Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இடம்பெற்ற போதையிலிருந்து விடுதலையான தேசம் நிகழ்வு

Featured Replies

 

33.jpg?resize=800%2C600

ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் வழிகாட்டலில் ”போதையிலிருந்து விடுதலையான தேசம்  ”எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சித்  திட் டத்தின் இறுதி நாள் நிகழ்வு  இன்று [ 01.07.2019  வடக்கில் பல்வேறு பிரதேச செயலங்களில் இடம்பெற்றது.

அந்தவகையில்    அரசாங்க அதிபர் தலைமையில்  யாழ் பேருந்து நிலையத்திலிருந்து யாழ் மாவட்ட  செயலகம் வரை இடம்பெற்ற விழிப்புணர்வு பவனியில் அரச அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு  போதைக்கு எதிரான பல்வேறு கோஷங்களையும்  எழுப்பினார்கள் .  அத்துடன் பறை மேளங்கள்  அதிர  கூண்டில் அடைக்கப் பட்ட போதை அரக்கனுடனான ஊர்தியினை  யாழ் பிரதேச செயலாளர் எஸ் .சுதர்சன் தலைமையிலான குழுவினர் ஆற்றுகைக்கான காண்பியமாக தயாரித்திருந்தார். கோஷங்களும் ஊர்தியும் இணைந்த பவனி மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரினால் போதைக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் நாடகமும் இடம்பெற்றது.

இச் செயற்திட்டத்தில்  சமூக செயட்பாட்டு மையம்,  இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.  #யாழில் #மைத்திரிபாலா சிறிசேனா #விழிப்புணர்வு #போதையிலிருந்து

யாழ் .தர்மினி பத்மநாதன்

22.jpg?resize=800%2C600 20190701_090637.jpg?resize=653%2C36820190701_090639.jpg?resize=653%2C36820190701_090706.jpg?resize=653%2C36820190701_092240.jpg?resize=653%2C36820190701_092407.jpg?resize=800%2C45020190701_093002.jpg?resize=368%2C653

http://globaltamilnews.net/2019/125739/

போதையிலிருந்து விடுதலையான தேசம்  – நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் விழிப்புணர்வு

IMG_5284.jpg?resize=800%2C600

 

போதையிலிருந்து  விடுதலையான தேசம் எனும்  நிகழ்ச்சித்திட்டம் இவ்வாரம் பரவலாக நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் இந்நிகழ்ச்சிதிட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய திங்கட்கிழமை(1) கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கணேஸ்வரனின் பங்குபற்றலுடன் பிராந்திய சுகாதார சேவை  பணிப்பாளர்  பணிமனை உளநலப்பிரிவு  தொற்றா நோய்த்தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை  நற்பிட்டிமுனை கிட்டங்கி பிரதான வீதியில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றினை  காலை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது வீதியில் பயணம் செய்த பாதசாரிகள் முச்சக்கரவண்டி சாரதிகள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஏனைய வாகன சாரதிகள் இடைநிறுத்தப்பட்டு வீதி ஒழுங்கு முறைகள் சாரத்திய ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் குறித்து  தெளிவூட்டப்பட்டது.
 
மேற்குறித்த வாகன சாரதிகளுக்கு  போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல் தலைக்கவசம் அணிதலின் ஒழுங்கு விதிகள் தலைக்கவசத்தின் பட்டியணிதல் சாரதிய செயற்பாட்டில் தொலைபேசி உரையாடலில் ஏற்படும்  விபத்துக்கள் தொடர்பிலான அறிவுரைகள் யாவும் வழங்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இச்செயற்றிட்டமானது கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதானமாக போதைப்பொருள் பாவனை மற்றும் விபத்துக்களை தடுக்கும் முகமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேற்படி செயற்திட்டம்  வீதியோர விழிப்பூட்டல்களாக  மட்டுமல்லாது  பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்கள் அரசாங்க திணைக்களங்கள் என பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் எமது பிரதேசத்தில் போதைப்பொருள்களின் பாவனை கூடிவருவதனை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக உள்ளன.எமது எதிர்கால சந்ததியினரை அதிகளவு இப்போதைப்பொருள் பாதித்துக்கொண்டிருக்கின்றது.இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணம் உள்ளது.குறிப்பாக பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி கொண்டே வருகின்றனர்.

எனவே போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட சகல விதமான உதவிகளையும் உளநலம் சார்ந்த விடயங்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட தேவையான உளவள ஆலோசனைகளையும் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் உளநலப்பிரிவு வழங்குவதாகவும் பொத்துவில் திருக்கோவில் அக்கரைப்பற்று பாலமுனை நிந்தவூர் காரைதீவு சாய்ந்தமருது கல்முனை மருதமுனை மத்தியமுகாம் சம்மாந்துறை இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட தினங்களில் நடைபெறும் உளநலசிகிச்சைகளில் ஆலோசனைகளை பெற்றுக்டிகாள்ள முடியும் என கல்முனை பிராந்திய சேவை கள் பணிப்பாளர் பணிமனை உளநலப்பிரிவு தெரிவித்துள்ளது. #போதையிலிருந்து  #விடுதலை #தேசம்  #நற்பிட்டிமுனை #விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான்
 IMG_5285.jpg?resize=800%2C600IMG_5287.jpg?resize=800%2C600IMG_5296.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2019/125718/

நல்ல முயற்சி. உலகில் உள்ள பலநாடுகளிலும் இந்த பிரச்னைக்கு பலவேறு தீர்வுகளை தேடிய வண்ணம் உள்ளனர். 

1. விழிப்புணர்வு; இது நுகர்வோர் மத்தியிலும் விநியோகிப்பவர்கள் மத்தியிலும் தொடர வேண்டும் 
2. அமெரிக்க அரசு போன்று தனிய தடை மட்டுமே சரிவராது, அவர்களால் அதை வெல்ல முடியவில்லை. 
3. ஒல்லாந்து அரசு போன்ற அரசுகள்  மாதிரி முழுமையாக சட்ட ரீதியாகவும் ஆகும் வலு இல்லை இந்த நாட்டில்  
4. ஒரு குறிப்பிட்ட இடத்தை வேண்டுமென்றால் சட்ட ரீதியாக அனுமதித்து பார்க்கலாம் 
5. இலங்கை ஒரு தீவாக இருப்பதால் நாட்டுக்குள் பெரும்பாலான போதைப்பொருள் கடல் மார்க்கமாக கொண்டுவரப்படுகின்றது, இதற்கு கடற்படை, இராணுவம், அரசியல் வாதிகள் என்ற ஒரு வலை அமைப்பே உள்ளது.      

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.