Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் தகவல் களஞ்சியம்...........

Featured Replies

அதுவா ஜமுனா எல்லாம் அண்ணா பற்பொடி தான்... :P :P :P

எனக்கும் ஒரு பக்கட் அனுப்பி விடுங்கோ

:P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீடீர் அதிர்ச்சியின் போது உடலில் 70 மி.மீ இரத்த அழுத்தம் குறைகின்றது.......

ஞாபக சக்திக்கு ரோஜாப்பூ வாசம்

ரோஜாப்பூவின் வாசத்தை முகர்ந்து கொண்டே தூங்கினால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தூங்கும்பொழுது ரோஜாப்பூவின் வாசம் மூளையில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பகுதியை தூண்டி சிறப்பாக செயல்பட வைக் கிறதாம். இதனால் முதல் நாள் நடந்த 97.2 சதவீத நிகழ்வுகள் நமது ஞாபகத்தில் இருக் கும். சாதாரணமாக 86 சதவீத நினைவுத்திறன் தான் மனிதர்களுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஞாபகத்திறனை அதிகரிக்க நினைப்பவர்கள் ரோஜாபூவை கட் டிப்பிடித்து தூங்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளங்கன்று பயமறியாது' என்று சொல்வார்கள். இளைஞர்கள் விளைவுகள் பற்றிய பயமே இல்லாமல் ஆபத்தான செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபடுவார்கள் என்பதற்கு உதாரணமாகத்தான் இந்த பழமொழி கூறப்பட்டது.

சொல் புத்தியும் இல்லாது, சுய புத்தியும் இல்லாது இளம் வயதிலேயே தவறான வழிகளில் சென்று சீரழியும் இளைஞர்கள் எத்தனையோ பேர் உண்டு. எவ்வளவோ புத்திமதிகள் சொல்லப்பட்டாலும், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டாலும் போதைக்கு அடிமையாதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், பஸ்-ரெயில்களில் தொற்றிக்கொண்டு சாகசம் நிகழ்த்துதல் என பல ஆபத்துகளுடன் விளையாடுவதற்கு இளைஞர்களுக்கு நிகர் இளைஞர்கள்தான். இதற்கெல்லாம் இளைஞர்களின் மூளைதான் காரணம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

காரண காரியங்களை அறிந்து செயல்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதி 18 வயது முடிவடையும்போதுதான் முழுவளர்ச்சி அடைகிறதாம். இதனால் ஆபத்துக்களை அறிந்து கொள்வதோ, பயம் கொள்வதோ இளைஞர்களிடம் கிடையாது. உடலளவில் வளர்ந்தாலும் 18 வயது வரை மூளை வளர்ச்சியை பொறுத்தவரை இளைஞர்கள் ஒரு குழந்தைதான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனால் தான் புகைப்பிடிக்க, மது அருந்த குறைந்தபட்ச வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி எவ்வளவு பெரிய தவறையும் செய்து விட்டு `பச்சப்புள்ள தெரியாம செஞ்சுடிச்சுன்னு' சொல்லி தப்பிச்சுக்கலாம்ன்னு நினைப்பாங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலப்படாத மர்மம்!

உலகில் நம்மைச் சூழ்ந்து நமது கண்களுக்கு புலப்படாத மர்மமான அலைகள் சதா இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த மர்ம அலைகளை விஞ்ஞானிகள் மின்காந்த அலைகள் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த மாதிரியான கண்களுக்குப் புலப்படாத காதுகளினால் கேட்க முடியாத மர்ம அலைகள் உலகில் உள்ளன என்பதை முதல்முதலாகக் கண்டறிந்தவர் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்ற அறிஞராவார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்

பத்திரிகையை புரட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு புத்தம் புதிய வாசனைத் திரவியம் பற்றிய விளம்பரம் வந்திருக்கிறது. அந்த `சென்ட்' தரும் நறுமணம் `கும்'மென்று உங்கள் நாசியைத் தொட்டால் எப்படி இருக்கும்? நினைக்கவே சுவாரசியமாக இருக்கிறது அல்லவா? இது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. `சென்ட்வெர்டைசிங்' எனப்படும் மணம் வீசும் விளம்பரங்களின் யுகம் உதயமாகி இருக்கிறது. மேலை நாட்டுப் பத்திரிகைகளில் இது போன்ற `மணக்கும் விளம்பரங்கள்' வரத் தொடங்கி விட்டன. எதிர்கால இதழ்களில் எல்லாமே இப்படி மணம் வீசும் விளம்பரங்களாக மாறினால் ஆச்சரிப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். காரணம், மனிதனின் நுகர்வு உணர்ச்சிதான் மூளையில் முதலில் தாக்கத்தை ஏற்படுத்து கிறதாம். அடுப்படியில் அம்மா தாளிக்கும்போதே நமக்கு நாவில் நீர் சுரப்பது இல்லையா?

இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கிய பிரச்சினை எது தெரியுமா? காதல்தான்! ஆச்சர்யமாக இருக்கிறதா...அதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை இளம் வயதினருக்கு மட்டுமல்ல... நடுத்தர வயதினருக்கும் உள்ளது. காதலில் அப்படி என்னதான் பிரச்சினை? காதல்தான் பிரச்சினையே..

எது உண்மையான காதல் என்று தெரியாமல் வெறும் இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, புரியாமல்... உணராமல்.. செய்யும் காதல் எப்போதும் பிரச்சினைதானே.

தினமும் பத்திரிகை, டி.வி.யில் காதலியை ஏமாற்றிய காதலன் கைது... காதலன் வீட்டு முன்பு போராட்டம்...காதலன் அல்லது காதலி வெட்டிக்கொலை, ஆசிட் வீச்சு... தற்கொலை என்று காதல்(?) செய்திகள் பெருகி வருவது ஏன்? அது உண்மையான காதல் இல்லை என்பதே கசப்பான உண்மை.

டீன் ஏஜ் துவங்கும் போது உடலில் பலவித ரசாயன மாற்றங்கள் நிகழும். செக்ஸ் எண் ணங்கள் தோன்றும். அப்போது உடல் கவர்ச்சியை காதல் என்று நம்பி எதையும் செய்யத் துணிவார்கள். இந்த பிரபஞ்சமே காதலுக்காகத் தான் என்று நினைக்கத் தோன்றும். காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தவறான வழிகளில் செல்ல மனசு அலை பாயும்.

இப்படிப்பட்ட நிலையில், தன்னுடன் படிக்கும் மாணவி நன்றாக பேசிவிட்டால் போதும். உடனே தலைவரின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும். கடிதம், துரத்தல், சினிமா, பார்ட்டி, பீச் என்று காதல் களைகட்டும். இதற்கிடையில் படிப்பு பற்றி எங்கே நினைப்பது?

போதாக்குறைக்கு இன்றைய திரைப்படங்கள் வேறு காதல் பண்ணாவிட்டால் அது மாபெரும் குற்றம்.. காதல் பண்ணாதவன் மனிதனே இல்லை என்றும் கூறி வருகின்றன. மேலும் காதலை எப்படியெல்லாம் காட்டக்கூடாதோ அப்படியெல்லாம் காட்டிவருகின்றன.

இதையெல்லாம் பார்த்துவிட்டு அது கற்பனை என்பதை அறியாமல், நிஜத்தில் அரங்கேற்ற நினைத்து தனது வாழ்வை தொலைத்து வருகின்றனர் வாலிப வயதினர்.

பஸ்களில், ரெயில்களில், கோயில்களில், சினிமா தியேட்டர்களில் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில்கூட நாகரீகம் தெரியாமல் கட்டிப்பிடிப்பதும்.. முத்தம் கொடுப்பதும்.. காதல்தானாம். கண்டதும் காதல்...கொண்டதே கோலம் என்று பாஸ்ட்புட் போல் செய்யும் காதல் சீக்கிரமே ஆறி கெட்டுப்போய்விடுகிறது.

ஒரு பேரரசனாக இருந்தும், மனைவி மேல் கொண்ட காதலை மறக்காமல் தாஜ்மகால் கட்டினானே ஷாஜகான், அவன் நினைத்திருந்தால் மும்தாஜ் இறந்த பின்னர், ஆயிரம் கன்னியருடன் அந்தப்புரத்தில் ஜாலியாக இருந்திருக்க முடியும். ஆனால் கடைசிவரை மும்தாஜ் நினைவாகவே வாழ்ந்து இறந்தான். அப்படி செய்யவிடாமல் தடுத்தது எது? மும்தாஜ் மீது கொண்ட மாசற்ற காதல்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், காதலை உணராமல், மீடியாக்களின் தாக்கத்தாலும், பெருமைக்காகவும் வெறும் இனக்கவர்ச்சியால் செய்யப்படும் காதல் எப்போதும் பிரச்சினைதான்.

ஆதலால்தான் காதல் ஏமாற்றம் பெருகிவருகிறது. கர்ப்பம், கொலை, தற்கொலை, வெட்டுக்குத்து போன்ற வன்முறைகள் ஏற்படுகின்றன. இதை இன்றைய இளம்வயதினர் புரிந்து கொண்டால் சரி.Thanks to thinathanthi........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நத்தையால் பிளேடின் கூர்மையான பகுதி மீதும், எந்த காயமும் இன்றி ஊர்ந்து செல்ல முடியும்.

மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 50 கோடி தடவை சுவாசிக்கிறான்.

நமது மூளையில் 15 மில்லியன் செல்கள் உள்ளன.

வாழ்நாள் முழுவதும் நாம் சாப்பிடும் உணவின் எடை 100 யானைகளின் எடைக்கு சமம்.

இடது கால் `ஷூ'வை விட வலது கால் `ஷூ'தான் சீக்கிரம் தேய்கிறது.

புகை பிடிப்பவர்களை விட, புகை பிடிக்காத வர்களே அதிகம் கனவு காண்கிறார்கள் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உப்பு உயர்ந்தது

உப்புக்கு சமையல் அறையில் அவ்வளவு முக்கியத்துவம் யாரும் கொடுப்பதில்லை. பழைய பிளாஸ்டிக் டின் ஒன்றில் அதை கொட்டி வைத்திருப்பார்கள். உப்பை பலரும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்திருந்தாலும், அதில் உயர்ந்த மருத்துவ குணங்கள் உண்டு என்பதை பலரும் மறுப்பதற்கில்லை.

* பாசிப்பிடித்திருக்கும் குத்து விளக்கை பிரகாசிக்க வைக்க வினிகருடன் சிறிதளவு உப்பை சேர்த்து தேய்த்து பூசினால் போதும்.

*வீட்டில் எறும்பு தொந்தரவு இருந்தால், எறும்புகள் கூட்டமாக காணப்படும் இடத்தில் உப்பை சிதறினால் போதும். எறும்புகள் கலைந்து ஓடிவிடும்.

*குதிகால் வலி இருப்பவர் களுக்கு உப்பு சிறந்த வலி நிவாரணி. லேசான சுடுநீரை அரை பக்கெட் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒர பிடி உப்பு போட்டு கரைத்துவிட்டு, 15 நிமிடங்கள் காலை அதில் முக்கிவையுங்கள். பின்பு கால்களை குளிர்ந்த நீரில் முக்கி தேய்த்துக் கழுவினால் போதும். குதிகால் வலி நீங்கிவிடும்.

*பாதி அளவு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுங்கள். அதில் சிறிதளவு உப்பு சேருங்கள். அந்த கலவையில் டூத் பிரஷை முக்கி சிறிது நேரம் வைத்துவிட்டு அந்த பிரஷால் பல்லை துலக்கினால் பற்கள் நன்றாக பளிச்சிடும்.

*உப்பு சேர்த்த தண்ணீரில் தினமும் ஒரு முறை வாய் கொப்பளிக்கும் பழக்கம் இருந்தால், ஈறுகளில் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

* தொண்டை வலி இருப்பவர்கள் லேசான சுடுநீரில் உப்பு கலந்து தொண்டையில் படும் அளவிற்கு வாய் கொப்பளித்தால் போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக ஆடை அணிந்திருந்த அந்த இளைஞர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார்.

நேர்முகம் நடத்திய அதிகாரி அந்த இளைஞரிடம், ``சுத் தத்தைப் பொறுத்தவரையில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்'' என்றவர், ``நீங்கள் இந்த அறைக்குள் நுழை யும் முன் கதவருகில் உள்ள மிதியடியில் உங்கள் ஷுவை துடைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்'' என்றார்.

இளைஞன் உற்சாகமாகக் கூறினான்:

``ஆமா சார்''

அதிகாரி அமைதியாகக் கூறினார்:

``நேர்மையிலும் நான் மிகவும் கவனமாக இருப்பேன். கதவருகே எந்த மிதியடியும் இல்லை. நீங்கள் போகலாம்!''

  • கருத்துக்கள உறவுகள்

" உப்பிட்டவரை உள்ளளவும் நினை " என்பார்கள்.

உப்பின் பெருமை பேசிய பொன்னியையும் நினைப்போம். :(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.