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பாவர்கள் பொது மக்கள் தான்.

தமிழகத்திற்கு அருகில் உள்ள ஒரு அண்டை நாட்டில் ஒரு பயங்கரவாத இயக்கம் வான்வழி தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளதும் திமுக ஆட்சியில் தான். அவர்களுக்கு வேண்டிய அனைத்து வெடிபொருட்கள், ராணுவ தளவாடப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்து கருணாநிதியின் ஆட்சியில் தடையின்றி செல்கின்றன.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு நடமாடும் பொம்மையாக காவல் துறை தலைமை இயக்குனர் இருந்து கொண்டிருக்கிறார். காவல் துறையினருக்கு மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன். கருணாநிதியின் சொல்லைக் கேட்டு மக்கள் விரோத பாணியில் செயல்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க வேண்டுடியிருக்கும்.

இந்த ஆட்சி விரைவில் முடிவிற்கு வந்து விடும். அப்போது மக்கள் விரோதியாக காவல் துறை நின்று விடக்கூடாது என்பதற்காக இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

கலைஞர் இந்தமுறை நடத்தும் ஆட்சியானது முழு இந்தியாவையே பொறாமைபடவைத்துள்ளது.அப்படி அபிவிருத்தித் திட்டங்கள் அவை நகரும் வேகம் கூட.......,தயாநிதிமாறன் ,டி.ஆர்.பாலு போன்றவர்களும் மத்திய அமைச்சு பதவியை நன்றாக பிரியோசனப்படுத்துகிறார்கள்,

அம்மையாரே! ஆடிப்பிழைக்க வந்த உங்களுக்கே அரியணையை பிடிக்க இத்தனை ஆசை என்றால், கங்கை முதல் கடாரம் வரை வென்ற வேங்கையின் மைந்தர்களுக்கு தனிக்கொடியும் தமிழீழமும் இருக்க கூடாதா?

காவிரி தண்ணீர் கூட தர மறுக்கும் கன்னடத்தில் இருந்து ஆடிப்பிழைக்க வந்த அம்மையாரே இப்படியே விட்டால் தமிழன் விழித்துக் கொள்வான் என்ற பயத்தினால் வரும் அறிக்கைகள் அல்லவா இவை எல்லாம்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மையாரே! ஆடிப்பிழைக்க வந்த உங்களுக்கே அரியணையை பிடிக்க இத்தனை ஆசை என்றால், கங்கை முதல் கடாரம் வரை வென்ற வேங்கையின் மைந்தர்களுக்கு தனிக்கொடியும் தமிழீழமும் இருக்க கூடாதா?

அகில உலக தமிழர்களின் தலைவியாக அம்மா முயல்கிறார். ஐயோ பாவம் அவரை விட்டுவிடுங்கள் அவருக்கு இப்போ பைத்தியம் முத்திவிட்டதாம்

:

அகில உலக தமிழர்களின் தலைவியாக அம்மா முயல்கிறார். ஐயோ பாவம் அவரை விட்டுவிடுங்கள் அவருக்கு இப்போ பைத்தியம் முத்திவிட்டதாம்

தலைவி அல்ல.. தமிழ் நாடு இறக்குமதி செய்த தலைவலி..திருமதி சோபன்பாபு..

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா பதுக்கி வைச்சிருக்கும் பணத்தின் தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 10,000 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல், :unsure:

இதை வைச்சு என்ன செய்யபோறா? குடும்பமோ குட்டியோ ஒன்றுமில்லை, சாகும்பொழுது கொண்டு போகப்போறதுமில்லை, ஆட்சியை கலைத்து, அரசாங்கத்தை கைப்பற்றி மேலும் ஆயிரக்கணக்கான கோடிகளை சுடும் நோக்கிலையேயே காய்களை நகர்த்தி வருகிறார்.

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள். :lol:

செத்த பின்னர் கட்டைக்கு பதிலா காச வச்சு எரிக்கலாம் இந்த பணப் பிசாசுக்கு

அங்கு "மகிந்தவால் புலிகள் தமிழீழகொள்கையில் உறுதியாகின்றனர்", இங்கு "புலிகள் ஆளும் அரசால் வளருகின்றனர்"..

மிகவும் கேவலமான அரசியல்வாதிகள்...அவ்வளவே

விமானத்தாக்குதல் நடத்தும் அளவுக்கு புலிகள் வளர்ந்தமைக்கு தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி தற்போது நடப்பதுதான் காரணம் ஜெயலலிதாவின் கண்டுபிடிப்பு இது :lol:

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடப்பதாலேயே இலங்கையில் விமானத்தாக்குதல் நடத்தும் அளவுக்கு விடுதலைப்புலிகள் வளர்ந்துள்ளனர்.

இப்படிக்கூறியுள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.

சென்னையில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது அறிக்கையில் ஜெயலலிதா மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப்புலிகளுக்குத் தேவையான இராணுவத் தளபாடங்களை இங்கிருந்து கடத்த தி.மு.க.அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதான் புலிகள் விமானத்தாக்குதல் நடத்தும் அளவுக்கு வளர்ந்தமைக்குக் காரணம்.

அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள்,வெடிபொருள்கள் மட்டுமன்றி மருந்து கள், உணவு, மற்றும் பொருள்களும் இங்கிருந்து தான் கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தல்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்களில

  • கருத்துக்கள உறவுகள்

எரியிற வீட்டில் களவெடுக்கிற கேவலமான குணம் உடையவர் முன்னான் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயாலலிதா. தி.மு.க அரசினை வீழ்த்துவதற்காக மறுபடியும் மறுபடியும் ஜெயலலிதா புலி எதிர்ப்பு பொய்ச் செய்திகளை வெளியிடுகிறார். இவரின் செய்திகளை ஜெயா தொலைக்காட்சியினர் வெளியிடுகிறார்கள். மானம் கெட்ட சில கனடா ஈழத்தமிழர்கள் வீடுகளில் இந்த ஜெயா தொலைக்காட்சியினை காசு கொடுத்து பார்க்கிறார்கள்.

நண்பர்களே இந்த அரைலூசைப்பற்றி கதைத்து ஏன் எங்கட நேரத்தை வீணடிப்பான்.இவ இப்படிகதைக்கிறது ஒண்டும் புதிசில்லையே.

தயவு செய்து இதை நகைச்சுவைப்பகுதிக்கு மாற்றிவிடவும்

தமிழ் நாட்டு அரசியலில் இந்த அரைத்த மாவையே அரைத்து - தி.மு.க, அ.தி.மு.க இரண்டு பக்கத்தினரும் அரசியல் நடத்துகிறார்கள். முன்னாள் சினிமா நடிகை படத்தில் நடித்ததை விட நன்றக அரசியலில் நடிக்கிறா..

முன்னாள் கதைவசனகர்த்தா நன்றாக கதைகள் விடுகிறார். கேவலம் கெட்ட அரசியல்.. தூ..தூ..

:angry: :angry:

விருப்பமெண்டா அவவவையும் வளர்த்துவிடச் சொல்லுங்கோ :P

தமது சொந்த அரசியல் வாழ்க்கையில் கொள்கையில் ஏற்படும் அரசியல் வங்குறோத்துடையவர்கள் இப்படிப்பட்ட கருத்துக்களால்தான் தமது இருப்பைக்காட்ட முடியும். புலிகளில்லாத இலங்கை இந்திய அரசியலைக் காண்பது கடினம்தான். தங்களுக்குள் அடிபடுவதற்கும் புலிப்பாட்டுத்தான். தயாரிப்பாளர் எழுதிக்கொடுப்பதையே பேசிப்பழக்கப்பட்டவருக்கு யாராவது இச்சந்தர்ப்பத்தில் இதைச் சொல் என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயே ஆட்சியைக் கைப்பற்ற எங்கள் விடுதலைதானா உங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

எங்களால் வளர்க்கப்பட்டவர்கள்தான் தமிழீழப் போறாளிகள், இன்றைக்கு பலமாக இருக்கிறீர்கள், பழசை மறந்து விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களால் வளர்க்கப்பட்டவர்கள்தான் தமிழீழப் போறாளிகள், இன்றைக்கு பலமாக இருக்கிறீர்கள், பழசை மறந்து விட்டீர்கள்.

அதற்காக நீங்கள் சொல்லும் பொய்கள் எல்லாவற்றிற்க்கும் நாம் ஆளானவர்கள் அல்ல.

நம்மால் வளர்க்கப்பட்டவர்கள் என்றால் நாம் பெருமைப்பட வேண்டும்!!!

ஆனால் நாம் அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பிய கொலைகாரப்படை புரிந்த பாதகங்களுக்கு ......... நாம் வெட்கித்தலை குனிய வேண்டும்.

ஈழத்தமிழர்கள் நம்மை மறக்கவில்லை .... இந்த தருணத்தில் தான் அவர்களுக்கு நமது ஆதரவு தேவை ஆனால் நமது உளவுத்துறையும் கொள்கை வகுப்பாளர்களும் தமிழனுக்கு தனி நாடு கூடாது என்பதற்காக எந்த சாத்தானோடும் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளனரே

நாம் தான் பழசை மறந்து விட்டோம்.......... சகோதரர்களை இன்னலில் தவிக்க விடுகிறோம்

வேலவன் ஐயா..

மெய்யுரைத்து மனம் கவர்ந்தீர்கள்..

ஈழத்தமிழன்..தமிழ்நாட்டுத்தமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.