Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பௌத்தத்தின் ஆக்கிரமிப்பு

Featured Replies

IMAGE-MIX.png
பௌத்த அரா­ஜ­கத்தின் கொடுந்­தன்­மை­யையும் சிங்­கள மேலா­திக்­கத்தின் அத்­து­ மீ­றல்­க­ளையும் பௌத்த குரு­மாரின் அடா­வ­டித்­த­னங்­க­ளையும் எடுத்­துக்­காட்டும் ஒரு சம்­ப­வ­ம் முல்­லைத்­தீவு நீரா­வி­ய­டிப்­ பிள்­ளையார் ஆல­யத்தில் இடம்­பெற்ற பெளத்த பிக்­குவின் மயான அடக்கம்.

இந்து தர்­மத்­தையும் சம்­பி­ர­தா­யங்­க­ளையும் அவ­ம­திக்கும் வித­மாக, பிள்­ளையார் ஆலய வளா­கத்­துக்குள் இறுதிக் கிரி­யை­களை மேற்­கொண்டு மதத்­தையும், மக்­க­ளையும் அவ­ம­தித்­தது மாத்­தி­ர­மல்ல சட்­டத்­தையும் நீதி­யையும் மீறிச் செயற்­பட்­டுள்­ளமை குறித்த நாடொன்­றுக்குள் நாம் மாத்­தி­ரமே அதி­கா­ரங்கள் கொண்­ட­வர்கள், எமது மதமே அரச ஆதிக்கம் கொண்­டது, ஏனைய சமூ­கங்க­ளும் மதத்­தி­னரும் அடங்­கிப்போய் விட வேண்­டு­மென்ற அதி­கார தோர­ணையை நிரூ­பிப்­ப­தா­கவே காணப்­ப­டு­கி­றது.

இந்து ஆல­ய­மொன்­றுக்குள் அத்­து­மீறி நுழைந்து இந்து மத சம்­பி­ர­தா­யங்கள் மற்றும் சடங்­கு­களை மதிக்­காமல் கட்­டு­மீறி ஒரு பௌத்த துற­வியின் தலை­மை­யி­லான குழு நடந்து கொண்­டது நாட்டின் தேசிய தன்­மைக்கு பின்­வரும் இழிவை உண்­டாக்­கு­வ­தா­கவே அமைந்து காணப்­ப­டு­கி­றது.

இந்து மதத்­தையும் அதைப் பின்­பற்றும் மக்­க­ளையும் இழி­வு­ப­டுத்­தி­யமை, நாட்டின் நீதி, சட்டம் என்­ப­வற்றை மதிக்­காமல் உதா­சீனம் செய்­தமை, பௌத்த மேலா­திக்­கத்தின் ஆண­வத்தை நிலை நாட்ட முற்­பட்­ட­மை­ என்ற கார­ணங்கள் நாட்டில் எல்­லாமே சீர்­கு­லைந்­து­ போன நிலை­மையை காட்டி நிற்­கி­ன்ற­ன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தைச் சேர்ந்த செம்­மலை, நீரா­வி­ய­டி­யி­லுள்ள பிள்­ளையார் ஆல­யத்தை கொழும்பைச் சேர்ந்த பௌத்த பிக்­கு­வான மேதா­லங்­கார கீர்த்தி தேரர் என்­பவர் அடா­வ­டித்­த­ன­மாக அப­க­ரித்து தொல்­பொருள் திணைக்­களம் மற்றும் பாது­காப்பு படை­யி­னரின் ஆத­ர­வுடன் குரு கந்த ரஜ­மஹா விகா­ரை­யென்ற பெயரில் விகா­ரை­யொன்றை அமைத்து அங்கு தங்­கி­யி­ருந்து கொண்டு பிள்­ளையார் ஆல­யத்­துக்கு வழி­பட வரும் தமிழ் பக்­தர்­க­ளுடன் பிரச்­சி­னை­களை நீண்ட காலம் வளர்த்து வந்­தி­ருக்­கிறார்.

குறித்த பிக்­கு­வா­னவர் பிள்­ளையார் ஆல­ யத்தை ஆக்­கி­ர­மித்து பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினர் மற்றும் பாது­காப்புப் படை­யினர் பலத்த பாது­காப்பு வழங்கி வரு­வ­துடன் பிள்­ளையார் ஆல­யத்தை கப­ளீ­கரம் செய்ய உடந்­தை­யா­கவும் இன்­று­ வரை இருந்து வரு­கின்­றனர். இவ்­வா­ல­ய­மா­னது முல்­லைத்­தீவு பகு­தி­யி­லுள்ள பூர்­வீக ஆலயம் மாத்­தி­ர­மல்ல நூற்­றாண்டுக் கணக்­காக, தைப்­பொங்கல், சித்­திரை வருடப் பிறப்பு போன்ற விழாக் காலங்­க­ளிலும் உற்­சவப் பொழு­து­க­ளிலும் பொங்கி, வழி­பட்­டு­வரும் ஒரு புகழ்­பெற்ற ஆல­யத்­தையே கீர்த்தி தேரர் ஆக்­கி­ர­மித்து விகாரை அமைத்­துள்ளார்.

இங்கு வரும் இந்து பக்­தர்கள், வழிபாட்­டா­ளர்­க­ளுடன் தொடர்ந்து முரண்­பட்டு தேரர் இவ்­வா­ல­யத்தை நிர்­மூ­ல­மாக்க எடுத்த முயற்­சியைக் கண்டு கொதித்த மக்கள் இவ்­வி­வ­கா­ரத்தை பொலி­ஸா­ருக்கு கொண்டு சென்­றுள்­ளனர். பிக்கு தரப்­பி­னரும் பிள்­ளையார் அடி­யார்­களும் முரண்­பட்ட நிலையில் இரு தரப்­பி­னரும், பங்கம் விளை­விக்க முற்­ப­டு­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் பொலி­ஸா­ரால் முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டது.

இது இவ்­வாறு இருக்கும் நிலை­யில்தான் மேற்­படி விகா­ரையின் விகா­ரா­தி­பதி மேதா­லங்­கார கீர்த்தி தேரர் குணம் காண முடி­யாத புற்று நோய்க்கு ஆளாகி கடந்த 21ஆம் திகதி (21.09.2019) மரணம் அடைந்த நிலையில் அவரின் பூத­வு­டலை நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆலய வளா­கத்­துக்குள் கொண்டு வந்து இறுதிச் சடங்­கு­களை மேற்­கொள்­வற்கு இரா­ணுவம், கடற்­படை, சில பௌத்த தீவி­ர­வா­திகள், சில பௌத்த பிக்­குமார் முயற்­சி­களை எடுத்­தது கண்டு, நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆலய பரி­பா­லன சபை­யி­னரும் மற்றும் தமிழர் மர­பு­ரிமை பேர­வை­யினரும் தமது கடு­மை­யான எதிர்ப்பைத் தெரி­வித்­தனர்.

இதன் பிர­காரம் பிள்­ளையார் ஆலய நிர்­வா­கத்­தினால் முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் பௌத்த பிக்­குவின் பூத­வு­டலை அடக்கம் செய்­யக்­ கூ­டாது என தடை கோரி முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. சில அர­சியல் தலை­வர்­களின் குறுக்­கீட்­டுக்கு அமை­வாக முல்­லைத்­தீவு பொலிஸார் மாவட்ட நீதி­மன்றில் தடை­யா­ணை­யொன்றைப் பெறக் கோரி­யுள்­ளனர்.

முல்­லைத்­தீவு பொலி­ஸா­ர் மாவட்ட நீதி­மன்ற பதில் நீதிவான் எஸ். சுதர்சன் முன்­னி­லையில் இவ் விவ­கா­ரத்தைக் கொண்டு சென்ற நிலையில் இது விசார­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது கடந்த 23ஆம் திகதி விகாரைத் தரப்­பி­ன­ரையும் பிள்­ளையார்  ஆலய பரி­பா­லன சபையைச் சேர்ந்­த­வர்­க­ளையும் ஆஜ­ரா­கும்­படி பணிப்­புரை வழங்­கப்­பட்­ட­துடன் இவ்­வி­வ­காரம் தொடர்­பாக நீதி­மன்­றினால் கட்­ட­ளை­யொன்று பிறப்­பிக்­கும் ­வரை குறித்த பௌத்த பிக்­கு­வான கொழும்பு மேதா­லங்­கார கீர்த்தி தேரரின் பூத­வுடலை பிள்­ளையார்  ஆலய வள­வுக்குள் புதைக்­கவோ அன்றி எரிக்­கவோ கூடாது எனவும் அடக்க உத்­த­ரவு பிறப்­பிக்­கும்­ வரை பிர­தே­சத்தில் அமை­தியை ஏற்­ப­டுத்தும் வகையில் பொலிஸார்  கடமை ஆற்ற வேண்­டு­மென முல்­லைத்­தீவு பதில் நீதவான் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார். இவ்­வி­டைக்­காலத் தடை­யா­னது கடந்த 23ஆம் திகதி (23.09.2019) நீதி­மன்­றினால் வழங்­கப்­பட்ட போதும் பொது­ப­ல­சே­னாவின் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் நீதிமன்றத் தடையை மீறி பூத­வு­டலைத் தகனம் செய்­தனர்.

பிள்­ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் (தீர்த்­தக்­க­ரைக்கு அருகில்) தக னம் செய்­யப்­பட்­டது. நீதி­மன்ற விசா­ர­ணை­யின்­போது இரு தரப்­பி­னரின் அபிப்­பி­ரா­யத்­தையும் கவ­ன­மாகக் கேட்ட நீதி­மன்ற நீதிவான் எஸ்.லெனின்­குமார் விசா­ர­ணைக்குப் பின் பிள்­ளையார் ஆல­யத்­துக்கு அப்­பா­லுள்ள இரா­ணுவ முகா­முக்கு அண்­மை­யி­லுள்ள கடற்­க­ரையில் பூத­வு­டலை தகனம் செய்­யும்­படி உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­த­ போ­திலும் அவ்­வுத்­த­ரவு மீறப்­பட்டு எங்கு தகனம் செய்­யப்­படக் கூடாது என தடை விதிக்­கப்­பட்­டதோ அவ்­வி­டத்தை தேர்ந்­தெ­டுத்து ஆலய தீர்த்தக் கரைக்கு அருகில் தகனம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

இந்த அத்­து­மீ­ற­லுக்கு எதி­ராக தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரி­வித்­த­போதும் பொலிஸார் மற்றும் பாது­காப்பு படை­யினர் மக்­களை தடுத்து நிறுத்­தி­ய­துடன் கலகம்  அடக்கும் படை­யினர் கடு­மை­யாக நடந்து கொண்­டது ஒரு­பு­ற­மி­ருக்க பெருந்­தொ­கை­யான படை குவிப்­பின் உத­வி­யுடன் தகனம் செய்ய பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. 

நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆல­யத்தின் தீர்த்­தக்­கே­ணிக்கு அருகில் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி பூத­வுடல் தகனம் செய்­த­மையைக் கண்­டித்தும் பொது மக்கள்,சட்­டத்­த­ர­ணிகள் தாக்­கப்­பட்­ட­மைக்கும் எதிர்ப்பு தெரி­வித்து கடந்த 24ஆம் திகதி (24.09.2019) முல்­லைத்­தீவில் மாபெரும் ஆர்ப்­பாட்­ட­மொன்று பேர­ணி­யாக நடத்­தப்­பட்­டது. நீதி­மன்ற உத்­த­ரவு மீறப்­பட்­டமை, சட்­டத்­த­ர­ணிகள், பொது மக்கள் தாக்­கப்­பட்­டமை, இந்து மத தர்­மத்தை அவ­ம­தித்­த­மை­யென்ற கோஷங்­களை முன்­வைத்து இப் போராட்டம் நடத்­தப்­பட்­டது. மாத்­தி­ர­மல்ல சட்­டத்­த­ர­ணிகள் தாக்­கப்­பட்­டமை, நீதி­மன்றம் அவ­ம­திக்­கப்­பட்­ட­மையை முன்­வைத்து வடக்கில் யாழ்ப்­பாணம், மன்னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளிலும் கிழக்கில் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்த சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றப் பணிப் ­ப­கிஷ்­க­ரிப்­பையும் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்­தையும் நடத்­தி­யி­ருந்­தனர். சட்­டமா அதிபர் மற்றும் பொலிஸார் உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும் ­வரை இது தொடரும் எனவும் எச்­ச­ரித்­துள்­ளனர்.

பௌத்த மேலா­திக்­கத்தின் அரா­ஜகம் என்­பது இன்று, நேற்று வளர்ந்த ஒரு விவ­கா­ர­மல்ல. இந்தத் தேசத்தில் பௌத்த மத ஆதிக்க கெடு­பி­டிகள், இனக்­க­ல­வ­ரங்கள், சிங்­கள தேசி­ய­வாதம், மத­வாதம் என்­பது நூற்­றாண்டுக் கணக்­காக இருந்து வரும் அரா­ஜ­க­மாகும்.

1870இல் இடம்­பெற்ற மரு­தானை சிங்­கள – முஸ்லிம் கல­வரம், 1883இல் நடை­பெற்ற கொட்­டாஞ்­சேனை மதக் கல­வரம், 1915 உண்­டா­கிய கம்­பளை மதக் கல­வரம், 1939இல் உண்­டாக்­கப்­பட்ட நாவ­லப்­பிட்டி கல­வரம், 1956 கிழக்கில் 150 தமிழர் கொல்­லப்­பட்­டமை, 1958 இன் தமிழ் – சிங்­கள இனக்­க­ல­வரம், 1977 ஆவணி அமளி துமளி, 1981 இல் யாழ். நூலக எரிப்பு, வங்கிக் கொள்ளை, 1983 இன் ஜூலை­க் ­க­ல­வரம் என்ற அனைத்­துமே மதம், அடிப்­படை பௌத்த வாதம், சிங்­கள வெறித்­தனம் என்ற பின்­ன­ணியில் தோற்­று­விக்­கப்­பட்­டவை தான். இவை அனைத்தின் பின்­ன­ணி­யிலும் பௌத்த பிக்­கு­மாரும் படை­யி­னரும் சிங்­களத் தீவி­ர­வா­தமும் பங்­கா­ளி­க­ளாக இருந்­துள்­ளனர். இதன் ஒரு தெறிப்­பா­கவே நீரா­வி­யடிப் பிள்­ளையார் விவ­கா­ரமும் பார்க்­கப்­பட வேண்டும். 

ஞான­சா­ரரின் அதி தீவி­ரப்­போக்கு மத­மொன்­றுக்­கு­ரிய தத்­து­வங்­க­ளையும், சம்­பி­ர­தா­யங்­க­ளையும், மர­பு­க­ளையும் உதா­சீ­னப்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மல்ல, அம்­ம­தத்தைப் பின்­பற்றும் மக்­க­ளையும் அவ­மா­னப்­ப­டுத்தும் செய­லாகும். 

இந்து ஆலய எல்­லை­யொன்­றுக்குள் ஈமக் கிரி­கை­களைச் செய்­வ­தையோ அல்­லது தகனம் செய்­வ­தையோ அல்­லது பூத­வு­டலை இடுகை செய்­வ­தையோ இந்து மதத்­தினர் வழக்­கா­றாகக் கொண்­ட­வர்கள் அல்லர். ஆலய எல்­லைக்குள் இறந்த ஒரு­வரின் உற­வினர் குறித்த நாட்கள் வரை நட­மா­டு­வ­தையே தீட்­டாக நினைக்கும்  இந்து அனுட்­டா­னங்­களை மீறி பிக்கு ஒரு­வரின் பூத­வு­டலை தீர்த்தக் கேணிக்­க­ருகில் தகனம்  செய்த திமிர்த்­தனம் ஒத்­த­மொத்த இந்­துக்­க­ளையும் அவ­ம­திப்­பது மாத்­தி­ர­மல்ல மத ஆ­ணவத்தை வெளிப்­ப­டுத்தும் செய­லுமாகும்.

இந்து மதம் வேதங்­க­ளையும் சாஸ்­தி­ரங்­க­ளையும் புரா­ணங்­க­ளையும் தோத்­தி­ரங்­க­ளையும் ஆக­மங்­க­ளையும் மந்­தி­ரங்­க­ளையும் மூல­மாகக் கொண்­டது. கண்ட கண்ட இடங்­க­ளி­லெல்லாம் ஆல­யங்­களை அமைத்து, தோன்றும் திசை­யெல்லாம் சிலை­களை நிறுவி, நினைத்த வேளை­க­ளி­லெல்லாம் பூசை புனருத்­தா­ரணம் செய்யும் தத்­துவம் கொண்­ட­தல்ல. அத்­த­கை­ய­தொரு மதத்தை கேவ­லப்­ப­டுத்தும் வகையில் இச்­சம்­பவம் இடம்பெற்­றுள்­ளது. 

இத்­த­கை­ய­தொரு சம்­பவம் அண்­மையில் திரு­கோ­ண­ம­லையில் நடை­பெற்­ற­போது அனைத்துத் தரப்­பி­ன­ரமே வாய் மூடி மௌனி­க­ளாக இருந்­துள்ளோம்.

சீனக்குடா பௌத்த விஹா­ரா­தி­ப­தியின் பூத­வுடல் ஞானசம்­பந்தர் பாடிய கோணேசர் ஆலய தலை­வாசல் முற்ற வெளியில் வைத்து தகனம் செய்­யப்­பட்­டது. கோயிலும் சுணையும் கட­லுடன் சூழ்ந்த கோண­ம­லையார். மௌன விரதம் இருந்தோம். 

நீராவியடிப் பிள்­ளையார் விவ­காரம் அண்­மையில் அத்­து­மீறி உரு­வாக்­கப்­பட்ட கெடு­பிடி. தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் அனு­ச­ர­ணை­யுடன் பாது­காப்புப் படை­யி­னரின் பந்­தோ­பஸ்­துடன் நடந்­தே­றிய விட­ய­மாகும். இலங்­கையின் தொல்­பொருள் திணைக்­க­ள­மென்­பது குறித்­த­வொரு மதத்­தி­னருக்கும் இனத்­தி­னருக்கும் பந்தம் பிடிக்கும் திணைக்­க­ள­மாக இருக்­கும் ­வரை இத்­த­கைய கெடு­பி­டி­க­ளுக்கும், அத்­து­மீ­றல்­க­ளுக்கும், அரா­ஜக செயல்­க­ளுக்கும் தீர்வு காண்­பது என்­பது முடி­யாத காரி­யமே!

நீரா­வி­யடிப் பிரச்­சி­னையில் உரு­வா­கி­யி­ருக்கும் இன்­னொரு சவால் சட்­டத்தை மதிக்­காமை, நீதி தூக்­கி­யெ­றி­யப்­பட்­டி­ருப்­பது. இச்­சம்­ப­வத்தில் நீதி­மன்றம் அவ­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இடப்­பட்ட கட்­டளை மீறப்­பட்­டுள்­ளது. சட்­டத்தின் காவலர் என்று மதிக்­கப்­ப­டு­கி­ற­வர்கள் தாக்­கப்­பட்­டுள்­ளனர்.

நீரா­வி­யடிப் பிள்­ளையார் விவ­காரம் நீண்­ட ­காலப் பிரச்­சி­னை­யாகத் தோற்றம் பெற்­ற­போதும் இவ்­வ­ருட ஆரம்­பத்தில் தைப்­பொங்கல் தினத்­தன்று செம்­மலை மக்கள் பொங்கி வழி­பாடு செய்யச் சென்ற வேளை மேற்­படி பௌத்த பிக்கு, தான் அழைத்து வந்த பௌத்த தீவி­ர­வாதக் கும்­பலைக் கொண்டு இடை­யூறு விளை­வித்­ததன் கார­ண­மாக பிரச்­சி­னைகள் ஆரம்­ப­மா­கின. இவ்­வி­வ­காரத்தை பொலிஸில் முறை­யிட்­டதன் பேரில் நீதி­மன்றம் கொண்டு செல்­லப்­பட்­டது. இது வழக்­குக்குச் சென்­ற­ போதும் குறித்த பிக்­கு­வுக்கு உத­வி­யாக பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரியர் ஒருவர், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள் புல்மோட்டை பிக்கு ஆகி­யோரின் உத­வி­யுடன் சட்­ட­வி­ரோ­த­மாக இவ் வள­வுக்குள் புத்தர் சிலை நிறு­வப்­பட்டு 23ஆம் திகதி (23.01.2-019) திறக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து பிரச்­சி­னைக்கு தூபம் இடப்­பட்­டது. இவ் விவ­காரம் நீதி­மன்­றுக்கு கொண்டு செல்­லப்­பட்­டது. 

நீதி­மன்றம் கடந்த மே 6ஆம் திகதி பின்­வரும் தீர்ப்பை வழங்­கி­யி­ருந்­தது. 

பௌத்த  துற­வி­யா­னவர் நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆல­யத்­துக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தக் கூடாது. இரு தரப்­பி­னரும் சமா­தா­ன­மான முறையில், வழி­பா­டு­களை சுதந்­தி­ர­மான முறையில் மேற்­கொள்­ளலாம் என நீதி­மன்­றினால் தீர்ப்பு வழங்­கப்­பட்ட நிலையில் இத் தீர்ப்பை ஆட்­சே­பித்து வவு­னியா மேல் நீதி­மன்றில் பௌத்த பிக்கு சார்பில் மேல் முறை­யீடு செய்­யப்­பட்­டி­ருக்கும் நிலை­யி­லேயே பௌத்த பிக்கு மேதா­லங்­கார கீர்த்தி தேரரின் மரணம் இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த ஒரு  குழு­வி­னரால் நீதி மதிக்­கப்­ப­டாமல் சட்டம் ஒழுங்கு உதா­சீனம் செய்­யப்­பட்டு, இந்த அரா­ஜகம் இடம்­பெற்­றுள்­ளது. இது இந்த நாட்டின் நீதித்­ து­றையை அவ­ம­திக்கும் செய­லாகும். இந்தச் செய­லுக்கு தலைமை தாங்­கி­யவர் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர். இந்தக் குரு­வானவர் ஏலவே நீதி­மன்றை அவ­ம­தித்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வந்­தவர். 

ஜனா­தி­ப­தி­யால் நிபந்­த­னையின் பேரில் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்ட இவர் மன்­னிப்பு பெற்ற ஒரு சில மாதங்­க­ளுக்­குள்­ளேயே இந்­நாட்டின் சிறு­பான்மை இனங்க­ளி ல் ஒன்­றான முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக இன­வா­தத்தைக் கையில் எடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் ஆளு­நர்கள் பதவி விலக வேண்­டு­மென காலக்­கெடு விதித்து கண்டி தலதா மாளி­கையின் முன்­பாக விர­த­மி­ருந்து இன­வாத விஷத்தைக் கக்­கி­யவர். 

கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல கப் பிரச்­சி­னையில் மூக்கை நுழைத்து முதலைக் கண்ணீர் வடித்­தது மாத்­தி­ர­மல்ல, தமிழ் மக்­களை நம்ப வைத்து கபட நாட­க­மா­டிய இவர்தான் நீரா­வி­யடி சம்­ப­வத்­துக்கு தலைமை தாங்­கி­யுள்ளார். இவரின் சூர­சம்ஹார ஆட்­டத்­துக்கு பொலி­ஸாரும் பாது­காப்புப் படை­யி­னரும் பாது­காப்பு வழங்­கி­யது கவலை தரும் விடயம் மாத்­தி­ர­மன்றி சட்­டமும் நீதியும் எவ்­வாறு புறக்­க­ணிக்­கப்­பட்­டது என்­ப­தற்கு இது ஓர் உச்ச உதா­ர­ண­முமாகும்.

இந்து – பௌத்த மோதலை நாம் உரு­வாக்க ஒரு­போதும் விரும்­ப­வில்லை. ஆனால் நாட்டில் அனைத்துப் பகு­தி­க­ளுக்கும் செயற்­படும் சட்­டத்தை வடக்கு, கிழக்கில் மாத்­திரம் தட்­டிக்­க­ழிக்க முயற்­சிப்­பதே முரண்­பா­டாக உள்­ளது என்­பதை சீர்­செய்­யவே இக்­கா­ரி­யத்தில் நாம் இறங்­கினோம். நீதி­மன்றத் தீர்ப்பு தாமதம் ஆனதன் கார­ண­மா­கவே பூத­வு­டலை தகனம் செய்­தோ­மென பச்சைப் பொய்­யொன்­றையும் உரைத்­துள்ளார். இது எதைக் காட்­டு­கி­றது? கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நடத்­தி­ய­வர்கள் சுட்டிக்காட்­டி­ய­து போல் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு சட்டம், பௌத்த மதத்­துக்கு இன்­னு­மொரு வகைச் சட்­டமும், ஒரு மதத்தை அவ­ம­தித்து இன்­னு­மொரு மதம் அரா­ஜ­கம் புரியும் நிலை­யையே காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. 

காலத்­துக்குக் காலம் சிறு­பான்மை சமூ­கத்­தினர் தாக்­கப்­ப­டு­வதும், அவ­ம­திக்­கப்­ப­டு­வதும் கலண்­டரில் வரும் திக­திகள் போல் நடை­பெறும் நிகழ்­வாகும். 

இந்த அநா­க­ரிக­மான செயல்கள் வட, கிழக்கில் 2010ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர்ந்து இடம்­பெற்று வந்­தி­ருப்­பது பல்­வேறு சம்­ப­வங்கள் மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. கிரீஸ் மனி­தனின் அட்­ட­காசம், இடையில் பள்­ளி­வாசல் உடைப்­புகள், அத்­து­மீ­றிய புத்­தர்­சிலை வைப்­புகள், இன்­னு­மொ­ரு­ புறம் தொன்­மங்கள் என்ற வகையில் இந்து ஆல­யங்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் ஆக்­கி­ர­மிப்பு என ஏகப்­பட்ட விவ­கா­ரங்கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­வது நாட்டில் உரு­வா­கி­வரும் சாபக்­கேட்டை எடுத்துக் காட்­டு­வ­தா­கவே அமை­கி­றது. 

ஏலவே 2015ஆம் ஆண்­டுக்குப் பின் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் வெடுக்கு நாரிமலை, ஆதி­சிவன் ஆலயம், ஐயனார் ஆலயம், குருந்­தூர்­மலை போன்ற தொன்ம இடங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள சவால்கள் இத்­த­கைய ஆன்­மீகப் பாரம்­ப­ரிய இடங்கள் தொல்­லியல் பிர­க­ட­னத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு மறை­முக சுவீ­க­ரிப்­புகள் இடம்­பெற்ற நிலை­யி­லேயே நீரா­வி­ய­டிப்­ பிள்­ளையார் விவ­காரம் விஸ்­வ­ரூபம் பெற்­றுள்­ளது. இவ்­வி­வ­காரம் தொடர்பில் வட­மா­காண ஆளுநர் தனது நியா­ய­மான கருத்­தொன்றை பதிவு செய்­துள்ளார். அது யாதெனில், நீதி­மன்றத் தீர்ப்பை மீறிய செய­லா­னது நீதியைப் புறக்­க­ணிக்கும் செயல் மாத்­தி­ர­மன்றி அவ­ம­திக்கும் செயலுமாகும். இவ்­

வி­வ­கா­ரங்கள் நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது பாரிய தாக்­கத்தை உண்­டாக்­கு­மென ராகவன் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் வெளி­யா­கி­யி­ருக்கும் இன்­னு­மொரு அதிர்ச்­சி­யான செய்­தி­யாக, பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட ஞான­சார தேரர் முல்­லைத்­தீவில் குடி­யேற காத்­தி­ருக்­கிறார் என்ற தகவல் வெளி­வந்­துள்­ளது. இலங்கை அர­சியல் அமைப்பு வட­ மா­கா­ணத்­துக்கு செல்­லு­படி­யா­காது என முல்­லைத்­தீவில் கவ­ன­யீர்ப்பு போராட்டம் நடத்­திய தமிழ் பேசும் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­த­தா­கவும் இது இலங்­கையின் இறை­யாண்­மைக்கும் நீதித்­து­றைக்கும் விடுக்­கப்­பட்­டி­ருக்கும் சவால் என பொய்யொன்றை உரைத்து தனது செயற்பாடுகளை நியாயப்படுத்த எத்தனிப்பதுடன் தமிழ் சட்டத்தரணிகளை பயங்கரவாதிகள் என அடையாளமிட்டுக் காட்டியுள்ள ஞானசார தேரர், நீராவியடி சம்பவத்தை தனக்கு சாதமாக்கிக் கொண்டு வடபுலத்தை குழப்புவதற்கும் பௌத்த மயத்தை விதைப்பதற்கும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாரென்பது வடபுல தமிழ் மக்களின் காரசாரமான குற்றச்சாட்டாகும்.

வடக்கிலுள்ள பௌத்த சொத்துக் களையும் தொன்மங்களையும் அடையாளங் களையும் காப்பாற்ற வேண்டுமாயின் தன் போன்ற பௌத்தவாதிகள் வடக்கில் குடியேற வேண்டுமென சிங்கள ஊடக மொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஞானசார தேரர், தான் முல்லைத்தீவில் குடியேற தீர்மானித்துள்ளதாகத் தெரி வித்துள்ளார். அவரின் இந்த யோசனைக்கு தென்னிலங்கையில் உள்ள பௌத்தவாதி களும் அடிப்படை கோட்பாட்டாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது. 

ஞானசார தேரரின் இக்கிரகப் பிரவேசம் தொடர்பிலோ அடாவடித்தனங்கள் பற் றியோ ஜனாதிபதியோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ எவ்வித கருத் தையும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப் பது ஞானசார தேரரின் அடாவடித்தனங் களை ஆசிர்வதிப்பது போல் காணப்படுகி றதென வடபுல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமைதி, சமாதானம், நல்லிணக்கம் என்ற முக்கூட்டு மந்திரங்களை வாயளவில் உச்சரித்து வரும் இலங்கை அரசாங்கமும், தென்னிலங்கைத் தலைமைகளும் நிதான மாகவும், நீதியாகவும் செயற்படத் தவறின் மீண்டும் நாட்டில் பாரிய விளை வுகளை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

காவியுடையென்ற போர்வையைப் போர்த் திக் கொண்டு நீதியையும் சட்டத்தை யும் கையில் எடுக்கும் பௌத்ததாரிகளைக் கட்டுப்படுத்தத் தவறும் பட்சத்தில் நாட்டில் மத இணக்கப்பாட்டையும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் கொண்டு வருவது என்பது ஆகாத காரியம் மாத்திரமல்ல, சர்வதேச அளவில் இலங் கைக்கு அவப்பெயரை உண்டாக்கும் விவ காரங்களாகவே ஆகி விடும்.
 

https://www.virakesari.lk/article/65771

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.