Jump to content

திருக்குறள் பொது நூலா?


Recommended Posts

Posted

(ஈ) 'சத்தப்பிரமவாதி' அல்லர்

சத்தப் பிரமவாதிகள் காரணமாகிய கடவுள் (பரப்பிரமம்) இறுதிக் காலத்தில் ஒலி (சத்த) வடிவிற்றா யிருக்கும்; அஃது அறியாமையினால் (அவிச்சையினால்) 'சடமும்' 'சித்துமாய' உலகங்களாய் விரியும்; முடிவில் 'சத்தமாத்திரமே' உள்ளது; இவ்வாறு அறிவதே 'முத்தி' என்பர். தெய்வப்புலவர்,

ரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். 1062

என்றும் "ஆதி பகவன் முதற்றே உலகு" என்றும் அருளியிருத்தலினாலே 'பிரமத்துக்கு வேறாய் உலகு' உண்டென்றும், அவ்வுலகத்துக்குக் கருத்தா 'ஆதி சத்தி' யோடு கூடிய எண்குணனாகிய 'பகவன்' என்றும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேரா தார். 10

என்றும் அருளியிருத்தலினாலே 'அடிசேர் முத்தியே முத்தி' என்றும் உடம்படுகின்றார். அன்றியும் தமது தமிழ் மறையில் ஓரிடத்திலாவது ஒலிவடிவக் கடவுளைப் (சத்த வடிவப் பிரமத்தைப்) பற்றிக் கூறவில்லை. ஆகையால் தெய்வப் புலவர் 'சத்தப்பிரம வாதி' அல்லர்.

  • Replies 130
  • Created
  • Last Reply
Posted

(7) 'சாங்கியர்' அல்லர்

சாங்கிய மூலப்பகுதி 24ஆம் தத்துவம்; புருடன் 25 ஆம் தத்துவம்; மூலப் பகுதியின் திரிபு (பரிணாமம்) புத்தி; அதுவே மான் என்றும் அந்தக் கரணம் என்றும் பெயர் பெறும்; மூலப் பகுதியையும் புருடனையும் பகுத்துணர்வதால் 'அவிச்சை' நீங்குவதே முத்தியென்பர்.

உத்தரவேதமுடையார் தமது தெய்வ நூலில் (மண் முதல் நாத மீறாகிய முப்பத்தாறு) தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவராகிய (அதீதராகிய) 'ஆதி பகவனை' வாழ்த்துதலினாலும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது 7

என்றும்,

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. 8

என்றும் அருளுதலினால் சாங்கியர் கூறும் 'அவிச்சை' நீங்குவதே முத்தியென்பதை உடம்படாமையினாலும் 'சாங்கியர்' அல்லர்.

Posted

(8) 'யோகமதத்தர்' அல்லர்

யோகமதத்தர், நிலம் முதல் ஆன்மா (புருடன்) ஈறான இருபத்தைந்து தத்துவங்களுக்கு மேல் இருபத்தாறாம் தத்துவம் இறைவன்; அவனே சாத்திரங்களை அருளிப் 'புருட' ருக்கு ஞானத்தை அறிவுறுப்பன் என்பர்.

நம் தமிழ்மறையுடையார், தமது வாயுறைவாழ்த்தில், (நாதாதீத பரசிவனாராகும்) ஆதி பகவனைக்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. 9

என்பது முதலிய திருக்குறள்களால் வலியுறுத்தி வாழ்த்தியிருத்தலால் அவர் 'யோகமதத்தர்' அல்லர்.

Posted

(9) 'பாஞ்சராத்திரி' அல்லர்

பாஞ்சராத்திரிகள், 24 ஆம் தத்துவம் குணதத்துவம், 25 ஆம் தத்துவம் 'வாசுதேவ' னாகிய கடவுள் (பரம்பொருள்); அவனிடத்தில் தோன்றிய (கண்ணன், அநிருத்தன், மகரத்துவசன், இரெளகிணேயன் எனும்) நான்கு அணிகளால் (வியூகர்களால்) 'சடமுஞ் சித்துமாகிய' எல்லா உலகங்களும் படைக்கப்பட்டன; ஆகலான் எல்லாம் 'வாசுதேவன்' 'பரிணாமமே' யென்றறிந்து, 'பாஞ்சராத்திர' முறையே தீக்கை பெற்று, 'வாசுதேவனை' வழிபட்டு 'வாசுதேவன்' உருவில் அடங்கி விடுதலே (இலயமாதலே) முத்தியென்பர்.

திருவள்ளுவர் நாயனார், உலக காரணன் தத்துவாதீதனாகிய 'ஆதி பகவன்' என்றும், (அவன் வாசுதேவனிடமில்லாத சிவகுணங்களாகிய தன்வயமாதி 'எண்குணம்' உடையவனென்றும்) அவனடியிற் சார்ந்து இன்புற்று நிற்பதே முத்தியென்றும் அருள்கின்றமையினாலே அவர் 'பாஞ்சராத்திரி' அல்லர்.

Posted

(10) 'பாசுபதர்' அல்லர்

பாசுபதர், ஆன்மாக்கள் பல; ஆணவமல மென்பதொன்றில்லை; மாயை கன்மங்களே உண்டு; இவற்றின் உவர்ப்பால் தீக்கை யுற்றவனை ஈசன் ஞானம் பற்றும்; அப்போது ஈசன் தன் குணங்களை அவன்பாற் பற்றுவித்துத் தான் 'அதிகாரத்தின் ஒழிவு' பெற்றிருப்பன் என்பர். நாயனார்,

*இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

[ * ஏக னநேக ரிருள்கரும மாயையிரண்

டாகவிவை யாறாதி யில்.

என்ற திருவருட்பயன் திருக்குறள், இருள் என்றது ஆணவமலமென உணர்ந்து தலைக் காண்க.]

என்ற திருக்குறளால் இருளெனப் பெரிய ஆணவமலம் உண்டென்றும்,

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. 4

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. 7

எனும் திருக்குறள்களால் (ஈசனுடைய அதிகாரத்தைப் பெறாது) அவனடியிற் சார்ந்தின்புற் றிருப்பதே முத்தியென்றுங் கூறுகின்றார். ஆகையால் நாயனார் 'பாசுபதர்' அல்லர்.

Posted

(11) 'மாவிரதர்' அல்லர்

மாவிரதர் பாசுபதர் கூறிய முறையே ஆன்மாக்களின் இயல்பைக் கூறி, தங்கள் சாத்திர முறையே தீக்கை பெற்று எலும்பு மாலை யணிதல் முதலிய சரியைகளின் வழுவா தொழுகின் முத்தி உண்டென்றும், முத்தருக்குச் சிவனோடு சமமான எல்லாக் குணங்களும் தோன்றும் (உற்பத்தியாம்) என்றுங் கூறுவர். தெய்வப்புலவர்,

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. 9

என்பது முதலிய திருக்குறள்களால் சிவாகம நெறியே மூர்த்தி வழிபாடும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. 7

என்பது முதலிய திருக்குறள்களால் அடிசேர் முத்தியும் கூறுகின்றதனால் 'மாவிரதர்' அல்லர்.

Posted

(12) 'காபாலி' அல்லர்

காபாலிகள் ஆன்மாக்கள் இயல்பும் பந்த இயல்பும் மாவிரதரை ஒப்புக்கொண்டு, தங்கள் சாத்திர முறையே தீக்கை பெற்றுப் பச்சைக்கொடி ஒன்றைக் கைக்கொண்டு நாடோறும் மனிதர் தலையோட்டில் ஐயமேற்றுண்டு செயலற்று மோனியராய்(உன்மத்தராய்) நிற்பவரிடத்தே சிவன் புகுந்தியக்குதலால் (சிவனாவேசித்தலால்) எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமமாதல் முத்தியென்பர்.

நாயனார் 'காபாலிகள்' கூறுகின்ற சரியை நெறியை உடம்படாமையானும், அடிசேர் முத்தியையே சிறப்பாகக் கொண்டிருத்தலானும் அவர் 'காபாலி' அல்லர்.

Posted

(13) 'வாமி' அல்லர்

வாமிகள், 'சடமுஞ் சித்து' மாகிய அனைத்துலகும் அம்மையின் திரிபே (சத்தியின் பரிணாமமே) என்றும், வாம நூலில் விதித்த முறையே ஒழுகி அருள் அம்மையின் அடங்குதலே (சத்தியில் இலயித்தலே) முத்தியென்றுங் கூறுவர். நான்முகனார்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்றும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. 7

என்றும், தமது முப்பானூலில் முதல்வனை வாழ்த்தியதனானும்,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். 1062

Posted

என்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்றும் கூறியதனால் 'சத்தியின் பரிணாமம்' உலகென்பதனை உடம்படாமையானும், அடிசேர் முத்தி கூறுதலானும்,

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றுங்

கட்காதல் கொண்டொழுகு வார். 921

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார். 922

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 926

என்பன வாகிய திருக்குறள்களால் வாமிகளுக்குடம்பாடான கள்ளுண்ணலையும்,

Posted

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும். 321

என்பது முதலிய திருக்குறள்களால் கொலையையும்,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் 251

என்பது முதலிய திருக்குறள்களால் புலாலுண்ணலையும்,

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281

என்பது முதலிய திருக்குறள்களால் களவாடலையும் மறுக்கின்றதனானும் நாயனார் 'வாமி' அல்லர்.

வாமிகளுக்குக் கொலை, களவு முதலியவை உடம்படாடென்பதற்குப் பிரமாணம்,

வாழவே வல்லை வாமி வலக்கைதா என்னு யிர்க்குத்

தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய்;

கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே

சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே.

-சித்தியார் பரபக்கம் - 26.

Posted

(14) 'வைரவர்' அல்லர்

வைரவர் பெரும்பாலும் வாம மதத்தோடொத்துச் சிறுபான்மை சீலங்களால் (ஆசாரங்களால்) வேறுபட்டு வயிரவனே பரம்பொருள் எனக் கொண்டு வைரவ பதத்திற் சேர்வதே முத்தியென்பர்.

பெருநாவலர், வைரவர் கூறுகின்ற 'ஆசாரங்களை' மறுக்கின்றமையானும், வைரவர்கு வேறாகிய 'ஆதி பகவனை' வாழ்த்துகின்றதனானும் அவர் 'வைரவர்' அல்லர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜயா ஊரில வைரவருக்கு நாய் வாய்ச்ச மாதிரி வந்து வாய்ச்சாய் என்று திட்டுவாங்கள் அதற்கு என்ன ஜயா அர்த்தம் அந்த வைரவரை பற்றி தானே நீங்கள் கதைக்கிறீங்க.

:)

Posted

இந்தக் கதையை இப்போது தான் கேட்கிறேன் நண்பரே!

(15) 'ஐக்கவாதசைவர்' அல்லர்

அயிக்கவாத சைவர் ஆணவமலமென்ப தொன்றில்லை; மாயா கன்ம மலங்களே உள்ளன; ஆன்மாக்களின் இருவினைகளுக் கீடான உடல் முதலியவைகளை (சரீராதிகளை) யடைந்து வினைகளை விரும்பி (ஆர்ச்சித்து) வினைப் பயன்களை அருந்தி வருகின்ற காலத்திலே இருவினையொப்பு வந்த ஆன்மா கடவுளருளாலே பந்தமெலாங் கழிந்து தனக்கு முன்புள்ள மாசற்ற நிலையை அடையும் என்பர்.

நாயனார் இருண்மலமாகிய ஆணவ மலத்தை உடம்படலானும், இறைவனடி சேர்ந்தின்புறு முத்தியை உடம்படலானும் 'அயிக்கவாத சைவர்' அல்லர்.

Posted

(16) 'பாடாணவாத சைவர்' அல்லர்

பாடாணவாத சைவர் ஆணவமலம் ஆன்மாவுக்குக் குணம் போல இயல்பாய்த் தொன்மையே (சகசமாயநாதியே) உள்ளது. அதனால் மாயை கன்மங்கள் ஆன்மாவைத் தலைக்கூடும்; பாசஞான மெல்லாந் தன்கீழ் விரவல் என்று (வியாப்பியமென்று) அறிந்து நீங்குதன் மாத்திரையே முத்தி; முத்தி பெற்ற வழியும் 'சகசமலமாகிய' ஆணவமலம் நீங்குதலின்றிச் சுட்டறிவும், இன்ப துன்ப நுகர்வுமற்று (சுகதுக்காநுபவங்களுமற்று). ஆன்மா கல்லைப் (பாடாணம்) போற் கிடக்கும் என்பர். பெருநாவலர்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

என்ற திருக்குறளில் இறைவன் புகழை விரும்பினாரிடத்தே ஆணவமலத்தின் காரணமாகப் பொருந்துகின்ற இருவினைகளும் நீங்குமென்றதனால், காரணம் நீங்காதபோது அதனால் வருகின்ற வேதனைகள் (உபாதிகள்) முற்றிலும் பின் தோன்றுதலின்றி (செனிப்பின்றி) நீங்காவகையாலும், காரணமாகிய ஆணவமல ஆற்றல் (சத்தி) கெட்டாலன்றி அதனாற் சார்ந்து வருகின்ற வினைகள் கெடா வகையாலும், வினைகள் நீங்குமென்றதனானே வினைகளுக்குக் காரணமாயுள்ள ஆணவமல 'சத்தி' நீக்கமும் நாவலருக்கு உடம்பாடென்றும்,

என்ற திருக்குறளால் இறைவனடி சேர்ந்தின்புற்று வாழ்தலாகிய முத்தியே உடம்பாடென்றும் பெறப்படுவதால், நாயனார் 'பாடாணவாத சைவர்' அல்லர்.

Posted

(17) 'பேதவாத சைவர்' அல்லர்

பேதவாத சைவர் மும்மலங்களும் அநாதி; கரணங்களிற் சென்ற தன்னறிவு பக்குவத்தில் தன் மாட்டொன்றி, ஆதரவின்றி (நிராதாரமாய்) நிற்கும்; இறைவனருளால் மும்மலங்களும் நீங்கிய ஆன்மா பெறுவானும் பேறுமாயிருக்கும்; அதன் மேலும் அடிமையாதலில்லையென்பர்.

முதற்பாவலர்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

என்ற திருக்குறளால் மாயா கன்ம மலங்கள் ஆகந்துகம் என்றும்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேரா தார். 10

என்ற திருக்குறள்களால் இறைவனடியிற் கலந்து அவனருளிய ஆனந்தத்தையுண்டு வாழ்தலே முத்தியென்றுங் கூறுதலால், நாயனார் 'பேதவாத சைவர்' அல்லர்.

Posted

(18) 'சிவசமவாதசைவர்' அல்லர்

சிவ சமவாத சைவர், பதி ஞான, பசு ஞான, பாச ஞானங்கள் அநாதியே உள்ளன; புழு வேட்டுவனை நினைந்து வேட்டுவனாகி அதன் தொழிலையும் இயற்றி நிற்றல்போல, ஆன்மா பதியை நினைந்து அதன் வடிவுற்று அதன் தொழிலை இயற்றி நிற்பதே முத்தியெனக் கூறுவர்.

தேவர் இறைவனடி சார்ந்தின்புற்று வாழ்தலே முத்தியென,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்ற திருக்குறளால் வலியுறுத்திக் கூறுவதால், அவர் 'சிவசமவாதசைவர்' அல்லர்.

Posted

(19) 'சிவசங்கிராந்தவாதசைவர்' அல்லர்

சிவசங்கிராந்தவாத சைவர் ஆன்மாவின் சந்நிதியிற் காந்தபசாசம் போல உடல் இயங்குழி அதன்கணின்று கருவிகளே விடயங்களை அனுபவிக்கும், மலம் நீங்கும் வழி, கண்ணாடியின் முகவொளி தோற்று மாறு போல முதல்வன் திருவருள் ஆன்மாவின் மாட்டுச் சங்கிரமித்துத் தோன்றும், அவ்வழி உப்பளத்தில் இட்டவையெல்லாம் உப்பாமாறு போல ஆன்மா சிவமேயாய் அவ்வான்மாவின் சந்நிதியில் அறிவனவாகிய பசு கரணங்களுஞ் சிவகரணங்களாய் மாறுஞ் சித்தியுற்றுச் சிவத்தை அறியுமென்பர். இவர் கூறும் முத்தி சித்தி முத்தியாகும். திருவள்ளுவ நாயனார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. 25

என்றும்,

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 27

என்றுங் கூறுமாற்றால் சடவத்துக்களாகிய இந்திரியங்களுக்கு வேறாய ஆன்மாவே அறியுமென்றும்,

Posted

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய். 259

என்று கூறுமாற்றால் உயிர்களுக்கு முதல்வன் சார்பில் வழி அறிவு விளங்கப் பெறுவதில்லை என்றும் சிவசங்கிராந்தவாத சைவர் கூறும் சித்தி முத்தியை உடம்படாது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேரா தார். 10

என்று கூறுமாற்றால் அடிசேர் முத்தியே முத்தி என்றும் கூறுவதால் திருவள்ளுவ நாயனார் 'சிவசங்கிராந்தவாத சைவர்' அல்லர்.

Posted

(20) 'ஈசுரவ விகாரவாத சைவர்' அல்லர்

ஈசுரவ விகாரவாத சைவர், பல துளைக்குடத்துத் தீபம் போல நவத்துவார சரீரத்தில் அறிவாய் நிற்கின்ற ஆன்மா, மலபரிபாகஞ் சத்தினிபாதமுற்ற அளவில் முதல்வன் திருவருளால் ஞானத்தைப் பெற்று, வெயிலில் துன்புற்ற ஒருவன் மர நிழலடைந்து ஆறுவது போல அம்முதல்வன் திருவடி நிழலைத் தலைக்கூடிப் பின் முதல்வனது உதவியை (உபகாரத்தை) அவாவாது என்பர். நாயனார்,

* விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186

[*விளக்கு - சிவஞானம், இருள்-ஆணவம்]

  • 5 months later...
  • 4 weeks later...
Posted

(21) 'சிவாத்துவித சைவர்' அல்லர்

சிவாத்துவித சைவர், மரத்தில் விரவிய (வியாப்பியமான) கவடு கோடு முதலியன வெல்லாம் மரமே யாமாறு போலச், 'சத சத்துக்கள்' ஆகிய உயிர்களும் 'அசத்துக்கள்' ஆகிய பாசக் கூட்டங்களும் குண குணிகட்குத் தம்முள் உளதாகிய வேற்றுமையைப் போலச் 'சத்துக்கு' உட்பேதமே யன்றிப், புறப்பேத மின்மையான் அவையனைத்தும் 'சத்து' எனவே படும். படவே, பதித் தன்மையின்வேறாய் உயிருக்கு அறியுந் தன்மை உண்டென்னில் தனித்த முதலெனப்பட்டு வழுவாமாகலின் 'சத்து' ஆகிய பதிப்பொருளே உயிர்களினிடமாக நின்றறியும் என்பர். ஆகவே இவர் கூறுவது 'நிமித்த காரணம்'. நாயனார்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்பது முதலிய திருக்குறள்களால் 'கடவுள் வாழ்த்து' என்னும் அதிகாரத்தில், முதல்வனின் வேறாக உயிர்கள் உண்டென்றும்,

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு. 1110

என்று கூறுமாற்றால் உயிர்களுக்கு முறை முறையாக விளங்கப் பெறும் அறியுந் தன்மை உண்டென்றும் கூறுவதனாலும், சிவாத்துவித சைவர் கூறும் 'நிமித்தகாரண பரிணாம வாதம்' யாண்டுங் கூறாமையானும் நாயனார் 'சிவாத்துவித சைவர்' அல்லர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எங்களுக்கும் புரியுற மாதிரி சொல்லுங்கோவன்......... இல்லாட்டி இதுகள ஒட்டி புண்ணியம் அடையலாம் எண்டு ஒட்டுறியளோ............ :mellow:

Posted

(அ) 'சுத்தசைவர்' அல்லர்

சுத்தசைவர் சித்தாந்த சைவரொப்பப்பதி, பசு, பாச இயல்புகளைக் கொண்டாலும் முத்தியில் உயிரானது சிவத்தில் அடங்கி (பரம்பொருளிடத்து அயிக்கமுற்று) ஒரு பயனும் ஓரின்பமும் (ஓரானந்தமும்) இன்றி நிற்குமென்பர். செந்நாப்போதார்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். 362

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். 369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். 370

Posted

என்றும்

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

என்றுங் கூறுமுகத்தால் பெத்த நீக்கமும் முத்திப் பேறாகிய இறையின்பப் பேறும் (சிவானந்தப் பிராப்தியும்) உடம்படலால் தெய்வப் புலவர் 'சுத்த சைவர்' அல்லர்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.