Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன கிடைக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
த்வாங் ரிக்ஸின், லேவில் இருந்து, பிபிசிக்காக
 
லடாக்படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கி மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் கீழ், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும். ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருக்காது.

மத்திய அரசின் இந்த முடிவு லே-லடாக்கில் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. தலைவர்களும் மத அமைப்புகளும் இதை வரவேற்கின்றன.

உண்மையில், லடாக்கில் இந்த மாற்றம் தேவை என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

1989ஆம் ஆண்டில், லடாக்கை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று கோரி இயக்கமும் நடத்தப்பட்டது. அந்த போராட்டமானது, லடாக்கிற்கு என தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலை உருவாக்க இது வழிவகுத்தது.

நிச்சயமாக, சமீபத்திய மத்திய அரசின் முடிவு இங்கே வரவேற்கப்படுகிறது. ஆனால் இங்கு சட்டமன்றமும் தேவை என்றும் கோரப்படுகிறது.

லடாக்படத்தின் காப்புரிமை Getty Images

கார்கிலின் தாக்கம்

சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கை மாற்றுவது சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்று மக்கள் பரவலாக நம்புகிறார்கள்.

லேவில் உள்ள அனைவருமே யூனியன் பிரதேசமாக மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறார்கள். ஆனால் இந்த முடிவு தொடர்பாக கார்கிலில் பெரிய அளவிலான வரவேற்பு இல்லை என்பது போன்ற தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

லேவின் மக்கள் தொகையில் 15-20 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் பெளத்த மதத்தை சேர்ந்தவர்கள்.

அதுவே, கார்கில் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நிறைந்த பகுதி என்பதோடு குறைந்த எண்ணிக்கையிலான பெளத்தர்கள் உள்ளனர்.

லேவை யூனியன் பிரதேசமாக்க இயக்கம் நடந்தபோது சிலர் அதற்கு ஆதரவாக இல்லை.

அங்கிருக்கும் தலைவர்கள் இன்னமும் வெளிப்படையான கருத்துகளை சொல்லவில்லை. ஓரிரு நாட்களில் அவர்கள் கருத்து வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

லடாக்படத்தின் காப்புரிமை Getty Images

மக்களின் கவலை என்ன?

லடாக்குக்கு சட்டமன்றம் கிடைத்தால், அது சட்டசபையாக இருந்தாலும், மேலவையாக இருந்தாலும் சரி, அது தங்கள் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று சிலர் கூறுகிறார்கள்.

லடாக்கிற்கு என சொந்த கலாசார அடையாளம் இருப்பதோடு, அதன் புவியியல், பிற இடங்களைவிட அடிப்படையிலும் வேறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்று ரீதியாக, இது 900 ஆண்டுகளுக்கும் மேலாக சுயாதீன அடையாளத்துடன் கூடிய பகுதியாக இருந்திருக்கிறது லடாக்.

இந்த நிலையில், இதுபோன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டுதான் அங்கு விதிமுறைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

லடாக்படத்தின் காப்புரிமை NAMGAIL

லடாக்கில் என்ன மாற்றம் ஏற்படும்?

இதுவரை ஜம்மு மற்றும் காஷ்மீரைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த மாநிலத்தின் 68 சதவிகித பகுதி லடாக்கை சேர்ந்தது.

யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு, லடாக்கிற்கு தனி அங்கீகாரம் கிடைக்கும். இது இந்தியாவின் வரைபடத்தில் தனி இடத்தை பிடிக்கும்.

மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், இங்குள்ளவர்கள் முக்கியமான வேலைகளுக்காக வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இப்போது வரை, எந்தவொரு சிறிய வேலையும் செய்ய வேண்டுமானால், ஜம்மு அல்லது ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டியிருந்தது.

இப்போது வெளியில் இருந்து மக்கள் இங்கு வந்து நிலம் வாங்கலாம் என்று வேண்டுமானால் மக்களுக்கு சிறிது அச்சம் ஏற்படலாம்.

லடாக்படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் ஜம்மு மக்கள் ஏற்கனவே இங்கு நிலம் வாங்கலாம் என்பதும் ஒரு உண்மை. அப்படி இருந்த நிலையிலும் இங்கு நிலம் அதிகம் விற்கப்படவில்லை.

இப்போது நிறைய பேர் வருவார்கள், இங்கே நிலம் வாங்கி ஹோட்டல் கட்டுவார்கள்.

இதேபோன்ற கவலைகளை தீர்ப்பதற்கு, சட்டமன்றம் அல்லது சட்ட மேலவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.

அப்போது தான், லடாக் மக்கள் தங்களுக்கென சொந்த சட்டங்களை உருவாக்கி தங்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும்.

https://www.bbc.com/tamil/india-49261435

  • கருத்துக்கள உறவுகள்

லடாக்கை, காஸ்மீரிகள் (முஸ்லீம் பெரும்பாமை) வேறுபடுத்தியே, துவேசத்துடன் நடத்துவது ஓர் உண்மை.

இது லடாக்கில் உள்ள பௌத்தர்களுக்கு, நல்ல செய்தியே, மாநிலமாக மாற்றமடைவதற்கு.   

இதை செய்த கிந்தியா, கார்கில்லை காஷ்மீருடன் இணைத்து விட்டு, ஜம்முவையும் பிரித்து வேறு நிர்வாக அலகாகினால்,  பிற்காலத்தில் பிரச்சனைகளை தீர்ப்பது சிக்கல்கள் இல்லாமல் இருக்கும்.

ஆயினும், ஹிந்தியா, பாதுகாப்பையும், பன்முகத்தன்மையை பாதுகாப்பதும் என்ற கொள்கைகளே வைத்தே, இப்படி லடாக்கை மட்டும், கார்கில் உடன் சேர்த்து பிரித்துள்ளது.

கிந்தியா, 35A எனும் சட்டத்தை எவ்வாறு கையாள்கிறது என்பது மிக முக்கியமானது. 35A, நடைமுறையில், காஷ்மீர் நிர்வாகம் காஷ்மீரிகள் உரிமையையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு வழிகோலுகிறது. அதாவது, கஸ்மீரிகள் அல்லாதோர் நிரந்தரமாக குயடியேறுவதையும், அசையாச் சொத்துக்களை எவர் வாங்கலாம் என்பதை தீர்மனிக்கும் உரிமையையும் 35A காஷ்மீர் நிர்வாகதிற்கு வழங்குகிறது, ஏறத்தாழ குடிவரவு, குடியகல்வு கொள்கையை தீர்மானிக்கும் உரிமை. 

35A காஷ்மீருக்கு இருக்குமாயின், லடாக்கிற்கும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை லடாக் மக்கள் பாஜக முடிவை ஆதரிக்கலாம்... ஏன்?

majority-of-the-ladakh-people-support-the-bjp-decision-here-is-why
 

ஜூரி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்ததோடு அல்லாமல், அதன் முழு மாநில அதிகாரத்தையும் பறித்து, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு பிராந்தியங்களாக அதை இரு கூறுகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றியப் பிரதேசமாகவும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த முடிவு காஷ்மீரிலும் ஜம்முவிலும் லடாக்கிலும் ஒரே மாதிரியான உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை. கலவையான உணர்வுகளைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, லடாக் மக்களில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு மனநிலை வெளிப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. அது எப்படி?

ஏனெனில், புவியியல், கலாச்சாரரீதியாகவே லடாக் தனித்துவமான நிறத்தைக் கொண்டது. மக்கள்தொகையில் 47.4% பேர் முஸ்லிம்கள் என்றால், கிட்டத்தட்ட அவர்களுக்கு இணையாக 45.8% பேர் பௌத்தர்கள். இந்துக்களின் எண்ணிக்கை குறைவு; வெறும் 6.2%. எனினும், முஸ்லிம்களின் பெரும்பான்மைக்கு எதிராக இந்த இரு சமூகங்களும் இணைந்து செயல்படும் போக்கு உருவாகியிருப்பதால், பாஜக ஆதரவு இங்கே மேலோங்கிவருகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் லடாக் தொகுதியை வென்ற பாஜக, 2019 மக்களவைத் தேர்தலில் மொத்த ஓட்டுகளில் 34% வாக்குகளைப் பெற்று 10,930 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மலையடிவாரப் பிராந்தியம்

காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச் சிகரத்திலிருந்து தெற்கில் உள்ள நெடும் இமயமலைத் தொடர்வரை பரந்து விரிந்து கிடக்கிறது லடாக். திபெத்திய வம்சாவழியினரான இந்தோ-ஆரியர்கள் காலங்காலமாக வசிக்கும் பகுதி இது. மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத பகுதி. இதன் கலாச்சாரமும் வரலாறும் திபெத்துடன் அதிகம் தொடர்புள்ளது.
வரலாற்றின்படி இந்தப் பகுதியுடன் பல்திஸ்தான் பள்ளத்தாக்கும் சேர்ந்ததுதான். நாடு விடுதலை அடைந்தவுடன் பாகிஸ்தான் திடீரெனப் படையெடுத்து கில்ஜித், பல்திஸ்தான் பகுதிகளைத் தன்வசப்படுத்திக் கொண்டுவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கு அவை சென்றுவிட்டன. இந்த விஷயம் தொடர்பில் லடாக்கில் வாழும் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் பாகிஸ்தான் மீது கசப்பு உண்டு.

அடிப்படை வசதிகள் குறைந்த பிராந்தியம் லடாக். லெ நகரில் சிறு விமான நிலையம் உண்டு என்றாலும், 1,800 கிமீ நீளத்துக்குத்தான் சாலையே இருக்கிறது. அதிலும் 800 கிமீதான் தார் சாலை. இந்தச் சாலையையும் ராணுவத்தின் அங்கமான எல்லைப்புற சாலை அமைப்பே (பிஆர்ஓ) நிர்வகிக்கிறது. பெரிய தொழில்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை. காஷ்மீருடன் சேர்ந்திருப்பதால் லடாக் பிராந்தியமும் முன்னேற்றமின்றி இருக்கிறது என்ற பாஜகவின் பிரச்சாரம் முன்னதாக உள்ளூர் மக்களிலேயே ஒரு பகுதியினரிடத்தில் ஊடுருவியிருந்தது.

லடாக்கின் முக்கியத்துவம்

லடாக்கின் மக்கள்தொகை வெறும் 2.74 லட்சம் மட்டுமே. எனினும், நிலப்பரப்பளவில் அது பெரியது: 59,196 சதுர கிமீ அதாவது, 1.30 லட்சம் ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட தமிழ்நாட்டின் பரப்பில் கிட்டத்தட்ட 45%. சராசரியாக, ஒரு சதுர கிமீ பரப்பளவுக்கு 4 பேர்தான் வசிக்கின்றனர். இரண்டு மாவட்டங்கள். லெ மற்றும் கார்கில். தலைநகராக லெ அமைந்திருக்கிறது. லடாக்கி, புர்கி, ஷினா, திபெத்தி, இந்தி, பல்தி, உருது ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

லடாக் என்பது உண்மையில் உயரமான பீடபூமியாகும். கடல் மட்டத்திலிருந்து 9,800 அடி உயரத்தில் இருக்கிறது. இமயமலையில் தொடங்கி குன்லுன் மலைத் தொடர்வரை நீள்கிறது. இதில் சிந்து நதியின் மேல் பகுதி பள்ளத்தாக்கும் அடங்கும். இங்கே நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும். லடாக்கின் வளமைக்குக் காரணம் சிந்து நதிதான். ஷே, லெ, பாஸ்கோ, டிங்மோஸ்காங் என்ற சிறு நகரங்கள் இதன் கரையிலேயே அமைந்துள்ளன. இந்தியாவில் சிந்து பாயும் பிரதேசம் இது மட்டுமே. லடாக் பகுதியில் மிக உயரமான மலைச் சிகரங்கள் இல்லை. இமயமலையின் மழைமறைவுப் பிரதேசத்தில் இருப்பதால், இது பாலைவனப் பகுதியாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் விழும் பனிதான் இங்கு நீராதாரம். இங்கு பயிர் பச்சை அபூர்வம். தண்ணீர் ஓடும் ஓடைகளுக்கு அருகில் மட்டுமே தாவரங்கள் காணப்படுகின்றன.

நாம்கியால் வம்ச ஆட்சியில் வளப்படுத்தப்பட்ட லடாக்கை 1834-ல் ஜொராவர் சிங் என்ற சீக்கியத் தளபதி லடாக் மீது படையெடுத்து, சீக்கியப் பேரரசுடன் இணைத்தார். அடுத்து, இரண்டாவது ஆங்கிலேயர் - சீக்கியர் போரில் சீக்கியர்கள் தோற்றதற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் பிரிட்டிஷாருக்குக் கட்டுப்பட்ட குலாப் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு, டோக்ராக்கள் ஆட்சியில் லடாக்கை ஆளுநர் ஒருவரை நியமித்து நிர்வகித்தனர். 1947-ல் டோக்ரா மன்னர் மகாராஜா ஹரி சிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே லடாக் நீடித்துவந்தது என்றாலும், காஷ்மீர் அரசியல்வாதிகளின் ஆட்சியில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுவருகிறோம் என்ற எண்ணம் பெரும்பான்மை லடாக்கியர்களிடம் உண்டு. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் சன்னிகள்; லடாக்கில் வாழும் முஸ்லிம்கள் ஷியாக்கள் என்ற வேறுபாடும் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

லடாக் மக்களை இந்திய அரசுக்கு இணக்கமாகச் சிந்திக்கவைத்ததில் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்த வேகத்தில் தாக்குதலை முன்னெடுத்த பாகிஸ்தான் படைகள், லடாக் வரை வந்தன. அங்கு தொடங்கி கார்கில் ஆக்கிரமிப்பு வரை பாகிஸ்தான் முன்னேறும்போதெல்லாம் இரு நாட்டுப் படைகளின் விளைவாகப் பதற்றத்தைச் சந்திக்கும் லடாக் மக்கள், இயல்பாக பாகிஸ்தான் எதிர் மனநிலைக்கு ஆளாகிவந்தனர். காஷ்மீர் சமூகத்துக்கு நேரெதிராகப் பெண்கள் செல்வாக்கு செலுத்தும் சமூகம் லடாக்கியர்களுடையது. ஆண்களுக்கு இணையாக பலதாரக் கலாச்சாரம் பெண்கள் மத்தியிலும் உண்டு.
வணிகக் கணக்குகள்

லடாக்கை முன்வைத்துப் பல வியாபாரக் கணக்குகள் இந்திய அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இருக்கின்றன. முக்கியமானது எரிசக்தி உற்பத்தி. சிந்து நதி பாயும் இடங்களில் வீச்சு அதிகம்; நீர் மின்சார உற்பத்தியைப் பெரிய அளவில் அதிகரிக்க முடியும். லடாக் பகுதியில் காற்றின் வேகம் பல மாதங்களுக்கு அதிகம். ஆகையால், காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். உயரமான பாலைவனப் பகுதியையும் உள்ளடக்கியது என்பதால், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நிலத்தை வெளியார் குத்தகைக்குக்கூட இங்கே எடுக்க முடியாது என்பதால், வெளிமாநிலங்களைச் சார்ந்த பெருநிறுவனங்கள் இங்கே கால் பதிக்க முடியாத நிலை இருந்தது. இனி, அவர்கள் அங்கே கால் பதிப்பர். இப்போதைய அரசின் முடிவுக்குப் பின்னணியில் இந்த வணிகக் கணக்குகளும் இருக்கின்றன.

எல்லாமும் கூடித்தான்  சுவையான எதிர்வினைகளை லடாக்கில் உருவாக்கியிருக்கின்றன!

 

https://www.hindutamil.in/news/opinion/columns/510245-majority-of-the-ladakh-people-support-the-bjp-decision-here-is-why.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.