(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து தியாகங்களையும் செய்ய தயார் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

basil.jpg

பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அபிவிருத்தி , தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பதனால் தேர்தலை மையப்படுத்திய அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ள வேண்டும். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களும் சுயாதீன முறையிலும், தேசிய சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தாமலும் இடம் பெற வேண்டும். 

ஆனால் சில தரப்பினர் தேர்தல் வெற்றியினை கருத்திற் கொண்டு சிமெந்து பொதிகளை விநியோகித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது. கூட்டணியை கட்டியெழுப்ப அனைத்து தியாகங்களையும் செய்ய தயார்.

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. இவ்விரு பிரதான விடயங்களையும் கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் தங்களின் வாக்குகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/65987