Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..! நீங்களும் ரசிகயமாக வைத்துக்கொள்ளுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..! நீங்களும் ரசிகயமாக வைத்துக்கொள்ளுங்கள்

 

கூகுளின் பிறந்தநாளான இன்று கூகுள் நிறுவனம் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

 
 
 
 
 
71325748.jpg
Google Facts: கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது.....
இன்றைய உலகம் தொழிற்நுட்பத்தால் நிறைந்து கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக தொழிற்நுட்பத்தை பயன்படுத்தத் துவங்கிவிட்டால் பெரு நகரங்களில் இருப்பவர் முதல் கிராமத்தில் இருப்பவர் வரை செல்போன் இல்லாமல் இருக்கும் நபரைப் பார்க்கவே முடியாது அந்த அளவிற்கு செல்போன் பயன்பாடு மக்களுக்கு வந்துவிட்டது.
 
 
 

செல்போனில் இன்டர்நெட் வசதி வந்ததும் அத்தனை பேரும் பார்க்கும் ஒரு இணையதளம் என்றால் அது கூகுள் தான், எனக்குத் தெரியாத தகவல்களைப் பெறுவது, நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வது, மற்ற நபர்களைத் தொடர்புகொள்வது முதல் நம் செல்லில் இன்டர்நெட்ட கனெக்ட் ஆகிவிட்டதா என்பதை செக் செய்யக் கூட இன்று கூகுள் தளத்திற்குச் சென்று தான் பார்க்கிறோம்.

அப்படி மக்கள் வாழ்வோடு வாழ்வாகக் கலந்து போன கூகுளின் 21வது பிறந்தநாள் இன்று. 1998ம் ஆண்டு இதே நாளின் தான் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் பயின்ற இரண்டு மாணவர்களால் துவங்கப்பட்டது. இந்த கூகுள் நிறுவனம்.
 

இன்று அந்த நிறுவனம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை மேலே நீங்கள் படித்தீர்கள். ஆரம்பத்தில் ஒரு கார் கராஜில் துவங்கிய இந்நிறுவனம் தற்போது 40 நாடுகளில் 70 அலுவலகங்களைக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது.


நமக்கு எல்லாம் ஆசானாக இருக்கும் கூகுளின் பிறந்தநாளில் கூகுள் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம்.

லாரிபேஜ் - ஸ்ர்கேபிரைன்
 
Master.jpg
 


1995ம் ஆண்டு டாக்டர் பட்டம் குறித்த படிப்பிற்காக லாரி பேஜ் மற்றும் சேர்கே பிரைன் என்ற இரண்டு நண்பர்கள் ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் சேர்ந்தனர். அங்குதான் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் 1998ல் உருவாக்கிய ஒரு தளம் தான் கூகுள்

கூகுள்- பேக் ரப்

1996ம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் சேர்கே பிரைன் சேர்ந்து வெப் க்ராலிங் டூலை வடிவமைத்தனர். அதற்கு பேக்ரப் என பெயரிட்டனர். அப்பொழுது அவர்கள் அதன் கட்டமைப்பில் தான் இருந்தனர்.

கூகுள்

1997ம் ஆண்டு செப் 15ம் தேதி லாரி பேஜ் மற்றும் சேர்கே இருவரும் சேர்ந்து கூகுள் தளத்தின் பெயரை வாங்கினர். இந்த பெயர் கூள்கோள் எனும் பூஜ்ஜியத்தைக் குறிக்கும் சொல்லாகும். இதற்கு இன்பினிட்டி என்ற பொருளும் இருக்கிறது.

கூகுள் டூடுல்

இன்று ஒவ்வொரு நிகழ்வுக்கும் கூகுள் புதிய டூடுலை வெளியிடுவது பலரை ரசிக்க வைக்கிறது. அப்படியாக முதன் முதலாக வெளியான கூகுள் டூடுல் எது தெரியுமா? அமெரிக்காவில் நடக்கும் மனித எரிப்பு எனும் நிகழ்வுக்காகத் தான் முதன் முதலாகக் கூகுள் டூடுலை பயன்படுத்தியது.

முதல் அலுவலகம்

கூகுள் தளம் துவங்கப்பட்ட பின்பு அதை நடத்த ஒரு இடம் வேண்டும் எனப் பார்க்கப்பட்டது. ஆனால் அது ஆரம்பக்கட்ட நிறுவனம் என்பதால் பணம் இல்லாத காரணத்தால் முதல் முதலாக ஒரு கார் செட்டில் தான் கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டது.

வளர்ச்சி

கூகுள் நிறுவனம் துவங்கிய புதிதிலேயே பெரும் வளர்ச்சியைக் கண்டது. அதன் விளைவாக 2000வது ஆண்டிலேயே நியூயார்க்கில் அலுவலகத்தைத் துவங்கியது. ஆனால் அது ஸ்டார்பக்ஸ் கபே. முதலில் ஒரே ஒரு பணியாளுடன் இந்த அலுவலகம் துவங்கப்பட்டது.

ஜிமெயில்

இதன் வளர்ச்சி அவர்களே எதிர்பாராத அளவிற்கு இருந்தது. இந்த வளர்ச்சியை அதற்க அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது ஜிமெயில் தான். முதன் முதலாக 2004ம் ஆண்டு ஏப்1ம் தேதி ஜிமெயில் துவங்கப்பட்டது. ஆனால் இந்த செய்தி வெளியானதும் பலர் அதை ஒரு காமெடி என்றும், போலி செய்தி என்றும் நினைத்தனர். ஆனால் இன்று ஜிமெயிலை பயன்படுத்தாத ஆளே இல்லை எனச் சொல்லி விடலாம்.


2 ஆண்டுகளில் உலக பிரபலம்

ஜிமெயில் துவங்கப்பட்டதும். உலகம் முழுவதும் பரவியது. ஆனால் சில நாட்டு மக்கள் ஆங்கிலம் படிக்க முடியாமல் திணறினர். அவர்களுக்காக முதல் 2 ஆண்டுகளிலேயே பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்வீடிஸ், ஃபின்னிஷ், ஸ்பானிஷ், போர்த்திகீஸ், டச், நார்வேகியன், தானிஷ் ஆகிய மொழிகளில் தங்கள் சேவைகளைத் துவங்கியது. உலகில் பெரும் பகுதிகளிலிருந்து பயன்பாட்டாளர்களைப் பெற்றது கூகுள்

கூகுள் இமேஜ்

2001ம் ஆண்டு கூகுள் சர்ச் இன்ஜினின் அடுத்த கட்ட மேம்பாடாகக் கூகுள் இமேஜை கொண்டு வந்தது. இது பெரும் வரவேற்ப்படை பெற்றது. ஆரம்பத்தில் சுமார் 250 மில்லியன் புகைப்படங்களை தன்னுள் கொண்டிருந்தது. இன்று அதன் எண்ணிக்கையைக் கணக்கிடவே முடியாது.

கூகுள் நிறுவனம்

கூகுள் சிறிய ஸ்டார்ட் ஆப்பில் இருந்து நிறுவனமாக மாறியது. இதைப் பார்த்ததும் பல தொழிலதிபர்கள் ஷாக்காகினர். கூகுள் தனது நிறுவனத்திலிருந்து 1.9 கோடி பங்குகளை ஒரு பங்கிற்கு 85 டாலர் என்ற கணக்கில் விற்றது. அந்த பணத்தைக்கொண் நிறுவனத்தை பெரியதாக்கி விரும்பியது.


இலவச வை-பை

2006ம் ஆண்டு கூகுளின் தலைமையிடம் இருக்கும் பகுதியாக கலிஃபோர்னியாவின் மவுண்டெயின் வியூ பகுதியில் இலவச வை-பை வசதியை அறிமுகப்படுத்தியது.

வீடியோ டூடுல்

கூகுள் முதன் முதலாக ஜான் லீனனின் 70வது பிறந்தநாளுக்குத் தான் முதல் வீடியோ டூடுலை அறிமுகப்படுத்தியது.

கூகுள் பிளேக்ஸில் டைனோசர்
 
Master.jpg
 



கூகுள் தலைமையிடமான கூகுள் பிளக்ஸ் பகுதியில் டி-ரக்ஸ் டைனோசர் சிலை இருக்கிறது. அதன் அர்த்தம் நாம் எந்த காலத்திலும் இது போல் அழிந்து போய்விடக் கூடாது என்பதாகவும்,


இலவச உணவு

உலகிலேயே முதன் முறையாகக் கூகுள் நிறுவனம் தன் நிறுவன ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கியது. இது மட்டுமில்லாமல் அவர்களது வீட்டு செல்ல பிராணிகளையும் அவர்களுடன் எடுத்துவர அனுமதித்தது.

யூடியூப்

கூகுள் நிறுவனம் 2006ம் ஆண்டு யூடியூப் நிறுவனத்தை 1.5 பில்லியின் டாலருக்கு வாங்கியது. இன்று யூடியூபில் மாதம் 2 பில்லியன் பயன்பாட்டாளர்கள் சுமார் 400 மணி நேரத்திற்கும் அதிகமாக வீடியோக்களை பார்க்கின்றனர்.

தேடுதல்

கூகுளில் மக்கள் தேடும் வார்த்தைகள் அவற்றில் உள்ள வார்த்தைகளில் வெறும் 15 சதவீதம் தான். மற்ற வார்த்தைகளை மக்கள் தேடுவதேயில்லை யாம். இருந்தாலும் கூகுள் அந்த வார்த்தை பாட்டியல்களை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


ட்ரிக்

கூகுள் நிறுவனம் தேடுபொறியால் தேடப்பட்டும் வார்த்தைகளுக்கு சில வித்தியாசமான முடிவுகளைத் தர சில வார்த்தைகளை தேடினால் வித விதமாக அசையும் படி ஸ்கிரின்களை வடிவமைத்தது. கீழே உள்ள வார்த்தைகளைத் தேடி அப்படி என்னதான் நடக்கிறது எனப் பாருங்கள்.

1. Do a barrel roll trick
2. Atari Breakout (Google Image)
3. Tilt page
4. Recursion
5. Google Gravity (ஹோம் பேஜில் இதை டைப் செய்து “I’m feeling lucky” பட்டனை அழுத்துங்கள்)
6. Zerg Rush
7. Bonus: elgoog.im
8. Google Sky

கம்யூட்டிங் திறன்

கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி ஒவ்வொரு கூகுள் தேடலுக்கும் கூகுள் தளம் நிலவிற்குச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தின் பவருக்கு நிகரான பவரில் நிலவில் செல்கிறது.


யாகூ

முதலில் இதை டிசைன் செய்த லாரிபேஜ் மற்றும் சேர்கே ஆகியோர் இதை வைத்து பிஸ்னஸ் செய்ய வேண்டும் என விரும்பவில்லை. இதை யாகூவிடம் விற்கவே முடிவு செய்தனர். ஆனால் முதலில் இதை யாகூ வாங்க மறுத்துவிட்டது. பின்னர் 2002ம் ஆண்டு கூகுளின் இந்த வளர்ச்சியைப் பார்த்து யாகூ நிறுவனம் அதை சுமார் 2 பில்லியின் டாலருக்கு வாங்க முயற்சித்தது. ஆனால் இந்த முறை கூகுள் அதை மறுத்துவிட்டது. இன்று யாகூ இருக்கும் இடத்தை தேடித்தான் பார்க்க வேண்டும்.

https://tamil.samayam.com/viral-corner/trending/see-here-some-intresting-facts-of-google-on-its-21-st-birthday/articleshow/71325595.cms

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெல்லிங்  மிஸ்ரேக் குழு இன்று உலகை ஆளுது நமக்கு  இன்றும்  prescription மனதில் சொல் சரியாகும் வாயில் தடுமாறும் . 

 

 

கூகிளை விரும்பாதவர்கள், அவர்கள் உங்களை கண்காணிப்பதினை விரும்பாதவர்கள் இந்த தேடல் கருவியை பாவிக்கலாம் !

https://duckduckgo.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.