Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் மாவை தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் மாவை தெரிவு

Jun 29, 20190

 
 

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் மாவை தெரிவு

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு தெரிவின் போதே, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பொதுக்குழு தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.அதையடுத்து, பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பான விடயத்தை தலைவர் சபையில் முன்வைத்தார். அப்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோரது பெயர்கள் பொதுச் செயலாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டன.

எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் பெயரை வழிமொழிய ஆள் இல்லாத காரணத்தால் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோரது பெயர்கள் பதவிக்காக முன்மொழிந்து, வழிமொழிந்து சபையில் அறிவிக்கப்பட்டன.itak-jaffna-290619-seithy (1)

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம், தாம் சுயமாக விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து சிரேஸ்ட சட்டத்தரணியும், நீண்ட அரசியல் அனுபவமும் உள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான துரைராசசிங்கம் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக ஏகமனதாக சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

இதன் பின்னர் ஏனைய பதவிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் மரபாக உள்ள தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளில் வடக்கு, கிழக்கை சேர்ந்த இருவர் அமர்த்தப்படுவது கடந்த காலத்திலிருந்து வழமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறான நிலையில் இம்முறையும் அந்த வழமை பேணப்பட்டுள்ளது. தமிழர்களின் கடந்த கால போராட்ட வரலாற்றில் நீண்ட அரசியல் அனுபவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், ஏனைய தெரிவுகளும் மிகவும் அமைதியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.itak-jaffna-290619-seithy (3)

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு, நாளை காலை 9 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் ஆரம்பமாகி, தொடர்ந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மாதர் முன்னணி மாநாடு, வாலிப முன்னணி மாநாடு ஆகியன இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றன.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-தமிழரசு-கட்சியின-2/

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people standing

சம்பந்தனுக்கு,  சக்கர நாற்காலி ஒன்று  அவசரம் தேவைப் படுகின்றது.

கட்சி அதிகாரம் என்பது பரவலாக்கப்பட்டு புதியவர்களை சேர்த்து புதுமையான பாதையில் பயணிக்க மறுத்து மீண்டும் அரைத்த 'மாவை'களையே அரைப்பதால் இருப்பை கொஞ்ச காலம் தக்க வைக்க முடியும். 

உந்த சம்பந்தனுக்கு என்ன பதவி?
வழமை போல இந்தியாக்கு வால் பிடிக்கிற பதவியை வெளிப்படையா அறிவிச்சிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.