Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது டோரியன் புயல்

Featured Replies

மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர்.

இதனிடையே அதி பயங்கரமான டொரியன் புயலை தான் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசுமுறை பயணமாக போலாந்து செல்ல இருந்த டிரம்ப், தனது பயணத்தையும் ரத்து செய்துள்ளார். இந்நிலையில் 5ம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த டோரியன் புயல் நேற்று காலை 12.40 மணிக்கு வடக்கு பஹாமஸ் அருகே உள்ள அபாகோ தீவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் வேகம் காரணமாக மரங்கள் பேயாட்டம் ஆடின. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக தரையைத் தாக்கின.

கடலோரக் குடியிருப்புகள் அனைத்தும் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தற்போது அபாகோ தீவில் புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புயலின் கண் பகுதி மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதால் டோரியன் புயல் இன்று இல்லது நாளை பஹாமஸ் தீவுகளைத் தாக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையும் தாக்கும் வாய்ப்பு இருப்பதைகவும் அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இதேபோன்ற சக்திவாய்ந்த புயல் கடந்த 1992ம் ஆண்டு பஹாமாவை தாக்கியபோது 65 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் டோரியன் புயலின் தாக்கம் அதிகம் இருக்கக் கூடும் என்ற தகவலால் கடலோரப் பகுதிகளில் குடியிருக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுங்குச் செல்லுமாறு மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஃபுளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா ஆகிய பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

https://www.polimernews.com/dnews/77976

  • கருத்துக்கள உறவுகள்

எங்களையும்(நியூயோர்க்)அணைத்து தான் போகும் போல தெரிகிறது.

  • தொடங்கியவர்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்களையும்(நியூயோர்க்)அணைத்து தான் போகும் போல தெரிகிறது.

ட்ரம்ப் நியூயோர்க்கை சேர்ந்தவர் மற்றும் முதமைச்சர் பழனிச்சாமி நியூயோர்க்கை வந்தடைந்து இருப்பதாலும்  டோரியன் பாதையை மாற்றி விடும் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

108579573_dorian_storm_satellite_02.09_640-nc.jpg

அமெரிக்காவினை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம்!

அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

டொரியன் புயலின் தாக்கம் காரணமாக சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த டொரியன் புயல், அதிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்தது.

இது மணிக்கு 260 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும், வீடுகள், கட்டடங்கள் சேதமடையக் கூடும் எனவும் அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஹாமா, அகோபா தீவுப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஐந்தாம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த டொரியன் நேற்று(திங்கட்கிழமை) காலை நிலைவரப்படி பஹாமாவிற்கு கிழக்கே 35 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இந்த புயல் பஹாமா, அகோபா தீவு பகுதியில் கரையை கடந்தபோது, மணிக்கு 295 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோரத்திலிருந்த வீடுகள் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.

இதன்போது 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட நிவாரண உதவிகள் வழங்கவும் 500 குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதி ஏற்படுத்தவும் செஞ்சிலுவை சங்கத்தின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 1992ஆம் ஆண்டு பஹாமாவை புயல் தாக்கியதில் 65 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்காவினை-தாக்கிய-டொ/

  • கருத்துக்கள உறவுகள்

2019-09-03T023022Z_1830110209_RC1121440C60_RTRMADP_3_STORM-DORIAN.jpg

டொரியன் புயலின் தாக்கத்தினால் ஐவர் உயிரிழப்பு – 5 இலட்சம் மக்கள் பாதிப்பு!

அமெரிக்காவினை அச்சுறுத்தும் டொரியன் புயலின் தாக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரீபியன் தீவுக்கு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயலுக்கு ‘டொரியன்’ என பெயரிடப்பட்டது.

இந்தநிலையில் அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

டொரியன் புயலின் தாக்கம் காரணமாக சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த டொரியன் புயல், அதிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்தது.

இது மணிக்கு 260 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும், வீடுகள், கட்டடங்கள் சேதமடையக் கூடும் எனவும் அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஹாமா, அகோபா தீவுப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஐந்தாம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த டொரியன் நேற்று(திங்கட்கிழமை) காலை நிலைவரப்படி பஹாமாவிற்கு கிழக்கே 35 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இந்த புயல் பஹாமா, அகோபா தீவு பகுதியில் கரையை கடந்தபோது, மணிக்கு 295 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோரத்திலிருந்த வீடுகள் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.

பஹாமாசின் பல்வேறு பகுதிகளில் மின்இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட நிவாரண உதவிகள் வழங்கவும் 500 குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதி ஏற்படுத்தவும் செஞ்சிலுவை சங்கத்தின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டொரியன் புயல் அமெரிக்காவை நோக்கி செல்லும் நிலையில், அங்குள்ள கிழக்கு கடலோர பகுதியில் வசிந்து வந்த ஐந்து இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 1992ஆம் ஆண்டு பஹாமாவை புயல் தாக்கியதில் 65 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

108579573_dorian_storm_satellite_02.09_640-nc-1.jpg

108579573_dorian_storm_satellite_02.09_640-nc-1.jpg

108591503_tv056217798.jpg

108591565_tv056217778.jpg

AP17267538801263-e1506339641551.jpg  download.jpg

image.jpg

ap_florida_hurricane_Dorian_2sep19-1.jpg

http://athavannews.com/டொரியன்-புயலின்-தாக்கத்த/

  • தொடங்கியவர்

 

 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் பஹாமா நாட்டைக் கடந்த டோரியான் புயல் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புளோரிடா, கரோலினா மாகாண ஆளுநர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனவே இது தொடர்பான பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

https://www.hindutamil.in/news/world/514158-hurricane-dorian-historic-tragedy-in-bahamas-1.html

  • தொடங்கியவர்

டோரியன் புயல் தொடர்பில் டிரம்ப் வரைபடத்தால் சர்ச்சை

coltkn-09-06-fr-01161523265_7351496_05092019_MSS_CMY.jpg?itok=j1LnINlP

 

டோரியன் புயல் நகர்வு குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தவறான ட்விட்டர் பதிவை நியாயப்படுத்தும் வகையில் வரைபடம் திருத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மிக பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் 5ஆம் வகைப் புயலாக மாறி பஹாமஸ் தீவுகளை சிதைத்த டோரியன் புயல், அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை நோக்கி நகர்கிறது. ஜார்ஜியா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினா, விர்ஜீனியா கடலோரப் பகுதிகளில் அது இன்று வரை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டோரியன் புயல் அலபாமா மாநிலத்தை தாக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

டோரியன் புயல் அலபாமாவைத் தாக்கும் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வ வரைபடமும் கூறாத நிலையில், அவர் இப்படி பதிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டோரியன் புயல் நகர்வு குறித்த வரைபடத்தைக் காண்பித்தார். அதில், அலபாமாவையும் டோரியன் தாக்கும் என்பதைக் குறிப்பிடும் வகையில் கறுப்பு வண்ணத்தில் திருத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இது திருத்தப்பட்ட வரைபடமா? என்று கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என டிரம்ப் பதில் அளித்தார். ஆனால், அலபாமாவை டோரியன் தாக்க வாய்ப்பில்லை என தேசிய புயல் மையம் கூறியுள்ளது. புயல் தொடர்பான அதிகாரப்பூர்வ வரைபடத்தைத் திருத்துவது சட்டவிரோதமாக பார்க்கப்படும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் வெள்ளை மாளிகையில் நடைபெற்று இருப்பது சர்ச்சையாகியுள்ளது.

https://www.thinakaran.lk/2019/09/06/வெளிநாடு/39880/டோரியன்-புயல்-தொடர்பில்-டிரம்ப்-வரைபடத்தால்-சர்ச்சை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.