Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`நீங்கள் கடவுளாக மாற முயற்சி செய்யாதீர்கள்!' - பாகிஸ்தான் மதமாற்ற நிகழ்வைக் கண்டித்த ஹர்பஜன் சிங்

Featured Replies

பாகிஸ்தானைச் சேர்ந்த குருத்வாரா தம்பு சாஹெப் என்பவரின் மகள் கடந்த சில நாள்களுக்கு முன் கடத்தப்பட்டுள்ளார். இறுதியில் அந்தப் பெண், துப்பாக்கி முனையில் குண்டர்கள் சிலரால் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், மதமாற்றப்பட்டு, அந்தப் பெண் கட்டாயத் திருமணம் செய்துவைக்கபட்டுள்ளார். அந்தப் பெண்ணை விடுவிக்காவிட்டால் குடும்பத்துடன் கவர்னர் மாளிகை முன் தற்கொலை செய்துகொள்வோம் என்று அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Victim's family
 
Victim's family

``சில குண்டர்கள் எங்கள் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, என் இளைய மகளைக் கடத்தியதால் எங்கள் குடும்பம் ஒரு சோகமான சம்பவத்தை எதிர்கொண்டது. அவர்கள் அவளை சித்ரவதை செய்து வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மாற்றினர். நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் ஒன்றையும் அளித்துள்ளார். உயர் அதிகாரிகள் பலரை சந்தித்தும் பேசினோம். ஆனால், யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. மீண்டும் அந்தக் குண்டர்கள் எங்கள் வீட்டுக்குள் புகுந்து, காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என்று எங்களை மிரட்டினர். மேலும், எங்களையும் மதம்மாறச் சொல்லி கட்டாயப்படுத்தினர்” என்கின்றனர் அவரது குடும்பத்தார்.

இது தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டுத் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசாவிடமும் மனு ஒன்றை அளித்துள்ளனர். ``அந்தக் குண்டர்கள் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டினர். புகாரை வாபஸ் வாங்காவிட்டால் கொன்றுவிடுவோம் என்று பயமுறுத்தினர். இது தொடர்பாக பிரதமரின் உதவியை நாடியுள்ளோம்” என்கிறார் அந்தப் பெண்ணின் சகோதரன். இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகப் போராட்டம் ஒன்றை நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில், அந்த யேஹ்சான் என்பவருக்கு அருகே அமர்ந்துள்ளார். திருமணம் செய்துவைக்கப்படுகிறது. அப்போது, அந்தப் பெண்ணிடம், `இஸ்லாத்துக்கு மாறியுள்ள உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்க, `ஆயிஷா’ என்கிறார். `நீங்கள் மதமாற்றத்துக்கு சம்மதிக்கிறீர்களா? ஏதேனும் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டீர்களா?’ என்று கேட்க ``இல்லை எனக்கு சம்மதம் தான்” என்கிறார் அந்தப் பெண்.

 

#Video
In yet another incident of forced conversion of minority community girls to Islam in #Pakistan, Jagjit Kaur (19), a #Sikh girl, daughter of Bhagwan Singh, a 'granthi' (priest) of Gurudwara Tambu Sahib, had gone missing for 3 days & resurfaced after marrying a Muslim man.

 
உட்பொதிக்கப்பட்ட வீடியோ
 
 
 
 
 

பின்னர், திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும். அந்தப் பெண் சம்மதத்துடன் நடந்ததா? அல்லது வற்புறுத்தலின் பேரில் நடந்ததா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்தச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

Harbhajan Singh
 
Harbhajan Singh

எல்லா மதங்களும் அழகானவை. யாரையும் மதம்மாற கட்டயாப்படுத்தக் கூடாது. கடவுள் ஒருவர்தான்; அவர்தான் நாம் எந்த மதத்தில் பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார். நீங்கள் கடவுளாக மாற முயற்சி செய்யாதீர்கள். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்து, இம்ரான்கானுக்கு டேக் செய்துள்ளார்.

 

This need to stop here.let’s not get there.every religion is beautiful.don’t force anyone to convert in any..GOD is one..let god only decide which religion we born in.don’t try to become god yourself.strict action should be taken towards this @ImranKhanPTI @DrSJaishankar https://twitter.com/capt_amarinder/status/1167302143985868800 

 
 

https://www.vikatan.com/news/world/forced-conversion-of-sikh-girl-in-pakistan

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை தமிழ் குண்டுதாரி பெண் ஞாபகம் வருகிறார் , அநேகம் இதில் காதல் சம்பந்தப் பட்டிருக்கலாமோ 

  • தொடங்கியவர்

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: 8 பேர் கைது!

 

பாகிஸ்தானில் சீக்கிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அந்த பெண் குடும்பத்தினரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஜக்ஜித் கவுர் (19) என்ற அந்த சீக்கிய பெண், கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

இதையடுத்து, தங்களது மகள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த குடும்பதினர் புகார் கூறும் வீடியோ ஒன்றை மஞ்சிந்தர் சிங் சிர்சா என்ற சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்ட பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. 

இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் கவனத்தை பெற்று அந்த சமூகத்தினர் மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதனிடையே, அந்த பெண்ணின் தந்தை பகவான் சிங் குருத்வாரா தம்பு சாஹிப்பின், மதக்குரு என தெரியவந்துள்ளது. 

இந்த விவகாரம் இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

https://www.ndtv.com/tamil/sikh-girl-allegedly-kidnapped-in-pakistan-returns-to-family-8-arrested-2093464?pfrom=home-topscroll

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.