Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்ல கொல்லும் மது

Featured Replies

இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகெங்கிலும் சமூக, பொருளாதார, கலாசார மற்றும்  உடல் உள ஆரோக்கிய  பிரச்சினைகளில் ஒன்றாக மதுசாரப் பாவனை விளங்குகின்றது. இப்பாவனை காரணமாக வருடமொன்றிற்கு உலகளாவிய ரீதியில் கிட்டத்திட்ட 3மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர். அதாவது உலகில் வருடம் ஒன்றிற்கு ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 6வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது. அத்தோடு உலகில் ஏற்படும் நோய்களில் 5.1வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

இலங்கையைப் பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23000பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 297மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக எமது மக்களால் செலவழிக்கப்படுகின்றது. மரணிக்கும் அத்தனை பேரின் மனைவியரும் இளவயதிலேயே விதவையாக்கப்பட்டு பிள்ளைகள் அநாதைகளாகின்றனர்.

a1.png?itok=TUuB-bEm

 

செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் தனது குடும்பத்திற்கு செலவழிக்காமல் அநாவசியமாக மதுசாரத்திற்கு செலவழிக்கும் பணத்தொகையாகும். அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமாக்கிக் கொடுக்கும் இலாபம். சில கிராமங்களிலும், பெருந்தோட்டங்களிலும் குறிப்பாக தொழில் செய்வோருக்கு பணம் கிடைக்கும் நாளில் (சம்பள நாட்களில்) கிடைக்கும் பணத்தொகையில் 2/3பங்கு மதுசாரத்திற்கே செலவழிக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வசிப்போர் பணக்காரர்கள் அல்ல அன்றாடம் உணவிற்கும், வெவ்வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் கூலித்தொழில் செய்பவர்களாகவே உள்ளனர்.  

இந்நாட்டில் மதுசார நிறுவனங்கள் மூலம் அரசுக்கு வருடமொன்றிற்கு 60பில்லியன் ரூபாய் வரித்தொகையாக கிடைக்கப்பெற்றாலும் 212.6பில்லியன் ரூபாய் மதுசார பாவனையினால் ஏற்படும் நோய்களிற்கும், பிரச்சினைகளுக்கும் செலவிட வேண்டியுள்ளது. இதனால் அரசாங்கம் வருடாவருடம் நஷ்டத்தையே தழுவுவதாக சுகாதார அமைச்சும் மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிபார சபையின் தலைவரும் தெரிவித்துள்ளனர்.  

மதுசாரம் தொடர்பில் பல்வேறு மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் திணித்து இந்நவீன காலத்திலும் அதனை நம்பவைக்குமளவு சதித்திட்டங்களை வகுத்து மதுசார பாவனையை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்நாட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உதாரணமாக மதுசாரம் உடற்களைப்பை நீக்கும் என்கின்றனர். ஆனால் அதனை அருந்துவோரின் உடற்களைப்பு மதுசாரம் அருந்தியதன் பின்னர் குறைவடைகின்றதா? என ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.  

மதுசார வகைகள் மூளைதிறன் விருத்தியை குறைக்கக்கூடியது (Depressant), அது ஒரு ஊக்கியல்ல (Stimulant) என்று மருத்துவம் கூறுகின்றது. மேலும் மதுசாரம் உடலினுள் செல்லும் அளவு அதிகரிப்பிற்கேற்ப ஒருவிதமான உடல் அசௌகரியமும், உடல் சோர்வும் மாத்திரமே ஏற்படும். பல்வேறு சூழற்காரணிகளினாலேயே மதுசாரம் விரும்பத்தக்க ஒரு பானமாக விளங்குகின்றது. அதாவது எந்தவொரு பொருளும் உடலினுள் சென்று அதன் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு சில நேர இடைவெளி தேவைப்படும். குறிப்பாக மதுசாரம் உடலினுள் சென்று விளைவை ஏற்படுத்துவதற்கு சுமார் 20நிமிடங்கள் தேவைப்படுகின்றது என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது மதுசார போத்தலைக் கண்டவுடன் அல்லது ஒரு குவளையை குடித்த மறுகணமே அருந்தியவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு மாறும்?  

அதாவது சிறிய வயதிலிருந்தே ஊடகங்களின் மூலம் குறிப்பாக திரைப்படங்களின் மூலம் சாராயம், பியர் என்பன சந்தோசமான ஒன்றாகவும், மதுசாரம் அருந்தியவுடன் அந்த நபரின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது போன்றும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இளைஞர்களின மனதில் பதிந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பியர், சாராயம் போன்ற மதுசாரக் கம்பனிகளும் நேரடியாக விளம்பரங்கள் செய்து இது போன்ற போலியான நம்பிக்கைகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. அத்தோடு சமூகத்தில் காணும் ஒவ்வொரு காட்சிகளும் இது போன்ற மூடநம்பிக்ககைளை சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. அதனால் மதுசாரம் அருந்துவோர் அதன் மூலம் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், உடற்கஷ்டங்கள் நீங்குவதாகவும், பல்வேறு பிரச்சினைகளை மறக்கச் செய்வதாகவும் எண்ணிக்கொண்டுள்ளனர்.  

எனவே சாராயம், பியர் போன்றன நாற்றமான, கசப்பான, எரிவான, வாந்திபோகும் உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அதைச் சூழ ஏற்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கைகள், அடையாள அறிகுறிகள், கவர்ச்சிகரமான வசனங்கள், குடிக்கும் முறை, குடிக்கும் இடம், குடிக்கும் சந்தர்ப்பம் போன்றவைகளினால் உண்மை மறைக்கப்பட்டு போலியான மூடநம்பிக்கையில் இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  

இவ்வாறான சூழலில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டின் தனிமனித மதுசார பாவனையானது ஒப்பீட்டளவில் குறைவாகும். 2.5லீற்றர் தொடக்கம் 3லீற்றர் வரையான அளவே இந்நாட்டின் தனிநபர் மதுசார பாவனையென கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பியா, பின்லாந்து ஆகிய நாடுகளின் தனிமனித மதுசார பாவனையானது 10லீற்றர்களாக உள்ளது-.அதாவது மதுசாரம் அருந்துவோரில் தனிமனிதன் அருந்தும் வீதம் அதிகமாகும்.  

என்றாலும் எந்தவொரு பொருளிற்கும் தாராளத்தன்மை அதிகமாக இருந்தால் அதற்கான கேள்விகளும் அதிகரிக்கும். அதேவேளை,பொருளின் கேள்வி குறைவடையும் போது அதன் விற்பனை எந்தவிதமான அழுத்தங்களும் இன்றி குறைவடையும் என்பது பொருளியல் நியதி. மதுசாரசாலைகளின் அளவும் மதுசார பாவனையை தீர்மானிக்கும் சக்திகளில் பிரதான ஒன்றாகும், நிலையான மாற்றங்களை நோக்கி செல்லும் போது மதுசாரத்திற்கான கேள்வியைக் குறைக்கும் செயற்பாடுகளில் அதிகமாக ஈடுபடுவது மிகவும் பயனுள்ள வழிமுறையாகும்.  

01. பயன்தகு கொள்கைகளை உருவாக்குதல் (Effective Policies)

02. பழகும் முன் காத்தல் (Prevention)

03. உளவியல் சிகிச்சைமுறை (Counseling)

04. பயன்தகு கொள்கைகளை உருவாக்குதல் (Effective Policies)

பயன்தகு கொள்கைகளை உருவாக்குதல்  

மதுசார பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இம்முறை பாவிக்கப்படுகின்றது.  

 

சரியான முறையில் மதுசார வகைகளின் விலையை அதிகரித்தல் மற்றும் வரி அறவீடு செய்தல்.  

மதுசாரம் மற்றும் மதுசார பாவனை கவர்ச்சியாகும் விதங்களை கண்டறிந்து அதனை பலமிலக்கச் செய்தல்.  

பழகும் முன் காத்தல்  

மதுசார பாவனையை பழகுவதற்கு முன்னரே அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தடுத்தலானது மிகப் பயன் கூடியதும், இலகுவானதுமான முறையாகும்.  

மதுசார பாவனையினால் ஏற்படும் இணங்காணக்கூடியத் தாக்கங்களை சிறுவர், இளைஞர்களுக்கு புரிய வைத்தல்.  

இளைஞர்கள், சிறுவர்களை ஏமாற்றுவதற்கு கம்பனிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற தந்திரோபாயங்கள் தொடர்பாக தெளிவூட்டல். அவ்வாறான விளம்பரங்களில் ஏமாறாமலிருப்பதற்குரிய உத்திகளை தெளிவுப்படுத்தி வழிகாட்டுதல்.  

மதுசார பாவனை தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அதன் உண்மைகளையும் தெளிவுப்படுத்தல்.  

உளவியல் சிகிச்சைமுறை  

தற்போது மதுசாரம் பாவித்து வருபவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்காக உளவியல் சிகிச்சை முறை பாவித்தல்.  

உளநல வைத்திய ஆலோசனையின்படி பாவனையாளர்கள் அதிலிருந்து விடுபட பின்வரும் விடயங்களை மேற்கொள்ளலாம்.  

01. மதுசார பாவனையை நிறுத்துவதற்கான நாளொன்றை தீர்மானித்தல்.  

02. இது தொடர்பில் ஏனையோருடன் கலந்துரையாடல்.(மனைவியிடம், பிள்ளைகளிடம், நண்பர்களுடன், அயலவர்களுடன்)  

03. இறுதியில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சிந்தித்தல். (மதுசார பாவனையை நிறுத்தியவுடன் நண்பர்களிடமிருந்து கிடைக்கவிருக்கும் தாக்கங்கள், விசேட தினங்களின் போது நடந்துக்கொள்ள வேண்டிய முறை குறித்து திட்டமிடல்)  

04. மதுசார பாவனையை நிறுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை முறியடிக்கவும் மதுசார பாவனையை தூண்டுவதற்கும் காத்திருக்கும் குழுவிற்கு பதில் கூற தயாரால் (உதாரணமாக நான் மதுசாரம் அருந்துவதை நிறுத்திவிட்டேன் என்னை பலவந்தப்படுத்த வேண்டாம் எனக் கூறுங்கள்). 

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் மதுசாரப் பாவனையிலிருந்து தவிர்ந்து கொள்ள முடிவதோடு அதன் பாவனையின் விளைவாக தோற்றம் பெறுகின்ற உடல் உள ரீதியான ஆரோக்கியப் பாதிப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.  

நிதர்ஷனா செல்லதுரை ...
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

https://www.thinakaran.lk/2019/10/05/சுகாதாரம்/41495/மெல்ல-கொல்லும்-மது

 

  • 3 weeks later...

நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா.    
 
குடிமகன் :  உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூறஅனுமதிக்க  வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில்  ஒருவன்.                 ஆனால் என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்... இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும் My Lord. அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும் your Honour.                              

  நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா.            

குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக்க விடாமல் தடுத்தால் முதலில் பேச்சு வார்த்தை நடத்தும் அதில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் காவல்துறை யை வைத்து தடியடி நடத்தி அரசுப்பணியை தொடருவார்கள் அல்லவா அது போலவே நான் அரசுப்பணியை தடுத்த என் மனைவியை தடியடி நடத்தி அரசுக்கும், காவல்துறைக்கும் உதவி புரிந்தேன். அது எப்படி குற்றமாகும் my Lord...  

நீதிபதி : நான் இன்றோடு என் பதவியை ராஜினாமா செய்கிறேன்..

😃😃😃😃

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.