Jump to content

பகுத்தறிவைப் பயன்படுத்தும் முறை


Recommended Posts

Posted

நண்பரே! ஏற்கனவே கொடுத்த எல்லாம் தங்களுக்கு விளங்கிவிட்டது போலும்!!!

இந்த கட்டுரைகள் எல்லாம் தங்களுக்கு விளங்காததற்கு காரணம் கன்னட நாட்டுக்காரர் ஈ.வே.ரா தான்

ஏனென்றால் பழந்தமிழ் எழுத்துக்கள், வடிவங்கள், சொற்கள் இவை அனைத்தையும் மாற்றுகிறேன் என்ற பெயரில் எல்லாவற்றையும் குழப்பி விட்டார்.

இன்று உண்மையில் தமிழ் வளர்ந்து உள்ளதா?

தேவாரம், திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலைக் கொடுத்து விளக்கம் கேட்டால் பல பேருக்கு தெரிவதில்லை.

எல்லாம் தமிழை பாடாய் படுத்தி கன்னட நாட்டார் ஈ.வே.ரா தான் காரணம்.

இதை மாற்ற முயற்சி செய்வது சைவ ஆதீனங்கள்,மன்றங்களும் தான் எல்லா இடத்திலும் பன்னிரு திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள் மூலம் பரப்பி வருகிறோம். எல்லாவற்றையும் சிரத்தையோடு படித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

  • Replies 68
  • Created
  • Last Reply
Posted

சமய வரம்பு

சிவஸ்ரீ ப.நடராஜ முதலியார் EX-AMC

சங்கரன்கோவில்

உலகில் மதங்கள் பல. அவற்றைத் தோற்றிய பெரியாரும் உளர். அவர்கள் செய்த பிரமாண நூல்களும் உள. ஆங்கிலத்தில் பிரமாண நூல்கள் Scriptures அல்லது revelations என்று சொல்லப்படும். தோற்றிய பெரியவர் பெயரும், பிரமாண நூல்களும் இல்லாத மதங்களே இல்லை.

நமது நாட்டிற்பெரும்பாலானவர் மதம் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது. அது பற்றிய பிரஸ்தாபம் நமது பழைய நூல்களில் இல்லை. சைவம், வைணவம், மாயாவாதம், த்வைதம் முதலிய பலசமயங்களுக்கு அது பொதுபெயராகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அம்மதத்தைத் தோற்றியவர் இவர் என ஒருவரை நாம் அறியச் சொல்வாரிலர். அம்மதத்துக்கெனத் தனிப்பட்ட ஒரு பிரமாண நூலும் இல்லை. ஆகவே அவ்விந்து மதம் சிந்தனைக்குரியது.

இனி மதங்களிற் கிறிஸ்தவத்துக்கு இயேசு கிறிஸ்து தேவகுமாரன். விவிலியம் (BIBLE) பிரமாண நூல். இசுலாமியமதத்திற்கு மகம்மது நபி, தீர்க்கதரிசி, குரான் பிரமாண நூல், வைணவம் முதலியவற்றுக்கும் அங்ஙனமே ஆனால் சைவ சமயம் யாராற்றோற்றப்பட்டது? அதன்பிரமாண நூல்களெவை? இவற்றிற்கு விடை நம்மில் பலருக்குத் தெரியாததுர்ப்பாக்கிய நிலையில் நாமிருக்கிறோம். ஆகவே விடை காண முயலுவோம்.

shiva7.jpg

மற்றச் சமயங்கள் தோன்றிய காலத்தைக் கணக்கிடுவது போல்சைவம் தோன்றிய காலத்தைக் கணக்கிட்டுக்கூற முடியாது. என்றுமனிதன் உளனானானோ அன்றே சைவசமயமும் உளதாயிற்று. அ·தாவது சிருட்டியாரம்பந்தொட்டு அச்சமயம் நிலவிவருகிறது. சைவம் என்ற சொல் சிவ சம்பந்தமுடையது என்று பொருள்படும். ஆகவே உலகைச் சிருட்டித்த சிவபெருமான் உயிர்கள் உய்யும் பொருட்டுச் சைவத்தையும் அருளினர் என்பது அறியக்கிடந்தது. அவ்வாறு சமயத்தை அருளிய பிரானார் பிரமாண சாத்திரத்தையும் அருளாமல் இருப்பாரா? அவைதாம் வடமொழியிலுள்ள இருக்குமுதலிய நான்கு வேதங்களும், அவற்றிற் பரந்து கிடக்கும் உண்மையான பொருள்களை விளக்கும் காமிகம் முதலிய இருபத்தெட்டு சிவாகமங்களுமாம். அநாதி தொட்டு வரும் அச்சமயத்தை ஆசரித்தவர், அதன் வாயிலாக முத்தி (மோக்ஷம்) யடைந்தவர் உளரா? அவர்களாலும் செய்யப்பட்ட நூல்கள் உளவா? என்ற வினாக்கள் எழுகின்றன. விடை ஆம் என்பதே. தேவாராதி பன்னிருதிருமுறைகளும் தமிழ் நாட்டிற்றோன்றிய அநுபூதி மான்களாற் செய்யப்பட்டவை. ஆனால் அவைதோத்திர உருவிலமைந்தன. சாத்திர உருவில் ஒரு நூலும் இல்லாத குறையைத் திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்த ஸ்ரீமெய்கண்டதேவநாயனார் வடமொழிச் சிவஞான போதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வார்த்திகமாகிய பொழிப்பையும் அருளிச் செய்து தீர்த்து வைத்தார். அவர் மாணாக்கர் ஸ்ரீ அருணந்திசிவம் சிவஞானசித்தியார், இருபாஇருப·து என்ற இரு நூல்களையும், பின்வந்த ஸ்ரீ உமாபதிசிவம் சித்தாந்தாஷ்டகம் எனும் எட்டு நூல்களையும் அருளினார்கள். இவற்றுடன் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், உண்மை விளக்கம் ஆகிய மூன்றையுஞ் சேர்த்துப் பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் ஆக்கினார்கள் பெரியோர்கள்.

ஸ்ரீ சங்கர முனிவர், ஸ்ரீ ராமானுஜமுனிவர், ஸ்ரீமாத்வமுனிவர் ஆகியோர்முறையே மாயாவாதம், வைணவம், த்வைதம், ஆகியவற்றுக்குச் செய்தபாஷ்யங்கள் போன்றதொரு பாஷ்யம் தமிழில் இல்லாதிருந்தது. அக்குறையைத் திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள் திராவிட மஹாபாஷ்யம் என வழங்கும் சிவஞான பாஷ்யத்தை யருளிச் செய்து தீர்த்து வைத்தார்கள். இப்பாஷ்யம் மேற் கூறிய வேத சிவகாமங்கள் பன்னிருதிருமுறைகள், பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றின் உண்மைப் பொருளைத் தெள்ளத் தெளிய விளக்குவதாம்.

இத்தனையும் சைவ சமயத்துக்குப் பிரமாண நூல்களாம். இவையே அச்சமயவரம்பு.

மற்ற நூற் கருத்துக்கள் மேற்கூறியவற்றோடு இயைந்த வழிப் பிரமாணமாம். ஆகவே சைவர்கள் மேற்கூறிய நூல்களிற் பயிற்சி பெறுவது அவர்களுடைய தலையாய கடன் என்பது சொல்லவும் வேண்டுமோ!

ஸ்ரீ மத் மாதவச் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் என்கின்ற உணர்வு பற்றிய தேடல்கள் எனக்குள் உள்ளது. அது பற்றிய கேள்விகளை எழுப்பி இருப்பேன். நான் காதலித்துத்தான் திருமணம் செய்தேன்.

நான் கேட்டதன் முக்கியத்துவம் என்னவென்றால், நீங்கள் வைதீக முறைப்படியா திருமணம் செய்தீர்கள்? அதில் தானே மேற்குறித்த மந்திரம் மூலமான அசிங்கம் நடக்கின்றதாகச் சொன்னீர்கள். அதையும் நீங்களும் செய்தீர்களா என்பது தான் கேள்வி. இதை என்னால் உறுதிப்படுத்த முடியாது என்பதால் இதை விவாதமாக எடுத்துக் கொள்ளவில்லை. பிருந்தன் கேட்க கேள்விக்கு ஒத்த தகவலுக்காக மட்டும் தான் விசாரித்தேன்.

அன்றைய தமிழ் புலவர்களின் எழுத்துக்களை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், எல்லோரும் ஒரே மாதிரியே எழுதியிருப்பார்கள். அதுவும் மதம் சார்ந்ததாகத்தான் 99 விழுக்காடு இருக்கும். மூடநம்பிக்கைகள் விரவிக் கிடக்கும்

புலவன் என்றால் மிகையான கற்பனைவளம் கொண்டதாகத் தான் இருக்கும். இப்போது எழுதுகின்றவர்கள் என்ன புதிதாகச் சொல்லி விட்டார்கள்?? ஆனால் முன்பு இருந்த விடயத்தைப் பார்க்க, இப்போதைய நிலை படுகேவலமானது.அன்றைய கவிஞர்கள் இடையிடையே வடமொழி கலந்திருந்தாலும், இன்றையது போல, அதிகளவு மொழித்திணிப்பு செய்தது கிடையாது. இன்றைக்கு என்ன எழுதுகின்றார்கள் என்றே புரியவில்லை.

இந்தியனில் இருந்த ஒரு பாட்டு, "பெளர கொம், சீயா மேட்சி, மாகா செய்ய, மசா செய்ய..அக்கடண்ண நாங்க உடை போட்டா, துக்கடான்னு நீங்க எடை போட்டா.. தடா..." இப்படிப் போகின்றது பாட்டு. இதை விட பல பாட்டுக்கள் படுமோசம். இதையா நீங்கள் வித்தியாசமான பாடல்கள் என்று வரவேற்கின்றீர்கள்??. இது பற்றிய எந்த நடவடிக்கையையும் நீங்கள் எடுத்ததாகத் தெரியவில்லையே

அக்காலக் கவிஞனுக்கு பாடல்களை எழுதியமைக்கு அரசன் பணவுதவி செய்தான். ஆகவே அரசனின் எண்ணங்களை, அல்லது அவனைப் புகழ்ந்து பாடிய பாடல்களைத் தான் கவிஞர்கள் விரும்புவார்கள். அதன் மூலம் அரசனுக்கும் நாட்டிற்கும் மொழிப் பற்றி நிரம்பியிருந்திருக்கும். அதைப் புரிந்து கொள்ள முடியாதவர் எப்படிப் பகுத்தறிவுவாதியாக முடியும்? மேலும் அங்கே மூடநம்பிக்கை என்று ஏதும் கிடையாது. அது மதச் சார்பான பாடல்கள் என்பதால் தான் அவருக்கு வெறுப்பே தவிர, வேறு ஒன்றுமில்லை.

வெறுமனே அதை மட்டும் வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழ் உலகத்தைத் திட்டுவதை எப்படிச் சரி என்று சொல்லமுடியும்?

கவிஞர்கள் செய்த தவறுக்காக, கவிஞர்களை அல்லவா நேரே திட்டியிருக்க வேண்டும், ( உங்களின் பார்வையில் மட்டும்) எம் இனிய தாய்மொழியைத் திட்ட இவர் யார்?

சங்கராச்சாரியார், 2000ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழை நீச மொழி என்று திட்டினார். அதனால் பலர் கொதித்தெழுந்தார்கள். ஆனால் சங்கராச்சாரியார், இன்றைக்குத் தமிழ் மொழிக்கு மதிப்புக் கொடுக்காமைக்குத் தான், ஏற்பட்ட வெறுப்பிலும், தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவதால் தான், நீச மொழி என்று திட்டினேன் என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா??

இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலையே பெரியார் கண்டித்தார். தந்தை பெரியார் "தமிழ் இந்தியா முழுமைக்கும் பொது மொழியாக இருப்பதற்கு தகுதி வாய்ந்தது" என்று புகழ்ந்ததும் உண்மை.

ராமசாமி ஒரு கருத்திலேயே, நிலையான சிந்தனையில்லாதவர் என்பதை அவரது பல நேர்மாறான கருத்துக்கள் பற்றி பல தடவை சுட்டிக் காட்டியிருந்தோம். எனவே, இது அவரிடம் இருந்து பெறப்பட்ட புதுமையான சிந்தனையல்ல.

இன்றைய கணனி வடிவமைப்புக்கு பெரியார் தான் காரணம் என்று புகழ்நதீர்கள், அப்படியென்றால் தட்டச்சில் கிரந்த மொழிச் சேர்க்கைக்கு பெரியார் தான் காரணமா? வடமொழியை எதிர்த்தவர் அதை ஏன் உள்வாங்க அனுமதித்தார். உண்மையில் அவற்றைத் தவிர்த்திருந்தால், தாய்மொழியில் அச் சொற்களைப் பாவிக்க நம்மவர்கள் கற்றுக் கொண்டிந்திருப்பார்கள். "B" ஐப், பி என்று எழுதக் கற்றுக் கொண்டதைப் போல, கிரந்தச் சொற்களுக்கும் அவ்வாறன சொல்பிரயோகங்கள் வந்திருக்கும்.

தந்தை பெரியார் தமிழுக்கு எதிரானவர் என்ற விசமப் பிரச்சாரம் அர்த்தம் இல்லாதது. அது உண்மை என்றால், அவருடைய தொண்டர்கள் தமிழ் பற்றுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள தமிழுணர்வாளர்கள் அனைவரும் பெரியார் மீது பற்றுள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

வேறு வழி ஒன்றுமே உங்களிடம் இல்லை. அது தான் பிரச்சனையே.

திராவிடக் கொள்கை தோற்றுப் போன பின்னர், உங்களுக்குத் தமிழ்மொழியைத் தான் கையில் எடுக்க வேண்டிய தேவையே ஏற்பட்டது. அதை விட வடமொழி எதிர்ப்புத் தான் தமிழ்மொழி பற்றிய உங்களின் விருப்பமே தவிர, உங்களின் செயற்பாடு, ஆங்கிலமொழி ஊடுருவலுக்கு எதிராக அமையவில்லையே. அன்று கூட, பல, ஊடகங்கள் ஆங்கிலமொழிக்கு தூண்டுதல் செய்து கொண்டிருந்தவே.அதனால் ஏற்படுகின்ற தமிழ் சிதைவு பற்றி ஏதும் கவலைப்பட்டதாகவே அறிய முடியவில்லையே.

எனவே நீங்கள் கொண்டுள்ள தமிழ்ப் பற்று என்பது, வடமொழிக்கெதிரான ஒரு ஆயுதம் மட்டுமே.

இன்றைக்கு பார்ப்பன ஏடுகள் தமிழுக்கு எதிராகத்தான் இயங்கி வருகின்றன. "ஆனந்த விகடன்" என்று வடமொழியில் ஆரம்பித்தார்கள். இன்னொரு ஏட்டை ஆரம்பித்து ஜுனியர் விகடன் என்று ஆங்கிலத்தை கலந்தார்கள். குமுதம் என்று இன்னொரு பார்ப்பன ஏடு வந்தது. இன்றைக்கு ரிப்போர்டர் என்று ஆங்கிலப் பெயரோடு இன்னொரு ஏட்டை அவர்களே வெளியிடுகிறார்கள். தந்தை பெரியாரின் தொண்டர்கள் வெளியிடுகின்ற ஏடுகளைப் பாருங்கள்

விடுதலை, உண்மை, கீற்று, பெரியார் முழக்கம் இப்படித்தான் இருக்குமே தவிர, வடமொழியிலோ, ஆங்கிலத்திலோ இருக்காது.

பெயரில் மட்டும் தான் தமிழ்மொழி வளர்க்கலாம் என்று சிந்தனை என்னும் விட்டுப் போகவில்லையா? சன்ரீவி, கே ரீவீ, போன்றவையும் திராவிட அமைப்பில் இருந்து வந்த, அது சார்பான ஊடகங்கள் தானே, அதைப் பற்றி என்ன சொல்ல வருகின்றீர்கள். அதில் பேசுகின்றவர்களின் தமிழ் உச்சரிப்பே, தமிழ் சிதைவடைய வைக்கின்ற செயற்பாட்டிற்கு நல்ல உதாரணம்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற சுபவீ, பழநெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்களோடு பேசினால் தந்தை பெரியார் பற்றியும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். கார்ல் மார்க்ஸை உலகின் பல இன மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உலகின் எத்தனையோ கட்சிகளுக்கு அவர்தான் மானசீகத் தலைவர். அவருடைய இனத்தை வைத்து அவரை யாரும் பார்த்ததில்லை. அவர் உலகிற்கு வழங்கிய சிந்தனைகள்தான் முக்கியம். அப்படித்தான் தந்தை பெரியாரும். அவருடைய சிந்தனைகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை. தந்தை பெரியார் தமிழில் பேசி, தமிழில் சிந்தித்து வாழ்ந்த ஒரு மனிதர் என்பதில் எனக்கு பெருமை.

அதை விடுத்து அவர் தமிழராக இருந்தால்தான் நாம் அவரை ஏற்றுக்கொள்வோம் என்பது ஒரு வகையான இனவாதம்.

இனவாதத்தைப் பற்றி நீங்கள் சொல்லாதீர்கள். அப்படி என்றால் பார்பானியை ஒதுக்கி தமிழ்நாட்டில் தமிழருக்குள் குழப்பம் செய்திருக்கமாட்டீர்கள். அவர்கள் திராவிடக் கும்பலை விடத் தமிழில் நிறையவே சாதித்திருக்கின்றார்கள்.

ஆரியர், திராவிடம் என்று பேசியது இனவாதம் ஆகாதா? கார்மார்க்ஸ் இப்படி இனவாதமாக நடந்து, தப்பைச் செய்யவில்லை. அவரோடு ராமசாமியை ஒப்பிடவே முடியாது. ஒருவன் தமிழில் பேசுகின்றான் என்பதற்காக அவன் தமிழனாக ஏற்கலாமே தவிர, தமிழனுக்குத் தலைவனாக எத் தகுதியும் கிடையாது. அப்படிப் பலரை நாங்கள் மன்னித்து விட்டதால் தான் இன்று தமிழ்நாடு சீரழிந்து போய்க்கிடக்கின்றது.

அவருடைய சிந்தனைகள் திராவிடக் கும்பல்களுக்கு மட்டுமே பொதுவானவையாக இருக்கட்டும். தமிழ் தேசியத்துக்குள் என்றைக்கும் அடங்காது.

Posted

இனவாதத்தைப் பற்றி நீங்கள் சொல்லாதீர்கள். அப்படி என்றால் பார்பானியை ஒதுக்கி தமிழ்நாட்டில் தமிழருக்குள் குழப்பம் செய்திருக்கமாட்டீர்கள். அவர்கள் திராவிடக் கும்பலை விடத் தமிழில் நிறையவே சாதித்திருக்கின்றார்கள்.

உண்மை தான் தூயவ நண்பரே! திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணந்தி சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார், காசி வாசி செந்தில்நாத ஐயர், உ.வே.சாமிநாத ஐயர் (தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் இவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்) என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாயன்மார்கள் கதைகளை நாமும் அறிவோம். பெரும்பாலான நாயன்மார்களும் துன்பத்தில் வாழ்ந்து இறந்து போனார்கள். "சிவனடி சேர்ந்தார்கள்" ஒரு வசனத்தின் மூலம் அவர்களுடைய துன்பியிலான வாழ்வு மறைக்கப்பட்டது. சில நாயன்மார்கள் இந்து வெறியர்களால் கொலையும் செய்யப்பட்டார்கள். நந்தனார் ஒரு உதாரணம்.

நாயன்மார்களின் கதையே, இந்து மதம் சொல்லித் தான் தெரியும். அதில் மறைக்கப்பட்ட உண்மைகளை இவர்கள் கண்டுபிடிக்கின்றார்களாம். யாரை ஏமாற்றுகின்றீர்கள். நந்தி மறைத்த கதையை வைத்துக் கொண்டு, கதை இயற்றாதீர்கள். வழிபடுக்கின்ற அனைவருக்குமே நந்தியும், கொடித்தம்பமும் ஒரு வகையில் மறைக்கத்தான் செய்யும். நந்தனாரை யாரும் கொலை செய்யவில்லை. ஆதாரம் இல்லாமல் உங்களின் இட்டத்துக்குக் கதை எழுதாதீர்கள். இப்போதும் கூட நந்தானர் பதித்த பாதங்களை யாரும் மிதிக்கக் கூடாது என்பதற்காக, அவ்விடத்தினை புனிதமாகப் போற்றப்படுகின்றது.

ஏற்கனவே திருஞானசம்பந்தரை பார்ப்பானிகள் கொலை செய்ததாக உங்களின் விருப்பத்துக்குக்கதை எழுதினீர்கள். ஆனால், திருமணத்துக்குச் சென்ற பெரும் எண்ணிக்கையான பிராமணர்களைக் கொல்ல வேண்டிய தேவை ஏன் வந்தது என்று கேட்டவுடன், அது பற்றி அடங்கிவிட்டீர்கள். இப்போது உங்களின் விருப்பத்துக்கு நந்தனார் கதையைக் கிளப்புகின்றீர்கள்.

நந்தனாரை சாதியடிப்படையில் நோக்கியிருந்தால், அவரை நாயன்மாராக வைத்துப் போற்ற வேண்டிய தேவை யாருக்குமே இல்லை. சேக்கிழாரும், சுந்தரமூர்த்தி நாயன்மாரும் பக்தியடிப்படையில் தான் அனைவரையும் நோக்கினார்கள். ஆனால் அவர்களுக்கு இல்லாத சாதி பற்றிய சிந்தனை உங்களுக்குத் தான் அதிகம். அதனால் தான் சாதி வெறி கொண்டு அலைகின்றீர்கள். எதையெடுத்தாலும் சாதி பார்த்து, கதையைத் திரிக்கலாம் என்று சிந்திக்கின்ற வேலையாகி விட்டது.

நீங்கள் இப்பொழுது இணைத்த நாவலரின் கேள்விபதில்களும், அவர் வர்ணாச்சிரம தர்மத்தை ஏற்றுக்கொண்டுள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. "பிறப்பால் தாழ்ந்தவர்கள்" இருக்கிறார்கள் என்பதை அவருடைய பல கேள்விகள் பிரகடனப்படுத்துகின்றன. அவைகளில் இதுவும் ஒன்று.

அதே போன்று பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதை மற்ற கேள்வி-பதில் சொல்கிறது. இவைகள் சாதியை வாழ வைக்கின்ற கேள்விகளே தவிர வேறில்லை.

பார்ப்பானர் உயர்ந்தவர் என்று, சூத்திரராகப் பிறந்த ஆறுமுகநாவலர் சொல்லி அடிமையாக இருந்தார். நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.

தந்தை பெரியார் சொன்னதை சரியாக விளங்கிக் கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் யாருக்கு சொல்லப்படுகின்றது என்பதில்தான் உண்மையான அர்த்தம் தங்கி உள்ளது.தந்தை பெரியார் சொன்னது பெண்களுக்கு அல்ல. அவர் ஆண்களை இலக்காக்கொண்டுதான் இதைச் சொன்னார். இது ஆண்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையே தவிர, பெண்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரை அல்ல.

ஏன்! அவ் எச்சரிக்கை விடும்போது பெண்கள் எல்லாம் கதைப் பொத்திக் கொண்டு இருந்தார்களாக்கும்.

இவர்கள் 2,3 கலியாணம் கட்டிக் கொண்டு திரிந்தபோது, பெண்களும், 2,3 ஆண்களை ஒரே நேரத்தில் கட்டச்சொல்லி யாருக்கும் ஏன் அறிவுரை கொடுக்கவில்லை. தங்களின் மனைவிமாரை, வேறு ஒருவனையும் கட்டிக் கொண்டு வாழச் சொல்லியிருக்காலாமே.

பல முறை இந்து மதம் குறித்து நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலாக, பெரியார் மீதான வசவுகளே பதிலாக வந்தன. ஏதோ கேட்டால், ஏதோ பதிலை சொல்லிவிட்டு போவார்கள். சம்பந்தமில்லாமல் தந்தை பெரியாரை தாக்குவார்கள்.

நீங்கள் மட்டும் ராமசாமி பற்றிக் கேட்கின்ற கேள்விகளுக்கு இந்து மதத்தை வையாமலா இருந்தீர்கள்? இந்து மதம் பற்றிய உங்களின் குதர்க்கங்களுக்கு நாங்களும் குதர்க்கங்காகத் தானே பதிலளிக்க முடியும்.

இதை விடக் குதர்க்கங்களைக் கையாள வேறு வழி தெரியவில்லை.

Posted

"சமயச் சார்பற்ற அரசு" க்கு சமர்ப்பணம்

உணரக் கடன் பட்டவர் உணர்ந்தெழுவார்களா?

-கிப்பிர பிரசாத்-

தமிழகத்தின் தலை சிறந்த நாளிதழ்களில் ஒன்று மதுரையினின்றும் வெளிவரும் "தமிழ்நாடு" அதன் 1963 ஆகஸ்டு 4-ந் தேதிய பத்திரிகை துணைத் தலையங்கம் ஒன்று எழுதியுள்ளது. சைவ மக்கள் அத்தலையங்கத்தை அறிவதுடன் அரசினர்க்கு உணர்த்தவும் கடமைப் பட்டவர்கள். ஆகலான் அத்தலையங்கப்பகுதியைக் கீழே தருகிறேன்:

"இந்திய அரசு சமயச் சார்பற்றது என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இக்கொள்கை பின்பற்றப்படவில்லை யென்றே தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக,

1. இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று அரசு சட்டம் இயற்றியுள்ளது. இது மிகவும் வரவேற்கப் பாலதென்பதில் சிறிதும் ஐயமில்லை. என்றாலும் சமயச் சார்பற்ற அரசு இந்துக்களுக்கு அளித்துள்ள இப்பெரு நன்மையைக் குறிப்பிட்ட வேறு சில சமயத்தவர்க்கு வழங்க ஏன் தயங்க வேண்டும்.

2. அடுத்து ஒவ்வொரு மாநில அரசும், இந்துக்கோயில்கள், மடங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்த 'இந்து சமய அறக்கட்டளை' என்னும் அமைச்சுத் துறையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் மற்றச் சமயங்களுக்கான அமைச்சுத்துறை எதுவும் கிடையாது.

3. மற்றும் இந்துக் கோயில்கள், மடங்கள் ஆகியவை தமது நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் அரசு த்னது செல்வாக்கையும், மேற்பார்வையையும் ஈடுபடுத்துகிறது. எனினும் பிறசமய ஆலயங்கள், அறக்கட்டளைகள் முதலியவை தமது நிதியை எவ்வாறு செலவழிக்கின்றன என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவும் அரசு முற்படவில்லை.

4. இதற்கும் மேலாக, இந்து ஆலயங்களில் மேற் கொள்ளப்பெறும் திருப்பணிகள், விழாக்கள், சமயச் சடங்குகள் போன்றவை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை அறுதியிடுவதில் கூட அரசு தலையிடுகிறது. அதன் விளைவாக இந்து சமயச்சாத்திரங்கள், ஆகமங்கள், பண்பாடுகள் ஆகியவற்றை ஐயந்திரிபற அறிந்த மடாதிபதிகள், சந்நிதானங்கள் சமயத் தலைவர்கள் முதலியோர் புறக்கணிக்கப் படுகின்றனர்.

5. அவ்வாறே இந்து ஆலயங்களுக்கு வரும் இறையன்பர்களில் யார் யார் எங்கிருந்து தொழவேண்டும் என்பதை ஆட்சியாளர் முனைகின்றனர். ஆயின் மற்ற மதங்களின் தொழுகையிடங்களில் அரசினர் சுவடு கூடத் தெரியவில்லை.

இவற்றை யெல்லாம் ஒருசேர நோக்குகையில் சமயச் சார்பற்றது என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அரசு இந்து சமயத்தவரைப் பலவேறு விதங்களில் கட்டுப் படுத்தவும் மற்ற மதங்களைக் கண்டால் பயபக்தியுடன் ஒதுங்கிக் கொள்ளவும் முற்படுதல் தெளிவாக விளங்குகிறது.

இத்தகைய ஒரு சார்பான போக்கு. இந்திய அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள சமவுரிமைக்கு முரண்பாடாக விளங்குவதால் அரசு எல்லாச் சமயங்களையும் இனியேனும் நடுநிலை நின்று அணுகுமென எதிர்ப்பார்க்கிறோம்"

என்பது அத்தலையங்கம். பாரத தேசத்தில் உள்ள ஆலயங்களில் பெரும்பாலான சைவாலயங்களும் சைவ ஸ்தாபனங்களுமே, ஆகலான் இச்சிரமங்களை ஒருசேர அனுபவித்து வருவது சைவ ஸ்தாபனங்கள் தாம் என்பது தெளிவினும் தெளிவு.

சைவ மக்களே! நம்மில் பெரும் பகுதியினர் வாயுணர்வின் மாக்களாய் வாழ்நாள் போக்குகிறார்கள். நமது ஜீவாதார உரிமைகளைக் கூடப் பறிகொடுத்து வாழ்வது ஒரு வாழ்வாமா? உங்கள் முந்தையர் தேடி வைத்த பிதிரார்ஜிதமான உங்களுக்குரிய சொத்துப் பறிபோகப் பொறுத்துக் கொள்வீர்களா? அதே போன்று பிதிரார்ஜிதமான பெறுதற்கரிய சைவ மடாலயங்களில் சைவ சமயத்திற்குப் புறம்பான முறையில் சமயச் சார்பற்றது எனக் கூறிக் கொள்ளும் நம் அரசு செயலாற்றி வருகிறது. மேலே உள்ள தலையங்கம் அதனை நன்கு விளக்கியுள்ளது. அதனை அறிந்தும் வாளாவிருப்பது திறமாகாது; அறமும் ஆகாது.

சைவ மடாதிபதிகளுக்கு ஒரு விண்ணப்பம். தொன்று தொட்டு சிஷ்ய பரம்பரை சைவ மடங்களுக்கு உண்டு. அச்சிஷ்ய கோடிகளை முற்றிலும் சைவ மடாதிபதிகள் புறக்கணிக்கின்றனர். ஆகலான் சைவசமய பரிபாலனம் செவ்வையாகவும் ஆண்மையோடும் நடத்தற்குச் சிறிதும் ஏதுவின்றிப் போகின்றது. குரு சிஷ்யத் தொடர்பு இன்மையான் மிடுக்கும் மேன்மையுமான பல காரியங்களைச் செய்யாதுவிடுத்து சிவத்துரோகமான காரியங்களில் சைவ மடாதிபதிகளே ஈடுபடும் நிர்ப்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை உணர்ந்து சிஷ்யர்களோடு தொடர்பினைப் பலப்படுத்த வேண்டும். இதுவே நமது தாழ்மையும் விநயமுமான விண்ணப்பம்.

சைவ மக்களே! இக்காலத்தில் அழுத பிள்ளைக்குத்தான் பால். தத்தம் சமய விஷயங்களில் இஸ்லாமிய கிறிஸ்தவ சமயிகள் எவ்வளவு விழிப்புடனிருந்து செயலாற்றுகிறார்கள்! ஏன் அவ்விழிப்பு உங்களுக்கில்லை? நியாயமான விஷயங்களை அடிக்கடி எடுத்துக் கூற ஏன் தயங்க வேண்டும்? அத்தயக்கத்தால் வருங்கால சைவ சந்ததியார் பெரு நஷ்டமடைவார்கள்; நம்மையும் பழிப்பார்கள். அப்பழிப்புக்கு ஆளாகாது வேதாகம நெறி நின்று செயலாற்றுவோமாக.

Posted

கடவுளும் சிவனும்

மரம் என்பது பொதுப் பெயர். அரசு, ஆல், அத்தி என்பன சிறப்புப் பெயர்கள். அவற்றோடு மரம் என்ற சொல்லைச் சேர்த்து அரசமரம், ஆலமரம், அத்திமரம் என்று சொன்னால் மரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் உண்டு. அரசு ஆல் அத்தி முதலியவற்றைப் பார்த்துத்தான் மரம் என்ற சொல்லின் பொருளை அறிய முடியும்.

கடவுள் என்பது பொதுப் பெயர். சிவன், நாரணன், நான்முகன் என்பன சிறப்புப் பெயர்கள். அவற்றோடு கடவுள் என்ற சொல்லைச் சேர்த்துச் சிவக்கடவுள், நாரணக்கடவுள், நான்முகக்கடவுள் என்று சொன்னால் கடவுள் என்ற சொல்லுக்கு அர்த்தமுண்டு. சிவன், நாரணன், நான்முகன் என்ற சொற்களை விட்டு விட்டால் கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள் கிடையாது. சிவன், நாரணன், நான்முகன் முதலியோரைப் பார்ப்பதன் மூலந்தன் கடவுள் என்ற சொல்லின் பொருளை அறியமுடியும்.

காட்சிப் பொருள்கள் பல. மரம், பறவை, விலங்கு முதலியன அடிக்கடி கண்ணிற்படும். சிங்கமும் காட்சிப் பொருள். அது அடிக்கடி கண்ணிற்படாது. அதைப் பாராமலே வாழ்பவரும் இருக்கலாம். அவருக்குச் சிங்கம் என்றசொல், அதற்கு உரையாகச் சொல்லப்படுகிற பிற சொற்கள் ஆகியவை பொருள் தெரியாச் சொற்களேயாம். அவர் ஒரு தடவை சிங்கம் என்ற பொருளைப் பார்த்து விட்டால் அத்தனை சொற்களுக்கும் பொருள் தெரிந்தவர் ஆவார்.

கடவுளும் ஒரு பொருளே. ஆயினும் அது காட்சிப்படுவதன்று. அது அறிவுக்கும், சிந்தனைக்கும் கற்பனைக்கும் எட்டாதது. கடவுள் என்ற சொல்லும், அதற்கு உரையாகச் சொல்லப்படுகிற ஆண்டவன், இறைவன், தெய்வம் முதலிய சொற்களும் காரணப் பெயர்களாயினும் மரம் என்ற இடுகுறிச் சொற்போல் தம்மளவில் பொருளைக்காட்டாதனவே அவற்றைப் பொருளில்லாத சொற்கள் என்று கூடச் சொல்லிவிடலாம்.

அன்னையே கடவுள், பிதாவே கடவுள், குருவே கடவுள், மணிநகையாரே கடவுள், கணவனே கடவுள், அறிவே கடவுள், அன்பே கடவுள், அழகே கடவுள், கடமையே கடவுள், சத்தியமே கடவுள், சோறே கடவுள், உயிரே கடவுள், நாடே கடவுள், மொழியே கடவுள், சுதந்திரமே கடவுள், 'அமெரிக்காவும், ரஷியாவும் இன்று தொழும் ஒரே கடவுள் விஞ்ஞான, தொழில் நுட்பந்தான்.' ......இந்தியாவும் அதே கடவுளைத் தொழுதால் செய்ய நினைக்கும் கடின சாதனையைச் செய்யமுடியும் (25-5-1963 தினமணி) எனப் பிரதமர் நேரு சொன்னபடி விஞ்ஞான, தொழில் நுட்பமே கடவுள் எனக் கடவுள் என்னும் சொல்லுக்குப் பொருள் கற்பிக்கும் மேதைகள் எத்தனைபேர்! அங்ஙனம் அவர் கற்பிப்பதற்குக் காரணம் கடவுள் என்ற சொல் தன்னளவில் பொருளற்றது. ஆதலின் அதற்குள் எந்தப் பொருளையும் புகுத்தலாம் என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்? கடவுள் என்ற சொல் இன்னாருக்குப் பொருளில்லாத தாகும் என்பதை அவர்களுக்கு (அந்த நாகரிகமான காட்டுமிராண்டிகளுக்கு) மதம் என்றால் இன்னதென்று தெரியாது. அவர்கள் விஷயத்தில் கடவுள் என்பது பொருளற்ற ஒன்றாகும். (1-1-1963) என்று கே.எம்.முன்ஷி சொன்னதால் தெரிக. குடம் என்ற சொல்லுந் தெரியும், பொருளுந் தெரியும். ஆகலின் குடம் என்ற சொல்லுக்கு அம்மி முறம், துணியென வாயில் வந்தபடி பொருள்கூற முடியாது. கூறுபவன் பித்தனே யாவான். ஆனால் கடவுள் என்ற சொல் தெரியாது. அப் பொருளைத் தெரிதற்கு உதவுகிற நெறிநின்று தெரிய முயலாமல் அச் சொல்லுக்கு வாயில் வந்தபடி பொருள்களைக் கற்பித்தால் அக்கற்பனை மாத்திரம் அறிவுடைமையாய் விடுமா? அக்கடவுளை வணங்குவது எப்படி ஆத்திகமாகும்? அவ்வாத்திகம் எந்த வலி கொண்டு நாத்திகத்தைக் குறைகூற முடியும்? அவ்வணக்கம் ஊர் சிரிக்கவே இடஞ் செய்யும்.

கடவுள் என்னும் பொருளைக் காணவே வேண்டும். மனிதராவாருக்குப் பிராணன்போலுள்ளது அம்முயற்சி. உலக கலைகளுள் எதுவும் அப்பொருளைக் காட்டவல்ல' தாகாது. அந்த வல்லமையும், உரிமையும், தகுதியும் சமயங்களுக்குத்தான் உள. சமயங்கள் பல. அவற்றுள் ஒவ்வொன்றும் தனக்கெனக் கடவுட் பெயரைக்கொண்டது. சைவசமயக் கடவுளுக்குச் சிவன் என்பது பெயர். வைணவ சமயக் கடவுளுக்கு விஷ்ணு என்பது பெயர். அப்படியே மற்றைச் சமயங்களின் கடவுளருக்கும் பெயர்கள் வேறு வேறா யுள்ளன. ஒவ்வொரு சமயத்துத் தெள்ளறிஞரும் அச்சமயத்துக் கடவுளைக் கண்டிருக்கிறார் என அச் சமயப் பிரமாண நூற்கள் சொல்லும். ஆதலின் சிவன், நாரணன் முதலியன அரசு, ஆல், அத்தி என்பன போலுஞ் சிறப்புப் பெயர்கள், அரசமரம், ஆலமரம் என்பன போல் சிவக்கடவுள், நாரணக்கடவுள் எனச் சொல்லிக் காண்க. கடவுள் ஆண்டவன் முதலியவற்றைத் தமக்குக் கடவுட் பெயரெனக் கொண்ட சமயங்களில்லை. இந்நாட்டில் நடைபெறும் பல மகா நாடுகளின் நிகழ்ச்சிப் பத்திரங்களில் கடவுள் வணக்கம், இறை வணக்கம் என அச்சிடப்பட்டிருக்கும். அவ்விடங்களில் கடவுள், இறை என்பன பொதுப் பெயர்களே. அதை அறிக, ஆகலின் கடவுள் என்ற பொதுப் பெயர் சிவன் முதலிய சிறப்புப் பெயர்களோடு இயைந்து வந்தால் அச்சிறப்புப் பெயர்களின் மூலம் தனக்கெனப் பொருளுடைய தெனக்கருத இடனுண்டு.

செய்யுள், விக்குள் என்பன போல் கடவுள் என்ற சொல்லும் உள்விகுதி பெற்ற தொழிற்பெயர். கடந்து நிற்றல் என்பது அதன் பொருள். பின்னர் அச்சொல் கடந்து நிற்பவன் என்ற பொருளுக்கு ஆயிற்று. கடந்து நிற்பவனே உள்ளிருப்பவனு மாவன். அவன் எதைக் கடந்து நிற்பவன்? பிரபஞ்சத்தைக் கடந்து நிற்பவன் - விசுவாதிகன். பிரபஞ்சத்துக்கு உள்ளிருப்பவன் - விசுவாந்தரியாமி.

இனிப் பிரபஞ்சத்தின் பரப்புத்தான் எவ்வளவு? அந்த அளவை மனிதருள் எத்துணைப் பேரறிஞனாலும் அறுதியிட்டுக் கூற முடியாது. சாத்தனுக்கு உலகந்தெரியவில்லை யென்பான் கொற்றன், கொற்றனுக்கு உலகந் தெரியவில்லை யென்பான் குப்பன். இப்படித் தமக்கு உலகந் தெரிந்தது போல் மற்றவருக்கு உலகந் தெரியவில்லை யெனப் பலர் பிறபலரை வாய் கூசாது குறை கூறுவர். அக்குறை கூறல் அநுதாபத்தால் நிகழ்வது முண்டு. உலகம் தமக்குத் தெரிந்ததாகக் கூறி மகிழ்ந்து கொள்பவ ரத்தனைபேரும் தம் உலக வாழ்க்கையைக் காத்துக்கொள்ள வழி தேடுகின்றவரே யாவார். ஏமாறியவரைக் கண்டு, 'ஐயோ! இவர் உலகந் தெரியாமற் போனாரே' எனக் கருதி இரங்குகிற வராகவும் அவரிருக்கலாம். அச்சமர்த்தர் தான் உலகந் தெரிந்தவரா? அல்லர் அல்லர். பின்னை உலகை உள்ளபடி தெரிந்தவன்றான் யாவன்? 'சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தின் - வகை தெரிவான் கட்டேயுலகு' என வள்ளுவர் கூறியபடி தெரிவான் எவனோ அவனே உலகைத் தெரிந்தவன். பூதம் 5, தன்மாத்திரை 5, ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, புருடன் 1, புத்தி மனம் அகங்காரம் மூலப்பகுதி 4 ஆகத் தத்துவங்கள் 25. அவற்றின் இயல்பையும் தொழிற்பாட்டையும் அறிந்தவனே உலகை அறிந்தவன் என்றார் உரையிற் பரிமேலழகர், அவ்வறிவு தத்துவுணர்வு எனப்படும். அங்ஙனம் பிரபஞ்சத்தைத் தத்துவங்களாக வகைப்படுத்தி அளக்க வல்லன சமயங்களே. தத்துவம் 25 என்றது சாங்கிய நூல். பூதங்களே பிரபஞ்சம் என்கின்றன சில சமயங்கள். பூதமும் தன்மாத்திரையுமே பிரபஞ்சம் என்கின்றன சில சமயங்கள். பூதமும் தன்மாத்திரையும் இந்திரியங்களுமே பிரபஞ்சம் என்கின்றன சில சமயங்கள். பூதமும் தன்மாத்திரையும் இந்திரியங்களும் பிறவற்றிலுள்ள சில பலவுமே பிரபஞ்சம் என்கின்றன சில சமயங்கள். தத்துவம் 25 உம் பிரபஞ்சம் என்கின்றது சாங்கியம். இப்படிச் சமயங்கள் வேறு படுகின்றன. பூதமே பிரபஞ்சம் எனக் கூறுஞ் சமயக் கடவுள் அப்பூதத்தைக் கடந்து நிற்பான். அப்பூதத்துக்கு உள்ளிருப்பான். அதற்கு மேலுள்ள பிரபஞ்சப் பரப்பை அவன் அறியான், உடன்படான். ஆகலின் அப்பரப்பைக் கடந்து நிற்றலோ, அதற்கு உள்ளிருத்தலோ அவனால் முடியாது. அறியாத பொருளைக் கடந்து நிற்றல், அதற்கு உள்ளிருத்தல் எந்தச் சமயக் கடவுளுக்கும் சாத்தியமல்ல. பூதத்துக்கு மேற்பட்ட தத்துவபேதங்களைப் பிரபஞ்சமெனக் கொண்ட சமயங்களின் கடவுளருக்கும் கடந்து நிற்றல் உள்ளிருத்தல் என்பன அவ்வத்தத்துவங்களின் எல்லையிற்றான் சாத்தியம்.

ஆனால் அப்பரப்பின் முழுமையைத் தெளியக் கூறுஞ் சமயமும் இருக்க வேண்டும். இல்லாமலிராது. அதுவும் ஒரு சமயமாய்த்தா னிருத்தல் கூடும், இரண்டு மூன்றெனப் பலவா யிருத்தற்கு அவசியமில்லை. அவ்வொரு சமயந்தான் சித்தாந்த சைவம் என்பது. அது சாங்கிய புருடனை மறுத்து ஒதுக்கி எஞ்சிய தத்துவம் 24. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் புருடன், மாயை என்ற தத்துவம் 7. சிவம் சத்தி சதாசிவம் ஈசுரம் சுத்த வித்தை என்ற தத்துவம் 5 ஆகத் தத்துவம் முப்பத்தாறுமே பிரபஞ்சம் என்றது. தாத்துவிகத்தைத் தத்துவமெனச் சில நூல்கள் சேர்த்துப் படிக்கும். அம்முப்பத்தாறில் எத்தாத்துவிகமுஞ் சேரவில்லை. முப்பத்தேழாந் தத்துவங் கிடையாது. ஆகவே தத்துவம் முப்பத்தாறென்பதே பிரபஞ்சத்தின் முழுமையாகும். சைவ சமயக் கடவுளான சிவபிரானே அத்தனை தத்துவங்களை (பிரபஞ்ச முழுவதை)யும் கடந்து நிற்பவன், விசுவாதிசன்; அவற்றுக்கு உள்ளிருப்பவன், விசுவாந்தரியாமி, ஆகலின் அவனே கடவுள் என்னுஞ் சொல்லுக்குப் பொருள். அவனைக் காண்பதன் மூலமே அப்பொருளைக் காணலாம், நாரணன் முதலிய பிற சமயக் கடவுளரெல்லாம் அச்சமயங்கள் வரையறுத்துள்ள பிரபஞ்சப் பரப்பளவிற்றான் வியாபகரும் அந்தரியாமிகளுமாவர். ஆகலின் அவரெல்லாம் பரி பூரணரல்லர்.

கடவுள் என்ற சொல்லுக்கு நிறை பொருளாயிருத்தற்குரியவன்சிவ

Posted

"சுயமரியாதையியக்க சூறாவளி" என்ற நூலில் தமிழ் சொற்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

நான் விளங்கவில்லை என்று சொன்னவற்றை வாசித்துப் பாருங்கள். அதில் எத்தனை தமிழ் சொற்கள் என்று சொல்லுங்கள்.

உங்களுடைய நோக்கம் என்ன? இந்தக் கருத்துக்கள் எல்லோருக்கு போய்ச் சேர வேண்டும் என்பதுதானே?

ஆகவே எனக்கு இவைகளை புரிய வையுங்கள்

என்னுடைய கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கிறது என்று சொன்னீர்கள். படித்தேன். சில சந்தேகங்கள் வந்தன. சந்தேகங்களை தெளிவு படுத்துவது உங்கள் கடமை.

Posted

சைவ சமய உண்மை

சைவ சீலர், கயப்பாக்கம்

சோமசுந்தரஞ் செட்டியார்

சென்னை.__________

"எப்போ தகத்து

நினைவார்க் கிடரில்லை

கைப்போ தகத்தின் கழல்"

சிவபெருமானே பரம்பொருள், அவனே என்றுமிருப்பவன். அவனே மங்கள வடிவினன். தன்னை யடைந்தவர்க் கெல்லாம் சர்வ மங்களங்களையும் கொடுக்க வல்லவன். அவனே ஆனந்த வடிவினன். அநாதியே மலத்தினின்றும் நீங்கியவனும் அவனே. அவனே பதி.

உயிர்கள் அவன் அடிமைகள், இவை முன் பல பிறப்புக்களில் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, இன்பதுன்பங்களை யனுபவித்துத் தீர்த்துக் கொள்வதற்கு ஏற்ற சரீரங்களையும், அந்தக் கரணங்களையும், இருக்கப் புவனங்களையும், அனுபவிப்பதற்குரிய பொருள்களையும் அந்தப் பதியே படைத்து உதவுகின்றான். உயிர்கள் தாமே இறைவனை அறியும் ஆற்றலில்லாதவை. "அறிவித்தால் அறிந்து நிற்பது உயிர்" "எல்லாவற்றையும் தாமே அறிபவன் சிவன்".

இனி, உலகம் என்பது பாசம் என்னும் பொருளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மலம் அல்லது பாசம் என்பதுதான் அதன் சிறப்புப் பெயர். இது அறிவில்லாத சடப்பொருள். தானும் அறியாது அறிவித்தாலும் அறியாது. இவை மூன்றுமே என்றுமுள்ள அநாதி நித்தியப்பொருள்கள் என்று சாத்திரங்கள் பேசும். இவற்றையே பரிபாஷையில் பதி, பசு, பாசம் என வழங்குவர் அறிஞர். இவைகள் ஒரு காலத்தில் தோன்றியவையும் அல்ல. எனவே, ஒரு காலத்தில் அழிபவையும் அல்ல. இக்கருத்தையே Bernard Shaw, G.U.Pope முதலிய மேனாட்டு அறிஞர்களும் 'Three Things are immortal' என்றும் 'The Souls are immortal' என்றும் சொல்லியுள்ளார்கள்.

இதனைக் கந்தபுராண ஆசிரியரும் பின்வருமாறு கூறியுள்ளார்.

"சான்றவ ராய்ந்திடத் தக்கவாம் பொருள்

மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன

ஆன்றதோர் தொல்பதி ஆரு யிர்த் தொகை

வான்திகழ் தளைஎன வகுப்பர் அன்னவே"

மறையெலாம் மொழிய நின்றன என்பதற்கு ஆதாரம் வேதத்தில் "அம்பிகாபதயே, உமாபதயே, பசுபதயே நமோ நம:" என்று சொல்லப்படுகிறது. எப்படியேனில் "பசுபதயே" என்ற சொற்றொடரில் பதி உண்டு பசு உண்டு; பாசத்தால் கட்டுப் பட்டவைகளுக்குத்தான் பசு என்று பெயருண்டு. ஆதலால் பாசமும் உண்டு என்பதும் பெறப்படுகிறது. இக்கருத்தினையின்னுந் தெளிவாகத் தணிகைப் புராண ஆசிரியரும் "நந்தியுப தேசப் படலத்தில்" 91-வது செய்யுளில் கூறியுள்ளதையும் நோக்கி மகிழ்வோமாக.

"அறிந்து யிர்க்கறிவிப்பது பதியறிவித்தால்

அறிந்து நிற்பது பசுவது சிவத்தடை யாமைச்

செறிந்து வையகத் துய்ப்பதா ணவத்திறல் கருவித்

துறந்த மாயைமற்றூணது ப·றிறக் கருமம்"

இன்பவடி வினனாகிய இறைவனை உயிர்கள் அடைய வேண்டுமானால் பாசத்தினின்றும் விடுபட்டுச் செல்ல வேண்டும். பாசத்தினின்றும் நீஙகப் படிமுறையில் பல வழிகள் உண்டு. சைவத்தில் அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. இவைகளின் விரிவும் விளக்கமும் சிவபெருமானால் ஆன்மாக்கள் மாட்டுவைத்த பெருங்கருணையால் அருளிச் செய்யப்பட்ட வட மொழியில் உள்ள சைவ சமயப் பிரமாண நூல்களாகிய வேத சிவாகமங்களில் பரக்கக் காணலாம். இவ் வுண்மைகளை அனுபவத்தில் கண்ட அனுபூதிமான்கள் சமய ஆசாரியராதிய பன்னிரு திருமுறை ஆசிரியர்களும் சந்தான ஆசாரியராதிய பதினான்கு சித்தாந்த சாத்திர ஆசிரியர்களும் இவைகளின் உண்மைகளைத் தெள்ளத் தெளிய அறிவித்தத் திராவிட மாபாஷ்ய கர்த்தராகிய ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகளும் ஆவர்.

எவ்வித பேர் அறிஞராயினும், ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகளின் அருள் நூல்களைக் கற்று, அதன் வழி சித்தாந்த சாத்திரங்களின் உண்மைப் பொருளை ஐயம் திரிபற உணர்ந்து, இக்கண் கொண்டு பன்னிரு திருமுறைகளை ஓதினாலன்றி, திருமுறைகளின் உண்மைப் பொருளை உணர முடியாது. இது சத்தியம், சத்தியம் ஆகவே நாம் இம்முறையே கற்று திருமுறைகளின் உண்மைப் பொருளைக் கண்டு ஓதி உய்வோமாக.

Posted

நீங்கள் விளக்கம் சொல்வதற்கு ஏன் தயங்குகின்றீர்கள் என்று எனக்கு தெரியும்.

நீங்கள் தருகின்ற கருத்துக்கள் எப்படிப்பட்டவை என்று உங்களுக்கு தெரிந்திருக்கிறது.

"சுயமரியாதையியக்க சூறாவளி" என்னும் நூலில் உள்ள அனைத்து விடயங்களையும் நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்களா?

Posted

கலவடம்

ஒற்றடம், கட்டடம் என்பன போன்றது கலவடம் என்ற சொல். அதிலுள்ள அடம் என்பது தொழிற் பெயர் விகுதி, கலவடம் என்ற நல்ல தமிழ் கலப்படம் என வழங்கப்படுகிறது.

கடவுள், உயிர், உலகு, அம் மூன்றற்குமுள்ள தொடர்பு, பிரபஞ்ச சிருட்டியின் நோக்கம், உயிருக்கு அறியாமை வந்த விதம், அது நீங்குதற்கு உதவும் சாதனம், நீங்கிய பின் உயிர் அடையும் பேறு, அதன் இலக்கணம், அவற்றையும் அவற்றோ டியைந்த பிறவற்றையும் சாங்கோ பாங்கமாய் விளக்குகிற பிரமாண நூல் ஆகியவற்றின் தொகுதியே சமயம். அத்தொகுதி வேறு வேறாயிருக்கும். அவ்வேறுபாடு தோற்ற மன்று. உண்மையே. அதனால் சமயங்களும் வெவ்வேறாயின. கணிதம், இசை, மருத்துவம் முதலிய கலைத்துறைகள் போன்றது சமயக்கலைத்துறை, கணிதம் என்றால் ஒன்று, இரண்டு, மூன்று முதலிய எண்கள் தானே, இசை என்றால் ச, ரி, க, ம முதலிய சுரங்கள் தானே மருத்துவம் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி முதலிய சரக்குகள் தானே எனச் சுலபமாகப் பேசுகிறான் ஒருவன். அவனுக்கும் சமயம் என்றால் கடவுள், வழிபாடு, சுவர்க்கம் முதலியன தானே எனச் சுலபமாய்ப் பேசுகிறவனுக்கும் புத்தி ஒன்றே. எந்தக் கலையானாலும் அதில் தீர்க்கஞான முள்ளாரே அதன் அருமை பெருமையை உணர்வர்.

ஒவ்வொரு தொகுதியும் ஒவ்வொரு சமயத்தின் அடிப்படை. ஒரு தொகுதியை ஒரு சமயத்தின் வரம்பெனச் செய்தவர் பொறுப்பற்ற நாடோடிக ளல்லர். அச்சமயத் தாபகரே அவ்வரம்பைத் திட்டப்படுத்தினார். உணர்வில் நன்கு பதிய வைத்துக் கொள்ளற்பாலது அவ்வுண்மை.

பாடசாலைகளில் முதலாவது இரண்டாவது எனப் பல வகுப்புக்கள் உள்ளன. மாணவரின் அறிவிலுள்ள ஏற்றத் தாழ்வே அதற்குக் காரணம். பல சமயங்கள் என்பதும் அவ்வகுப்புக்கள் போன்றதே. அச்சமயங்கள் கீழ்க்கீழ், கீழ், மேல், மேல்மேல் எனப்பலதிறப் பட்டிருக்கும். மனிதரறிவிலுள்ள பக்குவ பேதமே அதற்குக் காரணம். வகுப்புக்களைக் கலவடஞ் செய்தால் மாணவர் உருப்படார். சமயங்களைக் கலவடஞ் செய்தால் மனிதர் உருப்படார்.

கலவடம் புகாத சமயச்சார்புடையராய் அதையனுட்டித்துப் பயனடைய வேண்டும் என்ற உணர்வில்லாத உலகவருக்குக் கலவட சமயம் உகப்பாகலாம். அவர் உயிரோடு கூடிய உடலுக்கே உலகிற் சுகந்தேடுவதிற் கண்ணா யிருப்பர். தமக்கு உடலின் வேறாய் உயிரென ஒன்றுண்டு, அதற்கு வேண்டுஞ் சுகம் அவ்வுடற் சுகத்தின் வேறானது என்ற எண்ணம் அற்றவர் அவர். சமயங்கள் தம்தம் எல்லையில் உயிர்க்கே சுகமளிப்பன. ஆனால் அவருக்கோ உடலே உயிர்.

இப்போது சில பல சமயங்கள் கலவடஞ் செய்யப்பட்டு அக்கலவடம் பொதுச் சமயம் அல்லது சமரச சமயம் எனப்படுகிறது. அதனை விளம்பரஞ் செய்யும் பிரசாரகரும் பெருகினர். அவர் செய்யும் பிரசாரங்களால் அவர்க்குப் பிழைப்புத் தாராளமாக வுண்டு. ஆனால் கலவடத்துட்படாத சமயத்தைச் சார்ந்தார் கலவடத்துட் படாத அச்சமயத்தைக் கற்று அனுட்டித்து நலனடைய விரும்பினால் அதற்கு வாய்ப்புத்தான் அகப்படாது. அப்பிரசாரகரின் ஆரவாரமே அதற்குக் காரணம்.

கலவட வுணவுப் பண்டங்களைச் சுத்தமெனக் கூறி விற்கின்றனர் சில வியாபாரிகள். அவருள் அகப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கிறது. ஏன்? அவற்றை வாங்கியுண்பவரின் உடலுக்கு அவை செய்வது பெருங்கேடு. ஆகலின் அந்த ஏமாற்று வியாபாரிகள் தண்டிக்கப்படுவது சரி தான். அது போல் கலவட சமயப் பிரசாரம் கேட்பவரின் அறிவைத் திகைக்க வைத்து உயிரையே கெடுத்து விடும். அப்பிரசாரகர் மாத்திரம் சும்மா விடப்படுகின்றனர்? அ·தேன்?

Posted

சைவ சமயம்

சித்தாந்த சீலர்

[அ. ஞானசம்பந்தன்]

ஈரோடு

சைவ சமய மேசமயஞ் சமயா

தீதப் பழம்பொருளைக்

கைவந் திடவே மன்றுள்

வெளிக் காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்

பொய்வந் துழலுஞ் சமய

நெறி புகுத வேண்டா முத்தி தருந்

தெய்வ சபையைக்காண்பதற்

குச் சேரவாருஞ் சகத்தீரே

சிவசம்பந்த முடையது சைவம் எனப்படும். "தெய்வஞ்சிவமே சிவனருள் சமயஞ்-சைவஞ் சிவத்துடன் சம்பந்தமென்றான்" (திருச்செந்தூரகவல்) அந்தச் சிவபரம்பொருளால் உயிர்கள் உய்தி பெறும் பொருட்டு அவை தாம் கடைப்பிடித்துஒழுக வேண்டிய உண்மை நெறிகளை யெல்லாம் அவை கண்மாட்டுவைத்த பெருங் கருணையினாலே வேத சிவாகமங்களிலே வகுத்து வைக்கப்பட்டன வற்றைத் தன்னகத்தமைத்துக் கொண்டு ஒப்புயர்வற்றதனிப்பெருஞ் சிறப்புடன் திகல்வது சைவ சமயமாகும். சைவ சமயத்தின் ஒப்புயர்வற்ற ஒரு தனிப் பெருந் தலைவரும் அச்சிவபரம் பொருளேயாவர்.

திருமந்திரம்

சைவஞ் சிவனுடன் சம்பந்தமாவது

சைவந் தனையறிந்தேசிவஞ் சாருதல்

சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீவுதற்

சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.

சைவ சமயத் தனிநாயகன் நந்தி

உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு

தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய

வையத்து ளார்க்கு வகுத்துவைத் தானே.

சிவமாவது எங்கும் நிறைந்ததாய், என்றும் உள்ளதாய் எல்லாம் அறிவதாய், எல்லாம் வல்லதாய், அகண்டமாய், அருள் வெளியாய், ஆதியந்தமற்றதாய், ஆனந்தமயமாய், உயர் வொப்பில்லாததாய். உரையுணர் விறந்ததாய், மலரகிதமாய், கற்பனை கடந்ததாய், குணங்குறியற்றதாய், நாமரூபமில்லாததாய், பேரொளியாய், போக்குவரவு சமீபம்தூரம், சுகம்துக்கம், தூலம் சூக்குமம், சுத்தம் அசுத்தம், குணம் குற்றம், பேதம் அபேதம், குறைவு, நிறைவு, உயர்வு தாழ்வு, முதலிய விகற்பங்களற்றதாய், எவ்வகைச் சமயத்தினர்க்கும் அவ்வவர் பொருளாய், தன்னை மெய்யன்போடு வழிபடும் அன்பர்களது பேரன்பே தனக்குரிய வடிவமாகக் கொண்டு விளங்கும் ஒப்பற்ற ஒரு தனிப்பரம் பொருளாகும். சிவம் என்னுஞ் சொல்லுக்கு மங்கலம் என்பது பொருளாகும். மேலே கூறப்பட்ட மங்கல குணங்கள் யாவும் கடவுளிடத்தில் பொருந்தியிருப்பதினால் அக்கடவுள் சிவனெனும் நாமந் தனக்கேயுரிய செம்மேனி எம்மானாக விளங்கி நிற்கின்றார்.

Posted

nag.jpg

அகர உயிர்போல் அறிவாகி எங்கும்

நிகரில் இறை நிற்கும் நிறைந்து. [திருவருட்பயன்]

மேலே கூறப்பட்ட மங்கல குணங்கள் யாவும் வேறு எவர்மாட்டும் அமையாது சிவபெருமானார் ஒருவர் மாட்டே யமைந்துள்ளனவாகலான் அவர் ஒருவரே தனக்கு ஒப்பாருமிக்காருமில்லாத ஒப்பற்ற ஒரு தனிப்பெருங் கடவுளராகப் போற்றப் படுபவராவர்.

தனக்குவமை யில்லாதான்றான் சேர்ந்தார்க்கல்லான்

மனக்கவலை மாற்ற லரிது. [திருக்குறள்]

பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி

னருமைக்கும் ஒப்பின்மை யான். [திருவருட்பயன்]

"ஒப்புனக்கில்லா வொருவனே"

"ஒருத்தனே போற்றி வொப்பிலப்பனே போற்றி" [திருவாசகம்]

"நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்"

"மற்றாருந் தன்னொப்பா ரில்லாதான் காண்"

"தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்" [திருத்தாண்டகம்]

சிவனொடொக் குந்தெய்வந் தேடினு மில்லை

அவனொடொப் பாரிங்கி யாவரு மில்லை

புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்

தவனச் சடைமுடித் தாமரை யானே. [திருமந்திரம்]

இத்தகைய தனிமுதற் பொருளை வழிபடுவோர் சைவரெனவும், அப்பரம் பொருளை வழிபடும் மார்க்கம் சைவநெறியெனவும் சைவசமயமெனவும் சொல்லப்படும். சைவசமயமானது மற்றெல்லாச் சமயங்களையுந் தனக்குச் சோபானமாகக் கொண்டு அவற்றிற்கெல்லாம் நாயகமுந் தாயகமுமாய் நின்று இராஜாங்கத்திலமர்ந்த சமயமாகும்.

இயல்பென்றுந் திரியாம லியம மாதி

யெண்குணமுங் காட்டி யன்பா லின்பமாகிப்

பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப்

பண்புறவுஞ் செளபான பக்ஷங் காட்டி

மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி

மற்றங்க நூல்வணங்க மெளன மோலி

யயர்வறச்சென் னியில்வைத்து ராசாங் கத்தி

லமர்ந்துவை திகசைவ மழகி தந்தோ.

அந்தோவீ ததிசயமிச் சமயம் போலின்

றறிஞரெல்லா நடுவறிய வணிமா வாதி

வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்

வைத்திருந்த மாதவர்க்கு மற்று மற்று

மிந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கு

மிதுவன்றித் தாயகம்வே றில்லை யில்லை

சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத்

தக்கநெறி யிந்நெறியே தான்சன் மார்க்கம். [தாயுமானார் பாடல்]

இவ்வகைப்பட்ட பெரும் பெருமையுடைய சைவ சமயமானது பரந்த உலகத்தை நோக்க மிகவும் சுருங்கிய அளவில் நம் பரத கண்ட மாத்திரையில் வியாபகமுடையதாக உள்ளது. அதுவும் அதின் சிறப்பினாலன்றிப் பிறிதொரு காரணத்தாலன்று. எவ்வாறெனின், உலக முழுவதும் நிலமயமாயிருப்பினும் அதில் ஒரு பாகம் ஒன்றும் விளையாத பாலை நிலமாகவும், மற்றொரு பாகம் காடடர்ந்த முல்லை நிலமாகவும், வேறொரு பாகம் சமுத்திரத்தையடுத்த நெய்தல் நிலமாகவும், பிறிதொரு பாகம் மலைகள் நெருங்கிய குறிஞ்சி நிலமாகவும், இன்னொரு பாகம் நாடு நகரங்களடங்கிய மருத நிலமாகவுமிருக்கும். மருத நிலத்திலும் நன்செய் புன்செய் நிலங்களும், கரம்பு நிலங்களும், மேட்டு நிலங்களும் மயான பூமி முதலியனவுமாயிருக்கும். இவற்றுள் நன்செய் நிலத்தில் மாத்திரம் சிறந்த செந்நெற் பயிர் விளையுமேயன்றி, மருத நிலத்தின் வேறிடங்களிலாவது, பாலை முதலிய நிலங்களிலாவது விளையாது. அவ்வாறு எல்லா நிலங்களினும் விளையாது மருத நிலத்தில் நன்செய் நிலமாத்திரையின் விளைதல் பற்றி நெற்பயிரையிகழ்வாரெவருமிலர். அதுபோல, உலகத்திலுள்ள ஆசியா முதலிய ஐந்து கண்டங்களும் மருதம் முதலிய ஐவகை நிலங்களுக்கொப்பாகும். இவற்றுள் ஆசியா கண்டம் பல பயிர்கள் விளையும் மருத நிலத்தையொக்கும். ஆசியாவிலுள்ள நம் பரத கண்டம் மருத நிலத்திலுள்ள நன்செய் நிலத்தை நிகர்க்கும். சைவ சமயம் பரத கண்டமாகிய நன்செய் நிலத்தில் விளையும் செந்நெற்பயிரை யொக்கும். சீவகாருணியம், கொல்லாமை, புலாலுண்ணாமை, வாய்மை, கற்பு, அன்புடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஈகை, ஒழுக்கமுடைமை, சான்றாண்மை, செய்ந்நன்றியறிதல், பொறையுடைமை, பண்புடைமை, விருந்தோம்பல், துறவு, தவம் முதலியனவாய உத்தமோத்தம குண நதிகள் பாயும் பரத கண்டமாகிய நன்செய் நிலத்திலன்றி சைவமாகிய செஞ்சாலிப் பயிர் வேறு புலத்தில் விளையாது. ஆதலாற்றான் இப்பரத கண்டம் தவமிகுந்த புண்ணிய பூமி யென்னப்பெற்றது. எனவே, சைவ சமயமானது இப்பரத கண்டத்தில் மாத்திரம் வியாபித்திருப்பது பற்றி அதன் உண்மைகளை யுணர்ந்த மேலோர் அதனையிகழ்தல் செய்யார்.

சைவ சமயத்தின் கோட்பாடுகள்:- சிவபெருமானே முழுமுதற் கடவுளென்பதும், எண்ணிலவாகிய உயிர்களின் உய்வுகருதி அவரருளிச் செய்த முதனூல்கள் வேத சிவாகமங்களென்பதும், அவற்றுள்ளும் வேதம் உலகவர் பொருட்டருளிய பொது நூலும் சிவாகமம்பக்குவமிக்க சத்திநிபாதப் பொருட்டருளிய சிறப்பு நூலுமாமென்பதும், அவனதருள் பெற்ற அருளாளர்களாகிய பரம ஞானிகளால் தமிழ் மொழியிலருளிச் செய்யப்பட்ட தேவாராதித்திருமுறைகள் பன்னிரண்டும் சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் வேதசிவாகமங்களின் சாரமாமென்பதும், பூதி உருத்திராக்கங்களே பசு போதங் களைய வல்ல சைவ சின்னங்களென்பதும், ஸ்ரீ பஞ்சாக்கரமே வீடுபேறருளும் மஹாமந்திரமென்பதும், குருலிங்கசங்கம வழிபாடே சிவபெருமானார்க்குச் செய்யப்படும் உத்தமோத்தம வழிபாடென்பதும், பதி பசு பாசம் என்னும் மூன்று பொருள்களும் அநாதிநித்தியப் பொருள்களென்பதும், சரியை கிரியை யோகம் என்னும் மார்க்கங்களை முறைப்படி அநுட்டித்துப் பின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்ந்து சிவமாந்தன்மைப் பெருவாழ்வடைதலே முடிந்த பேறாகிய முத்திப் பேறாமென்பதும் இன்ன பிறவுமாம்.

இத்தகைய சைவ சமயத்தைச் சார்ந்து மேலே கூறப்பட்ட அதன் கோட்பாடுகளின் உண்மைகளை ஐயந்திரிபற உணர்ந்து அவற்றினிடத்து ஆழ்ந்த நம்பிக்கையும் உண்மையான பற்றுங் கொண்டு மெய்யன்போடு விசுவசித்து அவற்றின் வழியொழுகி நிற்றல் ஒருவர்க்கு முன்னர்ப்பிறவிகளிற் செய்த பெரும் புண்ணிய வசத்தினாலேயே வாய்க்கப் பெறுவதொன்றாகும்.

வாழ்வெனு மையல் விட்டு

வறுமையாஞ் சிறுமை தப்பித்

தாழ்வெனுந் தன்மையோடுஞ்

சைவமாஞ் சமயஞ் சாரு

மூழ்பெற லரிதுசால வுயர்

சிவஞானத் தாலே

போழிள மதியினானைப்

போற்றுவா ரருள் பெற்றாரே. [சிவஞான சித்தியார்]

இப்படிப்பட்ட சைவ சமயத்தின் அருமை பெருமைகளையும், அதற்கென்றமைந்த அருணூல்களாகிய சித்தாந்த சாத்திரங்கள் திருமுறைகள் முதலியவற்றிற் பேசப்படும் பொருளுண்மைகள், இலக்கணங்கள், சாதனங்கள், சாதிக்கு முறைகள், சாதகர் பெறும் பயனாதியவற்றையும் நெல்லைச் சமய சாதனம் வாயிலாக நாம் முறையானுணர்ந்து பிறவிப் பயன் பெற்றுய்யுமாறு நெல்லையினின்றதில்லை நாதன்றிருவருள் முன்னின்றருள் செய்வதாகுக! "முன்னவனே முன்னின்றால் முடியாத தொன்றுளதோ"

திருச்சிற்றம்பலம்

Posted

நாயகரின் கேள்வி-----------------

:கிப்பிர பிரசாத்:

'கடவுள் ஒருவர் இல்லை என்பார் சிலர்; உண்டு என்பார் பலர். கடவுள் ஒருவர் இல்லை என்று கூறி ஒழுக்க சீலராயிருப்பவரும், உண்டு எனக் கூறி ஒழுக்கக் கேடராயிருப்பவரும் உள்ளனர். எனவே கடவுள் நம்பிக்கை ஒழுக்க விருத்திக்கு வழி செய்யவில்லை' எனத் தற்காலத்தில் மிகப் பெரிய அரசியல் அறிஞர்கள் முதல் சாதாரண எழுத்தாளர்கள் வரை எழுதுகின்றனர்; பேசுகின்றனர்.

கடவுள் நம்பிக்கை என்பதை உண்மையிலே உடைய ஒருவன் ஒழுக்கத்தவறுடையவனாயின் நிச்சயம் தனக்குத் தண்டனை உண்டு என்பதை அறிவான். ஆனால் கடவுள் இல்லை என்பவன் ஒழுக்கம் உடையவன் என்பதை எவ்வாறு ஒத்துக்கொள்ள முடியும்? வைதிக சைவ சண்ட மாருதம் சூளை ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகர் அவர்கள் கடவுள் இல்லை எனக் கூறி ஒழுக்கமுடையவராயிருப்பவருக்

Posted

"எவனால் நடக்கும் உலகம்?"

(சயிலாதி)

இத்தலைப்பு ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு

சந்திர மண்டலத்தில் இறங்குவதர்கன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது. எவனால் நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது? என்ற வினாக்கள் எல்லாம் இன்றைய "நாகரிக" மாந்தரின் கவனத்துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத்தைக்குறிக்கோளாக

Posted

"தமிழ்மண்ணை வணங்கி ஈவெராவின் இந்த தமிழின துரோகத்தைஇதுவரை எவரும் கண்டுபிடிக்காததை மிகுந்த சிரமப்பட்டு ஆராய்ந்து, கண்டறிந்து சரித்திர, பூகோளத்தின் அடிப்படையில் உண்மையை உண்மையாகவே நிறுவியிருக்கிறேன். மனதை திடப்படுத்திக்கொண்டு மேலே படியுங்கள்."

தமிழர் தந்தை, பகுத்தறிவுப் பகலவன், சமூக விஞ்ஞானி என்று அஞ்ஞானிகளான தமிழ்ப் பொது மக்கள் உச்சிமோந்து, தலையில் வைத்தபடி ஆனந்தக்கூத்தாடும் ஈவெரா.சாமி எப்படிப்பட்ட கன்னட வெறியர் என்பதை புரட்டாக இதுவரை இருந்ததை புரட்டிப்போடும் உண்மையாக கீழ்க்காணும் உண்மை வரலாற்றின் மூலம் அடைபட்டுக்கிடந்த

"உண்மை"யை "விடுதலை" செய்வது எனது தலையாய சமூகப் பொறுப்புணர்வுடன், நெறிபிறழாது, செம்மையாகச் செய்யவேண்டிய கடமை என்பதால் Truth is Released here:

ம(ற)ரத் தமிழனே.... " உண்மை"யான வரலாற்றை மறந்துவிட்ட தமிழனே!

"விடுதலை"யாகு உனது அடிமைத்தனத்தினின்று. உணர்ந்திடு இந்தப் பெரிய வெங்காய சரித்திர உண்மையை! நீ பகுத்தறிவுப் பகலவனின் இந்த புரட்டு வரலாற்றை அறிந்து உணராவிட்டால் வேறு யாராவது லெமூரியாக் கண்டத்துக் கணவாய் வழியாக வேகவேகமாக வந்த செக்கோஸ்லோவேகியா ஆட்களோ, திங்கறதுக்குன்னே திங்க,புதன்,வியாழன் வெள்ளிக்கிழமையன்று செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்த சனியன்கள் யாராவது வந்து இப்பேருண்மையை விடுதலைசெய்து பொதுஅறிவு என்றைக்கும் எழாத ஞாயிறான உனக்கு உணர்த்திவிடக்கூடிய அபாயம் இருக்கிறது!

பெரியார் ஈவெரா.சாமி எல்லா மேடைகளிலும் எல்லாவற்றையும், எப்போதும் , எவரையும் இது என்ன வெங்காயம் என்று அணுகுவார். இது சாதரண விஷயமாகச் சிலராலும் சதா"ரண" விஷயமாகப் பலராலும் இன்றும் பார்க்கப்படும் வரலாறு!

மேடைக்கு மேடை உண்மையை உரிப்பதாக உதார் விட்ட ஈவெரா.சாமி எப்பொழுதும் ஏன் ஒன்லி வெங்காயம் என்று சொல்லி உரிக்கவேண்டும்? மட்டைதேங்காய் என்று சொல்லியிருக்கலாமே? மட்டைத் தேங்காயைக் கூடத்தான் உரிக்க வேண்டும்.

ஏனெனில் கன்னடநாடான கர்நாடகத்தில் இருக்கும் பெல்லாரி எனும் ஊர் மீது அவருக்கு அவ்வளவு அளவிடமுடியாத ஈர்ப்பு. உலக வரைபடத்தில், இந்தோ யூரேஷியன் நிலத்தட்டில் அமைந்த இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் நமது இந்திய தேசத்தின் வரலாற்றில் கன்னட கர்நாடகாவில் இருக்கும் "பெல்லாரியையும்-வெங்காயத்தையும்" எப்படி பிரிக்க முடியாதோ அதே மாதிரி ஈவெரா.சாமியின் கன்னடவெறியால் கன்னட ஊர் பெல்லாரியின் நினைவுகள் உந்தித்தள்ள இந்தப் பெரிய வெங்காயம் எல்லாரையும் என்ன பெரிய வெங்காயம் என்று மேடைக்கு மேடை வெங்காய வியாபாரிகூட செய்யாத வெங்காய மார்க்கட்டிங் செய்தது காய்கறிவெறியா? இல்லை சமூக அக்கறையா? கிடையவே கிடையாது இது கண்டிப்பாக முழுக்க முழுக்க ரத்தத்தில் ஊறி(ரி)ப்போன கன்னட ஊர் பெல்லாரி வெறியே! பகுத்தறிவு ஆய்வகத்தில் டிஎன்.ஏ சோதனையில் வெளிவந்த உண்மை!

இதில் தமிழ் காட்டுமிராண்டி பாசையாம்? கன்னட ஊர் பெல்லாரி மீதும் அங்கு விளையும் பெரிய வெங்காயத்தின் மீதும் பசை மாதிரியான மொழி/ஊர் ஒட்டுதலால்தானே இப்படியெல்லாம்?

ஈவெரா.சாமி மேடைகளிலே சின்ன வெங்காயம் என்று ஏன் கூறவில்லை? தமிழ்நாட்டில் இட்லி/வடை/சாம்பாரில் பயன்படுத்தப்படும் சின்னவெங்காயம் தமிழகத்திலேயே ஏராளமாக விளைவதால்தானே? மட்டைத்தேங்காய் கூட தமிழகத்திலே நிறையக் கிடைப்பதுதானே?

ஏன் இப்படிப் பச்சையான பாகுபாடு?

பகுத்தறிவுப் பெரிய வெங்காயம் ஈவெரா.சாமியின் பெல்லாரி பாசக் கன்னடவெறிதானே இது?

"இனியானும் இருப்பவனையெல்லாம் சும்மாவானும் நிந்திப்பதைவிட்டு சிந்தித்துப் பகுத்தறிவுக்கு வேலை கொடு!"

தாய்மண்ணே வணக்கம்!

அன்புடன்,

ஹரிஹரன்

நன்றி :http://harimakesh.blogspot.com/2006/11/68.html

Posted

(127) திருக்குறள் - பகுத்தறிவு - உலகத் தமிழனின் இரு கண்கள்

அரசியல் திரா"விடம்" பேசும் தமிழகத்துத் தலைவர்கள் பல தலைமுறைகளாகக் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லி வருவது அய்யன் திருவள்ளுவர் ஈன்ற உலகப் பொதுமறை திருக்குறளும் ஈரோடு ஈன்ற அய்யாவினால் கிடைக்கப் பெற்ற பகுத்தறிவும் உலகத்தமிழனின் இரு கண்கள் என்பதே.

கிறிஸ்து, கிரிகோரியன் ஆண்டுக்கு இணையாகத் தமிழ் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்வது, குமரிக்கடலிலே 133 அடிக்கு சிலை என அய்யன் திருவள்ளுவருக்கு ஒருபக்கம் நடக்கிறது. அடுத்த பக்கம் பகுத்தறிவுப் பகலவன் என ஈவெராவைச் சொல்லி துதி,வழிபாடு நடக்கிறது 128 ஈவெரா சிலைகள் வைக்க ஏற்பாடுகள் என தமிழனின் இருகண்களாக அய்யனையும் அய்யாவையும் சொல்லி வெண்ணை ஒருகண்ணிலும், சுண்ணாம்பு ஒரு கண்ணிலும் என தமிழன் பார்வைக் கோளாறுடன் போராடுவதை ஆராய்வோம்.

அய்யன் திருவள்ளுவர் உலகப் பொதுமறை திருக்குறளில் என்ன சொல்கிறார் என்பதை அய்யா பகுத்தறிவு சொன்னதோடு பொருத்திப் பார்க்கலாம்.

படித்துப் பார்த்துவிட்டு உலகத் தமிழனின் எந்தக் கண் "பூ"விழுந்த கண் என்று சீர்தூக்கிப் பார்க்கவும்.

----------------------------------------------------------------------------------

வெறுப்பு-இகல்-Hatered பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் வெறுப்பு-இகல்-Hatered பற்றிச் சொன்னது:

851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பா¡¢க்கும் நோய்.

விளக்கம்: வெறுப்பு என்பது கொடும் நோய் அது பிரிவுணர்வையும் மிகக் கெட்ட எண்ணங்களையும் அனைத்து பக்கங்களிலும் பல்கிப் பெருகச்செய்து கேடுவிளைக்கும்.

Hatred is a plague that divides 851

And rouses illwill on all sides.

இன்சொல் பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:

1. பாம்பையும் பார்ப்பனனையும் பார்த்தால் பாம்பை விடு பார்ப்பனனை அடித்துக்கொல்!

----------------------------------------------------------------------------------

பெண் மாண்பு பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் பெண் மாண்பு பற்றிச் சொன்னது:

57. சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

விளக்கம்: சிறை வைத்துக் காப்பதால் என்ன பயன்? பெண்கள் தங்கள் நிறைமாண்பு காத்தலே தலைமையானது.

Of what avail are watch and ward? 57

Their purity is women's guard.

பெண் மாண்பு பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:

1. கற்பு என்பது பெண்களுக்கு அவசியமற்றது.

2. பெண்கள் கள்ளப்புருஷன் வைத்துக்கொள்ள வேண்டும்.

3. கண்ணகி, கற்பு என்பவை ஏமாற்று

கண்ணகி, கற்பு பற்றி ஈவெரா வின் கீழான எண்ணங்களும் கற்பு பற்றிய குஷ்பூ பேச்சுக்கு பகுத்தறிவுக் குஞ்சுகள் வெளக்கமார் போராட்டம் நடத்தியதும் தனிச்சுவையானது

-------------------------------------------------------------------------------------

இனிய சொல் பேசுதல் பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் இன்சொல் பேசுதல் பற்றிச் சொன்னது:

100. இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

Leaving ripe fruits the raw he eats 100

Who speaks harsh words when sweet word suits.

விளக்கம்: பேச / விவாதிக நல்ல வார்த்தைகள் இருக்க கொடிய வார்த்தைகள் பேசுவது என்பது கனிந்த கனிகள் இருக்கக் கசக்கும் காயை உண்பதற்குச் சமம்!

இன்சொல் பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:

1. பாம்பையும் பார்ப்பனனையும் பார்த்தால் பாம்பை விடு பார்ப்பனனை அடித்துக்கொல்!

2. பார்ப்பனப் பெண்களை தேசிய உடமை ஆக்கு!

----------------------------------------------------------------------------------

உடல்-உள்ளத் தூய்மை வாய்மை பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் உடல்-உள்ளத் தூய்மை-வாய்மை பற்றி சொல்லுவது:

298. புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை

வாய்மையான் காணப் படும்.

விளக்கம்: ஒருவனுக்கு நீரினால் உடல் தூய்மை கிடைக்கும். உண்மை பேசுவதால் உள்ளத் தூய்மை கிடைக்கும்.

Water makes you pure outward 298

Truth renders you pure inward.

உடல்தூய்மை- வாய்மை பற்றி ஈவெரா பகுத்தறிவாக வாழ்ந்து காட்டியது:

1) குளிப்பதை நான் வெறுக்கிறேன். அதை ஒரு தொல்லையாகவே பார்க்கிறேன் என்றவர் ஈவெரா.

2)பிள்ளையார் சிலையை தெருவில் உடைத்துவிட்டு தன்வீட்டில் ரகசியமாக பிள்ளையாரை வணங்கியவர்!

3)வெங்காயமே வித்து என்கிற எளிய உண்மையை விடுதலை செய்யாமல் உண்மை, விடுதலை, மேடைகள் வாயிலாக இந்துமதம் வித்தற்ற வெங்காயம் எனச்சொல்லி வெங்காயத்தில் விதை தேடிய வீரியம் மிக்க விஞ்ஞானி!

-------------------------------------------------------------------------------

புலால் உண்ணாமையில் அய்யன் வள்ளுவர் VS அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் புலால் உண்ணாமை பற்றிச் சொன்னவை:

254. அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அவ்வூன் தினல்.

விளக்கம்: உயிரைக் கொல்லுதல் இரக்கமற்ற செயல், உயிரைக் கொன்று சாப்பிடுதல் என்பது ஈனமானது.

If merciless it is to kill, 254

To kill and eat is disgraceful.

260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.

விளக்கம்:. கொல்லாதவனை, புலால் உணவை மறுத்தவனை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்

All lives shall lift their palms to him 260

Who eats not flesh nor kills with whim

257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்அது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்: .

ஒருவன் புலால் உண்ணாமல் இருக்க புலால் என்பது இன்னொரு உயிரின் "புண்" எனத் தன் மனதால் உணரவேண்டும்From eating flesh men must abstain 257

If they but feel the being's pain

புலால் உண்ணாமை குறித்து ஈவெரா காட்டிய பகுத்தறிவு:

1)கொன்றால் பாவம் தின்றால் போச்சு!

2)ஆடு, மாடு, கோழி எல்லாம் மனிதன் கொன்று தின்பதற்காகத்தான்!

3)மாட்டுக்கறி ஈவெராவின் சிறப்பு விருப்ப உணவு!

-------------------------------------------------------------------------------

பார்ப்பனர்-அந்தணர் பற்றி அய்யன் வள்ளுவர் VS அய்யா பகுத்தறிவு

அய்யன் வள்ளுவர் பார்ப்பனர்-அந்தணர் பற்றிச் சொன்னது

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

விளக்கம்: எந்த உயிருக்கும் கேடுவிளைவிக்காமல் அறவழி வாழ்பவர்கள் அந்தணர்கள்.

134. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

விளக்கம்: பார்ப்பனன் வேதத்தை மறந்தாலும் ஏற்கலாம். ஆனால் பார்ப்பனனாக இருக்கவேண்டிய ஒழுக்கமின்றி வாழ்ந்தால் கேடு.

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

விளக்கம்: கொடுங்கோல்அரசன் காக்கவில்லை எனில் பசுக்கள் பால் குறைந்து தரும், வேதநெறி ஒழுகி அறுவகைத் தொழில் செய்வோர் வேதம் மறப்பர்.

The *six-functioned forget their lore 560

Cows give less if kings guard no more.

* the six functions are: learning, teaching, giving,

getting, sacrificing, kindling sacrifice.

These are duties of Vedic savants

பார்ப்பனர்-அந்தணர் பற்றி அய்யா பகுத்தறிவு தமிழகத்தில் ஈவெரா பாசறை அமைத்துச் சொல்லித் தந்த அரசியல் திரா"விட" பகுத்தறிவு சொல்வது:

1. பார்ப்பனன் பாம்பை விடக் கொடிய விஷம் பொருந்தியவன்.

2. சமூகத்தில் சமநிலை வரவேண்டுமெனில் வேதம் ஓதும் பார்ப்பனனை மலம் அள்ள விடு!

3. வேதம் ஓதும் அந்தணர் மீது தாக்குதல் நடத்தி குடுமி, பூணூல் அறுத்து எறி!

------------------------------------------------------------------------------------

1330 குறள்கள் இயற்றிய பரந்து பட்ட பார்வை கொண்ட பச்சைத்தமிழனான

அய்யன் திருவள்ளுவருக்கு வேதநெறி, பார்ப்பனர்கள்,வழிபாடுகள் மற்றும் அஸ்வமேத யாகம் குறித்து இன்றைய ஈவெரா வழிவந்த நபர்களின் பகுத்தறிவுப் புரிதல்கள் இல்லை என்பது அவரது குறட்பாக்களே விடுதலை செய்கிற உண்மை!

(அய்யனைப் பச்சைத் தமிழன்னு சொல்லாம் தானே:-)) அட காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று எழுதியிருக்காருங்க அய்யன் வள்ளுவர்)

எந்த விதமான தயக்கமும் இன்றி உலகப்பொதுமறை இயற்றிய அய்யன் திருவள்ளுவரை ஒருகண்ணாக ஏற்றுக் கொள்கின்றீர்களா? சரி. அப்போ வாழ்நாள் முழுதுமாகப் பொய்மையைப் பகுத்தறிவு என்று ஈவெரா பிதற்றியதை இன்னொரு கண்ணாக ஏற்றுக்கொண்ட பூவிழுந்த கண்ணின் கதி?

ஒரு கண் மட்டும் உலகத் தமிழனுக்குச் சரியான பார்வை தருமா?

பூவிழுந்த பொய்ப் பகுத்தறிவுக்கண்ணை நம் தாய்த்திருநாட்டில் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த சனாதனதர்மம் எனும் லேசர் டிரீட்மெண்ட்டில் சரி செய்துவிடலாம்.

சந்தேகம்-1

திருக்குறள் இனி உலகப் பொதுமறை என பகுத்தறிவுகள் ஏற்குமா?

சந்தேகம்-2

இனி அய்யன் திருவள்ளுவரும் பார்ப்பனீய அடிவருடி பட்டம் சூட்டப் படுவாரா?

அன்புடன்,

ஹரிஹரன்

நன்றி : ஹரிமகேஸ்

மேலும் பல சுவையான தகவலுக்கு Visit this Website

Posted

"ஈவேரா தமிழரா?

"ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர் என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர் தலைவர்' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே - அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர்' (பெரியார் ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்' [குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்."

'நான் கன்னடியன்' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். :lol:

Posted

ஈ.வே.ரா கூறியது

"கல்லைப் போய் சாமி என்று கூறி கோயிலில் வைத்து கூம்பிடுகிறார்கள் இதில் பகுத்தறிவு இல்லை "

அது சரி தான்

:D

அப்போ ஈ.வே.ரா கட்சி தொண்டர்கள் வீதிக்கு வீதி நடுத்தெருவில் ஈ.வே.ரா சிலையை வைப்பது ஏன்?

நாங்களாவது ஒரு ஓரமாக கோவில்கட்டி சாமி கூம்பிடுகிறோம். நீங்கள் நடுத்தெருவில் வைத்து சாலை போக்குவரத்துக் கூட இடைஞ்சல் செய்கிறீர்கள். என்ன உங்களது பகுத்தறிவு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.